posted 27th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இன்று சிபீ என்ன சொல்ல விழைந்தான் என்று தமிழுக்கும் விளங்கவில்லை. தமிழும் சிபீயை முழுதாகச் சொல்ல விடவுமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.
- பெண்களை ஏமாற்றும் அளவிற்கு ஜானு என்னை வளர்க்கவில்லை என்றதும், நான் உன்னை உண்மையாக விரும்பவில்லை என்றும், உன்னைப் பழிவாங்க காதலிப்பது போன்று நடித்தேன் என்றும் சிபீ சொன்னது இவ்வளவு காலமும் சிபீ தான் நினைத்ததும், செய்ததும். ஆனால், இப்போ என்ன நினைத்திருக்கின்றான் தமிழினைப் பற்றி சிபீ என்று சொல்ல முன்பு தமிழ் கையினால் நிறுத்து போதும் என்று சைகினைக் காட்டி நிறுத்திவிட்டாள். விலகியும் போனாள்.
- நான் முன்பு கூறியபடி, தமிழிடம் சிபீ தனது உண்மையான நிலைப்பாட்டினைச் சொல்லுவானாக இருந்தால், சிபீக்கு தமிழ் நரக வாசலைத்தான் காட்டுவாள் என்பது இனி நடக்கப் போகின்றது.
- சிபீ படிச்ச முட்டாள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
- இப்போதைய நிலையினைச் சொல்ல வேண்டும், பின்பு உண்மையான அன்பு மலர்ந்த பிறகு தான் நினைத்ததைச் சொல்லலாமா? சொல்லக் கூடாதா? என்று தீர யோசிக்க வேண்டும்.
- பெண்கள் மிகவும் sensitive ஆனவர்கள். ஆகையால் ஆண்கள் தங்களது senseஇனை மிகவும் அவதானமாகப் பாவிக்க வேண்டும். இது ஒரு முக்கியமான உதாரணம்.
- கோயிலில் தெய்வத்திடம் தஞ்சம் அடைந்தாள் தமிழ். தன் தந்தையைத் தேடுகின்றது அவள் மனம். அவ்வளவிற்குத் தமிழ் தந்தையுடன் attachஆக இருந்திருக்கின்றாள். எல்லா இன்ப, துன்பங்களைத் தன் தகப்பனுடன் share பண்ணி இருக்கின்றாள் தமிழ்.
- ஞாபக சக்தியினை இழந்தவராய் தமிழின் தகப்பனும், கிறுதி போட்டு விழுகையிலே தாங்கிய சிபீ.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 26.09.2025
படித்திருந்தாலும், பெண்களின் மனதினைப் படிப்பதற்குரிய படிப்பும் இல்லை, ஒரு சர்வகலா சாலையும் இந்த உலகத்தில் இல்லை. வாழ்க்கையில் ஆண்கள் தோல்வி அடைவது இந்தப் படிப்பில்தான்.
சிபீ, நீ, தமிழைப் பழி வாங்குவதற்கு எவ்வளவு திட்டங்கள் தீட்டினாய், எத்தனை முறை அவளை தோற்கடிக்க முயற்சி செய்தாய், இத்தனை தரமும் உன் மூளை தீயனவற்றினைத்தானே சிந்தித்தது. இதில் ஒரு நிமிடம், தமிழ் செய்த நல்ல விஷயங்களை அலசி ஆராய்ந்திருந்தால் நீ வாழ்க்கையிலே ஜெயித்திருப்பாய்.
நீ பிறவியில் நல்லவன் என்று நீ சொல்லிக் கொண்டு திரிவதை யார் கேட்டார்கள்? யாருக்குத்தான் வேண்டும்? தமிழிடம் உனது உண்மையினைச் சொன்னாய்தானே! அதன் பிறகு தமிழை அழ வைத்து விட்டாய்தானே! பிறகு நீ உன் தலையிலே அடித்து அடித்து பிழை செய்து விட்டேனே என்று அலறினாயே! இப்போ நீ சொல்லு சிபீ, நீ நல்லவனா? கெட்டவனா?, தமிழைப் பொறுத்தவரை. நீ, கெட்டவன்தான், கொடியவன்தான், துரோகிதான்.
தமிழிடம் சொல்லுமுன்பு, உனக்கு வாழ்க்கை சந்தர்ப்பங்கள் தந்தது. நீ அதனை காது கொடுத்துக் கேட்கவில்லை. அதுதான், தமிழ் நீ சொல்லச் சொல்ல உன்னைத் தடுத்துத் தடுத்து தான் என்ன சொன்னாள் எங்கள் வாழ்க்கையினைப் பற்றி. ஆனால், நீ என்ன செய்தாய், சிபீ? நீ சொல்வதனைக் கேளு என்று முந்திக் கொண்டாய். விளைவைப் பார்த்தீயா? அப்பவும் தமிழ் பகிடி விடாதேயுங்கள் சிபீ சார் என்று கூடச் சொன்னாள். கேட்டாயா? இல்லையே! முந்திக் கொண்டாய். உனக்கு வரவிருந்த அந்த நல்ல வாழ்க்கைக்கு நீயே சூனியம் வைத்து விட்டாய்.
