posted 10th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவின் ஆசைக்கெதிராக களத்தில் இறங்கியுள்ள இரண்டு முக்கிய எதிரிகள்.
- அம்மனின் சிலையினைத் தூக்கிக் கொண்டு மலைமேலுள்ள சிவனின் சிலையுடன் சேர்த்து வைத்து தோஷத்தினை அகற்ற தயாராகிப் புறப்பட்ட சிபீ.
- தனியாக வெளிக்கி்ட்டவனுக்கு எதிரியாக உள்ளது கணேஷன்தான். ஆனால், இரு எதிரிகளும் சிபீயை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், கணேஷன் தடையினை ஏற்படுத்துவான். பிறேம் அதனைத் தடுப்பான்.
- வெண்பாவைக் கேணியினுள் தள்ளிய கணேஷன் ஒரு ஆட்டம் ஆடப் போகின்றான் என்று சொன்னேன்தானே. அது நடைபெற்றது இங்கு.
- தமிழையும் ஜனாம்மா கோவிலுக்குக் கூட்டிச் சென்றுள்ளா. தமிழுக்கு எல்லாரையும் விட அந்தத் தெய்வம்தான் துணை.
- முள்ளு குத்திய கால்களுடன் அம்மனின் சிலையினைக் கீழே வைக்க முடியாத நிலையில் என்னென்று சிபீயால் அம்மனின் சிலையினைச் சிவனிடம் சேர்க்க முடியும்?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 10.10.2025
சிபீயோ அம்மனின் சிலையினை தூக்கிக் கொண்டு மலை உச்சியில் உள்ள சிவனின் சிலையுடன் சேர்ப்பதற்காக மலையேறினான். பலவிதமான தடங்கல்கள் இப்பயணத்தில் வரும் என்பது குருக்களின் எச்சரிக்கை. அனைவரும் பயந்தார்கள், ஜனாம்மா துணிவினைக் கொடுத்தா, மற்றவர்கள் அனைவரும் கும்பிட்டனர்.
அந்தச் சமயம் பார்த்து சிபீக்குத் தலை சுற்றியதால் கொஞ்சம் ஆடிப் போயினர். தமிழ் கும்பிட்டாள். சிபீக்குத் தலைச் சுற்று நிற்க வேண்டுமென்றா? அல்லது நல்லவிதமாக அம்மன் சிலையினை மலை உச்சி்க்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்றா?
அம்மன் சிலையினைக் கவனமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றுதான் வேண்டி இருப்பாள், தமிழ். ஏனென்றால் அவள் மனம் தூய்மையானது. நன்மையே மற்றவர்களுக்குச் செய்யும் மனமுடையவள் தமிழ்.
குடும்பமாகச் சேர்ந்து, ஒருமனப்பட்டு தங்களை எல்லாம் தாங்கும், தாங்கிக் கொண்டிருக்கும் ஜனாம்மாவிற்குத் துரோகங்களினைச் செய்யாமல், இந்தத் தோஷத்தினை எவ்வாறு போக்கலாம், இக் குடும்பத்தினை எவ்வாறு வளமாக்கலாம் என்ற சிந்தித்து, அதற்காக விரதம் இருந்து, இறைவனை வேண்டிக் கும்பிடுவதனை விட்டு, கோயிலினுள்ளே இருந்து கொண்டு கேடு கெட்ட வேலையினைச் செய்வதென்றால் தெய்வம் என்னென்றுதான் இவர்களைப் பொறுத்துக் கொள்ளும்? இவர்களைத் தெய்வம் வறுக்காமல் என்ன செய்யும்?
ஷியாமுக்கு சிபீயினைக் கல்யாணம் பண்ண வேண்டுமென்றால் அண்ணனாக எவ்வளவுதான் உதவிகளைச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு உயிர் கொடுத்து நிற்க வேண்டும், பிறேம். ஆனால், இவனோ, தமிழைப் பழி வாங்க வேண்டும், தன் தங்கை வாழ வேண்டும் என்று நல்ல மனம் இல்லாமல் இந்த விஷயத்தினைச் செய்யலாமா?
