posted 23rd September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- குறிஞ்சிநாதன் அனுப்பியவனைக் காணவில்லை என்று போன வாரம்தான் கூறினேன். இன்று அவன் சிபீயையும், தமிழையும் cool அறையினுள் வைத்துப் பூட்டி விட்டான். இதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும்.
- எப்படியோ ஜனாம்மாவிற்குத் தகவலினைச் சொன்னாள் தேனு. இதில் செய்தவன் அகப்படுவான்.
- ஒன்றாக cool அறையினுள் அடைக்கப்பட்ட சிபீ தமிழினை விளங்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் என்று கூட இதனைச் சொல்லலாம்.
- ஜனாம்மா தமிழின் சாதகத்தினை வாங்கி கல்யாணப் பொருத்தம் பார்க்க முயலுகையில், குளிர் அறையினுள் அடைக்கப்பட்ட சிபீயும், தமிழும் அன்னியோன்யமாவதற்குரிய வாய்பாகவும் நினைக்கத் தோன்றுகின்றது.
- தேனுவை வாசலிலே வைத்துக் கரைச்சுக் கொட்டும் கணேஷன். இதனை விளக்கமற்ற தன்மை என்று கூறிவிட முடியாது. வேண்டுமென்று செய்யும் செயலாக நினைத்தாலும், ஜனாம்மா கடிந்து சொன்னாலும், கணேஷனோ ஏதோவுடையதின் நிமிர்த்த முடியாத ஒன்று என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 22.09.2025
Cool அறையினுள் அடைக்கப்பட்டனர், சிபீயும், தமிழும். குறிஞ்சிநாதனின் ஆடிக் கொண்டிருக்கும் வாலானது ஒட்ட நறுக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதனைச் செய்தது யார் என்று பார்க்கையில், கதவின் பூட்டு எங்கிருந்து வந்தது என்பதில் இருந்தோ அல்லது CCTVயிலோ பிடிபடுவதனை வைத்து குறிஞ்சிநாதனின் ஆள் பிடிபடுவான். இவனை வேலைக்கு அமர்த்தியவர் யார் என்கையில், கேள்வி மனேஜர் வினோத்திடம்தான் முதலில் வரும். வினோத் கணேஷனைக் கை காட்டுவார். கணேஷன், தான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன் மன்னிச்சுக் கொள்ளுங்கள் மறந்து விட்டேன் என்று வழமையான எல்லோரும் சொல்லும் பதிலினைச் சொல்லுவான்.
ஆனால், இதனை சிபீயோ அல்லது தமிழோ நம்பமாட்டார்கள். ஏனென்றால் இதில் கணேஷனுக்கு நேரடியாகத் தொடர்பாக இருப்பதானால்தான்.
நடு இரவினை நெருங்குகையில் அம்மு தமிழைக் காணவில்லை என்பதனை தேனுவிடம் கூற, தேனுவும் ஜனாம்மாவிடம் சொல்வதற்காக ஜனாம்மாவின் வீட்டிற்குப் போய் சொல்லலாம் என்று முனைகையிலே, கணேஷன் தேனுவை வழிமறித்து காரசாரமாகத் திட்டி விட்டான்.
இதனை அறிந்தெழும்பி வந்த ஜனாம்மா, கணேஷனைக் கடிந்து கொண்டு தேனுவிடம் தமிழ் வராததினை அறி்ந்து கொண்டா. ஏற்கனவே சிபீ வராதது ஜனாம்மாவிற்குப் பீதியினை உண்டாக்கி இருக்கையிலே, இப்போ தமிழும் வரவில்லை என்பது மிகவும் seriousஆன விஷயமாகி விட்டது.
சிபீ வரவில்லை என்பதனை, மீனாவோ, வெண்பாவோ, அல்லது வீட்டில் யாருக்கும் கவலையில்லை, ஜனாம்மாவைத் தவிர. அவர்கள் தூங்கி விட்டனர்.
இதற்கிடையில், சிபீயுக்கு கதவினை அடித்துத் திறக்க முயலுகையில் கையினிலே காயம் ஏற்பட்டு விட்டது. காயத்திலிருந்து இரத்தம் வழிந்ததனைக் கட்டுப்படுத்த தனது துப்பட்டாவினைக் கிழித்துக் கட்டுப் போட்டாள் தமிழ்.
அதுமட்டுமா, உங்களுக்கு இப்படியாகும் என்று கூட தமிழ் நினைக்காமல், பிரகாஷுக்கு நல்லது நடக்கட்டும் என்று வெளியில் அவரைக் கொண்டு வந்ததினை வைத்து ஜானு சொன்னது போன்று தமிழ் உண்மையாக நல்லவளா? என்ற கேள்வி சிபீயின் மனதினில் தோன்றத் தொடங்கி விட்டது.
