posted 6th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீ சமூத்தாவைத்தான் கல்யாணம் பண்ணப் போறேன் என்று தனது விருப்பத்தினைச் சொன்னான். அதனை எல்லாரும் எதிர்த்து நின்றார்கள். ஆனால், ஜனாம்மாவின் எதிர்ப்பு வேறு.
- எவ்வளவோ அன்பினைக் கொட்டத் தொடங்கினாள் தமிழ் சிபீயின் மேலே. அதனை பொய் என்று நிரூபித்தான் சிபீ. காதல் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன என்று இன்னமும் அறியும் அளவுக்கு சிபீக்கு maturity காணாது.
- ஜனாம்மாவை கல்யாண விஷயத்தில் எதிர்த்து நிற்கின்றான் சிபீ. சமூத்தாவின் குள்ள மனத்தினை அறியாமல், அவள் நல்லவள் என்று certificate வேறு கொடுக்கும் சிபீ.
- கூட இருந்து பாதாளத்தினை ஏற்கனவே கிண்டி வைத்திருக்கும் சமூத்தா.
- குடித்து வெறித்துக்கொண்டு திரியும் சமூத்தாவிற்கு குடும்ப வாழ்க்கை எதற்கு? இது ஜனாம்மாவின் கணிப்பு.
- தனது பிரதியாக இருப்பவளால்தான் இந்தக் குடும்பத்தினைக் காப்பாற்ற முடியும். இதற்குரியவள் தமிழ் மட்டும்தான் என்று எல்லாருக்கும் declare பண்ணிய ஜனாம்மா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 06.10.2025
சமூத்தாவைக் கல்யாணம் பண்ணுவதற்குரிய காரணங்களாக, சிபீயின் Ego, அடுத்தது, தமிழைத் தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியலைந்தது, அதுமட்டுமல்லாமல், சமூத்தாவின் ideaவானது சொத்து உனக்குக் கிடைக்கும் மட்டும் கல்யாணம் பண்ணியிருப்போம் அதன்பின்பு mutual divorce செய்து விடுவோம் என்ற குள்ளத்தனமான யுக்தியினை அறியாதவனாகவும் ஆனால், தமிழிடமிருந்து தப்புவதற்கு இது நல்ல வழி என்பதனாலும், தமிழ் தன்னை இவ்வளவு deepபாக லவ் பண்ணுகின்றாள் என்று தமிழின் வாயாலும், அவளின் உள்ளத்தினாலும் express பண்ணுகையிலே சிபீக்கு தமிழின் காதலானது விளங்கியதும், தான் தமிழுக்கு அநியாயம் செய்து விட்டனே என்ற ஒரு guilty உணர்வுகள் எல்லாமே சேர்ந்துதான், தமிழை reject பண்ணிக் கொண்டு, வீம்பிற்கே சமூத்தாவைக் கல்யாணம் பண்ண முடிவெடுத்தான் சிபீ.
சிபீயின் இந்த முடிவானது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது. அதனை ஒருவரும் எதிர்பார்க்காததொன்றாகும். இதனால், அவரவர், தங்களது அபிப்பிராயங்களை மிகவும் ஆதங்கத்தில் கதைத்தார்கள், கோபப்பட்டார்கள், மனவருத்தம் கொண்டார்கள். சமூத்தாவின் மீதான negative pointsகளை ஒவ்வொருவராகக் கதைத்தார்கள். வர்ஷினியைக் கூட்டிக் கொண்டு clubக்குப் போனவளைத் தொலைத்தவளாய் எந்த விதமான அக்கறை ஒன்றும் இல்லாமல் சமூத்தா சொன்ன பதில், மது அருந்தி விட்டு அந்த ராத்திரியில் வந்தது, சிபீயின் காசினை எவ்வாறெல்லாம் சமூத்தா செலவு செய்தாள் என்றதெல்லாம் ஜனாம்மாவிற்கும் அந்த குடும்பத்தினருக்கும் தெரியாதா என்ன? எல்லாவற்றினையும் ஆராய்ந்தறிந்துள்ள ஜனாம்மா, தமிழ்தான் சிபீ உனக்குப் பொருத்தம் என்று தமிழைக் கை காட்டினா ஜனாம்மா.
