posted 26th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தாய் பிள்ளையைத் தாலாட்டுவதைப் போன்று தமிழ், ஜனாம்மாவை பார்ப்பதற்குரிய காரணம்தான் என்ன? இது சிபீயிடம் உதயமான கேள்வி. அதாவது, தமிழ் யார்?
- அலுவலகத்தில் தமிழைக் கொப்பி பண்ணி இழுத்து விட்ட சிபீ. பெயர் கிடைத்தது. தமிழுக்கு நன்றி கூறிய சிபீ. ஒருதருக்கு நன்றி கூறுவது என்பது உண்மையான ஒரு மனிதனிடம் இருக்க வேண்டிய ஒரு குணாதிசயம்.
- அமுதாவிற்குத் தெரியும், மீனா ஒரு ஏமலாந்தி என்று. எனவே, மீனாவை வைத்து game ஆடத் தொடங்கும் அமுதா.
- அமுதாவை நம்பினா மீனா. ஷியாமை வீட்டை விட்டுக் கலைப்பதற்காக திட்டத்தினை அமுலாக்குவதற்கு அமுதா, மீனாவைப் பயன்படுத்தினா.
- இது மிகவும் ஆபத்தானது என்று தமிழ் சொன்னதையும் நம்பாமலும், கேடீ தடுத்தும் நிற்காமலும் சென்ற ஷமீத்தாவிற்கு நடந்தது என்ன?
- ஜனாம்மாவின் பக்கம் இனி தலை வைத்துப் படுக்கவே மாட்டாள் ஷமீத்தா. ஓடித் தப்பித்தாள் ஜனாம்மாவிடமிருந்து.
- பாசத்தினைக் காட்டி ஜனாம்மாவை அமைதியாக்கிய தமிழ்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 25.10.2025
சிபீ தமிழைத் தேடிக் கொண்டு வருகையிலே, தமிழ், ஜனாம்மாவைத் தாலாட்டிக் கொண்டிருப்பதனைக் கண்டு வியந்து விட்டான். இதில் யார் அம்மா? யார் பிள்ளை என்ற யோசனை அவனுக்கு?
ஒரு தாய் தனது பிள்ளையினைத் தாலாட்டி துயில வைப்பது போன்று சிபீக்கு இருந்தது. ஏன் தமிழ் இப்படிச் செய்கின்றாள்? இவள் எங்கேயோ இருந்து வந்தவளாச்சே! இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை இருக்க வேண்டும்? மனத்தினை வருத்திய ஷியாம் எங்கேயோ போய் விட்டாள். சும்மா நின்றவள், தமிழ், ஷியாமைப் பார்த்து சொன்ன வார்த்தைகள், அவள் ஜனாம்மாவைப் பற்றி கூறிய வாழ்க்கையின் வரலாறானது எல்லாம் என்னென்று இவளுக்குத் தெரியும்? வியப்பினில் சிபீ. எதையுமே கவனியாமல் ஜனாம்மாவிலேயே கண்ணாயிருந்த கருணையைப் பொழிந்தவளாய் தமிழ்.
தமிழ் என்று சிபீ, தமிழினைக் கூப்பிட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. இப்போதுதான் முன்பு தமிழை ஏமாற்றுவதற்காக நடித்தபோதிருந்த சிபீயாக இப்போது கூப்பிடுகின்றான். அதனைக் கூட தமிழ் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், சத்தம் ஒன்றும் வேண்டாம் என்றும், ஜனாம்மா அயர்ந்து போய் உள்ளா என்றும் சொன்னாள் தமிழ்.
ஆனால், ஜனாம்மாவோ மனச் சஞ்சலத்திலே இருக்கையிலே தமிழ் ஜனாம்மாவின் தலையினை நீவி விட்டுக் கொண்டிருக்கையிலே அயர்ந்து கொண்டு போனதினையும் சிபீ அவதானித்துக் கொண்டிருந்தான்.
ஜனாம்மாவின் மனம் வெகு பாரமாக இருந்திருக்கும் என்று உணர்ந்தவளாய் தமிழ் கட்டிலிலே அவவின் பக்கமிருந்து நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.
அமுதாவின் வலையில் சிக்கினா மீனா. அதுவும், மீனாவின் அண்ணன் கணேஷன் தனது தங்கையினை தனது மனைவி பிரச்சனைக்குள்ளே சிக்க வைக்கின்றா என்று தெரிந்தும் மீனாவைச் சிக்க வைப்பது என்பது றொம்பத் துரோகமாகும். அதுதான், ஜனாம்மா மீனாவை ஒரு வெலாந்தி என்று தமிழிடம் சொன்னா ஒருநாள்.
