posted 25th January 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 22ஆம், 23ஆம் திகதிகளின் Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கலங்கிக் கொண்டிருந்த தமிழை வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும் மேலும், மேலும் குத்திக் குதறிய சிபீ.
- வார்த்தைகள் எப்படி வலிக்கும் என்று விளங்காத ஜென்மங்களுக்காக தனது வாழ்க்கையினைத் தொலைத்துக் கொண்டிருந்த தமிழ்.
- தனது கணவனை அவ்வளவிற்கு தமிழுக்குப் பிடிக்குமாதலால், அவனது தலையினை நீவி விட்டு இனி தேடினாலும் என்னைக் காண மாட்டீங்கள் என்று விடை பெற்றாள் தமிழ்.
- ஜனாம்மாவிடமும் விடை பெற்றாள். போறேன் என்று சிபீக்குச் சொன்னாள். ஆனால், வாறேன் என்று ஜனாம்மாவிற்குச் சொன்னாள். இது ஜனாம்மாவும், தமிழும் சேர்ந்து ஆடும் ஆட்டமாக இருக்குமோ?
- லக்ஷ்மி வீட்டை விட்டுப் போகையில்தன்னும் ஒருவருக்கும் கனவில் கூட துடிப்பு வரவில்லையே!
Varisu - வாரிசு - 22 - 23.01.2026
- காப்பியைக் காணாவில்லை என்று, பரவாயில்லை தொலைந்து விட்டாள் தமிழ் என்று மனதினுள் குதூகலத்துடன் தாய் போட்ட காப்பியினைக் குடித்தான்.
- தனக்கு இன்றுதான் முழுச் சுதந்திரம் என்று சம்யூத்தாவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டாடினான் சிபீ.
- தமிழின் கடிதம், கைபட எழுதப்பட்டு, கையெழுத்து இடப்பட்ட கடிதம் சட்டத்தரணியால் சிபீயிடம் ஒப்படைக்கப்பட்டது.
- காலையே கணக்குத் தெரியாத கொம்பனியின் பொறுப்பான சிபீ, தமிழுக்குத்தான் இது தெரியும் என்ற தவிப்புடன் இருக்கும் சிபீ.
- சம்யூத்தாவின் உதவியினை சிபீ கேட்டிருக்கலாம்தானே. தாலியின் ஆட்டமோ இப்போ தனதாட்டத்தினைக் ஆரம்பித்துள்ளது.
- ஜனாம்மா தமிழைக் கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். இனித்தான் கச்சேரி ஆரம்பமாகப் போகின்றது. யார், யார் இனி இந்த வீட்டினில் இருப்பார்கள்? யார், யார் இனி வீட்டை விட்டு கலைபடப் போகின்றார்கள் என்பது இனித் தெரியும். சொகுசான வாழ்க்கை இவர்களுக்கு இனி கானல் நீராகக் கூடத் தென்படாது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
கலங்கிப் போயிருந்த தமிழை மேலும் குத்திக் காயப்படுத்திய சிபீ. அவளது இதயம் சுக்கு நூறாகியது. தாங்கொணாத் துயரில் அன்றைய இரவு மேலும் அவளை வாட்டியது. ஜனாம்மா தமிழைக் கோயிலில் வைத்து ஆறுதல் கூறினாலும், அவளுக்கு இன்றைய இரவு கனமாகத் இருந்தது.
தமிழ் தொலைந்தால் காணும் என்று இருப்பவர்களின் மத்தியில் சிபீ மிகவும் சந்தோஷமாக இன்று இருக்கின்றான். தமிழ் இல்லாதது அவனுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று சந்தோஷத்தில் மிதந்தவனாய், தாய் மீனாவின் காப்பியினை வாங்கிக் குடித்தவனுக்கு இனி சந்தோஷம் என்றால் என்ன என்று வரைவிலக்கணத்தினைத் தேடி அலைவதிலேதான் அவன் காலமே விரையமாகும் என்பது இனித் தெரியவரும்.
எப்படித்தான் சிபீ கொடூர வார்த்தைகளால் தமிழைத் திட்டினாலும், அவற்றையெல்லாம் பொறுத்து, மற்றவர்களுக்கு தனது உள் காயங்களை மறைத்து, காலத்தினை ஓட்டினாள் அவள். ஆனால், கோவில் பூசாரி சொன்னது அவளின் மனதினில் ஆழப் பதிந்ததுமல்லாமல் றணமாய் வலித்தது. அவளுக்கு தனது தகப்பனின் ஏற்பாட்டில் அரங்கேறவிருந்த கல்யாணத்தின் முதல் நாள், அகோரி கூறியது அவளுக்கு மனதினில் படமாய் ஓடிற்று.
