posted 6th October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இப்போ ஏலத்திற்கு வந்த சிபீயின் வாழ்க்கை.
- சிபீ ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவுகளைத்தான் இவ்வளவு காலமும் எடுக்கையிலே, தட்டி நிமித்தி, நிவர்த்தி செய்தவ தமிழ். தன் வாழ்க்கையினைப் பற்றி சிந்தித்து முடிவெடுக்கும் அளவுக்கு சிபீக்கு புத்திக் கூர்மை இல்லை என்று சொல்லலாமா?
- நான் முன்பு கூறியது நடைபெறுமா? தமிழைப் பழிவாங்கத்தான் சிபீ காதல் பண்ணிய நாடகத்தினை நம்பிய தமிழுக்குக் கிடைத்த பரிசு துரோகம். இதனால், வீட்டை வி்ட்டும், வேலைத் தலத்தினை விட்டும் வெளிக்கிடுவாள் தமிழ் என்பதுதான்.
- ஜனாம்மாவின் ஊகமும் கனவும் கானலாகுமா? இல்லை, கானலாகாது.
- சமூத்தாவைக் கல்யாணம் பண்ணப் போகின்றேன் என்று சிபீ எடுத்த முடிவினால் அதிர்ந்து போன ஜனாம்மா. விளைவுகளை எதிர்பாரக்காமல், தனக்கே சூனியத்தினை வைக்கும் சிபீ.
- நல் வாழ்க்கையா? Ego வா? Egoதான் வாழ்க்கையென்று சிந்தித்தால், அழிவினையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் – இதனைப் பார்க்கப் போகின்றோம் – நம் வாழ்க்கையில் பார்த்தோமா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 04.10.2025
சமூத்தாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்றால், ஏன் தமிழின் குடும்பம் தன் குடும்பம் என்று சிபீ சொல்ல வேண்டும்? ஏன் ஷாமை அடிக்க வேண்டும். ஆனால், தேனுவுடன் அன்பாக சிபீ பழகுவதனால் தமிழைக் கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லையே! ஆனால், அவர்கள் எங்கள் உறவு. இந்த வீட்டிலுள்ளவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்கின்றோமோ அதெல்லாம் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். இதைவிட, சிபீ, எனக்குத் தமிழைப் பிடிக்காததுதான் என்றும் ஒரு வசனம் சொன்னதை வைத்து சிபீயின் மனதில் தமிழ் இல்லை என்றில்லை. அதனை ஷியாமுக்கு சொல்ல வேண்டிய அவசியமும் சிபீக்கு இல்லை.
சிபீக்குத் தமிழுடன்தானே பிரச்சினை. தமிழைப் பழிவாங்கிக் கொண்டு தன் வாழ்க்கையினைத் தொலைப்பதுமல்லாமல், ஜனாம்மாவின் சொத்துக்களை இழக்கவோ, அழிக்கவோ சிபீ நினைப்பானா? அது நடக்கவே நடக்காது.
ஆனால், சிபீக்கு தனது Ego தான் முக்கியம். அதனால், குடித்து வெறித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவளை நம்புகின்றான் சிபீ. குடும்பம் என்று சிபீ நினைப்பது இதனைத்தான். இது அவனது கலாச்சாரம்.
ஜனாம்மா கட்டிக் காத்த, சேர்த்து வைத்த கௌரவம், அவவின் சாம்றாஜியம் எல்லாமே அழிவை தேடிவிடும். ஆனால், ஜனாம்மாவின் சாம்றாஜித்திலும், அவவின் கௌரவத்திலும் சிபீக்கு மிகவும் அக்கறை உண்டு.
இவ்வாறு ஏதாவது, இடக்கு முடக்கான முடிவுகளை சிபீ எடுப்பானாக இருந்தால், குறிஞ்சிநாதன் வெடி கொழுத்தி வெற்றியினைக் கொண்டாடும் நாள் உறுதி செய்யப்பட்டாகிவிடும்.
