posted 21st October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவிடம் இதில் மருமகள் யாரு என்பதனை மறைமுகமாக இராமச்சந்திரனிடம் கூறிய ஜனாம்மா.
- சிபீ இப்பவும் ஷியாமைத்தான் தான் கல்யாணம் பண்ணப் போவதாக எல்லார் முன்னிலையிலும் சொல்லுவதனை ஒரு thrill ஆக வைத்திருக்கின்றான் என்றுதான் சொல்லலாம்.
- ஷியாம், ஜனாம்மாவின் கூறை சாறியினை புதிதாக்கிய நிலையிலும் உதாசீனம் செய்தது வீம்பிற்காக என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
- தமிழ் ஜனாம்மாவின் புதுப்பிக்கப்பட்ட கூறையினை உடுத்திக் கொண்டுவந்ததினால் என்றல்ல, இது அவளுக்காகவே நெய்யப்பட்டதுதான்.
- சிபீ இன்னமும் ஷியாமுடன் சேர்ந்து தமிழை தனது வழிக்குக் கொண்டுவர எடுக்கும் திட்டமென்றுதான் தோன்றுகின்றது.
- குறிஞ்சிநாதனின் வரத்து தன் மகளுக்காகவா அல்லது கணேஷனின் மகளுக்காகவா வந்தான்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 21.10.2025
சிபீயினது விருப்பத்தினை அப்படியே தமிழ் நிறைவேற்றினாள். இது என்னென்று தமிழுக்குத் தெரியும்? இதுதான் மனதாலே ஒன்றிப்பது என்பதாகும்.
சிபீயையே நினைத்துக் கொண்டிருக்கும் ஷியாமும், வெண்பாவும், சிபீக்கு விரும்பிய நிறமோ அல்லது அவனது விருப்பத்திற்குரியது போன்றோ உடுத்திக் கொண்டு வரவில்லை.
தமிழ் ஜனாம்மாவின் சாறியினை உடுத்திக் கொண்டு வருவதனைக் கண்டதும், தமிழ் ஜனாம்மாவை இளமையில் பார்ப்பது போன்று இருப்பதாக அனைவரும் நினைப்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
சிபீ திருவிளாவிற்கு, தமிழை ஏமாற்றுவதற்காக ஒரு சாறி எடுத்துக் கொடுத்தான். ஆனால், இன்று தமிழுக்கு அப்படி எடுத்துக் கொடுக்க முடியாதே! ஏனென்றால், சிபீ தனக்கே சூனியம் வைத்து விட்டானே! எனவேதான், தமிழின் தங்கை தேனுவுக்கு சாறியினைத் தெரிவு செய்து கொடுக்கின்றான். அத்துடன் தேனுவைப் போட்டோவும் எடுக்கின்றான். அந்த போட்டோவின் ஒன்றில் தமிழையும் சேர்த்து எடுத்திருப்பான் என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால், தேனுவுக்கு சாறி எடுத்துக் கொடுக்கும் போது தமிழ் எப்படி அதனை எடுத்துக் கொள்ளுகின்றா என்று அவவின் முக பாவனாயிலிருந்து அறிந்து கொள்வதற்காக.
கல்யாண சாறி வாங்குவதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் ஜனாம்மாவின் குடும்பத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதில், இவர்கள் ஜனாம்மாவிற்கு எதிராகச் செயல்ப்படத் திட்டம் போட்டிருக்கின்றார்கள் என்று அறியக் கூடியதாக உள்ளது. இவர்களால், திட்டம் மட்டும் போடலாம் ஆனால் ஜனாம்மாவை வென்றிட முடியாதே!
பிறேமும், கணேஷனும் திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அவர்களின் முகங்களே பிரதிபலிக்கின்றன.
சிபீ தனது கல்யாணத்திற்குத் தமிழை விரும்புகின்றானில்லை என்று சொல்ல முடியாது. அவனின் மனதினில் தமிழ் இருக்கின்றாள் என்பதனை தமிழ், ஜனாம்மாவின் சாறியினை உடுத்திக் கொண்டு வந்ததிலிருந்து அவனின் முகமாற்றம் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
எப்படித்தான் ஒவ்வொருவருக்கும் தங்களது மனத்தினில் விருப்பமால்லாததொன்று நடக்கின்றது என்றாலும், பிறத்தியார் முன்னிலையில் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் செயல்பட்டது நல்ல குடும்பத்திலுள்ள பழக்கங்களில் ஒன்றாக நினைக்கத் தோன்றுகின்றது.
வீராவுக்கும், மாறனுக்கும் உள்ள குழப்பமானது இல்லாமல் போக வேண்டுமானால், ஜனாம்மாவின் குடும்பத்திலிருந்து சரியான, நேரடியான பதில் வரவேண்டி உள்ளது. ஆனால், ஜனாம்மா, வார்த்தையால் சொன்ன வாக்கானிலிருந்து இருவரும் இராமச்சந்திரன் ஊகித்துக் கொண்டது போன்று சந்தேகத்திலிருந்து வெளியே வந்துவிட்டனர்.
குறிஞ்சியானவன், நான் 18ஆம் திகதியில் குறிப்பிட்டது போன்று கல்யாணம் கேட்பது போன்று ஜனாம்மாவிடம் சரண்டைய வருகின்றானோ? ஏனென்றால், கணேஷனை நம்புவதனால் எதிலேயும் வெற்றி பெறுவதாக இதுவரையும் நடைபெறவில்லை. எனவே, சரணடைவோம் என்ற முடிவுகட்டி விட்டானோ?
கேடீ, மாறன், சேது ஆகியோர் தாங்கள் கல்யாணம் பண்ணும் பெண்ணானவள் என்ன மாதிரி கல்யாணத்திற்கு உடுத்த வேண்டும் என்ற கனவினில் மிதக்கையிலே, சிபீ தனக்கான விருப்பத்தினை இறுதியில் சொன்னதினைத் தமிழில் கண்டான். அந்தக் கணம் சிபீயின் மனதினுள் இருந்த ஏக்கம் தெரிந்தது. அதாவது, தமிழை அவன் விரும்புகின்றானோ என்றுதான் தோன்றுகின்றது. ஆனால், அவனால் தமிழிடம் சொல்லவே முடியாது. இது அவன் தேடிக் கொண்டது.
இப்போ, ஜனாம்மாவின் சாறியானது தமிழின் கைக்குப் போய் விட்டது. ஜனாம்மாவின் கூற்றும், தனது பேரன் சிபீக்கு மனைவியாக வர இருப்பவள் தனது இந்த சாறியினை உடுத்திக் கொண்டுதான் மண மேடையில் உட்காருவாள் என்பதனைப் பார்த்தால், தமிழ்தான் மணப்பெண் என்ற முடிவானது நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.
ஜனாம்மாவின் சாறியினை விரும்பாத வெண்பாவும், ஷியாமும் இந்தச் சடங்கிலிருந்து அவர்களாவே விலகியது அவர்களுக்கே தெரியவில்லை போலும்.
வீட்டிற்குப் பெரியவர்களுக்கு மரியாதை பண்ணுவது இன்னமும் வழக்கத்தில் உள்ளது. ஆனால், இங்கு அது இல்லை என்று தோன்றுகின்றது.
கணேஷனினதும், பிறேமினதும், இப்போ புது இணைப்பாக வந்துள்ள குறிஞ்சிநாதனின் எதிர்ப்புகளைத் தாண்டி தமிழின் கல்யாணம் நடைபெறப் போகின்றது?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!