posted 22nd September 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஒட்டுக் கேட்டு காலத்தினை ஓட்டும் கணேஷனிடம் நேராகக் கேட்டான் சேது. தான்தான் செய்தனான் என்று துணிச்சலாகச் சொன்னதுமல்லாமல் சேதுவைப் பளார் என்று கன்னத்தில் அறைந்து வி்ட்டான்.
- இந்தப் பிணக்கின் விபரத்தினை அறிந்த தமிழ் கணேஷிடம் நியாயம் கேட்டாள். தமிழையும் அடிக்கக் கை ஓங்கிய கணேஷனின் கையினைப் பிடித்தான் சிபீ. அத்துடன் warn பண்ணினான்.
- இடத்தை விட்டு வெளியேறிய தமிழ், தாயின் விருப்பத்தின்படி பிரகாஷினைக் கூட்டிக் கொண்டு வந்து அம்முவிடம் காட்டினாள்.
- தகப்பனைக் கண்ட சிபீயின் உள்ளம் தாக்கத்திற்குள்ளானது. குற்றம் செய்யாத சிபீ ஏன் பயந்து, ஒதுங்கி வாழவேண்டும். அதற்குரிய சூழலுக்கு தன்னை மாற்ற வேண்டும். இந்த வார்த்தைகள் சிபீக்கு தைரியத்தினைக் கொடுத்தது.
- ஏமாற்ற நினைத்த தமிழினை சிபீ தான் விரும்புகின்றானோ என்ற உணர்வு உள்ளது என்பதனை உயிர்ப்பித்த கேடீ.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 20.09.2025
கணேஷனின் தி்ல்லாலங்கடி வேலையினை வெட்ட வெளிச்சத்திற்கு கொணர்ந்த சேது. இதனால் அடியையும் வாங்கிக் கொண்டு தமிழுக்குச் சொல்லியும் விட்டான். இதனால் கோபமடைந்த தமிழ் தனது சந்தேகம் உறுதியாகி விட்டது என்பதனை சொன்னதற்கு கையை ஓங்கி பழி தீர்க்க விளைந்தான் கணேஷ். ஆனால், சிபீ யாரென்றும் பார்க்காமல் மாமனை எதிர்த்து நின்றான். தமிழைக் காப்பாற்றினான்.
இது ஏன் என்று சிபீக்குப் புரியவில்லை. ஆனால், கேடீக்குப் புரிந்து விட்டது. தமிழோடையாவது காதலாவது? என்றிருந்த சிபீக்கு தமிழுக்கு ஒன்டென்றென்றுடனே கோபம் வருகின்றதே! மாமாவைக் கூட எதிர்த்து நிற்க வேண்டியதாயிற்றே! தமிழைத் தோற்க வைத்து எல்லார் முன்னாலும் தலை குனிய வைத்து, பிழை செய்திற்றோமே என்று ஓட வைக்க வேண்டும், இந்த வீட்டை விட்டு போக வைக்க வேண்டும் என்ற கொள்கையில இருந்த சிபீ, தமிழுக்கு உதவி பண்ணி இந்த சவாலிலே வெற்றி பெறச் செய்வதென்பதன் அர்த்தம்தான் என்ன?
எல்லா chefகளும் ஓடிய நேரத்தில், சிபீயும் அந்த சந்தர்ப்பத்தினை நன்றாகப் பாவித்திருக்கலாம் அல்லவா? கேடீ கேட்டது சரிதானே! இதில், கேடீ தமிழுக்கு நன்மையினைச் செய்கின்றானா? அல்லது கெட்டது பண்ணுகின்றானா? நன்மையினைப் பண்ணுவதாகத்தான் நினைக்கத் தோன்றுகின்றது.
இதுதான் கடவுள் போட்ட திட்டமானது. நாங்கள் நினைப்பது வேறு, கடவுள் நினைத்துள்ளவை வேறு. இது படைத்தவன் அருளும் கொடை. நீ நல்லவனாக இரு, நல்லதையே செய், நல்லதைத்தான் செய்ய வேண்டும். ஆனால், நீ கெட்டவனாக நடிக்கவும் முடியாது, கெட்டவற்றினைச் செய்யவும் இயலாது. செய்ய நினைத்துத்தான் பாரன், தெய்வத்தின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. சிபீ உண்மையாகவே நல்லவன்தான் தமிழ் என்பது ஜனாம்மாவின் வார்த்தைகள்.
அண்ணன் என்றால் அம்முக்கு உயிர், அம்முவுக்கு அண்ணன் என்றால் உயிர். ஆனால், இந்த உயிர்களைத் திட்டம் போட்டு பிரித்து வைத்த பாவம் கணேஷனை விடுமா? இதனால், கணேஷன் மட்டும் அனுபவித்தால் பரவாயில்லை. ஆனால், பரம்பரைக்கு இழுத்து விட்டு கணேஷன் கண் மூடி விடுவான். பிள்ளைகள், அதன் பிள்ளைகள், அப்படி எத்தனை பரம்பரைக்குப் போகப் போகின்றதோ தெரியவில்லையே! ஆனால், பாவப் பழிகள் போகும் என்பது உண்மை.
