posted 13th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- போட்டியிலுள்ள ஷியாமும், வெண்பாவும் தீச்சட்டி தூக்க முடியாமலே ஆட்டத்தில் தோற்று வி்ட்டார்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும்தான் வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு குடும்ப வாழ்க்கை நரகமாகும்.
- ஒருவிதமான எதிர்பார்ப்பில்லாமலும், சிபீக்கு எந்த ஆபத்தும் வந்திரக் கூடாதென்றுமான நோக்கத்தோடேதான் பரிகாரத்தினைத் தொடங்கினாள் தமிழ்.
- தீச் சட்டியினைத் தாங்கினாள் தமிழ். அவளுடைய மனம் ஒருபக்கம் சொல்லிக்கொண்டே இருந்தது, தான் சீபியின் மேலே வைத்த அன்பு உண்மை, உண்மைதான் என்று. அதற்காகவே இந்த கஷ்டத்தினை ஏற்றுக் கொண்டாள் தமிழ்.
- பூசாரியின் அறிவுறுத்தல்கள் மிகவும் அச்சத்தினை அனைவருக்கும் உண்டாக்கியது. துணிந்தாள் தமிழ். கடவுளின் மேலே பாரத்தினைப் போட்டுக் கொண்டு அம்மாளின் சிலையினைப் பொறுப்பேற்றுக் கொண்டாள், ஒற்றயடிப் பாதையிலே காலைப் பதித்தாள்.
- தடைகளை சிவனின் காவலுடன் இலகுவாகத் தாண்டினாள். அம்மாளை சிவனின் பக்கம் சேர்த்தாள். பூஜை செய்து கும்பிட்டாள். மாங்கல்யத்தினை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தாள், தமிழ்.
- பரிகாரம் உடையவன் செய்ய வேண்டும். இல்லாவிடில், அவனைக் கல்யாணம் பண்ண உள்ளவள் செய்யலாம். இங்கு, கல்யாணத்திற்குப் போட்டியாக இருந்தவர்கள், வெண்பாவும், ஷியாமும். இருவராலேயும் இந்தப் பரிகாரத்தினைச் செய்ய முடியாமல் போய்விட்டது. பரிகாரம் செய்து, மாங்கல்யத்தினைக் கொண்டு வந்தது யாரு – அப்போ தமிழ்தானே சிபீயின் பாதி.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 13.10.2025
எச்சாணிகள் சும்மா இருந்தாலும், ஜனாம்மாவின் வீட்டினுள்ளே உள்ள எதிரிகள் விட்டுவிடுவார்களா. ஊதிக் கெடுப்பதற்கே வேறுயாரும் வெளியில் இருந்து வரவா வேண்டும்?
இது கோவில் காரியம் என்று கூட ஒரு விவஸ்தை இல்லாமல், பிறேமும், கணேஷனும் அடியாட்களை அனுப்புகின்றார்கள். தெய்வம் இருக்கின்றதே, அதற்கு ஒரு பயமும் இல்லாமல் அவர்களின் துஷ்ட நினைவுகள் எல்லாவற்றினையும் மறைத்து விட்டதே! இதன் விளைவுகள் என்னவாறாக இருக்கும் என்று கூட இவர்கள் சிந்தையில் இல்லையே!
ஒருவராலும் சிபீயின் உயிரினைக் காப்பாற்ற முடியவில்லை. பேபி என்று சொன்னவளையும் காணவில்லை, மாமா மாமா என்று நாண்டு கொண்டு நின்றவளையும் காணவில்லை. மாப்பிள்ளை எனது மகளுக்குத்தான் என்று அவள் பிறக்க முதலே சிபீயை book பண்ணி வைத்தோம் என்று சொல்லுவதற்கு கேவலமாக இல்லை.
தான் ஷியாமைக் காதலிக்கவில்லை என்று எப்பவோ ஜனாம்மாவின் கேள்விக்குப் பதிலளித்தவன் சிபீ. இப்போ ஏன் தான் ஷியாமைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்வதென்றால், சிபீக்கு ஒரு senseஉம் இல்லையா?
சரி தமிழைப் பழிவாங்கி என்னத்தினைச் சாதிக்கப் போகின்றான்? சிபீயின் தன் egoவை வைத்து என்ன செய்யப் போகின்றான். தமிழுக்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா. சிபீயின் நடிப்பினை நம்பிவிட்டாள் தமிழ். ஏமாந்து போனாள்.
