posted 16th February 2026
முதற்கண் நான் உங்களிடம் இந்தக் கிழமையின் serial review & analysisஇனை ஒன்றாகப் பதிவேற்றம் செய்வதற்கு மன்னிப்பைக் கேட்டுக் கொள்கின்றேன். அதற்கான காரணம் எனது இதயத்தில் ஏற்பட்ட சகவீனம் அதனால் நடைபெற்ற சத்திரசிகிச்சைதான் என்பதனைக் கூறிக் கொண்டு இந்தப் பதிவினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், பார்க்கவுள்ள அனைவருக்கும் நன்றியும் தெரிவித்து இதனைச் சமர்ப்பிக்கின்றேன்.
இன்றைய Serial Review & Analysisஆனது 10ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதிகள் வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 10 - 14.02.2026
பசி தாங்க முடியாத தமிழ், சிபீ கொண்டு வந்த சாப்பாடு அனைத்தையும் சாப்பிட்டு அமைதி கொண்டாள். ஆனால், சிபீயோ தனக்குப் பசி இல்லை என்று சொல்லித் தன்னை சமாளித்துக் கொண்டான். அதற்காக, சிபீக்குப் பசி இல்லை என்றில்லை. இப்படி சிபீ தன்னைத்தானே சமாளித்துக் கொள்ளவதென்பது, சிபீ தமிழின் மீதான சிபீக்குள்ள அன்பின் உச்சத்தினை பிரதிபலிக்கின்றதோ!
களைப்பின் மிகுதியால் துவண்டிருக்கின்றாள் தமிழ். அதுமட்டுமல்லாமல், புதைகுளியினுள் தாண்டு கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுக்கும் விசையினையும் எதிர்த்து, உயிருக்கே போராடிய தமிழுக்கு ஏற்பட்டுள்ள உள, உடல் களைப்பும் அவளை மேலும் வாட்டியது. எல்லாமே சேர்ந்ததுதான் தமிழுக்கான இந்த இயக்கமற்ற நிலைமை என்று மட்டும் கூறிவிட முடியாது.
களைப்பினில் அயருவதற்கோ இடமில்லாததினால் சிபீயால் அமைக்கப்பட்ட ஒரு குடிசையினிலே உறங்குவதற்காக உள்ளே சென்றவள், உடனே எழுந்தாள், சிபீயிடம் தமிழ் மீண்டும், மீண்டும் கேட்கும் அந்த ஒரேயொரு கேள்வியுடன். அந்தக் கேள்வியானது, சிபீ எப்போவாவது தன்னை ஒரு துளியாவது விரும்புகின்றானா என்றதுதான்.
தமிழும் மீண்டும், மீண்டும் தனது வெக்கத்தினை விட்டு சிபீயிடம் தன்னை சிபீ விரும்புகின்றானா என்று எல்லா பெண்களும் எதிர்பார்க்கும் கேள்வியினைத்தான் தமிழும் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்.
எப்போவாவது சிபீ தன்னை காதலிக்கின்றானா என்ற கேள்வியினை, சந்தேகத்தினை, சந்தோஷம் எப்போவாவது வராதா என்ற ஏக்கத்தினை அவள் கேள்வியாகக் கேட்டாள். ஆனால், சிபீயோ அடித்துச் சொல்லி விட்டான், தனக்கு தமிழ் மேலே ஒருவிதமான காதலும் இ்ல்லை என்று.
சிபீயின் பதில்தான் இப்போது தமிழை உடைந்து போக வைத்தது. இந்தப் பதிலானது, தமிழ் உயிருக்குப் போராடியதினை விட அதிகமாக வலித்தது தமிழுக்கு. மீண்டும் அந்தக் கொட்டிலினுள் படுத்து விட்டாள். அயர்ந்து விட்டாள் தமிழ். ஆனால், தமிழின் மேலே ஒருநாளும் காதல் வரவே இல்லை என்று சொன்ன சிபீ, தமிழைக் கட்டியணைத்தவனாகத் தூங்கி விட்டான்.
மறுநாள் விடிந்தது. கேடீயும், சேதுவும், தமிழும், சிபீயும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துத் தூங்கும் அழகினை எப்படித்தான் குளப்புவது என்ற மனமில்லாமல் நின்று கொண்டே இரசித்துக் கொண்டிருக்கையிலே, அங்கு கோவிலிலே ஜனாம்மாவும், குடும்பமும், கிராமத்தவரும் இவர்களைக் காணவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது கேடீக்கும், சேதுவுக்கும் ஞாபகத்திற்கு வந்தது. அன்பாகவும், அமைதியாகவும் இருவரையும் அவர்களின் துயிலிலிருந்து எழுப்பினார்கள்.
