posted 31st December 2025
இன்றைய Serial Review & Analysisஆனது 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிகள் அடங்கலாக உள்ள Serial Review & Analysis களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பாண்டிபுரத்தினை நோக்கி ஏன் ஜனாம்மாவின் குழு Community Centre திறக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றது.
- சிதம்பரம் யார்? அவன் எப்போது தமிழைக் கண்டான்? எங்கு கண்டான்? இதற்கு முன்பு தமிழைக் கண்டிருக்க வாய்ப்பில்லையே! ஆனால், கண்டதாகக் கூறும் சிதம்பரம்.
- சித்தர் ஏன் சிபீயை றாஜா என்று கூப்பிட்டார்? தமிழை ஏன் சித்தர் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்?
- சொத்துக்காக ஒருவரால் என்னவும் செய்ய முடியுமா? முடியும் என்றுதான் கணேஷனும், வெண்பாவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்களே!
- கனவிலும், நினைவிலும் சொத்துத்தான் சொந்தமென, சொர்க்கத்தின் வாசல் எங்களிடமிருக்கென்று மாயமான வாழ்க்கையில் மயக்கத்தில் வாழுபவர்களாய் இவர்கள்.
- சிபீயைப் போல இருந்தவன் றாஜன். இல்லை, றாஜனைப் போல்தான் சிபீ. தமிழை எங்கேயோ கண்டிருக்கின்றேன் என்று சிதம்பரம் சொன்னான் என்றால், சித்தரின் கணக்குப்படி இது இவர்களின் மறுபிறப்பா? அப்போ மறுபிறப்பிற்கு அர்த்தம் என்ன?
- அடுத்தவன் வாழ்க்கையைக் கையில் எடுத்தால், ஆண்டவன் எடுப்பவனை எடுப்பான்.
- கணேஷனும், குறிஞ்சியும் மற்றவர் குடியினைக் கெடுத்தால், அவரவர் குடி ஆதாரமில்லாமல் தானாக அழியும். ஆனால், நொந்து, வெந்துதான் இல்லாமல் போகும். இதனை வெண்பா பார்க்காமலா போவாள்?
- ஒன்றுமே விளக்கமில்லாத இசையினை எவ்வாறு தெய்வம் காப்பாற்றுகின்றது என்பதனை, ஏன் இப்படி என்று ஒரு கணம் சிந்தித்தால், ஜனாம்மாவின் சொகுசான வாழ்க்கையினை சுகமாக வாழலாம். இவர்கள் கொடுத்து வைக்காதவர்கள், கெடுக்க நினைப்பதனால்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 23 - 27.12.2025
என்னென்று தமிழ் இந்த சூட்சுமத்தினைக் கண்டு பிடித்தாள் என்று சிபீ தமிழிடம் கேட்டான். தமிழும் விளங்கப்படுத்தினாள். கணேஷனின் குறுக்கு மூளையின் வேலைக்கு அவனுக்கு வந்த கனவானது உதவியது. தனது தங்கையான மீனாவைப் பலிக்கடா ஆக்கினான். அதற்காக அவன் தெரிவு செய்தது, மீனாவையும், அவவின் பிள்ளைகளையும். ஆனால், பிரகாஷ் ஒருவித அசைவாட்டமும் இல்லாமல் கணேஷன் இருக்க வைத்திருப்பதால், பிரகாஷை முடித்துக் கட்ட முடிவு செய்தான்.
A.C. ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று பொய்யினைச் சொல்லி, ஒரு சிலரைக் கூலிக்கு அமர்த்தி பிரகாஷின் ஓக்ஸிஜன் சிலின்டருடன் விஷ வாயுவினையும் சேர்த்தான் கணேஷன்.
மீனாவை ஏமாற்றிய கணேஷன், சிபீயையும், வர்ஷாவையும் பதிவுக் கந்தோரிலே கையெழுத்துப் போடுவதற்காக ஆயத்தப்படுத்தியவனாய், மூவரையும் கையெழுத்துப் போட வைத்தான் கணேஷன். வர்ஷாவிற்கு பணம் கொடுத்த தமிழ் வர்ஷாவின் விரலில் மை பூசியுள்ளதைக் கண்டு விஷயத்தினை அறிந்து கொண்டதுமல்லாமல், சேதுவிடம் இருந்து தங்களுக்கு ஒரு சொத்தும் ஊரில் இல்லை என்பதனையும் அறிந்து கொண்டாள் தமிழ்.
