posted 18th February 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 16ஆம், 17ஆம் திகதிகள் வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இத்தனை வருட காலமாகத் தனியே ஓடி சாதனை செய்து கொண்டிருக்கும் ஜனாம்மாவை ஓய்வெடுக்கும் படி சிபீ சொல்லியும், தானும், தமிழும் பார்த்துக் கொள்கின்றோம் என்று சிபீ சொல்லியும், சிபீயின் சொல்லினை எப்படி ஜனாம்மாவால் நம்ப முடியும்? காரணம், சிபீதான் தமிழையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சிபீயை நம்பி வீட்டில் ஓய்வெடுக்க முடியுமா, ஜனாம்மாவால்.
கால் தடக்கியது தலைவாசல் பலகையானது. இதனால், எமது இனத்தின் வழக்கப்படி ஒரு நிமிடம் இருந்து விட்டுப் போகும் படியும், கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுப் போகும்படியும் கூறுவார்கள். அதாவது, அப்படி இருக்கும் அந்த நேரத்தில் எமக்கு இருக்கும், எம்மை நோக்கியுள்ள பிரச்சனையானது விலகிவிடும் என்பதான நம்பிக்கை.
Varisu - வாரிசு - 16 - 17.02.2026
அதனையே சிபீயும், தமிழும் சொன்னார்கள், செய்தார்கள். இதனாலோ என்னவோ ஜனாம்மாவை அந்த விபத்திலிருந்து அம்மு காப்பாற்றினா. இந்த நேர இடைவெளிதான் அம்மு அந்த இடத்திற்கு வர எடுத்த நேரமாகும்.
ஜனாம்மாவை காப்பாற்ற வேண்டிய சந்தர்ப்பமாகவும் அமைந்தது. அம்முதான் தன்னைக் காப்பாற்றினா என்று தெரிந்ததாலே, அம்முவை, தனது மகளை, அணைத்தபடி ஜனாம்மா ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு விரைந்தாவா? அதனால்தானா தேவையான வைத்தியமும் செய்யப்பட்டது.
விஷயம் கேள்விப்பட்ட ஜனாம்மாவின் குடும்பத்தவர் அனைவரும் வைத்தியசாலைக்கு விரைந்தார்கள். இவர்களில் ஜனாம்மாவிற்குத்தான் விபத்து என்று ஏக்கத்துடன் வந்தவர்களின் ஆதங்கமும், வேண்டுதல்களும்தான் ஜனாம்மாவைக் காப்பாற்றியது. ஆனால், கணேஷனின் வேண்டுதலோ ஜனாம்மா போய்ச் சேர்ந்து விடுவாவோ என்பதுதான். ஜனாம்மாவை உயிருடன் கண்டதும் கவலை கொண்டான் கணேஷன். அந்தக் கவலை தீருவதற்காக மதுமானத்தினை அருந்தினான். இந்த துக்கத்தினை குறிஞ்சிநாதனுடனும் பகிர்ந்தான்.
அம்முவிற்கோ இரத்தம் கூடப் போய் விட்டதனால், AB negative இரத்தம் ஏற்றியாக வேண்டும் என்ற வைத்தியசாலையின் வேண்டுகோள். ஆனால், வைத்தியசாலையில் அந்த குறூப் இரத்தமானது இல்லாத படியினால், ஜனாம்மாவிற்கும் அதே குறூப் என்பதனால் ஜனாம்மா அம்முவிற்கு இரத்தம் கொடுத்துக் காப்பாற்றினா.
அம்மாதான் தனக்கு இரத்தம் கொடுத்து இரண்டாவது முறையாக தனக்கு உயிர் தந்தது தனது அம்மா ஜனாம்மாதான் என்று அம்முவால் பூரணமாக சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால், அம்முவின் மேலே உள்ள கோபமானது தனது மகன் பிரகாஷை லொறி ஏற்றிக் கொல்லப் பார்த்ததும், அப்படிக் கொலை செய்யப் பார்த்தவனுடன் அம்மு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றா என்பதும்தான்.
ஜனாம்மாவின் காயம் 20 வருடங்களுக்கு முன்பானதாக இருந்தாலும், இன்னமும் ஆறாமல் றணமாக இருந்து கொதித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்தக் காயமானது உடனே மாறிவிடும். அதற்கு பிரகாஷ் விழித்தெழும்பி உண்மையினைச் சொல்ல வேண்டும். ஆனால், அதனைத்தானே தமிழ் அடக்கி வைத்திருக்கின்றாவே!
பிரகாஷின் வார்த்தையானது ஜனாம்மாவிடம் எடுபடுமா? எடுபடும். ஏனென்றால், பிரகாஷ் ஜனாம்மாவின் மகன். அவரில் மிகுந்த பாசமாக இருக்கின்றா ஜனாம்மா. ஆனால், கணேஷனோ மருமகன். இவனின் திருகுதாளங்களை எல்லாம் அறியாதவவா அல்லது தெரியாதவவா, ஜனாம்மா.