வெண்பாவிற்கு, அதுவும், ஒரு மகளை வைத்திருக்கும் கணேஷன் மற்றக் குடும்பத்திற்கு அநியாயங்களைச் மட்டும் செய்து விட்டு, ஜனாம்மாவின் மகன், பிரகாஷைப் படுக்கையில் போட்டுவிட்டு, எல்லாச் சொத்துக்களும் தனக்கு வேண்டும் என்று வெண்பாவை brain wash பண்ணி விட்டு அதற்காகவே இவன் வாழுகின்றான் என்றால் இது சரிப்பட்டு வருமா?
ஷியாமின் அண்ணன், தமிழ் சொத்துக்களை இழந்த நிலையில் அவளைக் கைவிட்டுச் சென்றுவிட்டுப் போனவன் இப்போது தமிழ் விரும்பிய, தமிழின் தாய் மாமன் தனது தங்கைக்கு கணவனாக வர வேண்டும் என்று என்னென்று எதிர்பார்க்கலாம், பிறேம்? இப்போ தமிழ் பிறேமிடம் சிக்கவில்லை. பிறேம்தான் தமிழிடம் சிக்கியுள்ளான்.
ஷியாமும், பிறேமும் நினைக்கின்றது மாதிரி சிபீ அவ்வளவுக்கு புத்தியில்லாமலுள்ளவன் என்றில்லை. அவனின் மனமானது இன்னமும் தமிழைத்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. ஷியாமை அல்ல. ஆனால் என்ன, அவனுக்கு ஒரு guiltyயான உணர்வுகள், அவன் கண்முன்னே நின்று தடை செய்து கொண்டிருக்கின்றன.
இப்போது சிபீக்குள்ள தோஷமானதை வைத்து செக் வைத்துள்ளது அம்மன். இப்போது ஆட்டம் ஆரம்பமாகி விட்டது.
சிபீ அம்மனின் சிலையினைத் தூக்கிக் கொண்டு மலை ஏறினான். இதில்வரும் துன்பங்களையும், சவால்களையும் அவனால் தனிய சமாளிக்க முடியாமல்தான் வரும். இதற்கிடையில் கணேஷனினதும், பிறேமுடையதுமான இடறல்கள். இதற்கெல்லாம் முகம் கொடுக்க இங்கு waiting இருக்கும் பெண்கள் தயாரா? யார் பிரச்சனைகளுக்குள்ளே சிக்கி சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிபீயைக் காப்பாற்றப் போகின்றார்கள்?
நிட்சயமாக ஷியாம் இந்தளவுக்கு risk எடுக்க விரும்ப மாட்டாள். அவள் சொகுசாக இருந்து கொண்டு ஒன்றும் அவளில் நோகாமல் எல்லாச் சொத்துக்களையும் அமத்துவதுதான் அவள் நோக்கமே தவிர, இப்படியெல்லாம், சமயப் பற்று, விரதம், உயிரைப் பணயம் வைக்கிறதென்றதெல்லாம், அவள் விரும்பாதவையாகும்.
ஆனால், வெண்பா, சிபீயைத் தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற துடிப்பினில் இறங்குவாள். இதற்கு அமுதாவும், கணேஷனும் உதவி செய்வார்கள். மகளுக்கு என்ன நடந்தாலும் இவர்களுக்குப் பரவாயில்லை. சொத்துக்கள் தங்கள் கைக்கு வந்தால் காணும் என்றுதான் இருப்பார்கள். சிபீ கிடைக்க மாட்டான் என்றதும் கோவில் கேணிக்குள்ளே தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுவதற்காகப் பாய்ந்தாள் என்று ஆடிய நாடகத்தைக் கூட சிபீ நம்பவில்லை. ஆனால், இவளால் ஒரு கட்டத்திற்கு மேல் போக முடியாது. இவளும் அந்தளவிற்கு உயிரைப் பணயம் வைக்கும் அளவிற்குத் துணிய மாட்டாள்.
ஆனால், தமிழ் இருக்கின்றாளே, இப்பவும் அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள். அமைதியாக இருப்பாள். ஏனென்றால், தமிழை சிபீ விரும்பவில்லைதானே! யாரையோ விரும்பும் சிபீயை அவன் விரும்புகிறவளே போய்க் காப்பாற்றட்டும் என்று கைவிட்டு விடுவாள்.
ஆனாலும், அவள் மனம் சிபீயின் கஷ்டத்தின் மேலேதான் இருக்கும். தமிழின் உடல்மட்டும்தான் இங்கு இருக்கும். ஆனால் அவளின் மனமோ சிபீயைச் சுற்றி சுற்றி நிற்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!