சிபீக்குப் பரிகாரம் செய்யக் கோவிலுக்குப் போயிருக்கையிலே, ஜனாம்மாவைக் கொலை செய்வதற்காக வந்தவனிடமிருந்து ஜனாம்மாவைக் காப்பாற்றிய தமிழ், அந்த கொலைகாரனுடன் கணேஷன் சரளமாகப் பேசிக் கொண்டிருந்ததையும் அவதானித்தாள். இதனை இந்த சமயத்தில் நினைவு கூர்ந்தாள்.
A.C. பார்ப்பதற்காக வரவழைக்கப்பட்டவர்கள் கட்சிதமாக விஷ வாயு சிலின்டரை ஒக்ஸிஜன் சிலின்டருடன் இணைத்தார்கள். இதனைத் தெய்வமானது ஒரு கெட்ட சகுனமென்று சாமி விளக்கினை அணைத்துமல்லாமல், மீனாவின் குங்குமச் சிமிழ் கீழே விழுந்து கொட்டியதிலே எடுத்துக் காட்டியது. அத்துடன், அம்முவின் மனமோ ஒரு விதமாக குளம்பிக் கொண்டுமிருந்தது.
ஒவ்வொன்றும் அங்கும் இங்குமாகவே நடந்தன. இதனால் எல்லாவற்றினவும் ஒன்று சேராமல் எதையுமே சிந்திக்க முடியாது. இதனால், மீனாவைச் சமாதானப் படுத்துவதற்காக, ஜனாம்மா, அங்காளப் பரமேஸ்வரி கோவிலிலே பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்று மீனாவிடம் கூறினா. இன்று வெள்ளிக் கிழமை, குங்குமம் கீழே சிந்தியது, சாமி விளக்கும் அணைந்தது எல்லாமே கெட்ட சகுனங்கள்தான் என்பது எம் சமுதாயத்தின் ஆழமான நம்பிக்கையாகும். ஆனால், ஜனாம்மாவின் தெய்வத்தின் மீதான நம்பிக்கையானது அசும்பவில்லை. அந்த தெய்வ நம்பிக்கையானது ஒருநாளும் வீண் போகாது என்பது தெளிவாகிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், தெய்வம் இதனை இசை மூலம் காட்டியதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. ஒழிந்து கொண்டிருந்த இசையிடம் விஷயத்தினைக் காட்டிக் கொடுத்தது அந்தத் தெய்வம். இசையோ தன்னால் முடிந்தவரை ஜனாம்மாவிற்கும், அக்கா தமிழுக்கும் விளங்கப்படுத்தினாள். இருவருக்கும் என்னதான் இசை சொல்லுகின்றாள் என்று விளங்கவேயில்லை. இசையோ மீண்டும் அந்த ஒக்ஸிஷனை பிரகாஷிற்குக் கொடுக்க விடவில்லை. இறுதியாக, இசையின் கருத்தினைக் விளங்கிக் கொண்டார்கள். விஷ வாயு இருக்கின்றது என்பதனையும் கண்டறிந்தார்கள், தமிழும், ஜனாம்மாவும். ஆனால், தமிழோ இதன் உண்மையினை ஒருவரிடமும் சொல்லவுமில்லை. அதாவது, lab report உண்மையினை வெளிவிடவில்லை.
இசையின் பிடிவாதத்தால், இசையை அடித்து விட்டாள் தமிழ். இதனால், தமிழால் இசையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஐஸ்கிறீம் வாங்கித் தாறன் என்று சொன்ன தமிழின் வாக்குறுதியால் இசையின் அழுகை நின்றது. சீபியுடன் சென்ற தமிழும், இசையும் ஐஸ்கிறீம் கடையில் இருக்கையிலே, இசை நச்சு வாயு பூட்டியவனைக் கண்டாள். தமிழிடம் அடையாளம் காட்டினாள். ஓடிச் சென்று தமிழால் அவனைப் பிடித்து வெருட்டுகையில் ஒரு பெண்தான் இதனைச் செய்யச் சொன்னதாகச் சொல்லியவனாய் தமிழைத் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டான். ஆனால், என்ன நடந்ததென சிபீக்கு கூட தமிழ் சொல்லவில்லை.
