posted 18th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவின் பெயரினைக் காப்பாற்றவதற்காதத்தான் இவ்வளவு பாடுபட்டேன் என்று தமிழ் சொன்னாலும், அவளின் அகத்தில் சிபீ இருப்பது அவளின் முகத்தில் துல்லியமாகத் தெரிகின்றது.
- கேடீ விளங்கியோ விளங்காமலோ தவறுக்கு உதவினாலும், சிபீயை விடுவிக்க தமிழுடன் இறுதிவரை கூட நின்றான். சேதுவும் கூடி நின்றான்.
- எல்லாவற்றினையும் தப்பென ஆதாரங்களுடன் நிரூபித்து inspector க்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து சிபீயைக் காப்பாற்றி வீட்டிற்கு கூட்டி வந்தாள் தமிழ்.
- நன்றி சொன்ன சிபீக்கு நாசூக்காகப் பதில் கூறினாள் தமிழ். ஒன்றுமே விளங்காமல் விழி பிதுங்கி நின்ற சிபீ. அப்போதாவது, சரவணணன் சொன்ன வேத வார்த்தைகளை நினைப்பானா? இன்னமும் அவன் மூளைக்கு வந்ததாகத் தெரியவில்லை.
- குறிஞ்சிநாதனிடம் தன்னைக் காட்டிக் கொடுத்துடாதேயுங்க என்று கெஞ்சும் கணேஷன். அதனையும் கேட்டாள் தமிழ். இந்த முறையாவது கணேஷனைப் பிடித்துக் கொடுப்பாளா? மாட்டாள் என்றுதான் தோன்றுகின்றது. ஜனாம்மா சொன்ன வார்த்தைகள் அவள் நினைவில் இருக்கின்றதால்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 17.10.2025
குறிஞ்சிநாதனின் சந்தோஷம் வெகு குறுகிய வாழ்நாள் காலமாகும். இது ஏன் அவனுக்கு விளங்குவதாக இல்லை. தமிழ் சொன்ன வார்த்தைகளும் ஏன் அவனுக்கு ஞாபகம் வருவதாகவும் இல்லை. தான் இருக்குமட்டும் ஜனாம்மாவை ஒன்றும் உன்னால் உசுப்ப முடியாது. இது தமிழின் வீர வசனமல்ல. அவள் இதனை நிஜமாக்கி சாதித்துக் கொண்டிருக்கின்றாள்.
எச்சிலையிலையிலே கிடக்கும் முள்ளுடன் கூடிய அந்த சிறு இறைச்சிக்கு ஆசைப்பட்டு, 20 வருஷ service இலிலுள்ள பொலீஸ் வேலையினைக் கோட்டை விட்ட inspector. தன் குடும்பத்தினை ஒரு கணம் யோசித்தானா? அத்துடன் அவனுக்கு சலரோக வருத்தமும் இருக்கையிலே இப்போ அவனாலே வேறு வேலை செய்து அவனையே காப்பாற்ற முடியாத நிலையில், என்னென்று அவன் தன் குடும்பத்தினை காப்பாற்றப் போகின்றான். குறிஞிசியா உனக்கு கஞ்சி ஊத்தப் போகின்றான்.
ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் நிரூபித்தாள் தமிழ், அதே மீடீயா முன்னிலையில். மீடியாவும் மன்னிப்புக் கேட்டது. பொலீஸ் பெரிய அதிகாரியும் inspector செய்த தவறுக்காக ஜனாம்மாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டார்.
ஒரு விஷயத்தினை அதனைப் பற்றி வாயைத் திறக்க முன்பு கழுத்தின் மேலுள்ள பகுதி இருக்கின்றதே அதைப் பாவிக்க வேண்டும் என்பது தெட்டத் தெளிவாகின்றது.
சேது, தமிழ் சிபீயை விடுவிக்க செய்த பெரிய காரியங்களையெல்லாம் எல்லாருக்கும் சொன்னதினை இடைமறித்தாள் தமிழ். தமிழுக்குப் பதிலாக வெண்பாவோ அல்லது ஷியாமோ இந்த வேலையினை செய்திருக்கவே முடியாது. சரி, அப்படித்தான் செய்தார்கள் என்று வைத்துக் கொள்ளவோம், ஊர் முழுக்கப் பறைசாற்றி இருக்க மாட்டார்கள்?
இந்தப் பெரிய காரியத்தினை தமிழ் செய்ததற்காக தமிழின் இரு கைகளையும் பிடித்து சிபீயின் அம்மா, மீனா, நன்றி சொல்லுவாவா? அட, சிபீயின் தோஷங்களுக்காக தமிழ் தனது உயிரினைப் பணயம் வைத்து பரிகாரங்களைச் செய்தாளே. அதற்கே மீனா ஒரு நன்றி கூடச் சொல்லவில்லையே!
கோவிலிலும், வெண்பாவும், ஷியாமும் வாயினைப் பொத்திக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போ சிபீயின் கைதிலும் ஒன்றுமே கதைக்காமல், இல்லை கதைக்கவே முடியாமல் வாயடைத்துப் போயிருந்தனர். இவர்களால் என்னதான் கதைக்க முடியும்? அத்துடன், இவர்களால் என்னதான் செய்ய முடிந்தது?
இவற்றிற்குப் பிறகும் சிபீ தனது சொந்தப் புத்தியினைப் பாவிப்பானா? அதுமட்டுமல்லாமல் சிபீக்கு அந்தப் புத்தியின் ஒரு சிறு பகுதியாவது இருக்கா என்று சந்தேகம் உருவாகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!