சிபீக்கு வாழ்க்கை என்பதனையும், மற்றவர்களின் மனதினில் என்ன ஓடுகிறதென்று ஒன்றும் தெரியாமல், குடித்துக் கும்மாளம் அடிப்பவனுக்கும், அதேமாதிரி characterருடன் வரும் பெண் ஒருத்தி என்னென்று குடும்பம் நடத்துவதற்கு, அதுவும் பண்பாடுகளை முக்கியமாக கொண்ட ஜனாம்மாவின் வீட்டினுளே நுளைய முடியும்? இந்தக் கல்யாணத்தினால் ஜனாம்மாவின் குடும்பம் நாசமாகப் போகும் அபாயம் உள்ளது என்று சிபீ உழைத்திருந்தால்தானே தெரிவதற்கு?
கல்யாணம், கல்யாணம் என்றும், அத்தான், அத்தான் என்றும் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் ஒரு சாம்ராஜ்ஜத்தினைக் கொண்டு நடத்த முடிந்திருமா? அல்லது காப்பாற்றத்தான் முடிந்திடுமா? ஆசை இருக்கத்தான் வேண்டும், ஆனால், ஒருவிதமான குறிக்கோளில்லாமல் இருக்க முடியாது. கல்யாணம் பண்ண வேண்டும், பிள்ளைகள் பெத்துக்க வேண்டும் என்று மட்டும் இருந்தால் குடும்பம் விளங்கின மாதிரித்தான். இது யாரைக் குறிப்பிடுகின்றேன் என்று உங்களுக்கு புரிந்திருக்குமென்று நினைக்கினை்றேன்.
ஜனாம்மா றோட்டு றோட்டாகத் தலையினிலே இட்லிக் கூடையினைத் தூக்கிக் கொண்டு விற்று வந்த லாபத்தினைப் பெருக்கி சதம் சதமாகச் சேர்த்ததுதான் இந்த சாம்ராஜம். புகழ், பெருமை, கௌரவம் எல்லாமே. இப்போ வந்தவர்களுக்கு எங்கே இந்த உணர்வு வரும்? காசிருக்கு இஷ்டத்திற்கு செலவு செய்யலாம் என்று வாழுகையில், உழைத்தவளுக்குத்தானே அந்த வலி தெரியும். பணத்தின் அருமையும் புரியும்.
கணேஷனோ சொத்து முழுவதையும் அமத்துவதற்கு அந்த நாளிலிருந்து ஒவ்வொரு முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றான். கெட்டவரின் சகாவாசம். குள்ளப் புத்தியைக் கொண்டு தந்திரமான வேலைகள். இதைத் தவிர ஏதாவது ஆக்க பூர்வமான வேலையினை ஜனாம்மாவிற்குச் செய்திருப்பானா கணேஷன்? இவனுடன் சேர்ந்து அவன் மனைவி. ஒன்றுமே விளக்கமில்லாத மகள். நல்ல குடும்பந்தான். வாழ்க்கை விளங்கிடும். அதுமட்டுமா, சிபீக்கும் ஒரு விளக்கமும் இல்லை வாழ்க்கையினைப் பற்றி. ஒன்றுமே விளக்கமில்லாத உலகத்தில் வாழும் வெண்பா.
தமிழின் அருமை தெரியாதவனாகவும், அவளின் உள்ளத்தினை உணரும் அளவிற்கு அறிவில்லாதவனாகவும், கஷ்டம் என்றால் என்ன? காசு என்றால் அதன் மதிப்பு என்ன என்ற ஒரு உணர்வுமில்லாதவன்தான் சிபீ. இவனுக்கு உணர்வு என்ற விளக்கம் இருந்திருந்தால், ஜனாம்மாவின் கூடையினை ஏன் தமிழ் கட்டிப்பிடித்தாள், சிபீயின் மூர்க்கக் குணத்திலிருந்து ஏன் காப்பாற்றினாள் என்ற ஒரு senseஉம் இல்லாமல் எல்லாவற்றையும் அடித்துடைத்த கோபம் யார் மேலே? நீ உடைத்தது உனது சொத்தா? உனது சம்பாத்தியத்தில் வாங்கினதா? இதனை வீட்டிலிருந்த யாராவது தடுத்தார்களா, தமிழைத் தவிர? இதிலிருந்து தெரிகின்றது ஜனாம்மாவின் சொத்தில் இவர்களுக்குள்ள பொறுப்பானது.
அத்துடன் ஜனாம்மா எடுக்கும் முடிவுகளில் ஒருநாளும் பிழையிருபக்கவில்லை. இந்த கல்யாண முடிவும் அதேமாதிரித்தான் இருக்கும். உங்கள் கருத்துத்தான் என்ன என்று சொல்லுங்களேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!