posted 15th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழின் அமைதியான குணத்தினைத்தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், ஜனாம்மாவைப் போல. ஆனால், தமிழின் மற்ற முகத்தினை ஒருவரும் பார்க்கவில்லையே! பார்க்கத் துடிக்கும் கணேஷனும், அமுதாவும். கற்பனை ஒன்றினை செய்து பாருங்களேன் – அதாவது, அப்படி நடந்தால், கணேஷனும், அமுதாவும் தமிழின் காலில் மட்டியிட்டு விழுந்தது போல எனக்குத் தெரிகின்றது.
- தமிழ் உண்மையினை மீனாவிற்கு எடுத்துரைத்தாள் – இதனை விளங்கிக் கொண்ட மீனா. ஆனால், கணேஷனுக்கும், அமுதாவுக்கும் எதிரியாகும் மீனா.
- இவ்வளவு காலமுமாக மீனாவிற்கு தமிழைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. எலியும், பூனையையும் விட றொம்ப மோசமான சூழல்.
- தமிழால் மீனா பெருமைப் படுத்தப்பட்டா. மீனாவின் மனமும் இப்போது இலேசாகியது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 14.05.2026
கணவனின் அணைப்பு தமிழுக்குக் காணாததினால், பாட்டியிடம் சென்றாள். குழந்தைகள் எவ்வாறு ஒரு உறவு மாறி மற்ற உறவிடம் அன்பினைப் பெறுவதற்கு இடம் மாறுகின்றார்களோ, அதேபோல இப்போது தமிழின் நிலைமையும் வந்து விட்டது.
இந்த அன்பு எதிர்பார்ப்பு, இன்னும் ஒன்றை ஜனாம்மாவிடமிருந்து எதிர் பார்த்தது. தான் எப்படித்தான் அத்தையின் மனதினில் இடம்பிடிப்பது என்பதுதான். தமிழுக்கோ விடை கிடைக்கவில்லை. ஆனால், ஒரு துருப்பு மட்டும் கிடைத்தது. உன்னால் முடியும் தமிழ் என்பதுதான்.
உண்மையினை தனது மாமியாரிடம் தமிழ் விளங்கப்படுத்தினாள். இது உண்மையாக தனது அத்தையின் குணம் இல்லை என்பதனை எடுத்தியம்பினாள். இதெற்கெல்லாம் காரணம் உங்கள் அண்ணனும், அண்ணியும்தான் என்று தயக்கமில்லாமலும், உறுதியாகவும், ஆனால், பணிவுடன் சொன்னாள். சிந்தித்துப் பாருங்கள் என்று மீனாவைக் கேட்டுக் கொண்டாள். இதனை மீனா உடனுக்குடன் அவதானிக்கவும் செய்தா.
ஆரம்பத்தில், அண்ணன் கணேஷன் பக்கமாவும், அண்ணியை நம்பியவளாகவும் இருந்த மீனாவிற்கு ஒரு புத்துணர்வு வந்தது. தமிழ் நல்லததைத்தானே செய்கின்றாள் என்று கொஞ்சம் புரிந்தும் கொண்ட மீனா, சமையலுக்கு ஒத்தாசையும் வழங்கினா, தமிழுக்கு.
தமிழை வீட்டினை விட்டு கலைக்க வேண்டும், இதனால், ஜனாம்மாவின் பலம் குறைந்துவிடும், இறுதியாக தாங்களே இந்த சொத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக இருக்கலாம், அனுபவிக்கலாம் என்ற திட்டத்தினை நோக்கி கணேஷனும், அம்முதாவும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். சொத்து, சொத்து, சொத்து என்பது மட்டும்தான் இவர்கள் தினமும் ஓதும் தாரக மந்திரமாகும்.
மாமியார் மீனாவுக்கும், மருமகள் தமிழுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அந்யோன்யம் வந்ததாக உணர முடிகின்றது. தமிழைப் பற்றி மீனாவிற்குத் தெரிந்திருந்தும், கணேஷனினதும், அமுதாவினதும் நஞ்சேறிய வார்த்தைகள் மீனாவை நிலைகுலைய வைத்ததுதான் உண்மை.