இப்படியான பழைய நினைவுகளெல்லாம் அவள் விரும்பாமலே அவளின் மனத்திரையில் அரங்கேறியது. மீனா அத்தை சொன்னது, சிபீ சொன்னது அவளை மேலும், மேலும் வருத்தியது. தமிழ் அப்படி என்ன வசதியில் குறைந்தவளா? அதுவும், பிறேமின் குடும்பத்தின் சதிகார வேலைகளினால் தமிழின் தகப்பன் செல்வரத்தினம் ஏமாற்றப்பட்டார். இதனால், குடும்பத்தினைப் பிரிந்த தகப்பன் இன்னமும் வீட்டாரைச் சந்திக்கவில்லை.
வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாளோ என்னவோ, வேண்டாம், வேண்டாம் என்னும் அளவிற்கு எதிரிகளைச் சம்பாதித்துள்ளாள் தமிழ். இது தேவைதானா தமிழுக்கு? தமிழென்ன ஆசைப்பட்டாளா இந்த வாழ்க்கைக்கு.
ஜனாம்மாவிற்றகாகத்தானே இந்த நரக வாழ்க்கையினை ஏற்றுக் கொண்டாள். ஆனால் தமிழ் மேல்தான் அந்தப் பழியும் விழுத்தப்பட்டது. அதையும் பொறுத்தாள். அமைதியாக இருந்தாள். ஆனால், அவள் மனமோ அமைதியை இழந்திருந்தது. இது யாருக்குத்தான் தெரியும்?
மீனா அத்தையின் வார்த்தைகள் தமிழை வாட்டின. அழுதே விட்டாள் தமிழ். அவளின் கண்ணீர் இவர்களுக்கு விளங்கவில்லையா? அதைவிட கணேஷனும் கூட்டுச் சேர்ந்தவனாய் மீனாவுடன் சேர்ந்து திட்டித் தள்ளினான். ஆறுதலாக வந்து கதைத்த சேதுவை அடக்கித் துரத்தினான் கணேஷன். ஆனால், வெண்பாவும் தகப்பன் கணேஷனுடன் சேர்ந்துதான் இருக்கின்றாள் என்று தமிழுக்குத் தெரியாது. ஏன் சகோதரன் சேதுவுக்கும் தெரியாது.
இவ்வளவிற்கு நடிக்கும் சம்யூத்தாவை சிபீக்கு விளங்கவில்லை. ஆனால், தமிழ் நடிக்கின்றாள் என்று பச்சைப் பொய்யினைச் சொல்லுகின்றானே சீபி. தமிழைக் காணவில்லை என்ற சந்தோஷத்தில் ஆட்டம் ஆடுகின்றாள் சம்யூத்தா. அதையும் encourage பண்ணுகின்றான் சிபீ. சந்தோஷத்தில் மிதக்கின்றான்.
முதல்நாள் கொம்பனியே ஆட்டம் கண்டது. தன்னையும் அறியாமல், கணக்கில் ஒன்றும் விளங்காமல் தமிழைக் கூப்பிடும் சிபீக்கு ஏழரையின் உதயமெனத் தோன்றுகின்றது. ஆனால், அவனுக்கோ அது விளங்கவில்லை. அப்படி விளங்கினால் அவன் நல்ல குடும்பத்தலைவனாக இருந்திருப்பானே!
அனைவரும் ஒன்றாகச் சாப்பிடுகையிலே தமிழைக் காணாதினதால் மீனாவும், வர்ஷினியும் கவலைப்பட்டார்கள். ஆனால் மற்றவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
மீனாவின் கவலைக்குக் காரணம், தான் தமிழைத் திட்டியதை ஜனாம்மா கண்டதினால், இப்போ தமிழ் இல்லாததற்கு அவவிடம்தான் ஜனாம்மாவின் கேள்வி வரும் என்ற பயம்தான் ஓழிய வேறொன்றும் இல்லை.
ஆனால், வர்ஷிக்கோ, உண்மையான உறவென்பதனைத் தாண்டி, தமிழ் ஒரு நண்பி மாதிரி. அத்துடன் ஒரு நல்ல சகோதரி போன்ற பழக்கம். இதனால் அவளின் மனம் வாடியது. தேடித் திரிந்தாள். தமிழின் வீட்டிலும் விசாரித்தாள். கவலையுடன் தன் வீட்டிற்குத் திரும்பினாள்.
சேதுவுக்கும், கேடீக்கும் உள்ள துடிப்பில் 1 வீதமாவது சிபீக்கு வரவில்லை. எவ்வளவோ சிபீக்குச் சொல்லிப் பார்த்தார்கள். சிபீயோ அசட்டையாக, ஆனால் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அப்போது வந்தார் ஒரு சட்டத்தரணி. ஒரு கடிதத்தினை நீட்டினார் சிபீயிடம். என்ன கடிதம் இது என்ற சிபீயின் கேள்விக்கு, இது தமிழ் மடம் உங்களிடம் கொடுக்கும்படி சொல்லித் தன்னிடம் கொடுத்ததாகச் சொன்னார். இந்தக் கடிதத்தினைப் பார்த்ததிலிருந்து, சிபீக்கு காலையில் இருந்த சுதந்திரம் என்ற வார்த்தையும், அவன் உதிர்த்த சிரிப்பும், சம்யூத்தாவுடன் சேர்ந்து துள்ள வைத்த சந்தோஷம் எல்லாம் மறைந்ததன.