நித்திரையினை விட்டு எழும்பியதுதான் தாமதம், தமிழ் இவர்களை எல்லாம் விட்டு விட்டு ஓடோடிச் சென்றாள். என்ன இது? எங்கு ஓடுகி்றாள் தமிழ் என்று சிபீயும், கேடீயும், சேதுவும் பின்னால் ஓடினார்கள். தெய்வம், தமிழை இழுத்துக் கொண்டா செல்கின்றது? அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால், தமிழோ நேராகவே அந்த கொண்டைப்பூவினை நோக்கி ஓடிச் சென்றாள். அனைவரும் சேர்ந்து பறித்தார்கள், பூஜைக்குத் தேவையான பூக்களை.
ஆனால், கேடீயும், சேதுவும் காட்டுத் தேனை அங்கேயே கண்டு கொண்டார்கள்.
தமிழையும், சிபீயையும் தேடிக் கொண்டிருந்த பொலிஸ் குழாம் இவர்களைக் கண்டதும் அழைத்துச் சென்றார்கள். ஆனால், கேடீயும், சேதுவும் காட்டுத் தேனுடன் இவர்களின் பின் தொடர்ந்தார்கள்.
தெய்வத்திற்குத் தேவையான கொண்டைப் பூவும், காட்டுத் தேனும் படைக்கப்பட்டதினால் பூஜையும் ஆரம்பமாகியது. இனிதே நடைபெற்று முடிந்த பூஜையி்ன் முடிவினலே, பூசாரி, தெய்வத்தின் சூலத்தினை சிபீயின் கையினில் கொடுக்க முனைகையிலே, சிபீ தமிழையும் தன்னுடனே அழைத்து அந்த சூலாயுதத்தினை இருவருமாக சேர்ந்து பூசாரியிடமிருந்து வாங்கினார்கள். அனைவரின் முகத்திலும், அகத்திலும் சந்தோஷம் தழைத்தது. ஆனால், கணேஷனின் குடும்பத்தவருக்கும், சம்யூத்தா, பிறேம் ஆகியோரில் அகத்தில் இருந்த பொறாமையின் தோற்றம் முகத்தினில் பொரிந்ததும் தெரிந்தது.
கோபத்திற்காளான ஜனாம்மாவின் தோறணையோ யார் தமிழைக் கொல்வதற்காக முயற்சித்தார்கள் என்பதுதுதான். இந்த விஷயத்தில் முக்கிய பாதகி, வெண்பாதான் என்பது தெரிந்ததே!
ஆனால், ஆரம்ப நிலையில், வெண்பாவின் குணாதிசியம் எல்லாம் நீறு பூத்த தணலாக இருந்ததினைத்தான் கண்டு வியக்க வேண்டியதாகி உள்ளது. எதிர்பார்க்க முடியாத மாற்றமாக அதுவும் இருந்தது.
சிறுவயதிலிருந்தே சிபீ அவளுக்கென்று அவளின் பெற்றோரால் ஒழுங்கு படுத்தப்பட்டவள்தான் வெண்பா. ஆனால், சிபீ கிடைக்கவில்லை என்றதும் அவளுள் இருந்த அரக்கத்தனம் இப்போது வெறிபிடித்து தாண்டவம் ஆடத் தொடங்கியது.
இப்போது வெண்பாவின் நினைவோ, சம்யூத்தாவைக் கலைப்பது – அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை அவளுக்கு. அடுத்தது, தமிழுக்கு ஒரு முடிவு கட்டுவதுதான். ஆனால், இலகுவாகத் தமிழை அவளால் வெல்ல முடியாது என்று வெண்பாவிற்குத் தெரியும். எனவேதான், தமிழைப் போட்டுத் தள்ள வேண்டுமென்று முடிவு செய்துள்ளாள். இதற்காகத்தான் தமிழை அந்தக் குழியினுள் ஒருவரும் இல்லாத நிலையினை உணர்ந்தவளாய்த் தள்ளி விட்டாள். ஒருவரும் தமிழைக் காப்பாற்ற வரமாட்டார்கள், அப்படியே கிடந்து அழுது குளறிச் செத்துப் போகட்டும் என்பதுதான் வெண்பாவின் திட்டமே!
