posted 25th September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஒருவரின் தேடலுக்கும் கிடைக்காத தமிழும், சிபீயும் officeஐ விட்டு வெளியில் போகவில்லை என்று CCTV Footageஇனை வைத்து அடித்துக் கூறிய மனேஜர் வினோத்.
- Officeக்கு விரைந்த ஜனாம்மா, தமிழின் phone தனது மேசையின் மேல் இருப்பதனைக் கண்டு, அன்று தமிழ் குளிர் அறைக்குப் போகையிலே அங்கு signal இருக்காதென்று தனது மேசையில் வைத்து விட்டுப் போனதினை வைத்து குளிர் அறையினைத் திறக்கும்படி பணித்தா.
- தமிழ் மயங்கிய நிலையிலும், சிபீக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையிலும் இருவரும் காப்பாற்றப்பட்டனர்.
- தமிழுக்கு Ambulance சினுள் வைத்து சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது. மயக்கம் கெதியில் தெளியும், சிபீயைக் காவலில் வைத்த nurse.
- சிபீ தமிழின் உயிரினைக் காப்பாற்றுகையில் தமிழ் சிபீயின் உயிரைக் காப்பாற்றக் கூடாதா? இதுதான் சிபீ தமிழிடம் காதலுக்குக் கொடுத்த வரைவிலக்கணம். ஆட்டங்கண்டான், அத்துடன் அடங்கியும் போனான், அதிர்ச்சி அவனை ஆக்கிரமித்தது.
- எவரும் தன் உயிரைத்தான் காப்பாற்றுவார்கள் – ஆனால், தமிழ் தன் உயிரைக் கொடுத்து உன் உயிரைக் காப்பாற்றி இருக்கின்றாள். ஏன் இப்படிச் செய்தாய் என்று ஜனாம்மா கேட்டதற்கு அதற்குரிய பதில் சிபீக்குத் தெரியும் என்றாள் தமிழ்.
- அம்மு, முத்தம்மாவுடன் வீட்டினுள் நுழைந்து தமிழின் பக்கமாய் படுத்திருக்கும் தனது அம்மா ஜனாம்மாவைக் கண்டு தன் பாரத்தினை இறக்கி விட்டா.
- ஜனாம்மா முடிவெடுத்து விட்டா தமிழ்தான் தனக்கு அடுத்தவள் என்றும், சிபீயின் மனைவி என்றும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 24.09.2025
தமிழ், காதலின் வரைவிலக்கணத்தினை சிபீ்க்கு விளங்கப்படுத்தினாள். நடுங்கிப் போனான் சிபீ. தான் காதலிக்கிற மாதிரி தமிழுக்கு நடித்து அது பொய் என்று தெரிந்ததும், வெட்கப்பட்டு வீட்டை விட்டு அவளே ஓட வேண்டும் என்று போட்ட திட்டங்கள் எல்லாம் தகடு பொடியாக்கப்பட்டது.
இது காணாததென்று, ஜனாம்மா சிபீயைக் கூப்பிட்டு தமிழின் தியாகத்தினைச் சொல்லிக் காட்டி நீ வாழ்நாளில் இதனை மறக்கக்கூடாது என்று சொல்கையில், என்ன செய்வதென்று விளங்காமல் திடுக்கிட்டுப் போனான் சிபீ. இதுதான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பது என்பது.
ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் தமிழுக்கு நீதான் தமிழ் எனக்கு அடுத்தவள், அதாவது, எனது வாரிசு என்றும், சிபீக்கும் உனக்கும்தான் கல்யாணம் என்றும் உறுதி கூறினா ஜனாம்மா.
இந்தச் செய்தி கணேஷனைப் பொறுத்தவரை கெட்ட செய்தி ஆச்சே! வெண்பாவுக்கு சிறு வயதில் இருந்தே கணேஷனும், அவன் மனைவியும் சிபீயை உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்போம் என்றும், சிபீ உனக்குத்தான் என்றும் சொல்லி வளர்த்து விட்டிருக்கின்றார்கள். ஆனால், சிபீயோ எனக்கு வெண்பா set ஆகாது என்று எத்தனேயோ தரம் சொல்லியும் இப்பவும் வெண்பா அடம்பிடித்துக் கொண்டிருப்பது நல்ல சகுனம் அல்லவே.
