posted 28th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீயின் வார்த்தைகளால் மனம் உடைந்தாள் தமிழ். தகப்பனிடம் ஆறுதல் கிடைக்காத நிலையில் அம்மாளைத் தேடி கோவிலுக்குப் போனாள்.
- தமிழைத் தேடி சிபீயும் இறுதியாக அதே கோவிலுக்குப் போனான்.
- குடும்பத்தினைத் தேடி நினைவினை இழந்த தமிழின் தகப்பனும் அதே கோவிலுக்குச் சென்றார். கிறுதியில் விழப்போன தமிழின் தகப்பனுக்கு நீராகரம் கொடுத்து உதவி செய்த சிபீ.
- தேடித் திரிவதில் இசையைத் தேடும் படலத்தின் ஆரம்பம். எங்கும் காணாததினால் வீட்டின் CCTVயினைச் check பண்ணி இசையை மயக்க நிலையில் மீட்டான் சிபீ.
- இசையை அடைத்தது யார் என்று அறிந்து கொண்ட சிபீயின் கோபத்தின் விலையினை இப்போ பார்ப்பார்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 27.09.2025
தமிழைத் தேடிச் சென்ற சிபீ இறுதியில் கோவிலில் அவளைக் கண்டான். தமிழை வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டான். சிபீ தன்னைத் தேடி வந்தது என்றும், வீட்டில் அனைவரும் உன்னைத் தேடுகின்றார்கள் என்றதையும் நம்பாத தமிழ்.
மற்றவர்களைக் காயப்படுத்தாதவள் காயமடைந்த நெஞ்சுடன் கேட்டாள் சிபீயிடன், ஒரு கேள்வி. இது உங்களது அடுத்த திட்டமா என்னை ஏமாற்றுவதற்கு சிபீ சார்? இதனை எதிர் பார்க்காத, விடை தெரியாத சிபீ வாயடைத்துப் போய் நின்றான். இல்லை தமிழ் என்று என்னென்று பதிலாக சிபீயினால் சொல்ல முடியும்? ஏனென்றால், அந்தளவிற்கு தமிழுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவன் சிபீ.
கோவில் குளத்தினுள் காற்று தேடி நீர் மட்டத்திற்கு வந்த மீன்களை விட களைத்துப் போய் குளத்துப் படியினில் இருந்த கொண்டு தனது தகப்பனின் மூச்சினைத் தேடிய தமிழ், நெஞ்சினுள் நொருங்கிப் போன இதயத்துடன். வாழ்க்கை இப்படித்தான், மனிதர்களின் வர்க்கம் இவ்வாறுதான் என்று வாழ்க்கையினைச் சொல்லித் தராத தந்தையைச் சந்திக்க ஆவலோடு இருந்தாள்.
இந்த சிறிய வயதினில் இரண்டு முறை ஏமாற்றப்பட்டாள், அவளை நம்ப வைத்தார்கள். அம்போ என்று விட்டுச் சென்றார்கள். யாரை நம்புவதென்று கூடத் தெரியாமல் வாழ்க்கையினை நொந்தாள் தமிழ். என்றாலும், அவள் மனம் தளரவில்லை. அவளுக்கு வந்த பிரச்சனையானது கரையினை நோக்கி ஓடிவரும் அலைகள் எப்படி அமைதியாகின்றனவோ அதேபோல கடவுளிடம் வந்தாள் தமிழ். அமைதியானாள். ஆனால், மிகவும் திடமானாள்.
தனது சுய நினைவினை இழந்த செல்வரத்தினம் கோவிலுக்கு வந்து தெய்வத்திடம் இறைஞ்சினார், தனக்குக் குடும்பம் இருக்கா? தான் யாரு என்று கூடத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்ததில் களைப்படைந்தார். இறுதியில் அவரின் தலை சுற்றியதால், கீழே விழும்போது சிபீ தாங்கிப் பிடித்தான். இப்படி மற்றவர் யாரென்று தெரியாமல் உதவி செய்யும் மனம் கொண்டவன் என்னென்று தமிழின் இதயத்தினை நொருக்கினான் – புரியவில்லை.
