posted 2nd March 2026
இந்த Serial Review & Analysisஇனில் நீங்கள் பார்க்கப்போவது;
- மீனாவின் ஜனாம்மாவின் மீதான ஆத்திரமானது நியாயமானதாக இருந்தாலும் அவ்வளவிற்கு ஜனாம்மாவின் மேலே எதையும் அறியாமல் குரல் உயர்த்தியது பிழையானதாக இருக்கின்றது.
- எங்குதான் சாட்டு கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் கணேஷனோ தனது பிழையினை மறைப்பதற்காக 20 வருட காலங்களாக நடித்துக் கொண்டிருப்பது மீனாவிற்குத் தெரியவந்தால், மன்னிப்பாவா? வீட்டினை விட்டு துரத்தி விடுவாவா?
- சிபீ தான் சரியாக நடக்க வேண்டும். அதன் பின்பு மற்றவரைத் திருத்த வேண்டும். இதுதான் தமிழின் கேள்வியே!
- அம்முவும், ஜெயறானியும் ஒருவரே. இவதான் தமிழின் அம்மா. இவதான் ஜனாம்மாவின் மகள். இவதான் சிபீயின் தூக்கி வளர்த்த அத்தை. இப்போது மாமியார். எல்லாமே அம்முதான்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 21.02.2026
அம்முவைக் கண்ட மீனா ஆக்ரோஷத்துடன் வீட்டிற்கு வந்தா. தனது மாமியார், அதுதான், ஜனாம்மா வரட்டும் ஒரு முடிவு கட்டுகின்றேன் என்ற கோபத்துடன் நிற்கையிலே, கணேஷனும், தான் ஏதோ நல்லவன் மாதிரி, குரலை உசத்திக் கதைத்து மீனாவை உசுப்பேற்றி விட்டான். இந்த நிலையினை அறிந்த முத்தம்மா, இங்குள்ள ஜனாம்மாவின் பிள்ளைகளைத் தூக்கி வளர்த்தவள் என்ற ஒரு பாசம் அவளுக்கு, இடையிட்டு, மீனாவைக் கொஞ்சம் அமைதியாகக் கதைக்கும்படி சொன்னாள். ஆனால், மீனாவோ அப்போதே தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்பதனையும், முத்தம்மா தனது வீட்டினில் வேலை செய்பவள் என்பதனையும் நாசூக்காகச் சொன்னா.
ஜனாம்மாவும் வீட்டிற்குத் தமிழுடன் வந்ததும் வராததுமாக, ஜனாம்மாவைக் குரலுயர்த்திக் கூப்பிட்டா மீனா. இதனை ஒருவரும் எதிர் பார்க்கவில்லை. ஆனால், சந்தோஷத்தில் மிதந்த கணேஷன். ஜனாம்மாவிற்கோ நன்கு தெரியும், இப்படி கதைப்பது மீனாவின் குணமில்லை என்பதுவும், யார் அவவிற்கு உசுப்பேற்றி விட்டிருப்பார்கள் என்பதும்.
அப்பவும் தமிழ், தனது அத்தை, மீனாவுக்கு, கொஞ்சம் பொறுக்கும்படியும், ஜனாம்மா இப்பதான் வந்துள்ளா என்றும் கூறியதற்கு மீனாவோ தமிழை தான் அவளின் மாமியார் என்பதனால் அதட்டி அடக்கினா. மீனா கேட்ட ஒரு கேள்விக்கும் ஜனாம்மா ஒருவிதமான பதில்களும் கூறாமல், தமிழைக் கூறும்படி பணித்தா. தமிழும், அம்முவின் குடும்ப நிலையினை விளங்கப்படுத்தினாள். அத்துடன், அம்முவோ ஒரு வேலை கேட்கும் ஒருவராகத்தான் அங்கு வந்தா என்பதுவும் சொல்லிப்பார்த்தா. ஆனால், ஒருவரும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இந்த முடிவானது தமிழ் தானாக எடுத்தில்லை. தமிழின் மாமா, பிரகாஷ், எடுத்த முடிவுதான். அதனை என்னென்று தமிழ் வெளியில் கூற முடியும்?
