posted 2nd November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஊசலாடுகின்றதா சிபீயின் மனம், யாரைத்தான் கல்யாணம் பண்ணுவதென்று?
- இறுதி வரைக்கும் குறுக்கு வழியினைத் தெரிந்தெடுத்துக் கொண்டிருக்கும் ஷியாமும், பிறேமும்.
- மருதாணி நிகழ்வுகளிலும் சிபிக்கு உண்மையாக இல்லாமல் இருக்கும் சம்யூத்தா.
- முழு வேலைகளையும் தூக்கிப் போட்டுச் செய்வதாக தமிழுக்குத் தெரிந்த சமையல் செய்பவர் விசாரிக்கின்றார்.
- மாறனும், வீராவும் கல்யாணத்திற்கு வருகை தருவதன் காரணம் ஒன்று இருக்க வேண்டும்.
- தமிழின் அப்பா, தான் வேலை செய்யும் கடையினால் கொடுக்கப்பட்ட ஒரு சில வேலைகளுக்காக வந்தவர், கல்யாண அழைப்பிதலில் ஜனா Foods இனைப் பார்த்ததும் நினைவுகளில் ஏற்படும் மாற்றங்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 01.11.2025
மருதாணி வைக்கும் சிறு வைபவத்தில் கூட சிபீக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஒரு sense கூட இல்லாமல் இருக்கும் சம்யூத்தா என்னென்று உண்மையாக சிபீயுடன் வாழ முடியும்.
ஒருவர் என்ன செய்கின்றார் என்று அடுத்தவருக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் எல்லாவற்றினையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்பதனை மறக்கும் மனிதர்கள். இதனையே கடைப்பிடிக்கும் சம்யூத்தா.
ஆனால், மருதாணியினை ஒழித்து வைத்து தனது தங்கை சம்யூத்தாதான் இந்த நிகழ்வினில் வென்று சிபீயினை மணம் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு சிபீயினை ஏமாற்றுவது எவ்வளவு துரோகம். இதனை, சம்யூத்தாவோ, பிறேமோ உணருவதாக இல்லை. துரோகம் செய்வதும், ஏமாற்றுவதும், ஒருவரை அழிப்பதும் அவர்களது குடும்பத்திற்கு புதுசா என்ன?
சம்யூத்தாவையும், பிறேமையும் ஏமாத்துக் காரர் என்றும், தனது கண் முன்னாலே நிற்க வேண்டாம் என்றும், எங்கேயும் தொலைந்து போங்கள் என்று சிபீ கலைத்தும் ஜனாம்மாவின் வீட்டிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், இவர்கள் எவ்வளவிற்கு ஒட்டுண்ணிகளாக இருக்கின்றார்கள் என்று இப்போதாவது விளங்குகின்றதா?
இப்படியான குணம் படைத்தவர்கள் தங்கள் வேலை முடிவதற்காக ஒருவருடன் ஒட்டி இருந்து எல்லாவற்றினையும் உறிஞ்சி விட்டு ஏப்பம் விடும் விஷக் கிருமிகள் என்று இவர்களை வகைப்படுத்தாலாம்.
சம்யூத்தாவினதும், பிறேமினதும் குணங்களை அறிந்து கொண்டார்கள் சேதுவும், கேடீயும். சேது தனது தங்கைக்கே மருதாணி எங்கே இருக்கின்றது என்று தெரிந்தும், அத்தான் சிபீயின் வாழ்க்கையானது கெட்டுப் போகக் கூடாதென்றும், தமிழ் சகோதரியினது வாழ்க்கையானது செழிக்க வேண்டும் என்றும் விரும்பியுள்ள ஆத்துமம் அவன்.
சேதுவும், கேடீயும் திட்டம் போட்டார்கள் தமிழுக்கு சிபீதான் மருதாணி போட வேண்டும் என்றும், தமிழும், சிபீயும்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் முடிவெடுத்து விட்டார்கள். எனவே, பிறேம் ஒழித்து வைத்த மருதாணிக் குப்பியினை எடுத்து ஒளித்து விட்டார்கள்.
அந்தக் குப்பியானது தமிழின் கையில் கிடைத்து விட்டது. இது தமிழுக்குத் தெரியாது. தமிழுக்கு இந்த போட்டியைப் பற்றியும் தெரியாது. ஒன்றுமே சொல்லாமல்தான் மருதாணிக் குப்பியினை தமிழிடம் கொடுத்து விட்டனர் கேடீயும், சேதுவும். தமிழும் அதை எடுத்துக் கொண்டு போகின்றாள், சிபீயிடம் கொடுப்பதற்கு.
குள்ள மனம் உள்ளவர்கள் நம்முடன் இருக்கையிலே நாம் ஒவ்வொரு கணமும் கண்ணுக்குள் எண்ணை விட்டுக் கொண்டு விழித்திருக்க வேண்டும். இல்லையேல் முழுங்கி ஏப்பம் விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
தமிழின் அப்பா வேலை செய்யும் கடைதான் சாப்பாட்டிற்குப் பொறுப்பாய் இருக்கின்றார்கள். ஆனதினால், அடுத்த இரண்டு நாட்களிலும் தமிழின் அப்பா இங்குதான் வேலை செய்வார். ஆனால் அவருக்குத்தான் முன்னைய ஞாபகம் எதுவுமே இல்லாமல் போய் விட்டதே!
ஆனால், பிறேமின் குடும்பம்தான் தமிழின் தகப்பனை விபத்திற்குள்ளாக்கியும் இருக்கலாம். அவர் பிறேமுடன் சம்பத்தப் பட்டவரை இங்கு காணலாம், அவருக்கு ஏதாவது ஒருபக்கம் ஞாபகத்திற்கும் வரலாம்.
தமிழின் தகப்பனை வீராவுக்கோ, மாறனுக்கோ தெரிந்திருக்கலாம். இவருக்கு நடந்த விபத்தினைப் பற்றியும் மாறனுக்கோ அல்லது வீராவுக்கோ தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால், பிறேம் இதில் அகப்படுவதற்கு வாய்ப்பும் உண்டு.
அதுமட்டுமல்லாமல், தமிழின் அறையினுள் காதலனாக வந்தவன், பிறேமின் நண்பன், சில சமயம் இங்கு நடைபெறும் கல்யாண வைபவத்தில் மாறனிட்டேயும் அல்லது வீராவிட்டேயும் மாட்டுப் படலாம்.
இத்துடன் பிறேமினதும், சம்யூத்தாவினதும் திருகு தாளங்கள் அத்தனையும் இந்த வைபவத்தில் தெரிய வரலாம். சம்யூத்தாவிற்கு ஏற்கனவே வேறு ஒருவனுடன் காதல் இருந்திருக்கலாம், இவளுக்கும், அவனுக்கும் engagement நடந்திருக்கலாம். இது இந்த வைபவத்தில் தெரிய வரலாம். அதனைக் கண்டு பிடிப்பதும் சிபீயாகத்தான் இருக்கும். இது சிபீயின் ஒரு silent moveஆகவும் இருக்கலாம்.
ஆனால் ஒன்று, நான் நேற்றைய பதிவினில் சொன்னது போன்று தமிழுக்கு எவ்வறான சந்தர்ப்பத்தில் சிபீ தாலியினைக் கட்டுவான் என்பது இனி நடக்கும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!