posted 25th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- இப்போது தமிழைக் கல்யாணம் பண்ணிய சிபீ, தமிழை துன்பப் படுத்துவேன் என்று கல்யாண மேடையிலும், ஜானுவிடமும் சொல்வதற்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும். இது, தான் செய்யும் மடைத்தனம் என்று ஏன் புரியாமல் இருக்கின்றது சிபீக்கு?
- ஜனாம்மா சிபீ உயிருக்கு உயிராகக் காதலித்துக் கொண்டிருந்த சம்யூத்தாவிடம் இருந்தா பிரித்தா? அல்லது தமிழ்தான் இப்படி சம்யூத்தாவின் குடும்பம் போல அடிமட்டத்திற்கு இறங்கி சிபீயைச் சூழ்ச்சி செய்து கல்யாணம் பண்ணினாவா? ஒன்றும் இல்லையே!
- சிபீயின் கோபம் யாரின் மேலே என்று பகுத்தறிவதற்குக் கூட அவனுக்கு மூளை வேலை செய்யவில்லையே! காரணம் சேராதவர்களோடு சேர்ந்துள்ள நட்புதான்.
- இயற்கை படிப்பிக்கும் வாழ்க்கையின் வரைவிலக்கணத்தினைத் தெரியாதவன் இந்த உலகத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
- தமிழுக்கு, தானே ஆலாத்தி எடுத்தான், தானே பால் பழம் கொடுத்தான், தானே பெரியவர்களிடம் இன்று எனக்கு முதலிரவு என்று வாய் கூசாமல் ஆயத்தப் படுத்தும்படியும் இல்லாவிடில் தனக்குக் கோபம் வருமாம் என்று சிபீ சொல்வது அவனின் ஆங்காரத்தின் உச்சம்.
- ஆலாத்தி எடுத்த தட்டினைத் தூக்கி எறிந்தான். முதலிரவு என்று உள்ளே வந்த தமிழின் முன்னால் தட்டினைத் தூக்கி எறிந்தான். அவளை இழுத்துக் கொண்டு போய் வெளியில் தள்ளி விட்டான்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 19.11.2025
தனக்கு முதலிரவு, ஆயத்தப்படுத்துங்கள் என்று வீட்டிலுள்ள பெரியவர்களிடம் வெட்கமில்லாமல் வெறித்தனத்துடன் சொன்னான் சிபீ. சிபீயின் நினைப்பு காரருக்கு இழுத்துக் கொண்டு போகையிலே ஒன்றுமே கூறாமல் தமிழ் வந்தாள், ஆலாத்தி எடுக்கையிலே அமசடக்காக நின்றாள், பால், பழம் கொடுக்கையிலே அடங்கிப் போய் வாங்கிச் சாப்பிட்டாள் என்றதும், இன்று முதலிரவு என்றதும் வழியும் இல்லை வக்குமில்லை என்று சிபீயுடன் உறவு கொள்ள வந்து விடுவாள் என்று பிழையாகக் கணக்குப் போட்டுவிட்டான், சிபீ. அவ்வளவுக்கு கேவலம் கெட்டவளாக சிபீயின் கண்களுக்குத் தெரிகின்றாள் போலும்.
எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கு தமிழிடம். அப்ப இருக்கு தமிழின் ஆட்டம். எல்லாவற்றினையும் பொறுத்தாள் தமிழ். யாருக்காக, ஜனாம்மாவிற்காக. அத்துடன் ஏற்கனவே இது தனது குடும்பம் என்ற நோக்கத்துடன். அதுமட்டுமா, தனது குடும்பத்திற்காகவும் மௌனம் காத்தாள் தமிழ். ஏனென்றால் அவளின் வளர்ப்பு அப்படி.
சிபீக்குக் கோபம் வந்து விட்டதாம். அதுதான் இப்படி behave பண்ணுகின்றான் என்று. கோபம் அடங்கட்டும் என்று ஜனாம்மா சொன்னா, மீனாவிற்கு. இப்படி சொன்னதும் மீனாவிற்கு விளங்கவில்லை. எப்படி இருந்தாலும், மருமகளாக இருந்தாலும், மீனா பிறத்திதானே. தனது அண்ணனின் மகளுக்கு, வெண்பாவுக்கு சிபீயை கல்யாணம் பண்ணவில்லை என்று கோபம்தான். ஆனால், அண்ணன் கணேஷனினதும், அமுதாவினதும் குறிக்கோளே வேற. அது சொத்துத்தான்.