ஜனாம்மாவின் கோபத்தினை சிபீ குறைத்துக் கொண்டிருகையிலே, வெண்பா இடைமறித்தாள். அதாவது, பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்று தடுத்தாள். இதற்கு இரண்டு காரணங்களாக இருப்பவை, ஒன்று, பொலிஸின் முறைப்பாட்டினால் பொலிஸ் எடுக்கும் நடவடிக்கைகளினால் தான் மாட்டிக் கொள்ளச் சந்தர்ப்பம் உண்டு என்பதால், இரண்டாவது, சம்யூத்தாவைக் கலைப்பதற்காக இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தினாள். அதாவது, சம்யூத்தாதான் தமிழை கொல்ல முயற்சி செய்தது என்று அழுத்தமாகச் சொன்னாள். இதனால், எல்லாருடைய நினைவுகளும் சம்யூத்தாவின் மேலே போனது.
ஆனால், தமிழின் ஆதங்கத்தினை விளங்கிக் கொண்ட சிபீ சம்யூத்தாவிடம் தமிழைக் கொல்லுவதற்கு முயற்சித்தமையினை மிகவும் ஆக்றோஷமாகக் கேட்டான். ஆனால், சம்யூத்தா சத்தியம் பண்ணினதினை விட்டாலும், அவளின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், கேடீ, சம்யூத்தாவும், பிறேமும் தாங்கள் தமிழைக் கொல்ல நினைக்கவில்லை என்று கதைத்துக் கொண்டிருந்ததை கேட்டு அதனை சிபீயிடம் சொன்னதினால், சிபீ சம்யூத்தாவிற்கு தமிழைக் கொல்வதில் சம்பந்தமில்லை என்று சிந்திக்கலானான்.
அடுத்த சந்தேகமோ சிபீக்கு கணேஷனின் மேலேதான். கணேஷன் தமிழைக் கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என்று நினைத்தாலும், சிபீ, தனது தகப்பன், பிரகாஷை, கணேஷன்தான் கொலை செய்த முயற்சி செய்தமையினால்தான் இந்த 20வது வருட காலங்கள் தனது அறிவினை இழந்து, அசைவுகளின்றி ஒரே படுக்கையாய் கட்டிலில் கிடப்பதனைத் தெரியாமல், கணேஷன் மாமாவோ தமிழைக் கொலை செய்ய முயற்சி செய்யதிருக்க மாட்டான் என்று சிபீ எடுத்த முடிவானது பிழையாக நினைக்கத் தோன்றுகின்றது.
ஆனால், இப்போது பிரகாஷ் அறிவு தெளிந்துள்ளார், சுகமாகி விட்டார் என்று இன்னமும் ஒருவருக்கும் தெரியப்படுத்தப்படாத நிலையானது இருக்கும் மட்டும்தான், கணேஷனின் ஆட்டமும், அவனது அடக்கமும் அடக்கமாகமே இருக்கும் என்பதும் புலனாகின்றது.
அப்படியென்றால், யார் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட சூத்திரதாரி என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கின்றது?
ஆனால், வெண்பாவோ, ஒருநாள், தமிழும், தேனுவும் கதைத்துக் கொண்டிருந்ததினை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றதனைத் தமிழும், தேனுவும் கண்டு பிடித்திருந்தாலும், இங்கு, ஜனாம்மாவும், சிபீயும் என்ன பேசிக் கொள்கின்றார்கள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்டிருந்த வெண்பாவை ஒருவரும் கண்டு பிடிக்கவில்லையே. ஆனால், தமிழோ இதனைப் பற்றி ஒன்றும் சிந்திக்காமல் இருப்பதற்கு அவளின் மனமானது மிகவும் பாரமாக இருக்கின்றபடியினால் அவளால் மற்ற ஒன்றையும் சிந்திக்கவோ, ஆராயவோ அவளால் முடியவில்லை.
தமிழுடன் சிபீ தாங்கள் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைவரின் முன்னாலும் தாங்கள் கணவன் மனைவியாகத்தான் வாழுகின்றோம் என்று ஜனாம்மாவின் நலனுக்காக நடித்தாலும், இவர்களது நடிப்பானது மிகவும் அதிகமாக இருப்பது போன்று தெரிகின்றது.
இதனால், தமிழினதும், சிபீயினதும் இடையிலான உறவினில் சந்தேகப்பட்டான் கணேஷன். இப்படி நடிப்பவர்களுக்கு ஏன் ஜனாம்மா ஒழுங்குபடுத்தும் சுமங்கலிப் பூஜை தேவை என்பது அவனது கேள்வியாக இருப்பதுமல்லாமல், தனது தங்கையான மீனாவிடம் இந்த வேலையெல்லாம் செய்வது வீண் என்றமாதிரி சொல்கையில், அதனை மீனாவோ உதாசீனம் செய்து விலகிச் சென்றது கணேஷனுக்கும், அமுதாவுக்கும் வெறுப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது.
