posted 16th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீயை முன்னைய நிலைக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந் மது கொண்டாட்டம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஷியாம்தான்.
- இந்த பாட்டியினைச் சாதகமாகப் பயன்படுத்தினான் கணேஷன். எப்படியாவது ஜனாம்மா அத்தையின் பெயரைக் கெடுப்பதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் கணேஷன், உடனே குறிஞ்சிநாதனுக்கு அறிவித்தான்.
- குறிஞ்சிநாதன் போடும் தீனிக்கு வாலாட்டும் பொலீஸ் குழாம் போதைப் பொருளுடன் வந்தனர். குசினியினுள் அதை வைத்துவிட்டு அங்கிருந்து எடுத்தனர். சிபீயும் கைது செய்யப்பட்டான்.
- சிபீயின் கைதுக்கு முக்கிய காரணம், ஷியாம். அடுத்தது, கேடீ.
- இந்தச் செய்தியினை கேடீ மூலம் அறிந்து கொண்ட தமிழ் உடனே பத்திரிகை நிலையத்திற்கும், பொலிஸ் ஸ்ரேஷனுக்கும் அலைந்து சிபீக்கும் தைரியத்தினைக் கொடுத்ததுமல்லாமல் அவனின் விடுதலைக்கு முன் நின்றாள்.
- அல்க்ககோல் பரீட்சையானது பொய்யான முடிவாக்கப்பட்டது. பூந்து விளையாடும் குறிஞ்சிநாதன்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 16.10.2025
சிபீ கைது. அதுவும் போதைப் பொருள் பாவிப்பு மற்றும் வீட்டில் வைத்திருந்தென்ற குற்றச் சாட்டு. இது ஒரு non bailable offenceசில் அடங்குமாதலால், என்னென்று தமிழ் சிபீயை வெளியே கொண்டு வருவாள்? அதுவும், ஒரு மணித்தியால நேரக்கேடு கேட்டாள் தமிழ். இந்தக் குறுகிய காலக் கேட்டினுள் தமிழ் இந்தக் கேசை உடைத்தே தீரணும்.
போதைப் பொருள் பாவனையில் உள்ளவர் என்றால் அவரின் இரத்தத்தினை சோதனை செய்வதனால் கண்டு பிடிக்கலாம். ஆனால், இரத்தப் பரிசோதனையில் அது negative என்றுதான் வந்தது. ஆனால், இது டொக்டருக்குத் தெரியும். ஆனால், அங்கு வேலை செய்யும் ஓடலி அதனை கணணியில் மாற்றும் அளவிற்கு அவனுக்கு டொக்டரின் கணணி password கூடத் தெரிந்திருக்கிறதென்றால், இது நோயாளியின் personalலும், sensitiveவுமான தரவுகளானது இவ்வாறு திருடப்படுகின்றது என்பதானது ஒரு வைத்தியத் தொழிலுக்கே கேவலமாக உள்ளது.
இது ஏன் இங்கு நடைபெற்றது என்றால் குறிஞ்சிநாதனின் கேடுகெட்ட பழக்க வழக்கங்கள் ஜனாம்மாவினால் வெளியே தெரிந்ததினாலும், அதனை மறைப்பதற்கும், இதனால், ஜனாம்மாவைப் பழி வாங்குவதற்கும், ஜனாம்மாவின் கௌரவத்திற்கு பங்கத்தினை ஏற்படுத்தவும், அவவின் சொத்தினைக் கொள்ளை அடிக்கவும், கணேஷன், குறிஞ்சியுடன் சேர்ந்து போட்ட திட்டம்தான் இவ்வளவிற்கும் காரணம்.
இந்த ஒரு மணித்தியாலமானது தமிழுக்குக் காணாததுதான். ஆனால், தமிழ் முயற்சியினைக் கைவிட மாட்டாள். இன்னமும் அவளின் மூளையினுள் குறிஞ்சியும், கணேஷனும் வரவில்லை. இப்ப மட்டும் ஷியாம்தான் ஓடிக் கொண்டிருக்கின்றாள். ஒரு கட்டம் வரும், குறிஞ்சி தானாக வந்து தமிழிடம் தலையினைக் கொடுப்பான். அப்போ பிடிப்பாள், தமிழ்.
இந்த ஆணிவேரைப் பிடுங்க முன்பு சிபீயைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று தமிழ் நினைப்பாள்.
நேரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் இப்போது liveஆகப் போய்க் கொண்டிருக்கும். அதற்கிடையில் சிபீயை கோட்டுக்குக் கொண்டு போக வேண்டாம் என்று பொலிஸிடம் எவ்வளவோ கெஞ்சுவாள் தமிழ். ஒன்றுக்கும் வேலைக்கு ஆகவில்லை. Live வேண்டாம் என்று பத்திரிகையாளர்களிடமும் கெஞ்சுவாள் தமிழ். ஒருவரும் தமிழை கணக்கில் எடுக்கவில்லை.
குடித்தவள், குடியைக் கெடுக்க வந்தவள், ஷியாம் வீட்டில் இருந்து கொண்டிருப்பாள். சிபீயை வெளியில் கொண்டுவர எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை.
குறிப்பிட்ட ஒரு மணி நேர அவகாசத்தினுள் தமிழால் ஆதாரங்கள் திரட்ட முடியாது. ஆனால், அவளுக்கு முன்பு தேனு அடைபட்டுக் கிடக்கையிலே சிபீ அவர்களது CCTV Footageஜினை வைத்துத்தானே தேனுவைக் கண்டுபிடித்தான். எனவே, தமிழ் வீட்டிற்குப் போவாள், CCTVக்குப் போவாள். அதில் Footageஜினை எடுப்பாள். அதாவது, பொலிஸ்தான் குசினியுள் போதைப் பொருளை வைப்பதனையும், அதற்கு வந்த பொலிஸின் சைகையின் Footageஜினையும் எல்லாவற்றினையும் எடுத்து வந்து கோட்டுக்குக் கொண்டு போய் சிபீயைக் காப்பாற்றுவாள்.
சிபீயின் களங்கம் அகற்றப்பட்டது. சிபீ வீட்டிற்குக் கொண்டுவரப் படுவான், தமழினால்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!