Varisu - வாரிசு - 18.06.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;

  • தமிழின் அமைதியின் உருவம் ஆக்றோஷமாக மாறியது பார்க்கப் போறீங்களா? அதுவும் இங்கேதான்.
  • எப்பவும் குறித்த நேரத்தில் எமது நாளாந்த நடவடிக்கைகளைச் செய்வது நன்மையானதா அல்லது ஆபத்தானதா என்பதனை நன்கு விளக்குகின்ற இந்த சீரியல்
  • நிதானத்தினை எப்பவும், எச்சமயத்திலும் இழக்கக் கூடாது என்பதனை நன்கு சித்தரிக்கின்றது

வாரிசு தமிழ் சீரியலானது நேற்று மட்டுக்கும், சிபீயைக் காணவில்லை என்பதுதான். இது வரைக்கும் சிபீயைப் பற்றி எந்த செய்தியும் தெரியவில்லை. தமிழின் உள்ளத்தில் புரைந்தோடிக் கொண்டிருக்கும் வேதனையினை உணரும் அவளின் அம்மா, அம்மு. அத்துடன், மாமியாரின் மனமாற்றம் இப்போது கொஞ்சம் தெரிகின்றது. சிபீ கடத்தப்பட்டிருக்கலாம் என்பது பொலிஸ் தரப்பின் ஊகம். வந்துவிடு சிபீ என்பது தமிழின் தாகம். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் சிபீயை, அவனது laptopஇல் தமிழ் tract பண்ணுவதானது ஒரு திருபத்தினை உருவாக்கியுள்ளது.

Varisu - வாரிசு - 18.06.2026

விளித்தெழுந்த தமிழ், சிபீயைக் காணவில்லை என்று வீட்டிலுள்ள அனைவருடமும் சொல்லி அழுதாள். அனைவரும் நிலைகுலைந்து போனார்கள். சிபீ உண்மையாகக் காணவில்லை என்பதனை மாலை மட்டும் சிபீ வீடு திரும்பாததிலிருந்து அவர்களது ஊகம் நிஜமாகத் தொடங்கியது.

தமிழ் சிபீயின் call historyயை அவனது laptopஇல் tract பண்ணி அறிந்து கொண்ட பின்பு, தமிழ் பொலிஸுக்கும் ஒரு clueவைக் கொடுக்கின்றாள். இதனால், சிபீ இறுதியாக யாருடன் கதைத்தான் என்பதுவும், எந்த இடத்தில் callஆனது நிற்பாட்டப்பட்டுள்ளது என்பதுவும் கண்டறிந்ததினால் பொலிஸுக்கு தேடலுக்குத் ஒரு வழியானது உருவாகியுள்ளது.

ஆனால், இந்தக் கடத்தலுக்கும், பிரபு அல்லது பிரபுவின் அம்மாவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்பதுதான் என்பக்கத்தின் வினாவாகத் தொக்கு நிற்கின்றது. காரணமும் இருக்கின்றது.

சாதாரணமாக, கடத்துவதிலும், மனிதரைக் கொல்வதிலும், பாண்டித்தியம் பெற்றவர்கள் கணேஷனும், குறிஞ்சியும்தான். ஆனால், இவர்களுக்கும், சிபீயின் காணாமல் போனதற்கும் தொடர்பில்லாமல் இருக்கின்றது என்பது கணேஷனினதும், குறிஞ்சியினதும் சம்பாஷனையிலிருந்து தெளிவாகியுள்ளது.
காக்கிநடையிலேதான், ஒரு traffic சிக்னலிலேதான் சிபீயின் போனின் சிக்னல் நின்று போனதினை பொலிஸ் அறிந்துள்ளார்கள். அங்குதான், தமிழ், சிபீயினுடைய call historyயினை வைத்துக் கொண்டு தேடிக் கொண்டு திரிகின்றாள். மேலதிகமான எந்தவிதமான தகவல்கள் கிடைக்கவில்லை.

ஜனாம்மாவின் வீடோ ஆடிப் போய் விட்டது. சிபீயை வளர்த்தவள் அம்மு துடிதுடித்துப் போனா. ஆனால், அவவால்தான் தனது தாயின் வீட்டினுள்ளே கால் வைக்க முடியவில்லையே! அவவால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! அதுமட்டுமல்லாமல், தனது அம்மாவிற்கு தோள் கொடுக்கக் கூட அம்முவால் முடியவில்லையே!

பொலிஸின் முழுக் குழுவும் சிபீயைத் தேடி இறங்கி உள்ளது. இன்பெக்டரின் கூற்றின் படி சிபீ காணாமல் போன நிலைமையானது ஒரு கடத்தலாக இருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கின்றது என்று ஜனாம்மாவிடம் கூறிவிட்டார்.

இது இப்படி இருக்கையிலே, இன்ஸ்பெக்ரரின் கூற்றினிலே ஒரு முக்கியமான கேள்வி ஒன்று இன்னமும் வீனாவாகவே இருக்கின்றது. அதாவது, யார் மேலேயும் ஜனாம்மாவிற்குச் சந்தேகம் இருக்கின்றதா என்பதுதான். அப்பவும், ஜனாம்மா தனக்குரிய வாழ்நாள் எதிரியாக இருப்பது குறிஞ்சி என்று தெரிந்தும், அதனை இன்ஸ்பெக்டரிடம் சொல்லியும், இறுதியாக, ஜனாம்மா குறிஞ்சியைக் கைகாட்டவில்லை. இதுதான், நிதானம் என்பது. அது கோபமாக இருந்தாலோ, கவலையில் தோய்ந்திருந்தாலோ நிதானம் என்பது மிகமிக வாழ்க்கையிலே அவசியமாகின்றது.