கேடீயின் கேள்விக்கு சிபீ சொன்னது. தமிழின் கைபட எழுதி கையெழுத்துப் போட்ட கடிதம் இது. தான் இந்த சொத்துக்களிலிருந்தும், கொம்பனி்ப் பொறுப்புகளிலிருந்தும் விலகுகின்றேன் என்ற அறிவித்தல் கடிதம் அது. சிபீயின் இரத்த நாடிகளெல்லாம் அறுந்தன. இனி இப்படித்தான் சிபீயின் வாழ்க்கையானது தொடரப் போகின்றது.
உடனே கேடீ சொன்னான், இனித் தமிழ் வரமாட்டாள் என்பதுதான் இந்தக் கடிதத்தின் அர்த்தம் என்று விளங்குகினதென்று. இதுவும் விளங்காமல் இருக்கும், இந்தக் கடிதத்தின் கனாகனம் என்ன என்பதும் விளங்காமல் இருக்கும் சிபீக்கு.
ஆட்டம் காணப் போகும் ஜனாம்மாவின் சாம்ராஜ்யம். ஆனால், உங்களை விழ விடமாட்டேன் ஜனாம்மா என்று போகும் முன்பு தமிழ் கூறின வார்த்தைகள் அவை. இல்லை, அவை அவள் கொடுத்த வாக்குகள்.
சிபீயின் அகங்காரம் அனைத்தையும் அழிக்கப் போகின்றது. கள்ளரின் காடைத்தனம் இனி தலைவிரித்தாடப் போகின்றது. கணேஷனின் குடும்பமோ சந்தோஷம் தாங்க முடியாமல் லட்டு உண்கின்றார்கள். ஆனால், இந்த சந்தோஷம் நிலைக்குமா என்பது ஒரு கேள்வியாக என்னிடம் தொக்கு நிற்கின்றது. அத்துடன், இனி எவருக்கு ஜனாம்மாவின் வீட்டில் இடம் இருக்கிறதென்று பார்க்கத்தானே போகின்றோம்.
மடிப்பிச்சை ஏந்தியவளை, பொங்கலை நிலைநாட்டியவளை, சிபீயின் தோஷங்களுக்காக தீ மிதித்தவளை, எதிரிகளிடமிருந்து குடும்பத்தினையே காப்பாற்றியவளை, வியாபாரத்தில் வெற்றி வாகை சூட வைத்தவளை, 20 வருட காலங்களாக கணேஷனினால் மயக்கத்திலே வைத்திருந்த கணேஷனிடமிருந்து நல்ல வைத்தியம் பார்க்க வைத்து பிரகாஷின் உயிரினை காப்பாற்றி உயிர்க்க வைத்தவளை, இப்படி எத்தனேயோ நன்மைகளைச் செய்தவளை தூக்கியெறிந்த அனைவரும் படப்போகும் பாடுகளை இனி பார்க்காமலா விடலாம் என்று நினைக்கின்றீர்கள். பார்க்கத்தானே போகின்றோம்.
ஜனாம்மாவின் கேள்விக்கு ஒருவிதமான பதிலும் ஒருவரிடமிருந்து வரவில்லை. ஆனால், வர்ஷிதான் வாயைத் திறந்தாள். எல்லாவற்றினையும் விளாவரையாகச் சொன்னாள்.
சிபீயோ தமிழைத் தேடி அலைகையில் ஒரு பெண்ணின் சடலத்தினைக் கண்டான். அவனுக்கோ இப்படியானவற்றினை பார்க்க முடியாது. அது தனது தகப்பனை அவன் கண்டதினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் தொடர்ச்சி.
ஆனால், எனக்கு கொஞ்ச சந்தேகங்கள் இருக்கின்றன. தமிழ் அப்படியெல்லாம் தொப்பென்று விட்டு விட்டு, பிரச்சினைகளுக்காக ஓடி ஒதுங்கும் character இல்லையே!
இது, ஜனாம்மாவுடன் தமிழ் கதைத்துப் போசி, கள்ளரை கூட்டோடு பிடிப்பதற்கு போட்ட நாடக அரங்கேற்றமோ என்று தோன்றுகின்றது.
அத்துடன், இது சிபீக்கும் போட்ட sketch என்றும் நினைக்க இடமுள்ளதாகத் தெரிகின்றது.
இது ஜனாம்மாவிற்கும் தமிழுக்குமான ஆட்டம். திட்டம் போட்டுக் கொடுத்தது தமிழ். அனுமதி கொடுத்தது ஜனாம்மா. தமிழ் ஒழித்திருக்கும் இடம் ஜனாம்மாவின் ஒருவருக்கும் தெரியாத வீடு.
பொறுத்திருந்து பார்ப்போமே!
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!