இதில், ஜனாம்மா அந்த இடத்தினை விட்டுப் போகையிலே மீனாவின் தோளிலே தட்டிவிட்டுப் போனது, ஜனாம்மாவிற்கு மீனாவைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்தபடியினால்தான்.
மீனாவின் கோபமும் நியாயமானதுதான். தனது புருஷனை கொலை செய்யத் துணிந்த குடும்பமது. அதனை ஒருவராலேயும் மன்னிக்க முடியாததுதான். அதைத்தான் இப்போ மீனாவினதும் ஆதங்கமும், ஆத்திரமும் கூட. ஆனால் இவையெல்லாம் கணேஷனுக்கு வரக் கூடாது. இதனைப் புரியாமலா ஜனாம்மா இவ்வளவு காலமும் காலத்தினையும், இந்தக் குடும்பத்தினையும் கொண்டோடுகின்றா.
ஆனால், பிரகாஷோ, இப்போது நலமடைந்து விட்டார். அவர் கூறிய புத்தியினால்தான் தமிழும் அம்முவை வேலையில் சேர்த்தா. அதற்கான காரணங்கள் என்னென்ன கூற வேண்டும் என்பதனையும் பிரகாஷ் மாமா தமிழிடம் சொன்னதினை வைத்துத்தான் தமிழும் இயங்குகின்றாள். இதனால், இப்போதுள்ள பிரச்சினைகளையெல்லாம் சுமூகமாகத் தீர்ப்பதற்கும், தாங்கிப் பிடிப்பதற்கும் பிரகாஷ் மாமா இருக்கின்றார் என்பதுதான் தமிழுக்கான பலமே.
வீட்டினிலே பூகம்பம் வெடித்து விட்டது. என்ன என்று விளங்காமல் இருந்த சிபீயிடம் ஏறி விழுந்தா அவனின் அம்மா மீனா. இதன் விளக்கத்தினை வர்ஷினியிடம் கேட்டறிந்த சிபீ, தமிழின் மேலான கவலையின்மையினைச் சுட்டிக் காட்டினான், தமிழுக்கு. தமிழ் கேட்ட ஒரு கேள்வியினால் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனான் சிபீ.
ஆனால், சிபீக்கோ அம்மு தமிழின் தாய் என்றும், தனது அத்தை என்றும் தெரியும். ஆனால், அங்கு வேலைக்குச் சேர்ந்தது தங்களது ஓடிப் போன அத்தை ஜெயறானி என்பதுதான். ஆனால், ஜெயறானிதான் தனது உரிமையான அத்தை என்று சிபீ்க்குத் தெரியும். ஆனால், ஜெயரானிதான் அங்கு வேலைக்குச் சேர்ந்துள்ளா என்பதும் தெரியும். ஆனால், அதுதான் அம்மு, அதுதான் ஜெயரானி என்பதுவும் இருவரும் ஒருவர்தான் என்று சிபீ்க்குத் தெரியாது. தெரிந்தால் இது புதிய பிரச்சினாயாக வெடிக்குமா?
ஆனால், இருவரும் ஒருவர் என்றால், தமிழ் தனது முறைப் பொண்ணு என்று சிபீக்குத் தெரியவரும். இங்கும் சிக்கல் வரப் போகின்றது.
இதனால், தமிழின் குடும்பத்தால்தான் தனது தகப்பனுக்கு இந்த நிலைமை என்று அனைவரும் கூறுவது போல சிபீ நம்புவானாக இருந்தால், தமிழின் கதை கந்தலாகும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சிபீயோ மிகவும் ஆத்திரக் காரனும், கோபக் காரனும், ஒன்றையும் சிந்திக்காமல் உடனே முடிவினை எடுப்பவனுமாச்சே என்பதுதான் பிரச்சினையே!
ஆனால், சிபீ்க்கு உண்மையினை யாரும் விளங்கப்படுத்தினால், அதனை சிபீ ஏற்றுக் கொண்டால், தமிழுடன் சேர்ந்து தனது தகப்பன் பிரகாஷினைக் கொலை செய்ய முயன்றவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு சிபீ உதவி தமிழுக்குச் செய்வானா?
இப்படியான கன வினாக்களுடன் இந்த சீரியலின் review & analysisஆனது தொக்கு நிற்கின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!