அதைத்தான் குறிஞ்சியுடன் கணேஷன் கதைக்கும் போது, குறிஞ்சிக்கோ சிபீ தனது எதிரி இல்லை என்பதுவும், தமிழ்தான் தனது எதிரி என்றும் கூறியதும் இங்கு நினைக்கத் தோன்றுகின்றது.
அதுமட்டுமல்லாமல், பிரபுவும், அம்மாவும் நினைத்தது அதாவது, தங்களது நீண்ட காலத் திட்டமிது என்று கூறியது, ஜனாம்மாவின் சொத்து தங்களுக்கு கொஞ்சமாவது கிடைத்தால் தாங்கள் வாழ்க்கையிலே settle ஆகி விடலாம் என்பதாகவும் இருக்கலாமல்லவா?

மேலும், பிரபு, வர்ஷினியைக் கண்டதும் அவன் கெஞ்சினது, அவன் வர்ஷினியின் மேலே வைத்த உண்மையான காதலாகவும் இருக்கலாம்தானே! அத்துடன், வர்ஷி தனக்கு சேதுவை வீட்டினிலே கல்யாணம் ஒப்பந்தம் செய்துள்ளதனைச் சொல்லுகின்றாள். பிரபு தாங்களாகவே கல்யாணம் பண்ணுவோம் என்று வர்ஷிக்குக் கூறிக் கொண்டிருக்கையிலே, சேதுவுடனான கல்யாண ஒப்பந்தம் ஒழுங்காகி உள்ளது என்பதனால், பிரபு வர்ஷியை வாழ்த்தி விட்டுச் சென்றது அவனின் பெருந்தன்மை என்றும் நினைக்கலாமல்லவா?

சேதுவும், கேடீயும் சிபீயைத் தேடிக் கொண்டு திரிகையிலே, அவர்களுக்கும் ஒரு விதமான துப்பும் கிடைக்கவில்லை. ஆனால், பிரபுவின் மேலேதான் இப்பவும் சந்தேகம் வந்துள்ளது. காரணம், சிபீதான் தனது நிட்சயதார்த்தத்தினைக் குழப்பியது என்றதை உணர்ந்தவர்கள்தான் பிரபுவின் குடும்பம். இதனால் பிரபுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்பது உறுதியாக அவர்களது மனதினில் வந்து விட்டது.
ஆனால், இந்தக் கடத்தலில் குறிப்பாக பிரபுவின் அம்மாவிற்குத்தான் சம்பந்தம் இருக்கலாம் என்று ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால் குறிஞ்சியின் மனைவியாச்சே இவ. ஒரே குட்டையிலே ஊறினவளாச்சே!

ஆனால், தமிழ் தனக்குள்ளே தனிமையிலே வாடி வதங்கிப் போய் இருக்கையிலே அதனை மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளாமல் அறையினுள் அழுது துடிக்கின்றாள். இதெல்லாம் உணருகின்றா மீனா. மீனா, பெத்தவளாச்சே, சிபீ காணாமல் போனதனைத் தாங்க முடியாமல் துடிக்கின்றா.

சிபீயின் காரானது வீட்டினிலே இருக்கையிலே, நடைப்பயிற்சிக்குப் போவதென்றால், இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், இப்பவும் வராததினால்தான் அனைவருக்கும் பீதி உண்டாயிற்று. ஆனால், நடைபயிற்சிக்குப் போகையிலேதான், சிபீ கடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்.
ஆனால், சிபீ அப்படிக் கோளையல்ல. எத்தனை பேர்கள் என்றாலும் சிபீ அடித்து நொருக்கிப் போட்டு வருவான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்ஸ்பெக்டர் கூறியபடி, சிபீக்கு மயக்கமருந்து கொடுத்து கடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உண்டு என்பதுதான் கண்கூடாக இருக்கின்றது.
தமிழினது தாலிப் பாக்கியமும், ஜனாம்மாவின் குடும்பத்தின் நல்ல வாழ்க்கையும், தர்ம, தானங்கள், இவற்றுடன் தெய்வ நம்பிக்கை அனைத்தும் சிபீயைக் காப்பாற்றுமா?

வீட்டிலுள்ளவர்கள் ஒருபுறம் சிபீயைத் தேடினாலும், தமிழ் இந்தத் தேடுதலில் முக்கியமாக எங்கெங்கு தேட முடியுமோ அங்கெங்கெல்லாம் தேடத் தொடங்குவாள் என்பதுடன், தனக்கு உதவியாக கேடீ, சேதுவையும், பொலிஸ் உதவியையும் நாடுவாள் என்றம் ஊகிக்கத் தோன்றுகின்றது.

அதுமட்டுமல்லாமல், பொலிஸுடனும், சேதுவுடனும் தனது location ஐ share பண்ணிக் கொண்டுதான், தமிழ், தனது அத்தை மீனாவிற்குக் கொடுத்த வாக்கின் படி களத்தில் இறங்குவாளா?

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)