எதற்கும் ஜனாம்மாவிற்கு ஆதாரத்துடன் நிரூபிப்பதுதான் முக்கியமானது. அதற்குத்தான் தமிழ் முயற்சி செய்கின்றா. இதற்கு அந்தக் கால சாட்சியாக இருப்பதுவோ முத்தம்மாதான். அவதான், அன்று, வைத்தியசாலையில் வைத்து கணேஷன் அம்முவின் புருஷனின் மேலே அவன்தான் பிரகாஷைக் கொல்ல முயற்சித்தவன் என்று சொன்னபோது பார்த்துக் கொண்டிருந்தவரில் ஒருவர். எனவே, தமிழ், முத்தம்மாவிடம் இருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அம்முவிற்கோ நினைவு திரும்பியதினை நேர்ஸ் வெளியே வந்து அறிவித்த போது, ஒருவரும் அம்முவை உள்ளே போய் பார்ப்பதற்கு போகவில்லை. ஏன் போகவில்லை என்று ஒருவருக்கும் விளங்கவில்லை? அம்முதான், தனது மகள் தமிழிடம், அம்மா, ஜனாம்மாவுடன் கதைக்கச் செய்யும்படி கேட்டுக் கொண்டதோடு அம்மு இருக்காமல், எல்லார் முன்னிலையிலும் அம்மா என்று கூப்பிட்டது அனைவரின் முன்னாலும் ஜனாம்மாவின் ரோஷத்தினைத் தட்டி எழுப்பி விட்ட மாதிரியல்லவா இருந்திருக்கும்?
அம்முவில் அன்பில்லாமலா, ஜனாம்மா விபத்திற்குள்ளான தன் மகள் அம்முவைக் கட்டியணைத்தபடி ஆட்டோவில் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தா. அவசரப்பட்ட அம்மு இறுதியாக ஜனாம்மாவின் கோபத்திற்கு உள்ளானதுதான் மிச்சம்.
ஆனால், சிபீ தமிழின் வீட்டிற்கு வந்த சமயம் அம்மு தமிழுடன் இருந்ததினைக் கண்டு, அம்முவின் கதை வேறு தான் வீட்டாரிடம் கேள்விப்பட்டது வேறு என்று விளங்கிக் கொண்டான்.
சிபீக்கோ அம்முதான் தமிழின் அம்மா என்று தெரியும். ஆனால், அம்முதான் ஜனாம்மாவின் மகள் என்பதுவும், தனது அப்பாவின் சொந்த தங்கை என்றும், தனக்கு உண்மையான அத்தை என்பதும் சிபீக்குத் தெரியாது. இந்த விஷயம் இப்போதைக்கு சிபீக்குத் தெரியக் கூடாது என்பதற்காகத்தான் சிபீயைத் தமிழ் ஜனாம்மாவின் டாக்டரின் குறி்ப்புகளை எடுத்துவரும்படி வீட்டிற்கு அனுப்பி வைத்தா.
வைத்தியசாலையிலே ஜனாம்மாவின் குடும்பம் வெளியே நின்று கொண்டிருக்கையிலே, தமிழின் அம்மா அம்மு வெளியில் வந்து ஜனாம்மாவை அம்மா என்று எல்லார் முன்னிலையிலும் கூப்பிடுகையிலே ஜனாம்மாவிற்கு உள்ளுக்குள் மகள் என்று நெகிழ்வு வந்தாலும், எல்லார் முன்னிலையிலும், ரோசம் என்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் ஜனாம்மா. இதைத்தானே சிபீயும் தமிழுடன் செய்து கொண்டிருக்கின்றானே.
அம்முவோ எல்லார் முன்னிலையிலும் ஜனாம்மாவைத் தேடி வருவதைக் கண்டதும் எல்லாரும் வியந்தனர். ஏனென்றால், இத்தனை வருட காலமும் காணாமல் இருந்த அம்மு இப்போது என்னென்று இங்கு வந்துள்ளா. ஒரு சிலருக்கோ அட ஜனாம்மாவின் சொத்துக்கு பங்கு கொண்டாட அல்லவா இவள் வருகின்றாள் என்ற ஏக்கத்தில் இவர்கள்.
அதுமட்டுமல்லாமல், அம்முவைத்தானா ஜனாம்மா காப்பாற்றி விட்டவ? என்ற சிந்தனை ஓடும் போது, கணேஷனுக்கும், அமுதாவுக்கும்தான் மிகவும் பொறாமையுமாக இருந்தது. ஏனென்றால், அம்மு வந்தால் தங்களுக்கு கிடைக்கப் போகும் சொத்தில் பங்குகள் அம்முவிற்குப் போய்விடும் என்பதனைக் கதைத்துக் கொண்டார்கள். இப்படி நடக்காதபடி ஜனாம்மாவிற்கு உசுப்பேற்றி விடுவதற்காக கணேஷன் அம்முவை எதிர்த்துக் கதைத்தான்.
குடிபோதையில் இருந்த கணேஷனோ, குறிஞ்சிநாதனைக் கூப்பிட்டு தமிழின் அப்பா, செல்வரத்தினத்தை போட்டுத் தள்ளும்படி கேட்டுக் கொண்டான். ஆனால், செல்வரத்தினத்திற்கோ தனது பெயரே தெரியாமல், இப்போ யாரோ வைத்த நல்லதம்பி என்ற பெயருடனல்லவா சுற்றிக் கொண்டிருக்கின்றார். இப்படியாக இருக்கும் செல்வரத்தினத்தினைக் கண்டாலும் இவர் வேறொருவர் என்று விட்டு விட்டுச் செல்ல வாய்ப்புகளும் உண்டு.
கணேஷனும் அவனது குடும்பமும் சிக்கப்படும் நாளோ வெகு தூரத்தில் இ்ல்லை என்றுதான் தோன்றுகின்றது.
பிரகாஷின் சொற்படி தமி்ழ் அம்முவை கொம்பனியில் வேலைக்குச் சேர்ப்பாவா? இதனால் ஜனாம்மாவின் weak pointரிலேதான் கை வைக்க வேண்டும் என்பது பிரகாஷன் கருத்து. ஆனால், சிபீ்க்குத்தான் அம்மு தமிழின் அம்மா என்று தெரிவதனால் ஏதும் வில்லங்கங்கள் வருமா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!