Varisu - வாரிசு - 11.10.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் கேட்கப்போவது;
- வாழ்க்கையின் வரைவிலக்கணத்தினைத் தெரியாதவர்கள், கல்யாணப் பந்தத்தில் ஒருங்கிணையலாம் என்று துடிக்கின்றார்கள்.
- துரோகம் செய்தவனைக் கூட உயிரினைக் காப்பாற்ற முன்வந்தவளும் ஒரு பெண்தானே! போட்டியில் பங்கு கொள்ளாமல் உள்ளவள் இவள்.
- தெய்வத்திற்கு வேண்டியது என்ன?

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

- இன்றைக்கு என்ன நடக்கலாம் என்று நேற்றைய பதிவினில் சொல்லி விட்டேன்.
- ஆணி ஏறிய காலுடன் சிபீ தனியாக அம்மனின் சிலையினைக் கொண்டு போக முடியாததென்று தடுமாறின சிபீ.
- தமிழின் உடலோ கோவிலில் இருந்தாலும் அவளின் மனம் சிபீயினைச் சுற்றித்தான் இருக்கும் என்று கூறிய பிரகாரம், சிபீ ஆணி குத்தியதினால் அவதியுறுகையில் ஓடிச் சென்று தாங்கி நின்றாள் தமிழ்.
- வெண்பாவும், ஷியாமும் தாங்கள்தான் சிபீயின் பாதி என்று பரிகாரத்தினில் பங்கு கொள்ளச் சென்றவர்கள் reverse அடித்ததைப் பார்த்தீங்களா?
- சிபீயின் உயிருக்கு ஆபத்து யாரும் இல்லை என்றிருக்கையிலே தமிழ் முன்வந்தாள் சிவனுக்குப் பார்வதியாக.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

வாரிசு - Varisu - 11.10.2025

சிவனுக்குப் பார்வதி எப்படி பாதியோ அதேமாதிரித்தான் சிபீயைக் கல்யாணம் பண்ணுபவர் இந்தப் பரிகாரத்தினைச் செய்யலாம் என்று பூசாரி அந்தக் கோவில் வழக்கத்தினைச் சொன்னார்.
தெய்வம், ஆடை அலங்காரத்தினைப் பார்ப்பதில்லை. மாறாக, மனத்தின் அழகினைத்தான் பார்க்கும். இங்கும், ஷமூத்தாவும், வெண்பாவும் உள் மனதினால் நல்லவர்கள் அல்ல. ஷமூத்தா சிபீயின் சொத்தில் கண் வைத்துள்ளாள். வெண்பா, கணேஷனின் உந்தலினால் அவளும் சொத்துக்காகத்தான் அத்தான் தன்னுடையவர் என்று வீம்பு கதைத்துக் கொண்டிருக்கின்றாள்.

அம்மன் வைத்த செக்கினைப் பார்க்கலாம் இங்கு. நீயா நானா என்ற பந்தயம். கடவுளால் படைக்கப்பட்ட ஜீவராசிகள் நாங்கள் – அந்த தெய்வத்துடனே போட்டி போட நினைப்பதனை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?

ஆணி ஏறியது சிபீயின் காலில். நோவினால் துடித்தான் சிபீ. தமிழோ சிபீ நல்ல விதமாக இந்தப் பரிகாரத்தினை வெற்றியுடன் செய்து அவனின் மேலேயுள்ள தோஷங்களையெல்லாம் களைந்து, நலமாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு நின்றாள், தமிழ். அவளின் மனமோ சீபியைச் சுற்றிய வண்ணம் இருந்தது, ஆனால், தமி்ழ் கோவிலிலே அம்மனின் மேலே பாரத்தினைப் போட்ட வண்ணம் இருந்தாள். அனைவரும், சிபீ வாற நேரம் வரட்டும் என்று வானத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணம் கட்டப் போட்டியிலுள்ள, ஷியாமும், வெண்பாவும் கூடத்தான்.

தனியே போன சிபீக்கு என்ன நடந்திருக்கும், சுகத்துடன் வருகின்றானா என்று கூட ஒருதரும் நினைக்காமல் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தமிழ் மட்டும், சிபீயை நினைத்துக் கொண்டிருக்கின்றாள், அதுவும் தன்னை ஏமாற்றித் துரோகம் செய்தவனுக்காக வேண்டிக் கொண்டிருக்கின்றாள். இதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்?

சிபீ ஆணி குற்றிய வேதனையால் ஆடிப் போனான், அவனால் நடக்கக் கூட முடியவையில்லை. தெய்வ காரியமாச்சே என்று ஓடிச் சென்றாள் தமிழ். விழப்போன சிபீயைத் தாங்கிப் பிடித்தாள். குற்றியிருந்த ஆணியைப் பிடிங்கி எறிந்தாள். வலி குறைந்தாலும், வடிந்து கொண்டிருக்கும் இரத்தமானது நிற்கவில்லை.