வீட்டிற்கு வந்தாள் தமிழ் – தமிழைக் காணவில்லை என்று என்ன செய்வதென்று தெரியாமல் ஏங்கிப் போயிருந்த ஜனாம்மாவைச் சந்தித்தாள். ஓவென்று ஜனாம்மாவைக் கட்டிப் பிடித்து அழுது விட்டாள். என்ன நடந்தது என்று ஜனாம்மா கேட்டும் ஒன்றுமில்லை என்று பதில் தமி்ழ் சொன்னாலும் நம்பிவிடுவாவா ஜனாம்மா. உன்னை பிறகு பார்த்துக் கொள்ளுகின்றேன் என்று அமைதியானா, ஜனாம்மா. ஏதோ நேற்று இரவு நடந்திருக்கிறது. தமிழைப் பற்றி அறிய வேண்டுமென்றால், சிபீயைத்தான் விசாரிக்க வேண்டும் என்று ஜனாம்மாவிற்கு தெரியாதா என்ன?
இவ்வளவு நோவினிலும் தமிழ் சிபீயைக் கை காட்டவில்லை. அவனைக் காயப்படுத்தவில்லை.
இந்த பிரச்சனை ஜனாம்மாவை சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கையிலே, இசையைக் காணவில்லை என்ற செய்தி வந்தது. இசையோ வாய் பேசாத ஒரு குழந்தையை விட அறிவில் குறைந்தவள். என்ன நடந்தது என்று கூட ஒருவராலேயும் கண்டு பிடிக்க முடியாது. அவளால் சொல்லவும் தெரியாது. அக்கா என்ற வார்த்தையினைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது.
அப்படியான ஒரு பிள்ளையினை containerக்குள்ளே வைத்து அடைப்பதற்கு அமுதாவுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். அக்கா என்று மட்டும்தான் அவளால் உச்சரிக்க முடியும். அக்கா தமிழ் வரவில்லை என்ற பயத்திலே மயங்கிப் போனாள் இசை.
இவர்களையெல்லாம் பெண்கள் என்ற categoryயில் சேர்க்கத்தான் முடியுமா?
சொத்திற்காக ஒரு மனிதன் மாறும் விதத்தினைப் பாருங்கள். கணேஷன், பிரகாஷை அடித்துத் தள்ளி அவனின் உயிரைத் தவிர எல்லாவற்றையும் பறித்துவிட்டு, அதே வீட்டினில் இருந்து நேரத்துக்கு நேரம் உண்டு கொண்டிருக்கின்றானே! இவன் காணாததென்று, அமுதா தன் பங்கிற்குத் தொடங்கியுள்ளா.
நல்ல சமயம் வேலை செய்யும் CCTV இருந்த படியால் சிபீயால் இசையைக் கண்டு பிடிக்க முடிந்தது.
CCTV footageஇனைக் காட்டினால் மட்டும் சிபீ தமிழிடமிருந்து தப்பலாம். இல்லாவிடில், சிபீயில்தான் பழி முடிப்பாள் தமிழ். ஏனென்றால், தனக்கு, தான் நல்லவன் என்று நீரூபிப்பதற்கு என்று சிபீ செய்யும் திருகுதாளங்கள் என்று சொல்லும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. தன்னை யார் உள்ளே அடைத்தார்கள் என்று கூட இசைக்குச் சொல்லத் தெரியாது. எனவே, தமிழ் சிபீயில் சந்தேகப்படலாம்.
அப்படியானவன் சிபீ தான்இல்லை என்று கூடச் சொல்ல முடியாது. தமிழைப் பழிவாங்க நினைத்த, அவளின் மனதினைச் சுக்கு நூறாக்கிய சரித்திரம் சிபீயைப் பொறுத்தவரையில் உண்டு.
இதைவிட, தமிழ் ஒன்றும் ஜனாம்மாவிடம் சிபீயைப் பற்றி சொல்லவி்ல்லை. சொன்னால் சிபீக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. எனவேதான், தமிழ் ஜனாம்மாவிடம் தனக்கு சிபீ செய்த துரோகத்தனைச் சொல்லவில்லை.
இனி நடப்பதுதான் சிபீயின் உண்மையான தோற்றம். ஆனால், தமிழ் இத்தோற்றத்தினை நம்புவாளா? அதற்குச் chanceஏ இல்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!