ஆனால், சிபீயின் உயிரைக் காப்பாற்ற அவனின் சொந்தமும் வரவில்லை, அவனில் ஒட்டியுள்ள காசினால் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் ஷியாமும் அவன் பக்கம் இல்லை.
ஆனால், சிபீயால் ஏமாற்றப் பட்டவள், தூக்கி எறியப்பட்டவள், ஒன்றையுமே எதிர்பார்க்காதவள், அவனது மனம் உண்மையானது, தூய்மையானது என்று ஏமாந்தவள், ஏமாற்றுப்பட்டவள், தன்னுயிரினைக் கருத்தில் கொள்ளாமல், தன் குடும்பத்தினையும் நினைக்காமல் முன்வந்து பிரகாரங்களைச் செய்து முடித்தாள். அவள்தான் தமிழ்.
சிபீ உருகி உறைந்து போனான். தமிழ் தீச்சட்டியினைக் கையில் ஏந்திய வண்ணம், பார்த்தாள் ஒரு பார்வை சிபீயை. அந்தப் பார்வையில் எத்தனை அர்த்தங்கள்? எத்தனை கதைகள்? எத்தனை துரோகங்கள்? அவளின் இதயத்தினைக் கிழித்தெறிந்த ஆணிகள் கொடுத்த வலிகள், சிபீக்கு விளங்கியிருக்கும், தமிழின் பார்வையின் அர்த்தம் என்னவென்று. யாருக்கு விளங்கவில்லையோ, ஆனால், சிபீக்கு விளங்கியிருக்கும். சிபீ அவனையும் அறியாமல் தீச்சட்டியினை ஏந்தி நின்றுகொண்டு, தன்னைக் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தமிழை இரு கைகளாலும் கும்பிட்டான். அப்போதே தமிழ் பூக்குழியினுள் பாதத்தினை வைத்தாள். பரிகாரத்தினைத் தொடங்கினாள்.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அனைவரும் கும்பிட்டனர். சிபீயின் அம்மாவுக்கும் உண்மையான மனம் அப்பவும் வரவில்லை, அரைகுறையாகவே கும்பிட்டா. தன் மகனின் உயிரைக் காக்க முன்வந்தவள் தமிழ் யாரு இவவுக்கு? என்ன தொடர்பு தமிழுக்கு இருக்கின்றது இந்த பிரகாரங்களைச் செய்வதற்கு என்று நாக்கூசாமல் கேட்டு நின்றான் கணேஷன். அப்போ தமிழ் கேட்டிருக்கலாம் கணேஷனிடம், ஷியாம் யாரு என்று. அவ்வாறு கேட்டிருந்தால் கணேஷன் அனைவரின் முன்னாலும் தலைகுனிந்திருக்கவல்லவா வேண்டும்?
தமிழ், அம்மாளின் சிலையினைத் தூக்கிக் கொண்டு ஒற்றையடிக் காட்டுப் பாதையில் இறங்கினாள். எல்லாவற்றிற்கும் துணிந்தாள். கடவுள் எல்லாவற்றினையும் பார்த்துக் கொள்ளுவான் என்று அம்மாளைக் கெட்டியாகப் பிடித்வளாய் நடுக் காட்டினுள் நடந்தாள், சிவனின் பாதம் நோக்கி.
எச்சாணிகளின் கோட்டையாக அந்தக் காடு இருக்கலாம், ஆனால், அதுகள் ஒதுங்கி விட்டன. தமிழையும், அம்மாளையும் கண்டவுடன் தலை வணங்கி வழிவிட்டன சுகமாக தமிழ் சிவனிடம் போகட்டும் என்று.
ஆனால், காசுக்காக வழிஞ்சு கொண்டிருக்கும் இந்த மனித விஷமிகள் கணேஷனினதும், பிறேமினதும் பிச்சைக் காசுக்காக அம்மனின் சிலையினைப் பறித்து எறிந்தார்கள். காட்டினையே ஆண்டு கொண்டிருக்கம் அம்மாளும், சிவனும் அவர்களின் பக்தர்களைப் பாதுகாக்க மாட்டார்களா?
பாதுகாத்தார்கள். தமிழை அமைதியாகப் போய் பூஜை செய்யுமாறு பணிக்கப்பட்டாள்.
பூஜை செய்தாள். வெற்றியுடன் மாங்கல்யத்தினை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி விரைந்தாள் தமிழ்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!