தமிழும், சிபீயும் நடிக்கின்றார்கள் என்று தெரிந்தவுடன், சம்யூத்தா, சிபீயினை ஒரு புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜப்பான் றெஸ்ரோரன்ருக்கு (restaurant) சாப்பிடுவதற்காக அழைக்கின்றாள். இப்பவும் சம்யூத்தா தனது செலவினில் அல்ல. அதுவும் சிபீதான் செலவழிக்க வேண்டும். சம்யூத்தாவோ ஒரு ஒட்டுண்ணியாகவே ஜனாம்மாவின் வீட்டினுள் உள்ளாள். இத்துடன், ஒரு உணர்வுகளும் இல்லாமலும், வெட்கமுமில்லாமலும் ஜனாம்மாவின் வீட்டினிலே இருக்கும் சம்யூத்தா, தமிழுடன் மரியாதை இல்லாத வார்த்தைகளைக் கொட்டுவதனை, தமிழும் ஏன் பொறுத்துக் கொண்டிருக்கின்றாள் என்றால், அதற்கு தமிழின் மரியாதையான அடக்கமான குணமா அல்லது அவசரமற்ற யுக்தியா? ஆனால், சம்யூத்தா ஒரு லிமிற்றுக்கு மேலே போய்க் கொண்டிருப்பதனை தமிழும் உணராமலில்லை.
சம்யூத்தாவுடன் சிபீ றெஸ்ரோறன்றுக்கு (restaurant) வருகின்றேன் என்று சொன்னாலும், சிபீயோ தமிழினை ஜனாம்மாவைச் சாட்டாக வைத்து அவளை தன்னுடன் வரும்படிக் கூப்பிடுகின்றான். எல்லா bookingகளையும் ஏற்கனவே சிபீ செய்தும் விட்டான். ஆனால், தமிழோ அதற்கு சம்மதம் சொல்லவில்லை. இதனைப் பொறுக்காத கேடீ, இந்த விஷயத்தினை ஜனாம்மாவிடம் சொல்ல, அவர்கள் ஒரு திட்டத்தினைப் போட்டு இந்த programmeயே எப்படிக் குளப்பலாம் என்று வழி வகுத்தார்கள்.
இதனை விளங்கியே கொள்ளாத சம்யூத்தா, கேடீ சொன்னதினையும் நம்பியதுமல்லாமல், அல்ககோல் கலந்த ஜூஸையும் குடித்தாள். மதுவினில் பழக்கப்பட்ட சம்யூத்தாவிற்கு அல்ககோல் கொஞ்சம் மெதுவாகத்தான் வேலையினைக் காட்டியது. கேடீயோ, சம்யூத்தாவிடம், சிபீக்கும், தமிழுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவினை, அதுவும் இல்லாததொன்றினை உண்மையின் வடிவத்தில் சொன்னதையும் நம்பியவளாய், அதனை அனைவர் முன்னாலும் நாகரீகமில்லாமல் சம்யூத்தா கேட்டாள்.
அதுமட்டுமல்லாமல், தமிழை, தனது அண்ணன் பிறேமுடனான திருமண ஒப்பந்தத்தினை, தாங்கள்தான், தமிழின் சொத்தெல்லாவற்றினையும் திட்டமிட்டு இழக்க வைத்தவர்கள் என்பதனை மறைத்து, அசிங்கமாக சொல்லத் தொடங்கினாள்.
அதாவது, தனது அண்ணனிடம் பணம் கூடவாக இருந்தால் எப்படியாகத் தமிழ் நடந்திருப்பாள் என்று கேவலமாகச் சொன்னதினையிட்டு கோபம் கொண்டான் சிபீ. இதனால், அனைவரின் முன்னாலும், தமிழைத் தனது மனைவியைப் பற்றி குறை கூறும் அளவிற்கு நீ எந்த விதத்திலே உயர்த்தி என்று அடக்கினான், சம்யூத்தாவை.
அதுமட்டுமல்லாமல், சம்யூத்தாவிற்கு கொடுத்த மன்னிப்புகளையெல்லாம் சம்யூத்தா எல்லை தாண்டி விட்டாள் என்பதனால், சம்யூத்தாவை இழுத்துக் கொண்டு போய் வெளி கேற்றினை பூட்டியதுமல்லாமல், இதே போலத்தான் இங்குள்ள எவருக்கும் நடக்கும் என்று அனைவரையும் எச்சரித்தான்.
இதில் அடுத்ததாக உள்ளது யார் வெளியில் துரத்தப்படப் போகின்றார்கள்? கணேஷனா? வெண்பாவா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!