posted 24th January 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 20ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரையுள்ள Serial Review & Analysis களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- பொங்கல் எப்படியோ கிழக்கு நோக்கிப் பொங்கியது. ஆனால், வயிறெரிஞ்சு பொங்குவோரோக்கோ கோணலாகத்தான் போகும்.
- தெய்வத்தின் சந்நிதியிலும் பாவம் செய்ய நினைப்போரை தெய்வம் என்னென்று deal பண்ணும்?
- தெய்வம் இறுங்கும் குருக்களையே பணத்திற்கு வாங்கத் துணந்தோரினை என்னென்று தெய்வம் மன்னிக்கும்.
- குறி சொன்னவர் உண்மைகளைச் சொல்வதனால், இன்றும் தமிழால் ஜனாம்மாவிற்கு கெட்டது நடக்கும் என்று சொன்னதால் கலங்கி நின்ற தமிழ். ஆனால், ஆறுதல் கூறிய ஜனாம்மா.
- விருப்பமில்லாத சிபீ தமிழை வீட்டை விட்டுக் கலைத்தான். மீனா எடுத்ததோம் கவிழ்த்தோம் என்று தமிழை ஒரு வழி பண்ணினா.
- மனமுடைந்தாள் தமிழ். எவ்வளவிற்குத்தான் அவள் பொறுப்பாள்? வீட்டை விட்டு வெளியே போனாள். வீடு சுடு காடாகியது. சிபீ நிலை தடுமாறினான். ஜனாம்மா சக்தி இழந்தா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 20 - 21.01.2026
கோயிலில் குறி சொன்னவரில், உண்மையாகத் தெய்வம் இறங்கியது. இதனை வேடிக்கை என்றும், பொய் என்றும் நம்பாதோருக்கு தெய்வம் கொடுக்கும் சோதனை. ஜனாம்மாவிற்கு தமிழால் கெட்டது நடக்கும் என்று கூறியதனை வேத வாக்காக ஊரே நம்புகையில், உலகமே நம்பினாலும் தான் நம்பமாட்டேன் என்று ஜனாம்மா கூறியது பெருமையைகத் தமிழ் நம்பினாலும், சிபீயின் வார்த்தைகளும், அவளின் அத்தை மீனாவின் வார்த்தைகளும் அவளைத் துடிதுடிக்க வைத்தன.
காலை விடிந்தது. ஜனாம்மா தமிழைத் தேடினா. ஆனால், தமிழும் இல்லை. தமிழின் குடும்பமும் இல்லை. இனி மீண்டும் வரமாட்டேன் என்று உறுதி பூண்டவளாய் தமிழ் வெளிக்கிட்டாள், வீட்டினை விட்டு.
குறி சொன்னவர் முற்று முழுதாகச் சொல்லவில்லைதான். இது ஜனாம்மாவின் சொத்து. அதன் பின்பு சிபீயின் சொத்து. அத்துடன், அந்தச் சொத்திற்கு வாய் பிழந்து நிற்கும் வாரிசுகள். இப்படி இருக்கையில் தமிழ் ஏன் தனது வாழ்க்கையினைத் தியாகம் செய்து இவர்களையும், அவர்களது சொத்தையும் காப்பாற்ற வேண்டும்?
சிபீ ஒருநாளும் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று எத்தனை தரம் சொல்லியிருப்பான், நேரடியாகத் தமிழிடம். அவளும் எத்தனை முறைதான் சிபீ சொல்வதனை கணக்கெடுக்காத மாதிரி தன்னை சுதாகரித்தவளாய் பொய்யான புன்முறுவலுடன் தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பாள்.
இன்றோ, சிபீ சொன்னதும், கோயிலில் வைத்து அறுத்துறுத்து மீனா சொன்னதும் எவ்வளவிற்கு தமிழைத் தாக்கி இருக்கும். அவளது சிறிய இதயமானது எத்தனையைத்தான் தாங்கி நிற்கும். போதுமடா சாமி என்று உங்களுடன் வாழ்ந்த இந்த நரக வாழ்க்கையானது போதுமென்று விலகினாள் தமிழ், தான் போட்டு வந்த உடுபுடவையுடன். தாலியுடன் போகின்றாளா? இல்லை அதையும் கழற்றி வைத்து விட்டுச் சென்றாளோ தெரியவில்லை. இனித் தெரியும்.
மனதினிலே மற்றவருக்கு துரோகமே நினைக்காதவள் மானத்தினை விட்டு எவ்வளவிற்குத்தான் பொறுத்திருப்பாள்? ஜனாம்மாவிற்கு தனது தாய் விஷயத்தில் பொய் சொல்லி விட்டேனே என்ற உறுத்தல்தான் தமிழுக்கு. இதனால்தான் தான் ஜனாம்மாவிற்குத் துரோகம் செய்வேனோ என்ற அச்சம் அவளுக்கு. தமிழுக்கோ அவர்கள் கூறும் வார்த்தைகளும் வலித்தன. வாழ்க்கையும் வலித்தது.
கனவு காணாதே தமிழ் ஒருநாளும் உன்னுடன் வாழமாட்டேன் என்று எத்தனை தரம் சிபீ சொல்லி இருப்பான். தமிழை விட்டு விடாதே! அவளின் மாங்கல்யம்தான் உன்னை இதுவரைக்கும் காப்பாற்றி இருக்கின்றது என்ற கூறிய நல்ல வார்த்தைகள் ஒருதருக்கும் விளங்கவும் இல்லை.
இப்போ வாய் கூசாமல் தமிழைத் துரத்தினான் சிபீ. அத்துடன் உன்னை அழிக்க ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். நீ கட்டிய மாங்கல்யம்தான் உனக்குக் காவல் என்று சாமியாடிச் சொன்னது ஒருவரின் காதினிலும் ஏறவில்லை. தமிழ் போய் விட்டாள். லக்ஷிமி வீட்டை விட்டுப் போய் விட்டது. இனித்தான் இவர்கள் அனைவரும் இருளைக் காண்பார்கள்.
இருளின் பயம் என்னென்று இனித்தான் புரியும். அழிவினைக் காண்பார்கள். இனி நான் வரமாட்டேன் என்பது உண்மையாகச் சொன்னாளா தமிழ் என்பது இன்னமும் நம்ப முடியாமல் இருக்கின்றது. விடிந்தால் தெரியும்தானே!
இனி சாமியாடியினை அடுத்த வருடம் பொங்கலின் பின்புதானே சந்திப்பார்கள். அப்போ அனைவரும் சந்திக்கு வந்து விடுவார்கள். பெருமையுடன் நின்ற ஜனாம்மா குடும்பம் அனைத்தையும் இழந்து நிற்கும். கணேஷனின் குள்ளப்புத்தியானது அப்பவும் மீனாவிற்கு விளங்குமா? இப்போ உரத்துக் கதைக்கட்டும் பார்ப்போம் இவர்கள். கணேஷனின் முன்னால் தண்ணிக்கும் கை கட்டி நிற்கப் போகும் மீனா.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!