மீனாவை இலகுவாக ஏமாற்றிவிட முடியும். இதுதான் மீனாவின் பெலவீனம் என்பதுவும் அண்ணன் கணேஷனுக்கு நன்கு தெரியும். எனவேதான் துருப்புச் சீட்டிற்குத் தகுதியானவள்தான் மீனா என்று நன்கு படித்து வைத்துள்ளான் கணேஷன். இப்படியான மனநிலையில் உள்ளவன், தனது இலாபத்திற்காக தன் சகோதரத்தையே பலி கொடுக்கவும் தயங்கமாட்டான். இதனை மீனா எப்போதுதான் புரிந்து கொள்வாவோ தெரியாது.
ஜனாம்மாவும், தமிழும் பலவிதமான உணவுகளின் தயாரிப்பினைப்பற்றி அலசிக் கொண்டிருக்கையிலே, தமிழ் வெறுமனே சமையலறைக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்த மீனாவையும் உள்ளே இழுத்தாள். மீனாவினால் என்னென்ன முடியும் என்பதனை இதுவரைக்கும் தெரியாமல் இருந்த ஜனாம்மாவிற்குத் தெரியப்படுத்தினாள் தமிழ். இதனால், ஜனாம்மா மிகவும் சந்தோஷப்பட்டதுமல்லாமல், மீனாவை வாழ்த்தினா. இதனால், மனதினுள்ளே மீனா ஒரு நாட்டிய அரங்கேற்றத்தினையே அரங்கேற்றி விட்டா என்றால் பாருங்களேன்.
அதுமட்டுமல்லாமல், அமைச்சரின் வருகையானது ஜனாம்மாவிற்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தாங்கள் செய்யும் உணவினை மிகைப்படுத்தினார்கள் ஜனாம்மாவும், மீனாவும், தமிழும். அங்கும், விருந்தாளிகளால், மீனா பெருமைப்படுத்தப்பட்டா. இதற்கு முக்கிய காரணம், தமிழ்தானே.
ஆனால், மீனாவும், தமிழும் சமைத்த உணவினுள்ளே சாதாரணமாக, உப்பு அல்லது மிளகாய் தூள் மேலதிகமாகக் கலந்து பழிவாங்குவது பழக்கமாக இருக்கின்றது. இதனால், அதிகளவு உப்பினை கலந்து தமிழைப் பழிவாங்குவதற்காக அமுதா முயலுகையிலே, மீனாவிடம் கையும், மெய்யுமாகப் பிடிபட்டா அமுதா. இதுவே சுடச் சுட நிரூபணமாகி விட்டது, கணேஷன் மேலும், அமுதாவின் மேலும், தமிழ் சூட்டிய குற்றச் சாட்டானது.
தமிழ், கணேஷனை எத்தனையோ தரம் கண்டித்தாலும் கணேஷனோ அடங்கிப் போவதாக இல்லை. ஏனென்றால், கணேஷனைப் பொறுத்த மட்டில், தமிழ் ஒரு சின்னப் பிள்ளை என்பதுதான். முறைத்துக் கொண்டு திரிந்த வெண்பாவோ இப்போது சீனிலேயே இல்லை. அதைபோலத்தான் தமிழும் காணாமல் போய் விடுவாள் என்று தப்புக் கணக்குப் போடுகின்றான் கணேஷன்.
- ஜனாம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் எல்லோரையும் ஒரு கூட்டுக் குடும்பமாக தான் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கையிலே, தமிழ், கணேஷனை தவிர்க்க முடியாத சூழ்நிலை வந்தாலும், ஜனாம்மாவிடம் காட்டிக் கொடுத்து வீட்டை விட்டு வெளியே கலைப்பாளா?
- தமிழ் தனது மகளின் வயசில்தானே இருக்கின்றாள் இவளை தான் தட்டித் தூக்கி விடலாம் என்று தமிழ் யார் என்பதனை எல்லார் முன்னிலையிலும் காட்டிக் கொடுப்பானா கணேஷன்?
- நெஞ்சினிலே பாரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த மீனா இப்போது தமிழின் மேலே நம்பிக்கை கொள்கின்றா. இதனால், மீனாவின் மனமும் இலேசாகின்றது. இது மாமியாரின் கைவரிசை. ஆனால், அநேகமாக, உள்ளே மருமகளாக நுழைந்தவள்தான், குடும்ப ஒற்றுமையினைக் கெடுப்பாள். ஆனால், இங்கு மாமி – மருமகள் ஒற்றுமையினால் அமைதியான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றதே!
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!