Varisu - வாரிசு - 08.10.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • தமிழினைத் தனிமையாகச் சந்தித்த சிபீ. நீ ஏன் ஒன்றுமே சொல்லவில்லை ஜனூ உன்னைச் சொல்லுகையிலே? இதன் அரத்தம்தான் என்ன?
  • ஜனாம்மா, தனது முடிவினில் மாற்றம் இல்லை என்பதும், அவ நினைத்ததற்கு இறைவன் தனக்குக் கொடுத்த வாக்கு என்றும் சொல்வதாகக் கூறுவது என்பது, நல்லவர்களிடம் அந்த இறைவனே இறங்கி வருவது என்றுதான் சொல்ல முடியும்.
  • ஜனாம்மா சொல்வது போல சிபீ வீம்பிற்குத்தான் தான் சமூத்தாவை கல்யாணம் பண்ணப் போகின்றேன் என்பது.
  • சாதகம் பார்க்கையிலே சாமி விளக்கு அணைகின்றது. அது ஒரு கெட்ட சகுனம் என்பதனைக் குறிக்கின்றது. ஆனால், இதனைக் கவனித்த தமிழ் உடனே சென்று சாமி விளக்கினை ஏற்றி வைப்பதையும், அதனை சாஸ்திரி குறிப்பிட்டதனையும், ஜனாம்மா அவதானித்ததையும் இங்கு குறிப்பிடலாம்.
  • சாமி உண்டியலில் போட்டது போன்றாயிற்று அமுதாவும், சமூத்தாவும் சாஸ்த்திரியிடம் கொடுத்த பணம்.
  • திறந்த வீட்டினுள் ஏதேதோ புகுந்தது என்று சொல்லுவார்களே. அதே போல தமிழை உதறிவிட்டுச் சென்ற சமூத்தாவின் அண்ணனை ஜனாம்மாவின் வீட்டினுள் அழைத்த சமூத்தா. வாழ்க்கைக்கு கெடுதி செய்ய நினைத்து தன் தலையிலே மண்ணை வாரிப் போட்ட சமூத்தா.
  • என்ன நடக்குமோ என்று தமிழைப் பற்றி ஏங்கித் தவிக்கும் அம்மு.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

வாரிசு - Varisu - 08.10.2025

காலை விடிந்தது, எப்போ விடியும் என்று காத்திருந்தது போல தமிழைத் தனிமையாகச் சந்தித்தான் சிபீ. அவனின் மனதினில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியினைக் கேட்டான். ஜானு தனது கல்யாணத்தைப் பற்றி கதைக்கையிலே, தன்னிடம் யாரை நீ கல்யாணம் பண்ணப் போகின்றாய் சிபீ என்றதற்கு, நான் சமூத்தாவைத்தான் என்று கூறியும், ஜானு ஏன் தமிழைத்தான் நீ கல்யாணம் பண்ண வேண்டும் என்று உறுதியாகவும், ஆணித்தரமாகவும் சொல்லுகையில் தமிழ் ஏன் அமைதியாக இருந்தாள் என்பதுதான்.
அதனை ஏன் தமிழிடம் கேட்க வேண்டும்? ஜனாம்மா தனது அபிப்பராயத்தினைச் சொல்லுகின்றா, அதற்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லையே! அது ஜனாம்மாவின் விருப்பம். ஆனால், இதற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் என்ன, யாரையோ கல்யாணம் பண்ண உள்ள ஒருவனிடம் தனக்கு மாப்பிள்ளையாக வா என்று அவள் மற்றவர்கள் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டா திரிகின்றா என்றா சிபீ நினைக்கின்றான். அதுமட்டுமல்லாமல், மாப்பிள்ளை வா வா என்று ஓலம் போட்டுக் கொண்டா திரிகின்றா தமிழ். தமிழைப் பற்றி என்னதான் நினைக்கின்றான் சிபீ?

உனக்கு சமூத்தாதான் வேண்டும் என்றால், அதுவும் நீ ஒரு major என்று தெரியுதுதானே, கல்யாணம் பண்ணிக் கொண்டு போக வேண்டியதுதானே என்று தமிழ் கேட்பதில் நியாயம் இருக்கின்றதுதானே! ஏன் சிபீக்கு தமிழின் opinion தேவைப்படுகின்றது.

அது மட்டுமல்லாமல், ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்குத்தான் சிபீ வேலை செய்து கொண்டிருக்கும் போது சமூத்தா குளிர்பானம் கொண்டுவந்து கொடுப்பதும், அது கொடுக்கும் விதமும், அதுவும் வீட்டில் மற்றவர்களும் இருக்கையிலே அச் செய்கையானது மிகவும் uglyயாக இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சாஸ்திரி அவர்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கையிலே, தமிழரசியின் ஜாதகத்தினை எவ்வாறு ஜனாம்மா அவர்களிடம் கொடுத்தாவோ அதே மாதிரி அமுதாவும், சமூத்தாவும் கொடுத்திருந்தால் அந்த விளக்கு அணைந்திருக்காது. அந்த சாமி விளக்கு அணைந்தது ஒரு அபசகுனமாக எமது மக்களிடம் உள்ள ஒரு ஆணித்தரமான நம்பிக்கை. இதனை, வெண்பாவும் கவனிக்கவில்லை, சமூத்தாவும் அவதானிக்கவில்லை. அவர்களுக்கு கல்யாணம் சிபீயுடன் வேண்டும் என்ற ஒருவிதமான ஓர்ம வெறியுடன் இருந்தார்களே தவிர இந்த அறிகுறியினை நிவர்த்தி செய்ய ஒருதரும் நினைக்கவில்லை. நினைக்கமாட்டார்கள். அவர்களின் குறி வாழ்க்கையில் இல்லையே! சொத்தில்தானே!