இப்போது குளிர் அறையினுள் பூட்டப்பட்ட தமிழும், சிபீயும் தொடர்ச்சியாக இருக்கும் குளிரினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இருக்கையிலே சிபீக்குக் குளிர் தாங்க முடியாமல் நடுங்குகையிலே தமிழ் தனது துப்பட்டாவினை எடுத்து சிபீயைப் போர்த்தி விட்டு தமிழ் குளிரினைத் தாங்கிப்பிடித்தாள். இப்படி உதவுவதுதான் பெண்களின் உயரிய குணம்.
முத்தம்மாவினை அனுப்பினா ஜனாம்மா, தமிழின் அம்மாவிடம் தமிழினுடைய ஜாதகத்தினை ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி வாங்கி வரும்படி. நல்ல விஷயங்கள் சொல்லுமுன்பு இனிப்பான பதார்த்தம் ஒன்றினை வாயினுள் போட்டு விட்டுத்தான் சொல்வது எமது வழக்கம். அதைத்தான் முத்தம்மாவும் அம்முக்குச் செய்தா.
தமிழின் கல்யாண விஷயம், அம்முவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்துமல்லாமல், மிகவும் பயமாகவும் இருந்தது. தமிழ்தான் அம்முவின் மகள் என்றால், கலவரம் வெடிக்கும் என்று நாங்கள் நினைக்கலாம், ஆனால், வெடிக்காது என்பது என் ஊகம். கொஞ்சம் குமுறல் இருக்கும், ஆனால், ஒரு பக்கம் தன் பேரன் சிபீ, மற்றப் பக்கம் தன் பேத்தி, தமிழ், என்ற இறுக்கமான உறவானதால், பொங்குவது அடங்கும். ஆனால், வீட்டிலுள்ளவர்களின் பொங்கலினைத் தடுக்க முடியாது. அதை இப்போ விடுவோம். வரும்போது விமர்சிப்போம்.
ஆனால், தமிழின் சாகத்தில் பெற்றாரின் பெயர்கள் உள்ள முன்பக்கத்தினைக் கிழித்து ஒன்றையும் யோசிக்காமல் வெளியில் எறிந்தா முத்தம்மா. இந்த பக்கமானது அனேகமாக மீனாவின் கண்ணில்தான் பட வாய்ப்பு உண்டு. அதனை எடுத்து கட்டாயம் ஜனாம்மாவிடம்தான் கொடுப்பா. ஏனென்றால் அதில் அம்முவின் பெயரும், தமிழின் அப்பாவின் பெயரும் இருக்கும் என்பதினால். இப்போது கலவரம் தொடங்கும். ஆனால், தமிழின் ஜாதகத்தின் முன் பக்கத்தினைக் காணவில்லை என்று யோசியர் சொல்லுகையில் இந்த பக்கமானது ஒன்றிணைக்கப்படும். அப்போது பொங்கியது அடங்கும் வாய்ப்புகளும் உண்டு.
இந்தக் குளிர் அறையினுள் இருக்கும் தமிழ்தான் கூடுதலாகத் தாக்கப்படுவாள். ஏனென்றால், அவள் தன் துப்பாட்டையையும் சிபீக்குக் கொடுத்துவிட்டாவே. சாதாரண உடையுடன்தானே இருக்கின்றாள்.
இதனைல், தமிழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படலாம். இறுதியாக குளிர் அறையினைத் திறக்கும் போது தமிழ் அறிவின்றி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதனால், சிபீக்கு தமிழ் மீது கூடுதலான அன்பு பீறிட்டு வரலாம். அது காதலாகவும் மாறலாம். அச்சமயம் தமிழ் அறிவில்லாமல் இருப்பாள்.
சிபீ தமிழின் அருகில் வைத்தியசாலையில் இருப்பான். அப்படி இருக்கையில் தமிழும் கொஞ்சம் கண் விழிப்பாள். சிபீயும் அதனைப் பார்ப்பான். தமிழ் கத்திக் கொண்டு கட்டி அணைப்பான் சிபீ. உண்மையான அன்பாக அது அப்போது இருவரிடமும் மலர்ந்து நிற்கும்.
வெட்கத்தையே மறந்து கட்டி அணைக்கும் இருவரையும் கண்டதும் வெட்கப்பட்டு நாணுவார்கள் மற்றவர்கள் அனைவரும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!