posted 15th September 2025
இன்றைய Serial Review & Analysisஆனது 11ஆம் திகதியிலிருந்த 13ஆம் திகதிகள் அடங்கலாக உள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இங்கு ஒரு கல்யாண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. ஒருவருக்கொருவர், சிபீக்கும், தமிழுக்குமென அங்கலாய்ப்பதுமல்லாமல் ஜனாம்மாவிடம் கேள்வியும் கேட்கலாகினர்.
- மாற்றத்தினை விரும்பாதோர் பலர், விரும்பியோர் சிலர் - கல்யாணப் பெண்களுக்குப் புடவைகள் எடுக்க வேண்டும் – முன்னையது போலன்றி இந்த முறை மணப் பெண்களையே அவரவர் புடவைகளைத் தெரிவு செய்ய விடுவோம். இதனால், கல்யாணக்களை கட்டியது புதுமணத் தம்பதியினருக்கு.
- 5 பவுணில் நகை கொடுக்கையிலே, கணேஷனால் ஆயத்தப் படுத்தப்பட்டவன், அனைவர் முன்னிலையிலும் rolled gold இல் தந்து எங்களைக் கேவலப்படுத்துகிறீர்கள் என்று கூக்குரலிட்டான். அது original தங்கம் என நிரூபிக்கப்பட்டது.
- அனைவரின் ஆசீருடன் பதின்மரின் கல்யாணம் இனிதே நிறைவேறியது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 11 - 13.09.2025
வருடா வருடம் 10 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணுவதனை மனதில் வைத்துக் கொண்டு ஜனாம்மா சொல்வதற்கு முன்பு எல்லாரும், அதாவது, ஜனாம்மாவின் சொத்தினிலே கண்ணாயிருக்கும் திமிங்கலங்கள், அவரவர் தலையினைப் பாவிக்காமல், பாவிக்க தலைக்குள் ஒன்றும் இல்லாததுகள், குரலெழுப்பத் தொடங்கினர். ஏனென்றால், சொத்து எங்கெங்கு போகப் போகின்றது என்பதற்காகத்தான்? அதுவும், தமிழுக்குப் போகப் போகின்றதோ என்ற ஏக்கம்தான்.
அட, ஒன்றாய் எல்லாரும் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையாக ஜனாம்மா யோசித்தாலும், இவர்கள் எல்லாவற்றினையும் சூறையாடவல்லவா திட்டம் தீட்டுகின்றார்கள். இது தேவைதானா ஜனாம்மாவிற்கு.
இந்த கல்யாண நிகழ்வினை வழமை போன்றில்லாமல், கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யலாம் என்ற திட்டத்தினை தமிழ் நினைத்து ஒழுங்குகளை மேற்கொண்டிருக்கையிலே, வீ்ட்டிலுள்ளவர்கள், இவள் யாரு ஜனாம்மாவிற்கு மேலால யோசிக்கிறதற்கு என்ற ஒரு பொறாமை.
சரி, ஒரே மாதிரியாக இந்த கல்யாணத்தினை செய்யாமல், எதிர்த்துக் கதைப்பவர்கள் புதிதான ஒரு ஊகத்தினைச் சொல்லலாமல்லவா? அதுவும் சொல்ல மாட்டார்கள், இல்லை, சொல்லவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு நாங்கள் என்ற திமிர்ச் செயல்கள் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால், அதற்கு ஏதாவது ஒரு suggestion அல்லது solution என்ற ஒன்றையாவது சொல்லத் திராணி இருக்கின்றதா? இல்லையே! பிறகென்ன, தெரியாதல்லவா – வாயைச் சாப்பிடுவதற்கு மட்டும் திறந்தால் காணுமல்லவா?
இதிலுள்ள மாற்றம் என்னவென்றால், கல்யாணம் முடிக்கும் தம்பதியினர் இங்கு வந்து அவரவருக்கு விரும்பிய கூறை சாறியினைத் தெரிவு செய்யும்படி விடுவதுதான். இது நல்ல யோசனை என்று ஜனாம்மா ஏற்றுக் கொண்டா.
சாறிகள் கொண்டு வந்ததன் பின்னர், கல்யாண ஜோடிகளும் வரவளைக்கப்பட்டனர். அவர்களை சுற்றிவர இருக்கச் சொல்லி அவர்களுக்கு விரும்பிய சாறிகளைத் தெரிவு செய்யும்படி பணித்தனர். ஆனைவரும் மிக்க சந்தோஷமாகத் தெரிவு செய்தார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்த சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், சிபீ தமிழின் வீட்டில் உள்ளவர்களுக்கும், தமிழ் உட்பட, தன் கையாலேயே தெரிவு செய்து அதனை அவர்களுக்கும் கொடுத்தான். இப்படி செய்யும் சிபீ ஏன் தமிழ் குடும்பத்திற்கு மட்டும் செய்ய வேண்டும்? விருப்பத்திலா அல்லது இது தமிழைப் பழிவாங்கலின் ஒரு அங்கமா?