ஆனால், ஒன்றையும் எதிர்பார்க்காமல் உள்ளே வந்தவள்தான் தமிழ். அந்த சமயம்தான் ஜனாம்மா தமிழிடம் தனது குடும்பத்தினைப் பொறுப்புக் கொடுத்தா. அதன் பின்புதான் ஜனாம்மா தனது பாட்டி என்று தமிழுக்குத் தெரிய வந்தது. சிபீ உண்மையாகத் தன்னை விரும்புகிறான் என்று நம்பினாள் தமிழ். அப்படியான உறவு தமிழுக்குக் கிடைக்காவிட்டாலும், குளிர் அறையினுள் அடைபட்ட சமயம் சிபீயைத் தமிழ் காப்பாற்றிதான் இருப்பாள்.
சிபீ தன்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லாததினாலோ, ஷியாமைக் கல்யாணம் பண்ணினாலோ, தமிழ் ஜனாம்மாவின் வீட்டை விட்டோ அல்லது வேலையினை விட்டோ போக மாட்டாள். ஏனென்றால், தமிழ், ஜனாம்மாவுக்குக் கொடுத்த வாக்குகள் அப்படி.
தனது குடும்பத்தனைக் காப்பாற்றி நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும், சிபீயை அவனது மனநிலையிலிருந்து மீட்க வேண்டும் என்று தமிழின் கையினைப் பிடித்த சத்தியம் வாங்குவது போல ஜனாம்மா தமிழிடம் ஒப்படைத்ததினை மீற மாட்டாள், தமிழ்.
ஜனாம்மாவின் காதல் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றா, சிபீக்கு. அதாவது, யாருடைய துக்கம் உனதானதோ, யாருடைய துன்பம் உனதானதோ, யாருக்காக நீ உன்னை இழக்கத் துடிக்கிறியோ அந்த உயிர்தான் நீ காதலிப்பது. அட இது காதலுக்கு நல்ல வரைவிலக்கணமாச்சே!
ஆனால், சிபீ இதிலேயும் தமிழைக் கொஞ்சம் பகிடிக்காக நோகடிக்கும் நோக்கில், நான் ஷியாமைத்தான் கல்யாணம் பண்ணப் போகின்றேன் என்று கொஞ்ச நேரம் சிபீ அமைதியாக இருந்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்துவான், பிறகு இன்னம் கொஞ்சம் இழுப்பான். நீங்கள் எல்லாரும் நினைத்திருப்பீர்கள்தானே!
ஆனால், வெண்பா எனது முறைப் பெண்ணு. அத்தையின் மகள். சிறு வயதிலிருந்தே எனக்கு அவளைத் தெரியும். ஆ னா ல், எனக்கு சிறு வயதில்தான் வெண்பாவைத் தெரியும், நான் பெரியவனாகிய பின்பு எனக்கு அவளின் ஆசைகள் என்ன? விருப்பு, வெறுப்புகள் என்ன? என்று ஒன்றும் தெரியாது. வெண்பாவோ, எனது சந்தோஷத்தில் மட்டும்தான் பங்கேற்றியவள். ஆனால், எனது துன்ப நேரத்தில் அவள் விலகியே இருந்தவள்.
அப்பாவைப் பாருங்கள், அசைவொன்றும் இல்லாமல் இத்தனை வருடங்களாக அந்த அறையினுள் கிடக்கின்றார். ஆனால், அம்மா கூட என்ன செய்கின்றா? ஏதாவது, முயற்சிகள் செய்கிறாவா? எனக்குத் தெரிந்தளவிற்கு இல்லையே! ஆதேபோலத்தான், வெண்பா இருக்கமாட்டா என்று என்ன நிட்சயம்?
வியாபாரத்திலே, ஒரு சோதனையிலோ trial and error, என்ற தத்துவத்தினைப் பாவிக்கலாம், ஆனால், இது வாழ்க்கை, இவ்வளவிற்கு risk எடுக்க முடியாது. இது ஷியாம் risk எடுத்துப் பார்க்கலாம் என்று சொன்ன புத்திமதி. ஆதாவது, கல்யாணம் பண்ணுவோம், சொத்துக்கள் எல்லாம் உனக்கு வந்த பின்னால், நாங்கள் இருவரும், mutualஆகப் பிரிந்து விடலாம் என்பதுதான்.
ஆனால், சொந்தம் வேண்டும், சொத்துகள் பிறத்தியாருக்குப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் பெரியவர்களுக்காக எனது வாழ்க்கையினைத் தியாகம் செய்ய என்னால் முடியாது.