காணிப்பத்திரத்தில் ஜனாம்மாவின் கையெழுத்துப் போட வேண்டியுள்ளதினால், தமிழின் பத்திரங்களுடன் தனது பத்திரத்தினையும் ஒன்று சேர்த்தான் கணேஷன். தகப்பன் ஒருபக்கம் ஜனாம்மாவின் குடும்பத்தினை அழிப்பதற்காக பல திட்டங்களைப் போடுகையில், வெண்பா மறுபக்கம் தமிழ் set பண்ணி வைத்திருந்த camera வின் cardடினை மாற்றி வைத்தாள். இதனால், கணேஷனின் கள்ளத்தனமானதும், வெண்பாவின் குள்ளத்தனமானது எல்லாம் மறைக்கப்பட்டாயிற்று.
தமிழ் அந்தக் cardடினைப் checkபண்ணிப் பார்க்கையிலே அதில் கணேஷனின் footageஒன்றும் இருக்கவில்லை. அப்போது கணேஷனுக்கும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒருவிதமான சம்பந்தம் இல்லை என்று நினைக்கத் தோன்றிற்று, தமிழுக்கு.
கணேஷன் பத்திரத்தினை தமிழ் வைத்திருந்த பத்திரங்களுடன் ஜனாம்மாவின் கையெழுத்திற்காக தனது பத்திரத்தினைப் புகுத்து வைத்ததனை சேது கண்டு கொண்டான். இதனால் இந்த கள்ளத்தனமானது தமிழிடம் சேதுவால் தெரியப்படுத்தப்பட்டது. கோபம் கொண்ட தமிழ் கணேஷனை நேரடியாகக் கண்டித்தாள். கணேஷன் கையெழுத்து வாங்கிய பத்திரத்தினை தீ வைத்துக் கொழுத்தி விட்டாள். தமிழின் இந்த செய்கையினால் மேலும் தமிழின் மேலே ஆத்திரமடைந்த கணேஷன்.
தேனும், இசையும் ஆசைப்பட்டபடி ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றனர். எல்லாரும் சென்றனர். பின்பு ஒவ்வொருவராக ஒரு சில வேலைகளுக்காக மேசையினை விட்டுப் போகையில் இசை தனியே அங்கு விடப்பட்டாள். இந்தச் சந்தர்பத்தினை துல்லியமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வெண்பா முடிவு செய்தாள். இசை ஒரு குறைபாடான பிள்ளை என்பதனால் ஒருவரும் அவளை இலகுவாக எடை போட்டுவிடக் கூடாது என்று ஜனாம்மா சொன்னதினை நினைவில் வைத்துக் கொண்டு, வெண்பா, இசையை liftரினுள் வைத்து அடைத்து விட்டாள். இப்படியாகத்தான், வெண்பாவின் அம்மா, அமுதா, இசையை ஒரு containerறினுள் அடைத்து வைத்தா. ஏனென்றால், இசைக்கு இருட்டென்றாலே பயமாதலால். இசையைத் தொலைத்துக் கட்டினால், தமிழின் ஆட்டம் தானாகவே அடங்கும் என்று ஒரு கணிப்புத்தான்.
விட்ட இடத்திலேதான் இருப்பாள் இசை என்று தேனு கூறியதனை வைத்தும், CCTV footageஇனை வைத்தும் இசை இந்த ஹோட்டலினை விட்டு வெளியே போகவில்லை என்று சிபீ முடிவெடுத்தான். நன்கு யோசித்தவனாய் liftரினுள் போய்ப் பார்த்ததினால் இசை காப்பாற்றப்பட்டாள்.
காப்பாற்றியதுடன் சிபீ நிற்கவில்லை. இசையிடம் விசாரித்ததில், இசை வெண்பாவைச் சொன்னாள். இதில் கோபமடைந்த சிபீ, எல்லாரையும் கண்டித்தான். இதனால், குற்றம் கண்ட கணேஷன், தன் மகள் வெண்பாவிற்கு ஏன் ஆதரவாகக் கதைக்கின்றான் என்றும் கொஞ்சம் ஐமிச்சம் கொண்டாள் தமிழ்.
