posted 5th March 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 27ஆம், 28ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- ஜனாம்மாவின் கணவனின் திதியானது ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பானது மீனாவிடம் கையழிக்கப்பட்டது. மீனாவுடன் சேர்ந்து செய்வதற்காக உடன்பட்ட தமிழ் உதாசீனப்படுத்தப்பட்டாள்.
- திதிக்கு வேண்டியவர்களான, ஜனாம்மாவின் பிள்ளைகளான ஜெயபிரகாஷும், ஜெயறாணியும் இல்லாததினை அடுத்து சிபீயையும், தமிழையும் இதனைச் செய்யும்படி பணித்த ஜனாம்மாவின் ஆசையானது நிராகரிக்கப்பட்டது.
- ஆனால், தமிழோ ஒருவரினதும் உதவியின்றி, தாத்தாவிற்கு முறையான திதி கொடுக்கப்பட வேண்டுமென்று உறுதி பூண்டவளாய் பிரகாஷ் மாமாவையும், அவளது அம்மாவையும் வைத்து நடத்தி முடித்தாள்.
- கோபமடைந்த மீனா, தமிழை குடும்பத்தினை விட்டு விலக்கினா.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 27 - 28.02.2026
ஜனாம்மாவின் கணவரின் நினைவு நாளுக்கு திதி கொடுப்பதற்காகத் தேவையான எல்லாம் கொண்ட லிஷ்டினைக் தனது மருமகளான மீனாவிடம் கையளித்தா ஜனாம்மா. ஆனால், இதில் தமிழோ முன் வந்து அதனை வாங்கலாம் என்று கேட்கையிலே, மீனாவோ மிகவும் கோபமாக திட்டித் தள்ளி விட்டா தமிழை. இதனை எதிர்பார்க்காத தமிழும், சிபீயும் வெட்கப்பட வேண்டியதாயிற்று. சிபீ, தமிழுக்காக பரிந்துரைத்தான். அவனையும் அடக்கினா சீபியின் அம்மா மீனா.
எல்லாம் ஒழுங்காகின. கோயிலுக்குச் சென்றார்கள் எல்லாரும் ஒன்றாக. ஆனால், முக்கியமான, ஒரு குறைபாடு அங்கு இருந்தது. தாத்தாவின் திதிக்கு அவரின் பிள்ளைகள்தான் பிண்டம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தாத்தாவின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஒரு நம்பிக்கை.
அதைத்தான் சாமியும் சொன்னார். ஆனால், ஜனாம்மாவின் மகன் ஜெயபிரகாஷ் இப்போது இவர்களைப் பொறுத்தவரை இயலாமல் படுத்த படுக்கையாக இருக்கின்றார். மற்றது, மகள், ஜெயறாணி. அவவை, குடும்பத்திற்கு எதிராக அவ செய்த துரோகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளா.
எனவேதான், அவரின் பேரனும், அவனின் மனைவியுமாக இந்த பிண்டத்தினைச் செய்யவுள்ளார்கள் என்று கூறிய ஜனாம்மாவின் கருத்திற்கும், விருப்பத்திற்கும் மாறாக மீனாவை உசுப்பேற்றி விட்டான் கணேஷன். சாமியின் கருத்தினை எதிர்த்து நின்றார்கள் கணேஷனும், மீனாவும். இவர்களின் கட்டாயத்தின் பேரில் சாமி சிபீயை மட்டும் வைத்து திதியினைக் கொடுத்தார். சிபீயும் பிண்டத்தினைக் குளத்தினில் கரைத்தான். தமிழோ ஒதுக்கப்பட்டாள்.
ஆனால், தமிழ் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு தான் நினைத்ததைச் செய்தாள். அதாவது, தாத்தாவின் திதியை, தாத்தாவின் பிள்ளைகளாக உள்ள பிரகாஷ் மாமாவையும், தனது அம்மா ஜெயறாணியையும் வைத்து அதே கோவிலில் செய்யத் தொடங்கினாள். இந்தச் சடங்கிற்காக இருவரையும் தேனுவை வைத்து வரவளைத்து திதியைத் தொடங்கினாள்.
ஆனால், தமிழின் கஷ்டகாலமோ என்னவோ, ஜனாம்மாவின் காரானது மீண்டும் மீனாவால் கோவிலுக்குத் திருப்பப்பட்டது. ஜெயபிரகாஷும், ஜெயறாணியும் திதி கொடுத்துக் கொண்டிருப்பதையும், அவர்களுடன் தமிழும், தேனுவும் நிற்பதனையும் கண்டு வியந்தார்கள். மீனாவும், ஜனாம்மாவும் மிகவும் ஆத்திரமடைந்தார்கள்.
எல்லாரும் கூடி வந்தார்கள், ஜெயபிரகாஷையும், ஜெயறாணியையும் சுற்றிக் கொண்டார்கள். தமிழுக்கு எதிரான வழமையான பஞ்சாயத்தினை விட இப்போதானது மிகவும் கொடூரமாக இருந்தது. ஆனால், தமிழோ ஒன்றுக்கும் அசைவதாகத் தெரியவில்லை. ஒருவரினதும் வசைகளையும் தமிழ் காதால் கேட்டுக் கொள்ளவதாக இல்லை. ஆனால், அவளின் முடிவோ ஜனாம்மாதான் கருத்துதான் தெரிவிக்க வேண்டுமே ஒழிய வேறொருவரும் சொல்லத் தேவையில்லை என்று அறுதுறுத்துச் சொன்னாள் தமிழ்.
மீனாவின் ஆட்டமோ அகோரமாக இருந்தது. இதனை ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருந்தான் கணேஷன். தகப்பனை அதட்டினான் சேது. அவனையும் அடக்கி வைத்தார் கணேஷன். தமிழின் முடிவோ இந்தத் திதி ஒழுங்காக தாத்தாவிற்குச் செய்யப்பட வேண்டும் என்பதுதான். எவரின் கருத்தும், உள் குத்தும் தமிழுக்கு ஒன்றுமே இல்லை.
விவாதமோ உக்கிரமாகியது. அமுதா, தனது கோபத்தினை அடக்க முடியாமல், இடத்தினை விட்டு வெளியேறும் படி சொன்னாலும், ஜெயறாணியும், தமிழும் இடத்தை விட்டுப் போவதாக இல்லை. மீனாவோ இனி தமிழுக்கும் தங்களது குடும்பத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இனி, உனக்கும் எங்களது குடும்பத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தமிழைத் தலை முழுகிய மீனா. எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷற்கோ ஆத்திரத்தினை அடக்க முடியாமல் இருந்தது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!