சிபீயினதும், தமிழினதும் ஜாதகப் பொருத்தமானது அமோர்கமாக இருந்ததனைக் குறிப்பிட்ட சாஸ்த்திரி அவர்கள், சீக்கிரம் மற்ற ஒழுக்குகளைப் பாருங்கள் என்று கூறிவிட்டு ஆசி வேண்டிச் சென்றார். இதனை ஒருதரும் எதிர்பார்க்கவில்லை.

இதைவிட, சமூத்தாவிற்கு சிபீ தன்னை அசட்டை செய்து போனதையிட்டு கோபம் கொண்டவளாய் தனது அண்ணனை ஜனாம்மா வீட்டிற்கு வரவளைத்தாள். இதுதான் இவள் குணம். இதைத் தன்னும் சிபீ விளங்கிக் கொள்வானா? விளங்குவதற்கு வாய்பேயில்லை. அவனும் இங்கு வந்துவிட்டு போய்விடுவானா அல்லது ஜாலாரா போட இங்கு வருகின்றானோ தெரியவில்லை. ஜனாம்மா வீடு ஒரு சத்திரம் என்றுதானே வாறவன் போறவன் எல்லாம் நினைக்கின்றார்கள்.

நீங்கள் நல்லவர்களாக இருந்தால் போதும், யார் யாரோவெல்லாம் உள்ளே வந்து நாட்டாமை காட்டுவார்கள். இங்கும் அதுதான் நடக்கப் போகின்றது. தமிழைக் கொடுமைப் படுத்தத்தான் சமூத்தா தனது அண்ணனை இங்கு அழைப்பித்தா. ஆனால், இது ஒரு நல்ல moveஆக இருக்க வாய்ப்பேயில்லை. இவரின் கதைகளைப் பார்த்தால் இவரின் பங்கு கொஞ்சம் கூடவாகத்தான் இருக்கும் என்பது எனது ஊகம்.

சமூத்தாவின் அண்ணன் வந்ததும், வராததுமாக தமிழிலோ அல்லது அவர்களின் குடும்பத்திலோ கை வைப்பான் அல்லது வாய் வைப்பான் என்றும் தோன்றுகின்றது. இதனால், சிபீ தமிழின் குடும்பத்தின் பக்கம் நிற்பான். சமூத்தாவின் வீழ்ச்சியாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

தமிழின் ஆணித்தரமான கதையினால் குழம்பிப் போன அம்முவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் குளம்பிப் போயியருந்தா. தமிழுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் சிபீ தமிழின் வீட்டினுள் வராமல் இருக்கையிலே, சமூத்தாவின் அண்ணனின் வரவானது சிபீயை தமிழின் வீட்டினுள் வர வைக்க சந்தர்பங்கள் அதிகமாக உண்டு.

ஷியாமின் உண்மையான, சுய ரூபத்தினை வெளிக்காட்டும் நேரம் வந்தாச்சு.
தமிழின் பழைய கதையானது சமூத்தாவின் அண்ணன் உருவத்தில் வெளியில் வரும். ஜனாம்மா, என்னவாக இருந்தாலும் அம்முவைப் பெத்தவ, அவவின் அம்மா. அம்முவுக்கும், ஜனாம்மாவிற்கும் இடையிலான பிரச்சனை அவர்கள் வீட்டுப் பிரச்சனை, அதாவது, தாய் – பிள்ளை பிரச்சனை. இவர்களுக்கிடையில் புகுந்து விளையாட மூன்றாம் ஆளான சமூத்தாவோ அல்லது அவளின் அண்ணனோ யாரு.

சமூத்தாவின் கணிப்பு பிழைக்கப் போகின்றது. அதாவது, தமிழின் குடும்பத்தினை இந்த விஷயத்தினை ஊதிப் பெருப்பித்து விடுவோம் என்று பத்த வைக்கையிலே, அம்முவின் மகள்தான் தமிழ் என்று தெரிந்துவிடும் ஜனாம்மாவிற்கு. ஒன்றுமே தெரியாமலும், யாரென்று தெரியாமல் இருக்கையிலே, தமிழின் குடும்பத்தினை தன் குடும்பம் என்று ஏற்றுக் கொண்ட ஜனாம்மா, இப்போ உண்மையாக தமிழின் குடும்பம் தனது குடும்பம் என்றானதும், சிபீயிடம் சொல்லியே ஷியாமையும், அவளின் அண்ணனையும் அடித்து விரட்டுவா ஜனாம்மா. இதற்கிடையில், சமூத்தாவினதும் அவளது அண்ணினினதும் றௌடிகளின் அட்டகாசமும் இங்கு பரவலாகும்.

இது நடக்கும்.

ஷியாமினதும், அவள் அண்ணனின் கதை கந்தலாகப் போகப் போகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00