மீனாவுக்கோ யார் நல்லவர், யார் கெட்டவர் என்று பகுத்தறிவு ஒன்றும் இல்லாதவ. அவவின் பெலவீனத்தினைப் பயன் படுத்தி ஷியாமை ஜனாம்மாவிடம் முண்ட வைத்து, அதனால் ஷியாமை வீட்டை விட்டு திரத்தி விடுவதுதான் திட்டமே. இதில் ஷியாம் யார் சொன்னது என்று தெரியவரும் பட்சத்தில் மீனாதான் பொல்லாதவளாக வேண்டிவரும். இறுதியாக மீனாவுக்கு விளங்கினாலும், தான் ஒரு நாள் மாட்டிக் கொள்வேன் என்பது அவவின் மூளைக்கு வரவில்லை.
ஆனால், மீனாவை மாட்டி விட்டு அமுதா தப்பிக் கொண்டா. ஒரு நாளைக்கு இதுவும் மீனாவுக்கு விளங்கும் காலம் வரும். மீனா தமிழுடன் எரிந்து விழுவதும் அமுதாவின் உசுப்பேற்றலினால்தான். ஆனால், ஒருநாள் தமிழையும் அமுதாவுக்கு விளங்கும். அப்போது மீனா கவலைப்படுவா.
மீனாவின் உசுப்பேற்றலினால் ஷியாம் ஜனாம்மாவை சமாதானப் படுத்தி நல்ல பெயர் எடுப்பதற்காக ஜனாம்மாவின் மகளைப் பற்றி, அதாவது, தமிழின் அம்மாவைப் பற்றி, கதைப்பதற்காவும், அவர்களை மீண்டும் நீங்கள் கூப்பிடுங்கள் என்றும் சொன்னால் ஜனாம்மா, அட இவள் நல்லது செய்கின்றாளே என்று தலையில் தூக்கி வைப்பா என்றதை நம்பி ஜனாம்மாவின் அறைக்குச் சென்றாள். போகாதே என்று இறுதியாகத் தமிழும் தடுக்க அதையும் கேட்காமல் சென்றதுதான், துப்பாக்கிச் சூட்டின் பயத்தினால் ஓடி கீழே வந்தாள் ஷியாம்.
அம்முவின் கதையினைக் கேட்டாலே இனி இல்லை என்ற கோபம் ஜனாம்மாவிற்கு வரும். துப்பாக்கியுடன் நின்ற ஜனாம்மாவைக் கண்டு தமிழ் பயந்து போனாள். ஆனால், பயப்படாமல், கிட்டே போய் ஜனாம்மா வைத்திருந்த துப்பாக்கியை வாங்கி தள்ளிப் போட்டு விட்டாள். அமைதியாக இருக்கும்படி ஜனாம்மாவை அமைதிப்படுத்தினாள் தமிழ்.
இதில் இன்னொரு விஷயமும் உண்டு. தமிழ்தான் அம்முவின் மகள் என்றால் ஜனாம்மா என்ன செய்வா? கோவித்து கலைத்து விடுவாவா? அல்லது தமிழுக்கு எதிராக துப்பாக்கியினை நீட்டுவாவா?
இந்தப் பிரச்சனையைத்தான் தமிழ் முதலில் இல்லாமலாக்க வேண்டும். அதற்குத் தான் தமிழ் அம்மா என்று உங்களை எல்லாரும் உண்மையாகக் கூப்பிடுகையில், அம்மா எப்பவாவது கையிலே துப்பாக்கியுடன் இருந்தால் பிள்ளைகள் உங்களுக்குக் கிட்டே வரலாமா என்றதனை விளங்கப்படுத்தினாள் தமிழ். இதனல்தான் ஜனாம்மா அமைதியானா. இதனால், பிற்காலத்தில் அம்மு மேலே உள்ள கோபம் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் ஊகிக்கலாம்.
தமிழின் கருத்துக்களைக் கொப்பி செய்த சிபீ அலுவலகக் கூட்டத்திலே மதிப்புப் பெற்றான். அதற்குத்தான் நன்றி சொன்னான் சிபீ.
இதனைப் பார்க்கையிலே எவ்வளவு அமைதியான அணுகு முறைகள் சிபீ – தமிழ் வாழ்க்கையிலே.
இப்படியாக ஜனாம்மாவின் நிழலிலே வாழுபவள் தமிழ். அவளின் அம்மாதான் அம்மு என்று தெரிந்ததும் ஆரம்பத்தில் ஜனாம்மாவால் ஜீரணிக்க முடியாமல் தவிப்பா. ஆனால், தமிழின் முகத்தினைப் பார்க்காமல் அவளின் அணைப்பினை ஒதுக்கி ஜனாம்மாவால் சுவாசிக்க முடியாது. தமிழுக்காக, அம்முவை ஜனாம்மா மன்னிக்க கூடுதலான chance இருக்கின்றது என்றே சொல்லலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!