அடுத்த கட்டமாக கல்யாணத் தம்பதியினருக்கு 5 பவுண் தங்க நகைகள் கொணரப்பட்டது. இந்த நகைகளும் மிகவும் அழகாக இருந்தன. இவற்றையெல்லாம், மீனாவைக் கூப்பிட்டு ஜனாம்மா காட்டிவிட்டு உள்ளே கொண்டு போய் வைக்கும் படி பணித்தா. இந்த நகைகளில்தான் மாற்று வேலை செய்து ஜனாம்மாவிற்கு அவப் பெயரினை உண்டாக்குவதற்காக அலைந்து திரியும் கணேஷனுக்கு ஒரு மிக முக்கிய சந்தர்ப்பமாக இது அமைந்தது.
இதற்கு குறிஞ்சிநாதனிடம் கை நீட்டி கணேஷன் பணத்தினை வாங்கி இருக்கின்றானே. இதற்கு மட்டும் நன்றிக் கடன் செய்வதில் மிகவும் நம்பிக்கையாளர்களாக இருப்பார்கள், இப்படியான தில்லாலங்கடி பண்ணுபவர்கள். கணேஷன் ஒழுங்கு படுத்தி வைத்திருந்தபடி, போலி நகைகளும் வந்தன. ஒருவருக்கும் தெரியாமல் போலி நகைகள் மாற்றப்பட்டு, அசலுகள் களவாடப்பட்டன. வெற்றிகரமாகச் செய்யப்பட்ட இந்த திருவிளையாடலைக் கட்சிதமாகச் செய்து முடித்தான் கணேஷன்.
மாங்கல்யத்திற்கு ஆராத்தி காட்டும் நிகழ்வு வீட்டின் பெரியவர்களால் செய்யபட்டது. இதில் தமிழின் அம்மா வந்தே ஆக வேண்டும். ஆனால், உண்மையான அம்மாவால்தானே வர முடியாதே! எனவே, தமிழின் வீட்டுக்காறி வர வேண்டியதாயிற்று. இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், ஆண்டிக்கு ஆராத்தி எப்படி எடுப்பது என்று தெரியவும் மாட்டாது. அதுமட்டுமல்லாமல், தமிழ் வீட்டார் யாரும் அதனைச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.
இந்த நிகழ்வினை தமிழின் குசினியிலே செய்து காட்டி இருக்க வேண்டும். அதனை தமிழ் வீட்டில் அனைவரும் மறந்து விட்டார்கள். அல்லது ஏற்கனவே ஹசீனாம்மா அங்கு இருந்திருந்தால் அவ அதனைப் பார்த்து நல்ல விதமாகச் செய்திருப்பா. ஆனால், அந்தச் சந்தர்ப்பம் ஹசீனாவுக்குக் கிடைக்கவில்லை. ஒருவாறாக அவ தனது கிராமத்தில் செய்வது போன்று என்று செய்தா என்று சொன்னதினை ஜனாம்மா ஏற்றுக் கொண்டா. ஆனால், உண்மையாக ஏற்றுக் கொண்டாவா என்பதுதான் சிக்குகின்றது.
ஆனால், கடைசியாக ஆராத்தியினை சிபீ எடுக்கும் முறை வந்தது. அதனை மறுத்த சிபீ, தனது முறையினை தமிழிடம் கொடுக்கும்படி ஜனாம்மாவிடம் சொல்ல, ஜனாம்மா தமிழையும், சிபீயுடன் சேர்ந்து ஆராத்தி எடுக்கும்படி பணித்தா. இங்கும், ஜனாம்மா தமிழையும், சிபீயையும் வைத்து செய்யும் சடங்கிற்கு சந்தர்ப்பம் வழங்கினா. இருவரும் மிகவும் பணிவுடனும், பக்தியுடனும் ஆராத்தி எடுத்தனர். இதனை ஜனாம்மா ஒரு கணிப்பில் வைத்து இரசித்துக் கொண்டிருந்தா. இந்தக் கணிப்பு தன் பேரனுக்கும், பேத்தி மாதிரி எனப்பட்ட தமிழையும் ஒன்றாக இணைத்து வைத்து ஒரு தாய் இரசிப்பது போன்ற கணிப்பாகத் தெரிகின்றது. இதனையெல்லாம், தமிழின் அம்மாவும் தூர நின்று அவதானித்து சந்தோஷமடைந்தா.
