posted 1st October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இருட்டினுள் அடைக்கப்பட்டாள் இசை. சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டாள்.
- தன் மகள், வெண்பாவிற்கு இடைஞ்சலாகவுள்ள தமிழை வீட்டை விட்டுக் கலைக்க வேண்டும் என்று இசையினை பலியாக்கினாள் அமுதா.
- இறுக்கமாகக் கதைத்த சிபீ, தமிழிடம் கையளித்தான், பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று. ஜனாம்மாவும் சிபீயின் முடிவிக்கு சேர்ந்து நின்றா.
- இங்கு இசை அறிவில்லாதவள், வலது குறைந்தவளுக்காக சொந்த அத்தையினை எதிர்க்கின்றாய் என்று கணேஷனின் வாதம்.
- அமுதா செய்த பிழையினை உணராத கணேஷனின் குடும்பம். இதில் கேடீயும் சார்ந்து கொண்டான்.
- மன்னித்து விட்டாள் தமிழ். ஆனால், ஜனாம்மா விடுவதாக இல்லை. அமுதாவை இழுத்துக் கொண்டு போகின்றா. ஆனால், தமிழ் ஒரு முடிவும் எடுத்துள்ளாள். அதுதான் என்ன?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 29.09.2025
மகளின் கல்யாணம் அமுதாவுக்கு முக்கியம்தான், அதுவும் தாயாக. ஆனால், அதைவிட முக்கியம் அமுதாவுக்கு ஜனாம்மாவின் சொத்துத்தான், தன் மகளின் வாழ்க்கையினை விட. எனவே, பணத்தின் முன்னால் மனித உயிர் ஒன்றும் பெரிதில்லை என்பது வாழ்க்கையானது பல வழிகளில் உணர்த்திக் கொண்டிருக்கி்ன்றது.
இசை தனக்கு முக்கியம் என்று ஆணித்தரமாகச் சொன்ன சிபீ, அவளின் உலகம் மிகவும் தூய்மை நிறைந்தது. அழகானது. அழுக்கற்ற மனமுள்ள சந்தோஷமே வியாபித்த உலகமது. நான் யாரென்று அறியாமல் என்னை அறிந்தவள், என்னை நேசித்தவள்தான் இசை. அவளுக்கு ஒன்றென்றதும் துடித்துப் போனான் சிபீ. ஜனாம்மாவிற்று உயிர் உறங்கி விட்டது. சிபீயின் தாய் சாதாரணமாகவே அமுதாவுடன் ஒத்து நின்றா, ஆனால், அந்தச் சின்னப் பிள்ளை என்றதும் ஒரு தாயாகத் துடித்தாள்.
ஆனால், வெண்பா, தன் வாழ்க்கையிலே கண்ணும் கருத்துமாக இருக்கின்றாள். தாயைப் பேசுகின்றாள். சிபீயிடம் உள்ள தன்மேலான அபிப்பராயம் குறையப் போகின்றதே என்று அவளுக்குக் கவலை. மற்றவர்களைப்பற்றி அவளுக்கு ஒருவிதமான அக்கறையும் இல்லை. சிபீயின் கையில் காயம் என்று காட்டியதும், இரத்தத்தினைத் துடைத்து விட்டதும் இசைதான். ஆனால், இங்கு, சிபீ தனக்குக் காயம் ஏற்பட்டிருக்கின்றதே என்று சொல்லியும் ஒரு உணர்வும் இல்லாமல் நின்றாள் வெண்பா. சுயநலத்தின் உச்சியில் இருக்கின்றாள் வெண்பா.
இது ஒரு கொலை முயற்சி. மன்னிக்க முடியாதது. யாராக இருந்தாலும் பிழை, பிழைதான் என்பது ஜனாமாவின் கருத்து. தமிழின் முடிவிற்காகக் காத்து நின்றார்கள், வீட்டிலுள்ள அனைவரும். தமிழிடம் இருந்து என்ன முடிவு வரும் என்று பயந்து போயிருந்த அமுதா, கணேஷன் குடும்பம். ஆனால், கணேஷன் ஏற்கனவே வக்கீலுடன் கதைத்து அமுதாவுக்கு ஒன்றும் நடக்கக் கூடாது என்று ஒழுங்குபடுத்தி விட்டான்.
