posted 20th September 2025
இன்றைய Serial Review & Analysisஆனது 18ஆம், 19ஆம் திகதிகள் அடங்கலாக உள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கணேஷனின் ஒட்டுக் கேட்டு ஆடும் ஆட்டத்தினை கண்டு பிடிப்பதற்கு தமிழ் இன்னமும் முயற்சி எடுப்பாள் என்பதனைப் படிப்பித்த இன்றைய அனுபவம்.
- முயற்சிகளையும், முன்னேற்றத்தினையும் தடுத்துக் கொண்டிருக்கும் சக்திகள் மத்தியில் உச்சியினைப் பிடித்த ஜனாகாம்பாள்.
- நேர்மையினை முதலாக வைத்து முன்னேற்றத்தினை மட்டும் குறி வைத்த வாழ்க்கையினைப் படிப்பிக்க கூட்டுச் சேர்ந்த சிபீயும், தமிழும்.
- தமிழையும், சிபீயையும் ஒன்றாக இணைத்துச் சொல்லும் ஜனாம்மா.
- அண்ணனைப் பார்க்க ஆசைப்படும் அம்மு – எப்பவோ நான் நினைத்து நிறைவேறவுள்ளது.
- தமிழினுள் ஆசையினை வளர்த்து அவளை விரட்டி அடிக்கவுள்ள சிபீ. தமிழ் ஏற்கனவே நோவினால் துடித்தவள். அவளின் இழப்போ பெரிது. காயத்திற்கு மருந்து போடாவிட்டாலும் பரவாயில்லை, நெருப்பில் காய்ச்சிய வேலை அல்லவா ஏத்தப் போகின்றான் சிபீ.
- விலத்திச் செல்லும் தமிழை வில்லங்கமாக இழுத்து இழுத்து கொடுமைப்படுத்துவதால் இன்பம் காணப்போகும் சிபீ. ஆனால், இவன் இவ்வாறு செய்தானாகில் நரகத்தின் நடுவினில் தொங்க வேண்டிவரும்.
- சிபீயும், தமிழும்தான் மந்திரியின் கல்யாண வீ்ட்டுச் சாப்பாட்டிற்குப் பொறுப்பு. கடைசியில் காலை வாரிய chefகள். Chefகள், agency எல்லாமே பொய்யானவர்கள். இதெல்லாம், கணேஷனின் ஒழுங்கும், குறிஞ்சியின் தில்லாலங்கடி வேலையும். கவனக் குறைவினால் தத்தளித்த தமிழும், சிபீயும்.
- Phoneஐயும், onlineனையும் நம்பினால் அதோகதிதான் என்பதனை உணர்த்தும், படம் போட்டுக் காட்டும் சித்திரத்தின் ஒருகாட்சி.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.