ஆனால், இங்கு வந்துள்ள சிக்கலாது, தமிழினால் தனியே சமாளிக்க முடியாததினால், சிபீயைக் கூப்பிட்டு தனது அம்மாவின் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்கலாமா என்று சிபீயினை தனியே அழைத்தாள். ஆனால், சிபீ நினைத்தது, தமிழ் தன்னை காதலிக்கின்றேன் என்று சொல்லப் போகின்றாளாக்கும் என்ற ஆவலில் மீண்டும், மீண்டும் என்ன தமிழ் சொல்லு என்று கேட்டான். தமிழின் நல்ல காலமோ என்னமோ, வெண்பா அங்கு வந்து குறுக்கிட்டு விட்டாள். இதனால், தமிழ் என்ன சொல்ல வந்தது என்பது தடங்கலானது.
ஒரு விஷயத்தில், ஏதாவது சொல்ல வேண்டி இருக்கையில் ஒரு தடங்கல் வந்தால், அது நன்மைக்கே என்று அந்த தலையங்கத்தினை விட்டு விட வேண்டும். அநேகமாக ஏன் அந்தத் தடங்கல் வந்தது என்று எங்களுக்குத் தெரியவராது. இது அனுபவத்தில் கிடைத்த உண்மை.
இதனைத் தொடர்ந்து கல்யாண புதுத் தம்பதியினருக்கு நகைகள் வழங்கப்பட்டன. இதில் ஒருவன், கணேஷனால் ஏற்படுத்தப்பட்டவன், நகையினை வாங்கியதன் தாமதம் என்னம்மா, duplicate நகையினைத் தாறீங்கள். நாங்கள் கேட்கவில்லையே! இப்படித்தான் உங்கள் விளம்பரத்திற்காக எங்களை ஏமாற்றுகிறீங்களே என்று வளையும் நாக்கினால் வசை பாடினான். இதை விட வேறொருத்தியும் தனக்குத் தெரிந்தளவு மானபங்கப் படுத்தினா.
நகைத் தொழில் செய்பவர், நகைகளைச் சோதனை பண்ணி எல்லாம் original 22 கரட் தங்கம் என்று அடிச்சுச் சொன்னார். நடித்தான் கணேஷன். என்ன நடந்தது என்று குழம்பிப் போனான் கணேஷன்.
மான பங்கப் படுத்த, எங்கள் வாழ்க்கையினை அழிக்க குடும்பத்தில் உள்ளேதான் துரோகி இருப்பான். வாழ்க்கையில் எப்பவும் அவதானம் அவசியம்.
கள்வனைப் பிடித்த தமிழ் ஒரு வாங்கு வாங்கிக் கொண்டிருக்கையில், அதனையும் ஜனாம்மா அவதானித்தா. அதனையும் தமிழ் சமாளிக்கின்றா என்று ஜனாம்மாவிற்கு விளங்காதா. ஜனாம்மா ஒவ்வொன்றாக அளந்து கொண்டிருக்கின்றா. இறுதியில் ஒன்றாக்குவா – அப்போ விளங்கும்.
தமிழும் ஒன்றுக்கு மாறி ஒன்றாக கணேஷனை மன்னித்துக் கொண்டிருக்கின்றா. ஏனென்றால், ஜனாம்மா தமிழிடம் கேட்டுக் கொண்டது, தன் குடும்பத்தினை ஒன்றாக்கும் படியாக. அந்த வேண்டு கோளினைத் தமிழ் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றா. அத்துடன் மிக்க அவதானமாகவும் இருக்கின்றா.
இது மட்டுமல்லாமல், தனது மகளும், தானும் சேர்ந்து எடுத்த படத்தினை ஏன் தமிழ் ஹோலினிலே தொங்க விட வேண்டும். அத்துடன், தமிழினைப் பார்க்கையிலே நீங்கள் சிறு வயதில் இருந்தது போன்று கன விஷயங்களில் ஒத்துப் போகின்றது என்று முத்தம்மாவும் சொன்னது எல்லாம் ஜனாம்மாவின் மூளையிலே ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்துடன், தமிழின் வீட்டினிலே இருக்கையிலும், அவளது சகோதரிகளுடன் இருக்கும் போதும், தமிழின் வீ்ட்டினிலே சாப்பிடும் போதும் உள்ள ஒற்றுமையினை உணர்ந்தவ ஜனாம்மா. ஆனாலொன்று, கழிப்பதற்கு ஒன்றும் இல்லை. மாறாக, எல்லாவற்றினையும் கூட்டிப் பார்ப்பா. எல்லாம் சேர்ந்து தன் குடும்பம் என்று முடிவு வரும். அது மட்டுமல்லாமல், கல்யாண நிகழ்ச்சியில் தமிழின் குடும்பம் தனது சொந்தங்கள் என்றும், அவர்கள் அனைவரும் என் குடும்பம் என்று சொல்வது ஜனாம்மா தானாகச் சொல்லவி்ல்லை. அவவினைத் தாண்டி அவவின் தசையே ஆடுவதனை அவவால் உணர முடிகின்றதா?
உங்களின் கருத்துக்கள் எவை என்பதனைச் சொல்லுங்கள்?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!