posted 25th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
வாரிசு தமிழ் சீரியலானது நேற்று மட்டுக்கும் கல்யாணத்தில் ஏற்பட்ட துரோகங்களினால் அனைவரும் கலங்கிப் போயிருந்த வேளை அது. வீடே மயானமாகி விட்டது. துக்கம் நடந்த வீடு சந்தோஷமாக்கப் படவேண்டுமானால், இன்னெரு சந்தோஷச் சடங்கினை நடத்துவதற்கு வர்ஷினி முதலிடப்படுகின்றாள். பிரபுவினதும், அவனது அம்மாவினதும் பல வருடத் திட்டங்களை மீண்டும் வெற்றி பெறச் செய்வதற்கு மடிப்பிச்சை ஏந்தும் பிரபுவின் அம்மா. நடிப்பென்று அவவை அளந்து கொண்டிருக்கும் வீட்டின் மருமகள், தமிழ்.
Varisu - வாரிசு - 16.06.2026
துணிவுடன் ஜனாம்மாவின் வீட்டினுள் காலெடி எடுத்து வைத்த பிரபுவின் அம்மா. பிள்ளைக்காக எதுவும் செய்வாள் தாயும் என்பது உண்மையாக இருக்கையிலே, இங்கு இவனின் அம்மா படியேறுவது, பழிவாங்கும் துடிப்பினிலே!
மீனா பிரபுவின் அம்மாவை நம்பவில்லைதான். ஆனால், ஜனாம்மா ஒருவாறு பிரபுவின் அம்மாவின் நடிப்பினில் ஏமாறி விடுவாவோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கின்றது. காரணம் பேரப் பி்ள்ளையின் பாசத்தின் துடிப்புத்தான் இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாகத் தெரிகின்றது.
காதலினால் வயப்பட்டவள் வர்ஷினி, துரோகத்தினால் தூக்கி எறியப்பட்டாள். நொறுங்கிப் போனாள். குடும்பத்திலுள்ள அனைவரும் மனமுடைந்து போனார்கள். ஆனால், கணேஷனும், அமுதாவும் இந்தச் சந்தர்பத்தினை வாய்ப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்யாமலா இருக்கின்றார்கள். சொத்துக்காக ஒவ்வொரு வினாடியும் எந்த வழிதான் இதற்கு அனுகூலமாகும் என்று திட்டத்தின் மேல் திட்டத்தினைப் போட்ட வண்ணமாகவே இருக்கின்றார்கள் இவர்கள்.
ஆனால், தமிழின் முடிவோ இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, வர்ஷிக்கு சேதுவைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று ஒரு அபிப்பிராயத்தினை சிபீயின் முன் வைத்தாள். இது நல்ல முடிவெனத் தெரிந்ததனால் சேதுவின் சம்மதமும் வாங்கப் பட்டாயிற்று. எதிலும் ஒன்றையும் யோசிக்காமல், மீனா உடனே இதுதான் சரியென்று கூறுவது போன்று, இந்த விஷயத்திலும் அவசரப்பட்டாள்.
தமிழ்தான் சேது – வர்ஷி கல்யாணம் என்பதனைச் சொன்னாலும் அவளின் மனதினிலே இனம் தெரியாத கீறல் ஒன்று விழுந்துள்ளதினை அவளால் உணர முடிகின்றதனை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது. ஏன்? எதற்கு? என்ற இந்த சந்தேகக் கேள்வி தன் மனதினுள் உதிக்கின்றது என்பதனை தமிழால் விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை, விளங்கப்படுத்தவும் இயலவில்லை.
தான் காதலித்த பெண்ணே தனக்கு பெரியவர்களால் சம்பந்தப் படுத்தப் படுகின்றாள் என்று சேதுவுக்குத் தெரிந்தும், அவனால், பரிபூரணமாகச் சந்தோஷப் படவோ அல்லது துள்ளிக் குதிக்கவோ முடியவில்லை. அதற்காக வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்றுமில்லை, கணேஷனையும், அமுதாவையும் தவிர.
காதலில் விழுந்தவர்கள், எல்லாவற்றினையும் மறப்பார்கள். எவரையும் துறப்பார்கள். அவர்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை, ஒருவிதமான சம்பிரதாயங்களும் இருக்காது. எந்த உயரமும் தெரியாது, எந்தளவான பள்ளத்தாக்கானாலும் சிம்பிளாகத் தாண்டி விடுவார்கள். இதனைத்தான் வர்ஷனி – பிரபாவினதும் காதல் இணைப்பினில் பார்க்கக் கூடியாதாக இருக்கின்றது. நம்பிக்கை என்பதே அவர்களின் வேதாந்தம்.
துரோகத்தினை முதலாக்கி வைத்திருப்பவன்தான் பிரபு. தங்களது திட்டத்தினை அமூலாக்குவதற்கு மடிப்பிச்சையினைக் கேட்ட அவனின் அம்மா. அப்பாவுடன் தொடர்பில்லை என்று கூறியதும், ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறி அதனை உண்மையாக்குவதுதான் இப்போது ஏற்பட்ட பிரிவினையினைக் குணப்படுத்தும் மருந்தாக இருக்கும் என்பதனால், அதனையே கையில் எடுத்தார்கள் பிரபுவும், அவனின் அம்மாவும்.
ஆனால், இதனைத் தவிர, பிரபுவின் புகை பிடிக்கும் பழக்கம், இன்னொரு பெண்ணின் கண்ணீர்க் கதை, அந்த முதியவருக்குச் செய்த உதவி, ஒரு பையனை அறைந்தது எல்லாம் இன்னமும் தொக்கு நிற்கின்ற நிலுவைகளாகும். இவற்றினை முற்று முழுதாக அறிந்து கொண்டால்தான் பிரபுவை நம்பலாம் என்பது தமிழின் கணிப்பு.
வார்த்தைகள் பிழைத்தனதான், ஆனால், மடிப்பிச்சை ஜனாம்மாவின் மனசினை உடைத்தெறிந்திடுமா?
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!