Community Centre ஒன்று ஆரம்பிப்பதற்காக பாண்டிபுரத்தின் பக்கத்தில் உள்ள ஊரில் இடம் இருப்பதாக auditor ஜனாம்மாவிடம் குறிப்பிட்டார். அந்த இடத்தையே fix பண்ணுங்கள் என்று ஜனாம்மா கூறி உடனே வேலையினை ஆரம்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டா.
ஆனால், இதில் பிரச்சினை இருக்கின்றது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரியோரில் சிலர் ஜனாம்மாவைப் பார்க்க வந்தார்கள். அங்கு ஜனாம்மா கூறியபடி Community Centre வருவதில் மிக்க சந்தோஷம் என்று கூறிக் கொண்டும், அத்துடன் தங்களுக்கு எங்கள் நிலத்தினைத் தருவதற்கு சம்மதம் என்று சொன்னதுடன், அங்கு சிதம்பரம் என்ற ஒருவன் அங்குள்ள மக்களுக்குத் தொல்லையாக இருக்கின்றான் என்பதனையும், அவனும் ஒரு அடாவடித்தனம் பண்ணுவதிலும், மக்களின் சொத்தை அபகரிப்பதிலும் குறியாக இருக்கின்றான் என்பதனையும் ஜனாம்மாவிடம் சொன்னார்கள். இதனால், அவனை எதிர்த்து தங்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலையில் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் சொன்னார்கள். அவனிடமிருந்து தங்களைக் காப்பாற்றும்படி ஜனாம்மாவைக் கேட்டும் கொண்டனர்.
எப்படித்தான் குடும்பத்தில் பலவிதமான விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கையிலே, சிபீக்கு தமிழுடன் ஒத்துப் போக வருவதாக இன்னமுமில்லை. சிபீக்கு தமிழைப் பற்றிய நல்ல அபிப்பராயம் இருந்தாலும், ஏதோ ஒருவகையான ego இருந்து கொண்டுதான் இருக்கின்றது. தமிழ் சமைத்ததினைச் சாப்பிடக் கூடாது என்று அடம்பிடிக்கும் சிபீ்க்கு தான் நல்ல பாடம் படிப்பிப்பேன் என்று அத்தை மீனாவிடம் தமிழ் கூறியதையிட்டு மனதினுள் சந்தோஷம் கொண்ட ஜனாம்மா.
பசி பொறுக்க முடியாத சிபீ நடுநிசியில் வயிற்று நோவினால் குசினியை நோக்க வேண்டியதாயிற்று. பசித்தால் இந்த சிபீ்ப் பூனை வரும் என்று நன்றாகத் தமிழுக்குத் தெரியுமாதலால், அங்கு ஒரு உணவும் வைக்காமல் வெறும் பாத்திரங்களை விட்டுச் சென்றாள். பூனையும் வந்தது. அதனை லபக் என்று கையும், மெய்யுமாகப் பிடித்தாள் தமிழ். உணவும் பரிமாறினாள். வயிராற உண்டான் சிபீ.
ஜனாம்மா கூறியபடி மறுநாள் விடியற்புறம் பாண்டிபுரத்திற்கு அனைவரும் புறப்பட்டார்கள். அங்கு சென்று வேலையினை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்கையிலே சிதம்பரம் தனது அடியாட்கள் சிலருடன் அங்கு வந்தான். ஜனாம்மாவையும் சேர்த்து அனைவரையும் வெருட்டினான். கொலை அச்சுறுத்தலையும் விடுத்தான். ஒருவருமே அசையவில்லை. ஜனாம்மா தனது செல்வாக்கின் பனிக் கட்டியின் உச்சியின் தலையினை சிதம்பரத்திற்குக் காட்டினா.
ஏன் ஜனாம்மா பாண்டிபுரத்தினிலே வேலையினை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகின்றா, இவ்வளவு பிரச்சினைகளின் மத்தியிலே?
சித்தர், ஜனாம்மாவை ஆசீர்வதித்த பின்பு, தமிழுக்கும் ஆசீர் கூறிவிட்டு, தமிழைக் கண் வெட்டாமல் ஏன் பார்த்துக் கொண்டு நின்றார்?
சிபீயை ஏன் சித்தர் றாஜா என்று கூப்பிட்டார்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!