posted 9th November 2025
இன்றைய Serial Review & Analysisஆனது 05ஆம், 06ஆம் திகதிகள் அடங்கலாக உள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சம்யூத்தாவின் குடும்பம், சம்யூத்தாவிற்கு கொடுத்தது அசல் 50 பவுண் என்றில்லாமல் டுப்பிளிக்கேற் என்று கண்டு பிடித்த மாறன்.
- ஜனாம்மாவிடம் வசதியில்லை என்று உண்மையினை ஒப்புக்க கொண்டதுமல்லாமல் மன்னிப்புக் கேட்கும் சம்யூத்தாவின் பெற்றார். ஆனால், சம்யூத்தா இப்பவும் பொய் சொல்லுகின்றாள், அதாவது தனக்கு இதொன்றும் தெரியாது என்று. ஏனென்றால், அவளுடைய குறிக்கோளே முழுச் சொத்தினையும் தனதாக்க வேண்டும், கணேஷன் – அமுதா போல.
- ஆனால், தமிழ் இது வரைக்கும் எந்த சொத்தினைப் பற்றியும் கதைக்கவே இல்லை. ஏனென்றால், தமிழ் எல்லாவற்றினையும் ஆண்டு அனுபவித்தவளாச்சே!
- தங்களது குடும்ப வழக்கப்படி தாங்கள் என்னென்ன பெண்ணுக்குக் கொடுக்கின்றோம் என்று சபையில் சொல்வதன் படி, தங்களாலானது 50 பவுண் நகைகள்தான் என்றார்கள். ஆனால், இப்படி ஏமாத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இதே பெரிய பிழையாக இருக்கையிலே, அமுதாவும் மேலும் பிரச்சனையாக இதனைக் கிளறிவிட்டா.
- கணேஷன் களவெடுத்து ஒளித்து வைத்த வைர நெக்லஸினை அங்கு வேலை செய்பவர்கள் மூவராகக் களவெடுத்தனர்.
- மாறனும், வீராவும், தமிழும் இதனைக் கண்டு பிடித்தார்கள். இதற்கு முக்கிய காரணம் தமிழ்தான் என்றும், இதனைக் கண்டு பிடித்தவள் தமிழ் என்பதனால், அந்த வைர நெக்லஸானது தமிழுக்குத்தான் போய்ச் சேர வேண்டும் என்று ஜனாம்மாவின் வாக்கிற்காகக் கேட்டுக் கொண்டாள், வீரா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 05 - 06.11.2025
வைர நெக்லஸும் கிடைத்தது. கண்டு பிடித்ததற்கு முக்கிய காரணம் தமிழ். கண்டு பிடித்த குளாம், தமிழ், வீரா, மாறன். ஆகவே ஜனாம்மா சொன்னது போன்று, ஜனாம்மா கூறிய வாக்கின்படி கேட்பது தருவேன் என்று கூறியதற்கிணங்க, வீராவின் வேண்டுகோள், வைர நெக்லஸினைக் கண்டுபிடித்த தமிழுக்கே இந்த வைர நெக்லஸானது சேர வேண்டும் என்பதுதான். ஜனாம்மாவின் வாக்கு காப்பாற்றப்படும். ஆனால், இதற்கு சம்யூத்தாவின் பக்கமிருந்தும், கணேஷன் பக்கமிருந்தும் பலமான எதிர்ப்புகள் வர சந்தர்ப்பங்கள் உண்டு.
உண்மையினைச் சொல்வதுமல்லாமல், பொய்யும், பிரட்டும்தான் சம்யூத்தாவின் குடும்பத்தின் சொத்தாகும். கவறிங் நகைகள் கூட இவர்களுக்கு உரியதல்லவே! அதுவும் வாடகைக்கு எடுத்தவைதான். வாடகைக் காசுதான் இவர்களுக்குச் செலவு. இந்தச் செலவிற்கான பணத்தையும் வட்டிக்கு எடுத்தார்களோ தெரியாது.
