posted 18th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- ஜெயறாணி காணியைத் தர மாட்டேன் என்று தனது தாய் ஜனாம்மாவுக்கு முன்னாலேயே அமைச்சரின் PAக்கு சொல்லி விட்டா.
- ஏன் என்று தெரியாத நிலையினில் அனைவரும். போட்டுக் கொடுத்தான் கணேஷன், அம்முவிற்கு சொத்தில் ஆசை என்று.
- தனது மகள் ஜெயாவை கணேஷன் தேவையில்லாததெல்லாம் குற்றம் கூறுகையில் ஒரு வார்த்தையும் கூறாமல் ஜனாம்மா இருந்தது அம்முவின் கௌரவத்தினை உசுப்பேற்றியது.
- சொத்தினை தனக்கு தந்தவர் கேட்கலாம். ஆனால், ஆரோ ஒருவர் கேட்பது அநாகரிகமல்லவா?
- கணேஷனுக்கு தேவையில்லாத வேலை. இருந்தோமா, சாப்போட்டோமா, என்றிருக்காமல் பேராசை கொள்வது பேரழிவிற்கே வழிகாட்டும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 15.05.2026
தமிழுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒருபுறம், ஆனால், விஷயம் தெரியாமல் திக்காடுவது மறுபுறமாக இருந்தது. காரணம் தெரியாமல் அம்மாவை அழைக்கச் சென்றாள் தமிழ். அங்கு அதிர்ச்சி தமிழுக்காகக் காத்திருந்தது. சரளாவின் கதையினை விட்டுத்தள்ளம்மா என்று உதறிவிட்டுச் சென்றாள் தமிழ்.
ஓணான் மாதிரி ஒட்டி நின்று ஒட்டுக் கேட்டான் கணேஷன். கூட்டுக் குடும்பத்தில் இப்படியான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதற்காக கணேஷன் போன்றவர்களை ஒட்ட வைத்திருப்பது ஜனாம்மாவிற்றகு விளங்கியும் விளங்கமாட்டேன் என்று இருப்பது மிகவும் தவறாகவும், ஆபத்தானதுமாக இருப்பதனை இங்கு பல இடங்களில் பார்வையில் உணர முடிகின்றது.
மினிஸ்ரரின் PA ஜனாம்மாவிடம் கதைத்ததினை ஒட்டுக் கேட்க முடியாமல் இருந்தாலும், இப்போது பிரகாஷின் கதைகளில் எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகக் கேட்டறிந்து கொண்டான், கணேஷன். மிகவும் சந்தோஷத்தோடே புறப்பட்டான் தமிழுக்குக் குழி வெட்டுவதற்காக.
அம்முவைக் கூட்டி வரும்படி பிரகாஷ், தமிழிடம் சொன்னாலும், தமிழ் தனது அத்தையை அனுசரித்துப் போக முடிவெடுத்ததாலும், மீனாவிடம் அனுமதி கேட்டாள் தமிழ். அத்துடன் மீனாவை மகிமைப் படுத்தினாள், தானோ அத்தைக்கு உரிய மருமகள் என்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்ததினால்.
சந்தோஷமாக தாய் வீட்டிற்குச் சென்ற தமிழ் ஜனாம்மாவின் அழைப்பினை அம்முவிடம் சொன்னாள்.
ஆனால், அம்முவிற்கோ அவவுடைய தாயின் குணம் தெரியாதா என்ன? அவ்வளவிற்கு உடனே இறங்கி வரும் character இல்லை எனது அம்மா, ஜனாம்மா என்பது புரியாத, தெரியாத அளவிற்கா இருக்கின்றா அம்மு. இதனால், நம்பிக்கை இழந்தார்கள் அம்முவின் பிள்ளைகள், தேனுவும், தமிழும்.
மாணவர்களுக்காக வாசிகசாலை கட்ட வேண்டும் என்றும், அதற்காக ஜனாம்மாவின் நிலத்தினை மந்திரி தெரிவு செய்துள்ளார் என்றும், அதனை முடிவெடுத்து அனைவருக்கும் அறிவித்து விட்டார் என்றும், அடிக்கல் நாட்டுவதற்காக நாள் குறித்தாயிற்று என்றும் மந்திரியின் PA ஜனாம்மாவிடம் கூறினார். அட இது நல்ல போக்காக இருக்கின்றதே!