வேலை செய்ய வந்த தமிழ் தன் உயிரினைப் பணயம் வைத்து சிபீயைக் காப்பாற்றி இருக்கையிலே, சிபீ தன் உயிரைப் பணயம் வைத்து தமிழைக் காப்பற்றி இருப்பதனையும் இங்கு நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஆனால், எந்த சந்தர்ப்பங்களிலும் வெண்பா ஆகக் குறைந்தது, வைத்தியசாலைக்குத் தன்னும் போய் சிபீயைப் பார்த்தாவா? இல்லையே! ஆனால், சிபீ வீட்டிற்கு வந்த பின்புதான் அத்தான், குத்துதா? குடையுதா? என்று கேட்பது நடிப்பதனை விட மகா நடிப்பு என்பது கண்கூடே. இது கணேஷனின் மகள் இவள்தான் என்று மிகவும் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கின்றது.
வெண்பாவின் பெற்றார் சிபீ உனக்குத்தான் என்று தினமும் சொல்லிக் கொண்டிருந்தால் அதற்கு சிபீ தன் தலையினைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கலாமா? கல்யாணம் என்றால் மனங்கள் பொருந்த வேண்டாமா?
அம்மு தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கையிலே, முத்தம்மா அம்முவைக் கூட்டிக் கொண்டு நடுநிசியினில் வீட்டிற்கு வந்தா. அம்முவுக்கு பிறந்த வளர்ந்த வீட்டினுள்ளே களவெடுப்பவர் போல வருவது எவ்வளவு வேதனையைத்தரும். அம்மு ஏறி இறங்கிய படிகளை 25 வருடங்களின் பின்பு மிதிக்கின்றா. தமிழின் அறையினைத் திறந்து பார்த்த அம்மு, சந்தோஷத்தில் ஆழ்ந்ததனை உணர முடிகின்றது.
தமிழின் பக்கத்தில் தனது அம்மா துணைக்குப் படுத்திருப்பதனைக் கண்ட அம்முவுக்கு எவ்வளவுக்குச் சந்தோஷம் இருந்திருக்கும்.
உரிமையானதொன்று உரிமையற்றுப் போகையிலே எவ்வளவு வலிக்கும் என்பது அந்த வலியில் வாழ்பவர்களால் மட்டுமே உணர முடியும்.
உள்ளே வந்த அம்மு, தனது ஆதங்கத்தினை அம்மாவிடம் கொட்டி விட்டுச் சென்றா. அம்மு சொன்னது ஜனாம்மாவின் காதினில் ஒரு கனவில் வரும் சித்திரம் பேசுவது போல் உணருவா. மறுநாள் இதனை மீண்டும் உணருவா. இவ்வளவு நாளாக அம்முவை நினைக்காமல் இருப்பாவா ஒரு தாய்? அப்பவும், அவர்களில் கோபம் இல்லை. கணேஷனின் அண்டல்தான் அங்கு முன்னுக்கு நிற்கின்றது. அதாவது, பிரகாஷைக் கொல்ல முயற்சித்தது.
இந்த விஷயம் சிபீக்குத் தெரிந்தால், தமிழ் மீதான அன்பிற்கு இடைஞ்சலாக வரச் சந்தர்ப்பம் உண்டு. இந்தப் பிரச்சனை முளைக்க முன்பு தமிழ் தன் தகப்பனின் குற்றமற்ற தன்மையினை நிரூபிக்க வேண்டிவரும்.
இப்பவே தமிழ் செய்ய வேண்டிய முதலாவது விஷயம், பொய் சொன்ன றைவரைக் கண்டுபிடிக்க வேண்டும். அவனிடம் இருந்து உண்மையினைக் கறக்க வேண்டும், அதுவும், கணேஷனுக்குத் தெரியாமல்.
இனி, கண்விழித்ததும் தமிழுக்கு காலை நல்ல சகுனமாக அமையலாம். ஆனால், சிபீயின் நிலைமைதான் கொஞ்சம் குளப்பமாக இருக்கின்றதே? நீங்களும் குழம்பிப் போய் இருக்கிறீங்களா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!