பிறேம் முதன் முதலாக ஜனாம்மாவின் வீட்டிற்கு வருகையிலே கோட்டு சூட்டுடனும் காரில் வந்து கெத்தாக இறங்கியதில் இப்போது சந்தேகம் வருகின்றது. சூட்டும், காரும் வாடகைக்கு பிறேம் எடுத்துக் கொண்டு வந்தானோ என்ற ஐமிச்சமாதான்.
இப்படியான குடும்பத்தின் விபரங்களை நான் ஏற்கனவே கூறியதெல்லாம் சரியென்றே சொல்லலாம்.
இத்தனைக்கும், சம்யூத்தாவின் தகப்பன் சம்யூத்தாவிற்கு 50 பவுண் நகைதான் என்னால் கொடுக்க முடியும் என்று சொல்லுகையிலே, ஜனாம்மா, எதை முன்பு சொன்னாவோ அதைத்தான் சபையின் முன்னாலும் சொன்னா. அதாவது, தான் எதுவும் எதிர்பார்க்கவும் மாட்டேன், எனது வீட்டாரும் ஒன்றும் கேட்கவும் மாட்டார்கள் என்றும் ஜனாம்மா ஒரே சொல்லினைத்தான் மீண்டும் சபையின் முன்னாலும் சொன்னா. அதுதான் அவவின் என்றும் மாற்றப்படாத வாக்கு.
ஆனால், சம்யூத்தாவின் தகப்பன் அந்த போலி நகைகளை சபையின் முன்னால் ஒரு குற்ற உணர்வுகளும் இல்லாமல் குள்ள மனத்துடன் கொடுத்ததற்குப் பதிலாக, ஜனாம்மா, தனது பரம்பரை வைர நெக்லஸினைக் கொடுத்தா. அதனை சம்யூத்தாவின் குடும்பமோ வியப்புடன் பார்த்தது. ஏனென்றால், இவர்கள் இப்படியான ஒன்றையும் வாழ்க்கையில் காணாதவர்களாச்சே!
அந்த நெக்லஸினைப் பார்த்த சம்யூத்தா இதுதானே ஆரம்பம் என்றும், ஜனாம்மாவின் எல்லா சொத்துக்களையும் நான் எனதாக்கி ஆளுவேன் என்று சொன்னதனை வைத்து நான் ஏற்கனவே எதிர்வு கூறியவை இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கணேஷனின் திட்டப்படி கணேஷனின் ஆட்கள் அந்த வைர நெக்லஸினை களவெடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். அதனை கணேஷனும் ஒளித்து வைத்து விட்டான். காணாமல் போனதினை அறிந்து கொண்ட மீனா உடனே அனைவரையும் கூட்டி சபையின் முன்னால் சொல்லி விட்டா. இது ஒரு பெரிய அதிர்ச்சியினை அனைவருக்கும் கொடுக்கையிலே, கணேஷனுக்கும், அமுதாவுக்கும் எந்த அதிர் அலைகளையும் ஏற்படுத்தவில்லேயே! சும்மா நின்றார்கள் அவர்கள். ஏனென்றால், ஆட்டையைப் போட்டதே அவர்கள்தானே! இவர்கள் இருவரையும் ஒருவரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை போலும். ஆனால், பிறேம்தான் தேவையில்லாமல் முழித்துக் கொண்டு நின்றான்.
நான் குறிப்பிட்டது போன்று பிறேம் வைத்திருந்த நகைகள் அனைத்தும் போலி என்று வீராவுக்கும், மாறனுக்கும் தெரிந்திருக்கின்றது என்பதும் சரியாகி விட்டது.
நெக்லஸை மீட்டது தமிழ். மாறனிதும், வீரானிதும் ஆசை இந்த நெக்லஸானது அதனை மீட்டுக் கொடுத்த தமிழுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.
மீட்டுக் கொடுப்பவர் கேட்கும் எதுவானாலும் தருவேன் என்பது ஜனாம்மாவின் வாக்கு. மீட்டது தமிழ், கேட்பது வீராவும், மாறனும். அதாவது, இதன் கருத்து தமிழைத் தான் உங்கள் வீட்டுப் பெண்ணாக்க வேண்டும், அதாவது, சிபீக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்பதுதான்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!