யாருடைய சொத்து என்று பார்க்காமல், அவர்களிடம் விருப்மோ அனுமதியோ இல்லாமல், ஊராருக்கு தனது புகழுக்காகவும், தனது பெயருக்காகவும் ஆட்டையைப் போடுவது அவ்வளவு அழகல்லவே! இதைவிட ஒருவரை வலுக் கட்டாயப் படுத்துவது என்பது, அதுவும் மினிஸ்டரின் மனைவியின் சிபாரிசு வேற. இதெல்லாம் ஒரு ஒழுக்கமான முறைகள் என்று கூறமுடியாது.
இதனை துருப்பாக எடுத்தான் கணேஷன், வட்டிக்கு பணம் கொடுக்கும், ஏற்கனவே தமிழின் அப்பாவிற்கும் வட்டிக்குப் பணம் கொடுத்தவளான சரளாவை இந்த கதையினுள் இழுத்தான் கணேஷன். சராளாவோ சும்மா இருப்பாளா? பல மடங்கு பணம் கஷ்டப்படாமல் அவளுக்கு வருவதுமல்லாமல், அவளுக்கு நல்ல ஒரு அசையாச் சொத்துமல்லவா இதில் வருகின்றது.
தொடர்ச்சியாக தவறுக்கு மேலே தவறுகளை அடுத்தடுத்து கணேஷன் எல்லாருக்கும் செய்து கொண்டிருக்கின்றான். அத்துடன், தமிழ் கணேஷனை எச்சரித்தும், தமிழின் அறையினுள் புகுந்து அவளது தலைமுடியினை எடுத்து, அம்முவினதுடன் DNA test னால் ஒப்பிட்டு, தமிழ்தான் அம்முவின் சொந்த மகள் என்று நிரூபிப்பதற்காக முயற்சிகளும் எடுக்கின்றான். இதனால், தமிழை ஜனாம்மாவை வைத்து அடித்துக் கலைத்து விட்டால் தனக்குத்தான் எல்லா சொத்துகளும் என்ற ஒரு வேணவா இவனுக்கு.
அம்முவும் ஜனாம்மாவின் அழைப்பினையிட்டு என்ன என்று கேட்பதற்காக ஜனாம்மாவின் வீட்டிற்கு வந்தா. ஜனாம்மாவின் மகளான அம்முவின் முகத்தினைக் கூடப் பார்க்க விரும்பாத ஜனாம்மா, மந்திரியின் PAயை வைத்து என்ன விஷயத்திற்காக வரச் சொன்னது என்பதனை அம்முவிடம் கூறும்படி சொன்னா. PAயும் சொன்னார். அம்முவும் பதில் சொன்னா. இனி இதைப்பற்றி தன்னிடம் யாரும் பேசக்கூடாதென்றும் கூறி விட்டு வீட்டினை விட்டு கிளம்பினா அம்மு.
அம்மு யாரு? இந்த வீட்டின் இளவரசி. இப்போது இங்கு இருப்பவர்கள் அவளின் கால் தூசி. அப்படியா அம்மு இவர்கள் எல்லாரோடும் பழகினா. விரும்பியவனை கல்யாணம் பண்ணினா. அதுவும், அண்ணன் பிரகாஷன் முன்னிலையில். அதற்காக இப்படியா? ஜனாம்மா கோவிக்கி்ன்றா என்றால், மற்றவர்கள் முறுக்குவது அசிங்கமாக இல்லை?
அம்மு அந்த நிலத்தினை ஏன் கொடுக்கவில்லை என்று விளங்காதோர் பலவிதமான கதைகளை வைத்து தமிழின் குடும்பத்தினைக் கேவலப்படுத்துகின்றார்கள்.
ஆனால், அதற்குக் காரணம், ஜனாம்மா, தனது அம்மா தனது புருஷன் மேலுள்ள பழியினை இல்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டும், அதற்கு, முதலில், தான் சொல்வதை ஜனாம்மா நம்ப வேண்டும். தன்னை மகள் என்றும், தன் குடும்பத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகவும் அம்முவின் பிடிவாதமாக இருக்கலாம் அல்லவா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!