posted 23rd September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- குளிர் அறையினுள் அடைபட்டு அவஸ்தைப்படும் சிபீயும், தமிழும். குளிரினால் சிபீ துடிக்கையிலே, தனது துப்பட்டாவினால் சிபீயைப் போத்தி விட்டும், கைகளை உரஞ்சி சூடு வரவைத்து சிபீயைக் காப்பாற்றிக் கொண்டிருந்த தமிழுக்கு முடியாமல் போன போதும், சிபீயைக் காப்பாற்றுவதற்கு இன்னமும் உஷ்னம் அவசியம் என்றறிந்தவளாய் சிபீயைக் கட்டிப்பிடித்து தன் உடல் சூட்டினை சிபீக்குக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டு மயங்கிப் போனாள்.
- நீ என்ன பைத்தியமா என்று தமிழிடம் கேட்ட சிபீயின் கேள்விக்கு தமிழின் பதில் சிபீயின் உலகத்தினையே தலைகீழாக்கி விட்டது. சிபீயை நிலைகுலைய வைத்தது.
- உண்மையான காதலானது இன்னமும் உயிருடன் இருப்பதனால்தான், எல்லாக் கொடுமைகளையும் உண்மையான காதலுக்கு மரியாதை செய்து கொண்டு அதே பாதையில் எந்த பாதிப்பும் உயிர்களுக்கும் வரக்கூடாதென்று சுழன்று கொண்டிருக்கின்றது பூமியானது.
- தாயை, சகோதரங்களை மறந்தாள், தனது கனவுகளை மறந்தாள், ஏன் தனது உலகத்தினையே மறந்தாள், தமிழ், அந்த ஒரு வினாடியினுள். ஏன்? சிபீக்காக.
- தமிழை torture பண்ணி தமிழை துரத்திவிட நினைத்த சிபீயினைத் துடிக்க வைத்த வார்த்தைகள், தமிழின் உள்ளத்திலிருந்து வந்தவை. தன் உயிரையும் மதிக்காமல் உயிர் துறக்க விளைந்த இதயம் எங்கே, சிபீயின் மனசு எங்கே?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 23.09.2025
தனக்கு பின்னும், முன்னும் திரிந்து தன்னைக் காதலிக்கின்றேன் என்று பொய்யாக சிபீ சொன்ன அந்த வார்த்தையினை உண்மையென நம்பினாள் தமிழ்.
ஒன்றுக்குமே கவலைப் படாதே, எப்படியாவது யாரும் வருவார்கள், நானும் இருக்கின்றேன் என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருந்த சிபீயை முழுமையாக நம்பினாள் தமிழ்.
தன்னை உண்மையாக சிபீ காதலிக்கின்றான் என்று நம்பினாள் தமிழ். ஏனென்றால், ஒவ்வொரு தரமும் சிபீ தமிழுடன் கதைக்கும் போது சிபீயின் கண்கள் அவன் காதலைச் சொல்வதனை நம்பினாள் தமிழ்.
சிபீ சொன்ன வார்த்தைகளையும், அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் தைரியத்தினையும் நம்பினாள் தமிழ்.
தாலி கட்டும் நேரத்திலே கைகளினை உதறிவிட்டவனின் உதாசீனத்தினை ஜீரணிக்காமல் மீட்டுக் கொண்டிருந்த தமிழை, சிபீயின் அன்பு வார்த்தைகளும், கனிவான பேச்சும், அவனின் உண்மையான, நேர்மையான உள்ளமும் மீண்டும் மீண்டும் analyse பண்ணிப் பார்த்த தமிழுக்கு சிபீயைப் பற்றிய positiveவான விடைகள்தான் வந்தன. எனவே நம்பினாள், நேசிக்கத் தொடங்கினாள்.