சிபீக்கோ ஒருதரிலும் கல்யாணம் முடிக்கும் அளவிற்கு விருப்பமில்லை. இப்போ தமிழுக்கு சிபீயால் நடப்பதனைப் பார்த்தால், இதுதான், வெண்பாவை சிபீக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் நடந்திருக்கும். இதுகூட ஒருதரும் யோசிப்பதாக இல்லை. வெண்பாதன்னும் இதனை யோசித்து தப்பினோம் சாமி என்று அரப்பு தேய்த்து முழுகி விட்டு தனது மற்ற வேலையினைப் பார்ப்பதை விட்டு விட்டு, வெண்பாவும் சிலுக்கிக் கொண்டு போவது இவளுக்கும் விளக்கமில்லை என்றுதான் தோன்றுகின்றது.
தமிழின் நெற்றியில் இருந்து இரத்தம் ஒழுகுவதனை ஒருதரும் கவனிப்பதாக இல்லை. கல்யாண மண்டபத்தில் ஜனாம்மா டொக்டர் ஒருவரை வரச் சொல்லுங்கள் மருந்து போடனும் என்று. ஆனால், மற்றவர் எவரும் தமிழைக் கவனிப்பதாக இல்லை.
கொலை செய்யக் கொண்டு போகப்பட்ட தமிழுக்கு எவ்வளவு மன உழைச்சல் இருந்திருக்கும். அதைவிட திடீரென்ற கல்யாணம் எவ்வளவிற்கு மனதளவில் தமிழ் கஷ்டப்பட்டிருக்கின்றாள் என்றெல்லாம் உணருவார் எவரும் இல்லை. ஆனால், தாலியுடன் மேடையினை விட்டிறங்கி வந்த தமிழினை ஜனாம்மா கட்டியணைத்தா. அதுவே, தமிழுக்கே மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். ஒன்று அது பாட்டியின் அணைப்பு, அடுத்தது, நான் இருக்கின்றேன் என்பது.
சிபீயால், ஆலாத்தித் தட்டினை எறியத்தான் தெரியும், பழத்தினையும், பாலையும் வெருட்டி குடிக்க வைக்கதான் முடியும், தமிழ் குடித்த பாலின் கப்பினை தூக்கி எறியத்தான் முடியும், வைக்கப்பட்டிருந்த பழங்கள் அடங்கிய தட்டினை வெறித்தனமாகத் தட்டியது, தமிழை இழுத்துக் கொண்டுபோய் அறையின் வெளியில் தள்ளி விட்டது என்று இப்படி எல்லாம் செய்தால் தமிழ் பயந்து விடுவாள் என்று சிபீயின் வீணான கற்பனையாகக் கூட இருக்கலாம்.
விளக்கமில்லாத பட்டாளம் வீட்டுக்குள்ளே சுற்றித் திரியினம். ஏதோ தமிழ்தான் துல்லியமாக திட்டத்தினைப் போட்டு சாதிச்சு விட்டாள். வீட்டிற்கு மருமகளாக வந்து விட்டாள் என்று எல்லாரும் முறைக்கினம், விறைச்சுக் கொண்டு போகினம். மீனாவுக்கு தமிழை சுத்தமாகப் பிடிக்கவில்லையாம், முறைக்கின்றா. ஏன் முறைக்கின்றா? அது அவவுக்கே தெரியாது. ஆனால், வெண்பாவை, அதுவும் தன் இஸ்டத்திற்கு தன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க உரிமையினை ஜனாம்மா தரவில்லை என்பதுதான்.
சிபீ இப்போது தனியாகவே ஆட்டம் காட்டுகின்றான். ஆனால், பிறகு வரப் போகின்ற ஆட்டமானது ஜனாம்மாவினதும், தமிழினதுமாக இருக்கும். சிபியால் தாங்க முடியாமல்தான் இருக்கும்.
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!