posted 5th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- நான் முன்னே குறிப்பிட்டது போல, சம்யூத்தா அப்படி ஒன்றும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. இப்படியாக பணக்கார இடங்களைக் குறிவைத்து கல்யாணம் பண்ணி சொத்துக்களை அமர்த்துவதற்கு குடும்பமே சேர்ந்து திட்டம் போட்டு அலையும் கூட்டம் என்று.
- அன்று பிறேமை வைத்து தமிழைக் குறிவைத்தார்கள். அது பிளைச்சுப் போச்சுது. இங்கு, சமூயூத்தாவை வைத்து play பண்ணுகின்றார்கள். வெட்கமே இல்லாத குடும்பமாகத் தெரிகின்றது.
- இப்படியான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் சம்யூத்தாவும், பிறேமும். அதற்குள்ளே சிபீயின் வீட்டிலிருந்து கனடாவிற்குப் போய் வாறாளாம் சமுயூத்தா. அத்துடன் வர்ஷினிக்கு பரிசும் வாங்கி வாறாளாம்.
- இப்படிப் பார்க்கப் போனால், நேற்றுக் கூறியது போன்று சம்யூத்தாவும், பிறேமும் உண்மையாக சகோதரங்களா? என்றும், அவர்களின் தாய், தகப்பன் என்று இங்கு நிற்பவர்கள் உண்மையான பெற்றோரா என்ற சந்தேகம் வந்ததுமல்லாமல், இவர்கள் கூலிக்கு நடிப்பவர்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
- முத்தம்மாவைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாத உண்மை இப்போ மாறனுக்கும், வீராவிற்கும் தெரிய வேண்டிய இக்கட்டில் தமிழ்.
- சம்யூத்தாவின் பெற்றாரின் ஊரின் வளக்கப்படி, அவரவர் என்னென்ன கொடுக்கின்றார்கள் என்று சபையில் சொல்ல வேண்டும். அதனையே கூச்சமில்லாமல் சொன்ன சம்யூத்தாவின் பெற்றார்கள்.
- இனித்தான் மாறனின் ஆட்டம் தொடங்கப் போகின்றது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 04.11.2025
தமிழைத் தேடி அவவின் உண்மையான நிலைமையினை அறியச் சென்ற மாறனும், வீராவும் அதிர்ந்து போனார்கள். ஆனால், அறிந்து கொண்டனர். சிபீயின் மன நிலைதான் ஒன்றும் புரிய முடியாத வண்ணம் குளப்பிக் கொண்டிருக்கின்றான், சிபீ.
மாறனும் குளம்பிப் போனான். சிபீயும் தனது நினைவுகளை ஒருதருடனும் share பண்ணாமல் மனதினுள் அமத்தி வைத்துக் கொண்டிருக்கின்றான். ஏன் இதனை சிபீ இப்படி செய்ய வேண்டும்? எல்லாம் அவன் செய்த செயல்களால்தான். அத்துடன், இப்போ இதனை வெளிப்படுத்தினால், தமிழின் குணம் அவனுக்கு நன்கு தெரியும், உடனே அவளே எல்லாவற்றினையும் குளப்பி விடுவாள். அதன் பின்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பதனால்தான் சிபீ அமைதியாக இருக்கின்றான்.
ஜனாமாவின் கவலை சிபீ தன் கையினை விட்டு போகப் போகின்றானே என்பதுதான். ஆனால், சிபீ இந்த விஷயத்தில் மட்டும் நிதானமாக இருக்கின்றான் என்றுதான் தோன்றுகின்றது. இதனைத்தான் ஜனாம்மா, வீராவுடனும், மாறனுடனும் share பண்ணினா. அதாவது, இவர்களிடம் தனக்கு உதவும் படி மறைமுகமாகக் கேட்பது போன்றிருந்தது.
மாறனின் திடமான ஒரு சொல்லு ஜனாம்மாவை மிகவும் ஆறுதல் படுத்தியது. ஏனென்றால், ஜனாம்மாவால் செய்து முடிக்க முடியாதென்று ஒன்றுமில்லை. ஆனால், இதற்கு சிபீ ஒத்துளைப்பதாகத் தெரியவில்லை. சிபீயை வற்புறுத்தவும் முடியாது. எல்லா விஷயங்களையும் சிபீயிடம் ஜனாம்மா சொல்லித்தான் பார்த்தா. சிபீயோ அசும்புவதாக இல்லை. எனவேதான் மாறன் போன்று புகுந்து விளையாடுபவர்களால்தான் இந்த காரியம் ஆகும் என்று ஏதோ ஜனாம்மாவின் மனதிற்குத் தோன்றி உள்ளது போலும்.
சம்யூத்தாவின் தகப்பனும் சபையின் முன்னால் தங்களின் வழக்கப்படி தங்களால் இவ்வளவுதான் போட முடியும் என்று சொல்வதனை ஒரு சிலர் நல்ல விஷயமாக ஏற்றுக் கொண்டாலும், அமுதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஏனென்றால், அமுதாவிடம் உள்ளது 200 பவுண் நகைகள். ஆனால், சம்யூத்தாவிடம் உள்ளது 50 பவுண் நகைகள் மட்டுமே. இதனையே பொருட்படுத்தாமல் இருக்கும் ஜனாம்மா. ஆனால், ஜனாம்மா வைர நெக்லேசினைக் கொடுக்கும் போது, சம்யூத்தா, பிறேம், பெற்றார் இவர்களின் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பினை அனைவரும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதிலிருந்து இவர்களின் நடப்பு தெரிகின்றதுதானே!
இதெல்லாம் ஒத்துப் பார்க்கும் போது இவர்கள் உண்மையாகவே ஒரே குடும்பத்திலே உள்ளவர்களா? என்றொரு சந்தேகம் உதிக்கின்றது. இவர்கள் கூலிக்கு நடிக்கும் நடிகர்கள் எனவும் தோன்றுகின்றது.
தனக்கே போக முடியாத சம்யூத்தா, தமிழை அவளின் outdoorsசிலிருந்து வெளியே தள்ளி விடும் போதும், தமிழின் அறையினுள்ளே பிறேம் அனுப்பி வைத்தவன், அதுவும் தமிழின் காதலன் என்று வந்தவன் கதையில், சம்யூத்தா தமிழுக்குச் சொன்னதினையும் இங்கு நினைவு கூர வேண்டியதாக உள்ளது. ஆதாவது, அதுவும் தன்னிடமுள்ள காசினை அல்ல சிபீயிடம் 5 ஓ 10 ஓ வாங்கித்தாறேன் என்று சொல்வதற்கும் ஒரு கெத்து இருக்க வேண்டுல்லவா!
சிகறட் பத்த வைக்க வந்த பிறேம் தமிழின் அப்பாவை அங்கு குசினியினுள் கண்டானோ என்னவோ தெரியவி்ல்லை. ஆனால், அதற்கிடையில் பிறேமை யாரோ வந்து கூட்டிச் சென்றான்.
இங்கு தமிழின் அப்பாவைக் கண்டால் ஒரு பிரச்சனை உதிக்கும். அதைவிட ஜனாம்மாவின் குடும்பம்தான் தமிழின் குடும்பம் என்றால் அடுத்த பிரச்சனை ஒன்று உருவாகலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!