ஒரு வாய் பேசாத பிள்ளையினை அடைத்து வைத்து அது உயிருடன் இருந்தால்தான் என்ன அல்லது செத்தால்தான் என்ன என்றுகூட ஒரு கவலையும் இல்லாமல் இருந்ததினை கணேஷனின் குடும்பத்தினரிடம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
தமிழோ, ஜனாம்மா கேட்ட கேள்விக்கு இல்லை ஜனாம்மா நான் பொலிஸுக்குப் போகவில்லை என்றதும் கணேஷனுடையதும், அமுதாவினுடையதும் புன்னகையிலிருந்து அவர்களின் மனத்தினை அறியக்கூடியதாக உள்ளது.
ஆனால், தமிழ் ஒரு முடிவெடுத்துத்தான் ஜனாம்மாவிற்கு இந்த முடிவினைச் சொன்னாள். அவளின் முடிவு, ஜனாம்மாவின் வீட்டினை விட்டு குடும்பத்துடன் வெளியேறுவது, அல்லது, முழுவதுமாக வெளியேறுவது. ஆனால், கடைசியானது மிகவும் குறையளவான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், தமிழின் முடிவு தேனுவைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டும்தான். தமிழும், குடும்பமும் ஜனாம்மாவை விட்டு வெளியேறுவது என்பது, சிபீயாலோ அல்லது ஜனாம்மாவாலோ அனுமதிக்க முடியாததொன்று.
ஆனால், தமிழுக்குத்தான் இங்கு இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், தமிழுக்கு மிகவும் பொறுப்பான வேலைகளை ஜனாம்மா கொடுத்துள்ளா. ஆனால், இந்த வேலைகளோ ஜனாமாவின் குடும்பத்தினை ஒன்று சேர்க்கத்தானே! ஜனாம்மாவின் குடும்பத்தினை ஒன்று சேர்த்து, அதனால், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாத்து, இவர்களின் இன்பமான வாழ்க்கையினை உருவாக்கி, அவர்கள் அனைவரும் நிம்மதியாக இருக்கு வேண்டும், அதற்காக தமிழ் தனது குடும்பத்தினையும், தன் வாழ்க்கையினையும் தியாகம் செய்ய வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கின்றது? எனவே, தமிழ் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவது மட்டுமல்லாமல், என்ன முடிவுதான் எடுக்கலாம் என்பதில் சிக்கலும் இருக்கின்றது.
மன்னித்து விட்ட பின்பும் கணேஷ், அமுதா சும்மா இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் ஆடாவடித்தனம் தொடர்வதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. சிபீக்கும், தமிழுக்குமான தொடர்பினில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால்தான் அமுதா தேனுவை container றுக்குள்ளே அடைத்து வைத்தா. ஆகையால் இனிவரும் காலத்தில் CCTV இல்லாத இடம் பார்த்து கணேஷ் ஏதாவது தமிழின் குடும்பத்திற்கு அநியாயம் செய்யலாம் அல்லவா. 24 மணி நேரமும் தமிழோ அல்லது சிபீயோ கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.
எனவே, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவசியமாகின்றது. ஜனாம்மா நினைத்தபடி, சிபீக்கும், தமிழுக்கும் கலாயாண ஒழுங்குகள் செய்தால் பிரச்சனைகள் மிகுதியாக வர வாய்ப்புகள் உண்டு. எனவே, ஜனாம்மா இந்த கல்யாண விஷயத்தினைத் தள்ளிப் போட்டுவிடுவா.
தமிழின் முடிவுதான் என்ன என்பதுதான் ஒரு கேள்வியாக இருக்கின்றது.
ஜனாம்மாவும் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளா.
ஏன் ஜனாம்மா தமிழின் குடும்பத்தினை இங்கு கொண்டுவந்து வைத்திருக்கின்றா என்பதில் தனக்கு ஒரு ஆர்வமும் இல்லை. ஆனால், இவர்களுக்கு எதிராக ஏதாவது அசைவாட்டம் தெரிந்தால் சிபீயின் ஆட்டத்தினைக் காண வேண்டிவரும் என்பது சிபீயின் ஆணித்தரமான கட்டளையாக இருக்கின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!