posted 26th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கல்யாணம் செய்வது போல நடிச்சனான். கல்யாணம் செய்யவல்ல. என்று கூறிய வார்த்தைகளிலிருந்து தெரிகின்றது சிபீ வீம்பிற்காகவும், தமிழை வெறுப்பேற்றுவதற்காகவும்தான் நடிக்கின்றான் என்று.
- அதைவிட முக்கியமானது, ஷியாம் சிபீயை காதல் பண்ணுகின்றாள் என்று. ஏனென்றால், அவள் கதைப்பது நிஜம்.
- விதவையின் தாலியினை நான் என்னென்று ஏற்றுக் கொள்ள முடியும் என்பதும், எனது வாழ்க்கையும் இடைநடுவே போய்விடும் என்பதுவும் ஜனங்கள் கதைப்பதைத்தான் ஷியாம் கதைக்கின்றாள். > உறவுகளுக்கு sentiment இருக்கலாம். ஆனால், ஷியாம் ஒரு பிறத்தி என்பதினால், அந்த sentiment அவளுக்குத் தேவையில்லையே! ஆனால், கணேஷனும், அமுதாவும், ஷியாம் கதைத்தினை எதிர்க்காமல் மனதினுள் பூரிப்படைந்ததினையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
- சிபீதான் ஆட்டத்தினைத் தொடங்கினான். அவன்தான் அனுபவிக்க வேண்டிய இடத்திலும் இருக்கின்றான். ஆனால், இதனால், ஜனாம்மா ஏன் hurt பண்ணப்பட வேண்டும். ஒருதரும் கேட்காத கேள்வியினைக் கேட்டாள் ஷம்முத்தா. நொருங்கிப் போன ஜனாம்மா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 25.10.2025
அமுதா அனைவரும் சுமங்கலிகளை ஆராத்தி எடுக்கச் சென்ற சமயம், தாலியினை எடுத்துச் சென்று அதனை சப்பையாக்கி விட்டா. பூஜையில் தாலி நொறுங்கி இருப்பதனை அவதானித்த ஆசாரியார் என்ன செய்யலாம் என்று திகைத்துப் போய் நிற்கையிலே, ஜனாம்மா, தனது தாலியினை ஒப்படைத்தா ஆசாரியரிடம். அதனைப் பூஜையில் வைக்க முன்பே ஷியாம் தடுத்தாள். மற்றவர்களின் மனதினை தான் கதைப்பது எவ்வளவுக்கு நோகடிக்கும் என்று கூட சிந்திக்காமல் பல வார்த்தைகளை வீசி எறிந்தாள்.
அதனை ஷியாம் உணருவதற்காகவும், தமிழில் பிழை இல்லை என்று நிரூபிப்பதற்காகவும் தேனு ஷியாமை அடக்கிக் கதைத்தாள். வீணாய்ப் பழியினைத் தமிழின் மேல் போடாதே. ஏன் இதனைச் செய்வதற்கு இங்கு வேறு ஆட்கள் இருக்கமாட்டார்களா? ஏன் நீ கூட இதனைச் செய்திருக்கலாம்தானே என்ற கேள்வியானது உண்மையினை சுட்டிக் காட்டியது. அதுவும் தேனு மூலமாக.
மனமுடைந்து போன ஜனாம்மாவைக் கூட்டிக் கொண்டு அறையினுள் சென்ற தமிழ், தனது ஆதங்கத்தினையும், ஷியாமால் இனி ஜனாம்மாவின் மொத்தக் குடும்பமும் அலைகளிக்கப்படப் போகின்றது என்று கோபமடைந்தவளாய் ஜனாம்மாவிடம் உரிமையுடன் சொன்னாள், தமிழ். இத்தனை விஷயங்களை எப்படி அறிந்து கொண்டாய் என்று ஜனாம்மா கேட்டதற்கு பதில் இல்லை தமிழிடம். ஏனென்றால், அவள்தானே ஜனாம்மாவின் பேத்தியாச்சே! யார்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்? அவசியமில்லையே!
பூஜையானது குளம்பி விட்டது. அடுத்தது எப்போது, என்ன நடக்கப் போகின்றது என்று யாருக்குத்தான் தெரியப் போகின்றது. அங்கு வந்த சுமங்கலிகள் சொன்ன மாதிரி இந்தப் பூஜை நடக்காது போல இருக்கின்றது என்று கூறியது போல அந்தப் பூஜையானது தொடங்க முன்பே நின்று விட்டது.
சொந்தங்கள் இந்த சம்பிராயத்தினை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், எல்லாரும் ஏற்றுக் கொள்ளுவார்கள் என்றில்லை. முக்கியமாக இங்கு பார்த்தால், கணேஷன் குடும்பத்தவர். ஏனென்றால், வாழ் விழந்தவரின் தாலி என்பதனால். எனவே, இதனை ஷியாம் கேட்டதினைக் கொஞ்சம் அமைதியாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கல்யாணம் பண்ணி இடக்கு முடக்காய் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால், எமது சமுதாயத்திலுள்ள எல்லாருடைய வாயானது திறந்துவிடும். வளையும் நாக்கினால் எவ்வளவிற்குச் சுற்றிச் சுளற்றிக் கதைக்க முடியுமோ அந்தளவிற்குக் கதைப்பார்கள்.
மாமியார் வீடும் நரகமாகும் பெண்ணிற்கு. கட்டிய தாலியினை கழற்றவும் முடியாது, மாற்றவும் இயலாது. எனவேதான், புதுத் தாலியினை வாங்கினால் என்ன என்ற ஷமித்தாவின் கேள்வியில் நியாயம் உண்டுதான். ஏனென்றால், அந்தத் தாலியினைச் சுமக்கப்போவது ஷியாம்தானே! ஆனால், இதனை சிபீ இல்லை என்று கூறுகின்றான். நிச்சயமாக ஷியாம் இல்லை என்று அவளுக்கே நேராகக் கூறுகின்றான்.
ஷியாமின் வார்த்தைகளால் மனமுடைந்து போனா ஜனாம்மா. தான் வாழ்விழந்தவ என்று அவவுக்குத் தெரியாதா? தெரிந்தும்தானே எத்தனையோ கல்யாணங்களைச் செய்து வைத்திருக்கின்றா. அத்தனே பேரும் நல்லாகத் தானே இருக்கின்றார்கள், சந்தோஷமாகத்தானே வாழுகின்றார்கள், தமிழ் சொன்ன மாதிரி.
இதனைப் பார்க்கப்போனால், சம்பிரதாயமா, மனமா? இதில் எது முக்கியமானது என்று தராசில் போட்டுப் பார்த்தால், மனம் என்றதுதான் முக்கியம் என்று சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையானது தரங்கெட்டுப் போகலாம், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவரின் மனம் ஒருத்தரிட்டேயும் இல்லை என்று ஒரு சில இடங்களில் கேள்விப் பட்டிருப்போம்தானே! அப்போ இந்த நிலையானது சம்பிராயத்தினை உடைத்தெறியும் சக்தி வாய்ந்தது என்று சொல்ல இடமுண்டு.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!