நான் யாரைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்றால், எனக்கு ஜானுவினுடைய சொத்து ஒன்றும் வேண்டாம். என்னை ஜானு படிப்பித்து நல்ல நிலையினில் வைத்திருக்கின்றா. என்னால், எனது முயற்சியினால் முன்னுக்கு வர முடியும்.
எனவே, நான் இப்போது பூச்சியம். இந்த நிலையினில் யார் என்னைக் கல்யாணம் பண்ண விரும்புகிறார்களோ, அவர்களைத் தான் நான் எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளுவேன் என்று ஒரு முடிவினை, அதாவது, taskகினை எல்லாருக்கும் கொடுப்பான் சிபீ. இந்த முடிவினை ஒருதரும் எதிர் பார்க்காததும் கூட.
நிட்சயமாக வெண்பா சிபீயை விரும்புவாள். ஆனால், ஒன்றுமே இல்லாவனை வைத்துக் கொண்டு விரலையா சூப்பிறது என்று கணேஷன் சொல்லுவான். வெண்பாவும் விலகுவாள்.
ஷியாமும், சிபீயின் பணத்திலேதானே குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றா. எனவே, அவளுக்கு இது பெரிய ஏமாற்றமாகிவிடும். ஷியாமின் குடும்பம் சொத்துகளை அபகரித்து காலத்தினை ஓட்டிக் கொண்டிருப்பவர்களால் இப்படி அடி மட்டத்திலிருந்து வாழ்க்கையினைக் கொண்டோட முடியாது. எனவே, அவளும் விலகுவாள்.
இதைவிட, ஷமித்தாவையும், வெண்பாவையும் எனக்கு உங்களை கல்யாணம் பண்ண விருப்பமில்லை என்று சொன்னால் வீட்டில் பெரிய பூகம்பமே உண்டாக வாய்ப்புகள் இருக்கும். ஆகையால், இந்தப் பிளானை ஜனாம்மாவும், சிபீயும் போட்டதாக இருக்கலாம் அல்லது சிபீ மட்டும் எடுத்த முடிவாக இருக்கலாம். அதாவது, சொத்து ஒன்றும் வேண்டாம் என்பதும், நான் பூச்சியத்திலிருந்துதான் என் வாழ்க்கையினை ஆரம்பிப்பேன் என்பதும்.
மிகுதியாக உள்ளது, தமிழ்தான். ஆனால், தமிழ் தனக்கு முறையாக உறவானவள் என்று ஒருதருக்கும் தெரியாது, முத்தம்மாவைத் தவிர.
சிபீயினால் தமிழை இங்கு nominate பண்ண முடியாது. ஏனென்றால், அவன் தமிழுக்குச் செய்தது நினைத்துப் பார்க்க முடியாததும், வெளியில் சொல்ல முடியாததும், ஜனாம்மாவாலும் ஏற்றுக் கொள்ள முடியாத பச்சைத் துரோகமல்லவா.
தமிழ் இந்தப் பரீட்சையினுள் வரமாட்டாள். ஏனென்றால், சிபீ தன்னை நம்ப வைத்து ஏமாற்றியவன் என்பது தமிழின் மனதில் ஆறாத வடுவாக இருக்கின்றது. அப்படி அவள் வளிந்து போகவும் மாட்டாள். ஆனால், தமிழிடம் இந்த நிலையி்ல் ஜனாம்மாவால் ஒன்றும் கேட்கவும் முடியாது. ஏனென்றால், சொத்துகள் இல்லாத சிபீயை ஏற்றுக் கொள்ளுவாயா என்று?
ஜனாம்மாவும் ஒரு சிலவற்றினை Trusthக்கு எழுதினாலும், ஒரு சில சொத்துக்களை சிபீக்காக வைத்திருப்பா. ஆனால், இது ஒருதருக்கும் தெரியாமலும் இருக்கலாம். ஏனென்றால், பிரகாஷுக்கும் சொத்துத் தேவைதானே.
இது மட்டுமல்லாமல், உயில் விஷயமானது, ஜனாம்மாவின் ஒரு பரீட்சையாகவும் இருக்கலாம். அதுவும், சிபீயுடன் சேர்ந்து செய்வதாகவும் இருக்கலாம்.
எனவே, ஜனாம்மாவின் உயில் விஷயத்தில் ஏதோ ஒரு உள்விஷயம் இருக்குமென்றுதான் நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!