எவ்வளவு சந்தோஷமாகத் திரிந்தாள் தமிழ். அவளின் நிம்மதி, சந்தோஷம் எல்லாவற்றினையும் ஒரே சொல்லில் அழித்து விட்டாய்யே! இனி, உன்னால் தமிழை நெருங்க முடியுமா? உன்னால் இனி நினைச்சும் பார்க்க முடியாத தூரத்தில் அவள் மனம் போய் விட்டது.
இவ்வளவு நாளும் நீ தமிழை ஏமாற்ற வேண்டும் என்று எவ்வாறெல்லாம் நடித்தாய். இனி நீ அவளை உண்மையாக விரும்பி என்ன செய்தாலும், தலைகீழாக நடந்து அவள் பின்னால் எங்கு போனாலும் உன்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள்.
உனக்கு சிபீ தமிழ் நரக வாசலைக் காட்டுவாள் என்றுதான் சொன்னேன். அது பொய். இனி உனது ஒவ்வொரு வினாடியும் நராகமாகத்தான் இருக்கும். அதுமட்டுமா இனி உனது வாழ்க்கையே நரகத்தினுள்தான். உன்னால், இனி சாப்பிட முடியாது, நிம்மதியாக இருக்க முடியாது, தூக்கத்தினை மறப்பாய், பைத்தியம் பிடித்தவனாவாய். குடிப்பாய், ஆனால், அதனைத் தடுக்க இப்போ தமிழ் வரமாட்டாள். ஆனால், நீ குடிக்கத் தொடங்குகையில் உனக்கு தமிழின் நினைவு வரும். உன்னால் ஒன்றையும் concentrate பண்ண முடியாமல் துடிப்பாய்.
உன்னுடன் தமிழ் கதைத் வார்த்தைகள், வாழ்க்கைத் திட்டங்கள் எல்லாம் உன் நினைவிற்கு வரும். தீயில் விழுந்த புழுவின் வேதனையை விட நீ அனுபவிப்பதனைப் பார்த்து அந்தப் புழுவே ஆறுதல் அடையும்.
ஆனால், சிபீயை மீட்கும் படி ஜனாம்மா, தமிழ் உன்னிடம்தானே சிபீயை உன் கைகளினைப் பிடித்து பொறுப்புத் தந்தா. தமிழே உன்னால் விலகிப் போக இயலாதே! நீ விலகிப் போகும் பிறப்பில்லவே! என்ன செய்யப் போகின்றாய்?
அடுத்து பக்கம் பார்த்தால், ஜனாம்மா என்ன பத்திரம் தந்தா உன்னையும், சிபீயையும் கையொப்பம் போடும் படியாக. நீயும் பார்க்கவில்லை, சிபீயும் அதைப் பார்க்கவில்லை.
வாழ்க்கையில் தமிழ் இரண்டாம் தரம் வீழ்ந்தாள். இரண்டு வீழ்ச்சியிலும் அவளது நெஞ்சு வெடித்து சிதறியது. இல்லை சிதறடிக்கப்பட்டது.
முதலானவன், சொத்தில்லை என தமிழைத் தூக்கி எறிந்தான். ஆனால், சிபீ தனது சுய கௌரவத்திற்காகத் தமிழைத் தூக்கி எறிந்தான்.
அனேகமாக, காதல் விஷயத்தில் பெண்கள் மிகவும் sensitive ஆனவர்கள். அத்துடன் உண்மையாகவும் இருப்பார்கள். இதில் நான் உண்மையாகக் காதலை மதிக்கும் இரு பாலார்களையும் சொல்கின்றேன். பெண்களுடன் கதைக்கும் போதோ அல்லது காதலியுடன் காதலன் கதைக்கும் போதோ மிகவும் அவதானமாக கதைக்க வேண்டும். நான் ஆண்தானே, இவள் போயும் போயும் பெண்தானே என்று நினைப்பவன் வாழ்க்கை, நான் என் வாயால் சொல்ல மாட்டேன். நீங்களே ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன்.
தன் தந்தையுடன் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள் தமிழ். அவளால் இந்த கெட்ட மனிதர்களின் மனதினை அறிந்து கொள்ளும் படிப்பினை தகப்பன் சொல்லிக் கொடுக்கவில்லை. அதைத்தான், கோவிலில் வைத்து தமிழ் கேட்டுக் கொண்டிருக்கின்றாள். தெய்வமோ ஞாபக சக்தியினை இழந்த தகப்பனை தமிழின் கண்களுக்குக் காட்டுகின்றது. சீபீயும் தன்னை அறியாமல் தமிழின் தகப்பன் என்று தெரியாமல் உதவி செய்கின்றான். ஆனால், இந்த உதவி தமிழின் மனதினில் சிபீயை நினைக்க உதவுமா? ஆனால், நன்றி என்று மற்றவனுக்குச் சொல்வது போல் சொல்லிவிட்டு போயக் கொண்டே இருப்பாள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!