posted 14th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- வெற்றிகரமாக காட்டினுள் இருந்த பயங்கரங்களைத் தாண்டி சிவனுக்கும், பார்வதிக்கும் பூஜை செய்துவிட்டு தாலியினை எடுத்துக் கொண்டு வந்து சிபீயிடம் கொடுத்தாள் தமிழ்.
- தாலியை சிபீயிடம் கொடுக்கையிலும் தமிழ் சிபீயைப் பார்த்த பார்வையானது மற்றவர்களை அவள் செய்த தியாகத்தினை விட்டு வேறு திசைக்குத் திருப்புவதற்கான சந்தேகத்தினை உருவாக்குகின்றது.
- ஜனாம்மா, சரவணணை அனுப்பி தமிழைப் பாதுகாக்கும்படி கூறியது இங்கு ஒரு பெலவீனமான pointஆக உள்ளது. அதைத்தான் ஷியாம் பிடித்துக் கொண்டா. சிபீயிடம் அதைத்தான் சொல்லி சிபீயைக் குளப்புகின்றா.
- சிபீக்கு, சரவணன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் எப்படிப் பதிந்தனவோ தெரியவில்லை. காரணம், ஷியாமின் சூழ்ச்சிதான்.
- ஜனாம்மாவை ஏன் இந்த சூழ்ச்சி செய்பவர்களுடன் ஒப்பிட வேண்டும். ஜனாம்மாவின் நேர்மையான வாழ்க்கையும், வார்த்தையும் அந்த சிவனுக்கும், பார்வதிக்கும் நன்றாகத் தெரியும். அதேபோலத்தான் சரவணனும்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 14.10.2025
தமிழின் பார்வையானது சிபீயின் மேலே வைத்த காதலாகும். அவளின் தூய்மையான அன்பும், அதற்காக ஏங்கும் அவளது இதயமும். இதை சிபீயினால் உணரவே முடியாது. உணரவும் மாட்டான். சரவணனும் நேராவே விளங்கப்படுத்தினான். விளங்கிவிட்டது என்று தலையைத்தான் ஆட்டினானே தவிர மனதினுள் வாங்கிக் கொண்டானா சிபீ. இல்லையென்றுதான் தோன்றுகின்றது. உண்மையாக இதனை சிபீ உணர்ந்திருந்தால், ஷியாம் சொல்வதனை தட்டிக் கழித்திருக்கலாம். ஆனால், ஷியாம் சொன்ன மாதிரி சிபீ யோசிக்கத் தொடங்கி விட்டான்.
ஜானுவையும், அவவினுடைய நடவடிக்கைகளையும் சந்தேகப்படும் விதத்தில் ஷியாம் சிபீயிடம் சொல்வதனை சிபீயால் ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு பகுத்தறிவு என்பது மிகவும் குறைவென்றே நினைக்கத் தோன்றுகின்றது.
ஆனால், ஜானுவின் மேலே அசைக்க முடியாத நம்பிக்கையினை சிபீ வைத்திருக்கின்றான். அதனால், ஷியாம் அடிக்கு மேலே அடியடித்து சிபீயின் மனதினைக் கலைப்பதற்கும், குளப்புவதற்குமான வேலையினை கட்சிதமாக செய்து கொண்டிருக்கின்றாள். இதனை சிபீ விளங்கிக் கொள்ளுவானா?
சரவணனும் ஜனாம்மாவின் குடும்பத்தினைக் கோவிலிலே சந்திக்கையிலே என் குடும்பத்துப் பெண்ணுக்கு செய்த கடமை என்று என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது. அத்துடன் சரவணன் சொன்னதாவது, தமிழைப் பார்க்கையிலே சரியாக உங்களைப் பார்க்கிறமாதிரி இருந்ததென்பதனை எல்லார் முன்னிலையிலும் சொன்னதை பார்க்கிறவர்களெல்லாம் சொன்னதைக் கேட்டும் அனைவரும் வியந்து போனார்கள்.
சிபீக்கோ, தான் ஒரு பெண்ணி்ற்கு அதுவும் நல்லவளாக உள்ள தமிழுக்குத் துரோகம் செய்து விட்டேனே என்று guilty feelingகிலிருந்து வெளியில் வந்து விட்டானோ தெரியவில்லை.
தமிழிடம் இருந்து தாலியைக் கையில் வாங்கிய சிபீயின் முகம் மாறியது. ஏன் அந்தத் தாலியை தமிழ் தன்னிடம் தந்தாள்? ஜானுவிடம் கொடுத்திருக்கலாமே? அத்துடன் அவள் தன்னைப் பார்த்த ஏக்கமான பார்வையானது, அவள் தன் மேல் கொண்ட உண்மையான காதலை பிரதிபலிக்கின்றதா? மயக்க நிலையில், சிபீயின் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது.
உண்மையாகக் காதலித்தவள் தமிழ் என்பதுவும், சிபீ மிகப் பெரிய துரோகம் ஒன்றி்ளைத்து விட்டதும் என்னென்று சரவணனுக்குத் தெரியும்? அல்லது ஒரு ஊகத்தில் சரவணன் சொன்னாரா?
தமிழைக் கண்ட சிபீ நன்றி சொன்னதற்கு எதுவுமே சொல்லாமல் சென்றாள் தமிழ். அதற்கு முன் இருவரின் பார்வைகள் ஒருவருடன் ஒருவர் பேசின. எவ்வளவோ பேசின. வார்த்தைகளின் மௌனம் றொம்ப விஷயங்களைச் சொல்லும். அதனைப் படிப்பதற்கு பல்கலைக்கழகமே இல்லையெனலாம். அந்த மௌனமான வார்த்தைகளின் அர்த்தமானது மனம் நிறைந்த சந்தோஷத்தினையும் கொடுக்கும், உயிரை ஒவ்வொரு உடல் கலங்களிலிருந்து உரித்தெடுக்கும் வலியினையும் கொடுக்கும்.
உயிரினைப் பணயம் வைத்தாள் தமிழ். அதற்கு முழுமையாகவும், உயிருடனும் இருக்கும் சாட்சி சரவணன்தான். அதைவிட, சிபீ ஏமாற்றுகிறான் என்று விளங்காமலேயே, உங்களுக்காகப் போகாத உயிர் இருக்கத் தேவையில்லை என்று தமிழ் ambulanceசினுள் வைத்து அந்த கடுமையான சுகவீனமான நிலையில் சொன்னதினை நினைப்பானா சிபீ?
இந்தத் தியாகத்தின் முன்னால் ஷியாமின் விஷம் நிறைந்த வார்த்தைகளை வேத வார்த்தைகளாக நம்புவானா சிபீ?
இப்படியான தியாகியாக, உனக்கு எத்தனைதரம் உயிர் தந்தவளாக, உயிருடன் முன்னால் நிற்பவளுக்கு போயும் போயும் நன்றி என்று 3 சொல்களால் சொன்னது சரிதானா என்று கூடவா சிபீக்குத் தெரியாது?
தமிழை miss பண்ணினான் சிபீ என்றால் அன்றுதான், சிபீயின் கடைசிச் சிரிப்பாகவும் இருக்கும். அழிந்து போகும் வாழ்க்கைக்கு அரசனாகவும் இருப்பான் சிபீ.
இப்பவும், சிபீக்கு, இந்த உணவு நல்லதா அல்லது கெட்டதா என்று கூடத் தெரியவில்லையா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!