தமிழை torture பண்ணித் துரத்த நினைத்த சிபீ இப்போ சொல்ல முடியுமா தமிழின் வார்த்தைக்கெதிராக? என்னத்தினைச் சொல்லப் போகின்றான் சிபீ. உண்மையினைச் சொல்லப் போகின்றானா? இல்லை முரண்பிடித்துக் கொண்டு உன்னை வீட்டை விட்டுக் கலைப்பதற்காகத்தான் நான் பொய்யாகக் காதலிக்கின்றேன் என்று சொல்லுவானா? சொல்லத்தான் முடியுமா?
அப்படியான பதில் சொல்லும் அளவிற்கு சிபீ ஒரு மனச்சாட்சி இல்லாத மனிதர்களின் category யில் இல்லை என்றுதான் என் அபிப்பராயம்.
குளிர் அறையானது இருவரின் உடலின் சூட்டினைக் குறைத்துக் கொண்டிருக்கையிலே, அவர்களின் உடலானது நடுக்கத்தினை வரவழைத்து சூட்டினை உருவாக்கிக் கொண்டிருந்தது. இந்தச் சூடானது காணாததினால், முதலில் சிபீ மயக்கமுற்றான்.
தமிழ் தனது கைகளினை உரசி, உரசி சூட்டினை உற்பத்தியாக்கி சிபீக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். அதுவும் காணாதென்று அவள் மனம் நினைத்தது. தனது உடல் சூட்டினைக் கொடுப்போம் என்று சிபீயைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தன் உடல் சூட்டினை சிபீக்குக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் ஒரு கட்டத்தில் தன் நினைவினை இழந்தாள்.
தமிழின் சூடானது சிபீயை உயிர்ப்பித்தது. ஆனால், சூடிழந்த தமிழ் மயக்கமுற்றாள். சிபீ தமிழை தன் மடியில் வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் ஜனாம்மாவின் கெட்டித்தனத்தினால், குளிர் அறையானது திறக்கப்பட்டது.
சிபீ தமிழைத் தூக்கிக் கொண்டு விரைந்தான், ambulanceசினை நோக்கி. தமிழ் கண் துறந்தாள். காப்பாற்றப்பட்டாள். அன்பினை கொட்டுவான் சிபீ என்று நினைத்தோம். ஆனால், சிபீ அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அந்த வார்த்தைகள் Ambulanceஇனை விட்டு சிபீ தூக்கி எறிந்தது. தமிழை அந்த நிலையினில் விட்டு விட்டு வெளியே நின்றான் சிபீ. தமிழுக்கும் ஏன் சிபீ வெளியே போனார் என்று மனம் துடித்தது. இயலாமல் படுத்தபடியே இருந்தாள்.
ஒரு குமர்ப்பிள்ளை இரவாகியும் வீடு திரும்பாததினால் ஜனாம்மாவும், தமிழின் குடும்பமும் கவலையுற்றிருக்கையிலே மீனா வளையும் நாக்கினால் சுழற்றி சுழற்றி தமிழைத் திட்டத் தொடங்கினா. தனது மகள் வர்ஷினி காணாமல் போகையிலே எவ்வளவு risk எடுத்து தமிழ் காப்பாற்றியதையும் மறந்தா மீனா. மற்ற அனைவரும் ஒரு விதமான சலனமும் இல்லாமல் உணர்ச்சியற்ற ஜடங்களாக நின்று கொண்டிருந்தனர்.
கேடிக்கும், சேதுவுக்கும் இருந்த உணர்வுகள் கூட அங்கு நின்ற பெண்களுக்கு இருக்கவில்லை. இதுதான் இன்றைய இயற்கையும், இயல்பான வாழ்க்கையும் கூட. சொத்துக்காக உறவுகளை, உடன் பிறந்தவர்களை பலி கொடுக்கையிலே, தமிழ் இவர்களைப் பொறுத்தவரை யாரு? கூலிக்கு வேலை செய்பவள்தானே! அதுமட்டுமல்லாமல் எங்களுக்கே நாட்டாமை காட்டும் இவள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன? செத்தால்தான் என்ன? கொண்ட முதலில் எங்களுக்கு நட்டமா? என்றிருக்கும் இந்த உலக வாழ்க்கையினைப் புரிந்து கொள்ளனும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!