கணேஷனோ எப்படியாவது, இந்த பரிகாரத்தினை இடையில் நிற்பாட்டி, ஜனாம்மாவிற்கும், அவவின் நினைவுகளுக்கும் மண் அள்ளிப் போட வேண்டும் என்று திட்டம் போட்டு வந்தவன், இனிப் பரிகாரம் வேண்டாம், சிபீக்கு விஷம் ஏறிவிடும் என்று அனைவரினதும் மூளையினை மயக்கிக் கொண்டிருந்தான். தமி்ழ் சும்மா இருப்பாளா? உடனே விரைந்து சென்று வைத்தியரைக் கூட்டி வந்தாள். விஷம் ஏறாமல் தடுத்ததுமல்லாமல், வைத்தியாசாலைக்கும் போகாமல் சிபீயைக் காப்பாற்றினாள், தமி்ழ். ஆனால், மற்றவர்கள் அனைவரும் வாயினைப் பொத்திக் கொண்டு நின்றதுதைத் தவிர வேறென்னதான் அவர்களால் செய்ய முடியும்?

எப்படியாவது, இந்தப் பரிகாரத்தினை இடைநிறுத்தியே ஆகவேண்டும் என்பது கணேஷனின் திட்டம். ஆனால், பூசாரி அதற்கு உடன் படவில்லை. இன்றே, பொழுதானாலும் இந்தப் பரிகாரம் செய்து முடித்தே ஆகவேண்டும் என்றும், இல்லையேல் பாரிய விளைவுகள் சிபீக்கு வரும் என்றும் கூறினதைக் கொண்டு அதற்குரிய தீர்வொன்றினையும் முன் மொழிந்தார். அதாவது, சிவனின் பாதி எப்படி சக்தியோ அதேபோல, சிபீயை கல்யாணம் பண்ணுபவ அந்தப் பரிகாரத்தினைச் செய்யலாம்.

பரிகாரம் செய்வதற்கு நானா, நீயா என்று போட்டி, ஷியாமுக்கும், வெண்பாவுக்கும். பரிகாரத்தின் கனாகனம் தெரியா இந்த பெண்கள், கல்யாணம் என்று மட்டும்தான் இவர்களது குறிக்கோளாக இருக்கின்றதே தவிர, அந்தப் பந்தத்திலிலுள்ள நன்மை, தீமை, துக்கம், சந்தோஷம், இழப்பு, உழைப்பு என்ற ஒருவிதமான அறிவில்லாமல் அலைவதற்கான நல்ல உதாரணங்களாக ஷியாமும், வெண்பாவும் இங்கு இருக்கின்றார்கள்.

நோவினில் துடித்தான் சிபீ – விழப்போனவனைத் தாங்கிப் பிடித்தாள் தமிழ். விழப்போன அம்மனின் சிலையினை அவளும் சேர்ந்து தாங்கிப் பிடித்தாள். நோவிற்குரிய ஆணியைப் பிடிங்கி எறிந்தாள். சிபீயையும், அம்மனையும் தானும் சேர்ந்து தோளினிலே தாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்தாள் தமிழ்.

சக்திக்குப் பதிலாக வர முன்வந்தவர்களாக, ஷியாமும், வெண்பாவும் போட்டி போட்டு வந்தார்கள். அம்மாளாச்சியினை நினைத்துக் கொண்டு தீச் சட்டியினை ஏந்திக் கொண்டு, பூக்குளியினுள் இறங்க வேண்டும். பிறேம் உசுப்பேற்றினான் ஷியாமை. அவனின் நோக்கம், சிபீயின் சொத்துக்களை தங்கை ஷியாமை வைத்து அமத்துவதுதான். சிபீயைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கமில்லை. அதேபோலத்தான், வெண்பாவும், தகப்பனின் வழிநடத்தலில் சொத்துத்தான் முக்கியம் என்பதுதானொழிய சிபீ நல்லாக இருக்க வேண்டுமென்றில்லை.

இருவரும் தீச் சட்டியினை ஏந்தினார்கள், செக்கன் கணக்குக் கூட அவர்களால் தூக்க முடியவில்லை. அலறியடித்த வண்ணம் தீச் சட்டியினைக் கீழே வைத்து விட்டனர்.

இப்போது சிபீயின் உயிர் ஊசலாடுவதனை இவர்கள் இருவராலும் காப்பாற்ற முடியவில்லை. ஜனாம்மாவின் ஆதங்கமும், சிபீயின் குடும்பத்தின் துயரினை யார்தான் துடைப்பார்கள்?
கணேஷனும் அடங்கினான், பிறேமும் முடக்கப்பட்டான். இருவரும் கதையின்றி அமைதியானார்கள். ஜனாம்மாவோ சிபீயை யார்தான் காப்பாற்றுவார்கள் என்ற வாய்விட்டுச் சொன்னா. பக்கத்தில் நின்ற தமிழ் நான் இந்தப் பரிகாரத்தினைச் செய்கின்றேன் என்று தீச் சட்டியினேக் கையில் ஏந்தியவண்ணம் பூக்குழியினுள் இறங்கினாள் தமிழ். அவளின் மனதிலோ ஒரு உயிரைத் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கம் மட்டும்தான் இருந்தது. அம்மனின் காவல் அவளுக்கு வந்தது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00