பிரகாஷை அம்முவிடம் காண்பிப்பது என்பது மிகவும் கஷ்டம்தான். ஆனால், அம்முவின் வார்த்தைகள் பிரகாஷை உயிர்க்க வைக்கும் என்று இன்று தமிழ் அம்மாவுக்குச் சொன்னதினை நான் எப்பவோ எனது பதிவினில் சொல்லிவிட்டேன். ஆதேபோல இன்று அம்மு தன் அண்ணன் பிரகாஷுடன் கதைக்கின்றா. பிரகாஷுக்கு அம்மு கதைப்பதினை உணர முடியும் என்று நினைக்கின்றேன். இதனையும் நான் குறிப்பிட்டிருந்தேன். இதனால், பிரகாஷின் உணர்வுகள் விழித்தெழும் காலம் வெகு தூரத்தினில் இல்லை. ஆனால், கணேஷன் என்ற கொடியவன் வீ்ட்டினுள்ளே கழுகு மாதிரி சுத்தித் திரிகின்றானே! அவனிடம் இருந்து பிரகாஷைக் காப்பாற்றியே ஆக வேண்டுமே!
பிரகாஷ் சுய நினைவிற்கு வரக்கூடாதென்று கணேஷனின் வேணவா. ஆனால், சிபீயின் குடும்பமே இப்போது நினைவு வராதா என்பது அவர்களது பிராத்தனை. கடவுள் நல்லவர்கள் பக்கம் நிற்பாரா? அல்லது தீயவர்களுக்கு ஆதரவு கொடுப்பாரா? அதுமட்டுமல்லாமல், தீயவர்களிடமிருந்து நல்லவர்களைப் பாதுகாக்காமல் விட்டு விடுவாரா?
அப்போ பிரகாஷ் நல்லவர் என்றால், ஏன் இவ்வளவு காலமும் சுய நினைவின்றி கடவுள் வைத்திருக்கின்றார்? அதுவும் பிரகாஷுக்கு நன்மையாகத்தான் இருக்கும். இது கடவுளின் ஆட்டம், மனிதனதனுடையவையல்ல. ஒரு கெட்டவனைக் கடவுள் தண்டிக்க வேண்டுமென்றால், அவர், நல்லவனுடன் கெட்டவனை மோத விடுவார். அத்துடன் நல்லவனை கெட்டவனின் வினைகளிலிருந்து காப்பாற்றி விடுவார். ஆனால், கெட்டவனையோ அம்போ என்று கைபறிய விட்டுவிடுவார்.
தன் தகப்பன் பிரகாஷினைக் கண்டதும் சிபீயின் தேகமெல்லாம் நடுங்கியதுமல்லாமல், மூச்சும் திணறத் தொடங்கியது. இவ்வாறு சிபீ துடிப்பதனைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் கணேஷன். இப்படியான செய்கைகள் அவரவரின் இரத்தம் சுட்டுக் கொண்டிருக்கும் மட்டும்தான் இருக்கும். ஆறவைத்துத்தான் ஆண்டவன் அடிப்பான். தாங்க கணேஷன் readyயாக இருக்க வேண்டும்.
இதானால்தான் தன் தகப்பனை இவ்வளவு காலமும் பார்க்கக் கூடாதென்றும், பார்க்காமலும் இருந்தான் சிபீ. ஆனால், இப்போ தகப்பன் பிரகாஷை தன் முன்னால் கூட்டி வந்தது தமிழ் என்பதனால், தமிழின் மேலே சிபீ கோபப்பட்டான். தமிழின் கையினை உதறித் தள்ளிவி்ட்டு வீட்டினுள்ளே போன சிபீயினைப் பார்த்து பயந்து விட்டாள் தமிழ்.
இதனை அவதானித்த ஜனாம்மா, சிபீயினையும் பார்க்க வேண்டும், தமிழையும் ஆற்ற வேண்டும் என்று நினைத்தவவாய் முதலில் சிபீயின் அறைக்கு விரைந்து போனா, ஜனாம்மா. சிபீயின் தலையினை நீவி விட்டுக் கொண்டு, சிபீயிடம் நீ தமிழை உதறிவிட்டதால் அவள் பயந்து விட்டாள் என்றும், பிழை செய்யாதவர் ஏன் பயப்பட வேண்டும், பிரச்சனையைப் பார்த்து ஏன் ஒதுங்க வேண்டும், அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்க்கையினை கொண்டு போக வேண்டும் என்று தமிழ் சொன்னதனை ஜனாம்மா சிபீயிடம் சொன்னதும், சிபீயுக்கு புத்துயிர் வந்து எழுந்து விட்டான்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!