posted 18th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- கோட்டில் சரளாவின் அடக்கம், தமிழின் முன்னால் அவளின் ஆட்டமெல்லாம் முடக்கம்.
- நேருக்கு நேராக நின்று கதைப்பதற்கு முத்தம்மாவிற்கு மட்டும்தான் கெத்து இருக்கு, ஜனாம்மாவின் முன்னால்.
- கணேஷனின் தொடை நடுக்கம் ஆரம்பம், வேண்டாம், வேண்டாம் என்று தமிழ் கூறியும் சொல்வழி கேட்காததினால் வந்த குளப்பம்.
- கணேஷன் தலைமறைவாவானா? வெண்பா இருக்கின்றாவா இல்லையோ தெரியவில்லை. அமுதா ஆள் மாறாட்டம் செய்வாவா?
- எப்படித்தான் இருந்தாலும் ஜெயறானி இறுதியில் தாயுடன் சேருவாவா? எவ்வளவோ பிரச்சினைகளை ஜனாம்மாவின் வீட்டில் ஏற்கனவே இருக்கையிலே, தள்ளி இருப்பதுதான் மனதுக்கு இதமாகும் என்று ஜெயா குடும்பத்துடன் விலகி இருப்பாவா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 18.05.2026
ஜனாம்மாவும், வீட்டிலுள்ளவர்களில் சிலர் கூறிய பிரகாரம் ஜெயா கேட்பதனை விட இரு மடங்காகக் தரச் சொல்கின்றேன் என்று தன் இரத்தத்தோடா விலை பேசுகின்றா ஜனாம்மா. ஜெயறாணியுடன், தனது மகளுடன் கதைக்கும் விதம் சரியில்லையே!
மந்திரிக்காக, அதுவும் பொது நலத்திற்காக, இரத்த உறவுடன் ஏனோ தானோ என்று பேரம் பேசலாமா? கூடாதே! ஒரு எதிரியோட கதைத்தது போலல்லவா ஜனாம்மா கதைத்தா. எல்லார் முன்னிலையிலும் ஒரு சொல்லுமே கதைக்காமல் அமைதியாக நின்றா ஜெயறாணி. எல்லா விதமான கேவலமான கதைகளுக்கெல்லாம் மௌனம் சாதித்தா. இதுதான் பெருந்தன்மை என்பது. பெறுமதி மிக்க வளர்ப்பு என்பதுவும் கூட. ஆனால், அம்முவின் பதிலோ அந்தச் சிவப்புச் சேலை என்பதுதான்.
ஒரு சொத்தும் தனக்குத் தேவையில்லை என்று கூறிய அம்மு, தனது தாயின் பழைய சேலை, அதுவும் தன்னைப் போர்த்தி விட்டுச் செல்லும் சேலையினைத் தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டு அந்த நிலத்தினை எழுதிக் கொடுத்தா, அம்மு. இதனால், அனைவரும் வெட்கித்து தலைகுனிந்தனர்.
ஜனாம்மாவின் மனச்சாட்சியானது வெளியால் சொல்லா விட்டாலும் உள்ளுக்குள் வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஜனாம்மாவுடன் மீண்டும் சேர வேண்டுமென்றால், ஜெயா தனது புருஷனை விட்டு விட்டு தன்னிடம் வரவேண்டும் என்பதுதான் ஜனாம்மாவின் conditionனே.
தனது மகளுடனான கோபமானது, அன்று பிரகாஷ் விபத்திற்குள்ளான போது கணேஷன் சொன்ன ஒரு சொல்லினை வைத்துத்தான் 25 வருடங்களாக அம்முவுடன் கதைக்காமல் இருக்கின்றாவே என்பது மட்டுமல்ல, தனது வீட்டு றைவரைக் கல்யாணம் பண்ணி தனக்கு அபகீர்த்தி உண்டாக்கினா என்பதுதான். ஆனால், பிரகாஷ் எழுந்து வந்து செல்வரத்தினம் அப்படிப் பட்டவன் அல்ல என்ற உண்மையினைச் சொல்லியும் ஜனாம்மா ஏற்றுக் கொள்ளுவதாக இல்லை.
சரளாவின் பிரச்சினை அடுத்த பக்கம். இப்போது சரளாவின் தம்பி, அவர்களது சட்டத்தரணியுடன் சேர்ந்து வந்து தாகாத வார்த்தைகளால் மரியாதையீனமாகப் பேசத் தொடங்கினான் ஜெயறாணியை. ஜெயறாணி அவவுடைய நிலத்தினை சரளாவிற்கு எழுதிக் கொடுக்காததினால்தான் இந்த கேவலமான பேச்சு கேட்க வேண்டியதாயிற்று.
சரளாவின் இந்த அடாவடித்தனத்திற்கு ஒரு நிரந்தரமான முடிவு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த தமிழ், பொலிஸிடம் அறிவித்தாள். கந்து வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டத்திற்கு முரணானது என்பதனால், சரளாவின் தம்பி கைதானான். கணேஷனின் கதையினை நம்பி பேராசைப் பட்ட சரளா இப்போது கோட்டில், கேசில் அகப்பட்டாள். கோட்டுச் செலவு இனி கணேஷனா பொறுப்பெடுக்கப் போகின்றான். இதுதான் பேராசைக்குக் கிடைக்கும் பரிசு என்பதோ!
சிபீயும் ஜெயறாணியின் செயலைப் பார்த்து வியந்து போனான். இதென்னடா அந்த பழைய சேலைக்காக அந்த விலை உயர்ந்த காணியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறினாவா ஜெயறாணி அத்தை என்று.
ஜனாம்மாவின் பிடிவாதத்தினை எதிர்த்துக் கதைப்பதற்கு முத்தம்மாவைத் தவிர வேறு ஒருதருக்கும் துணிவில்லை. ஏனென்றால், முத்தம்மா ஆரம்ப காலத்திலிருந்து ஜனாம்மாவின் கஷ்ட, நஷ்டங்களுடன் தொடர்ந்து அவவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றவ. இந்நாள் வரைக்கும் முத்தம்மா ஒரு ரூபாய் கூட சம்பளமாக ஜனாம்மாவிடம் வாங்கவே இல்லை. அவ்வளவுக்கு தியாக மனமும், தயாள சிந்தையும் முத்தம்மாவிற்கு இருபதனால்தான் இந்த உரிமை ஜனாம்மாவின் மேலே முத்தம்மாவிற்கு.
முத்தம்மாவின் கேள்விகளால் தனது அம்மா அம்முவிடம் ஜனாம்மாவின் கோபம் அதிகரித்து விட்டதே என்ற விசனம் தமிழுக்கு. ஆனால், அப்படி இல்லை என்பது முத்தம்மாவின் நிலைப்பாடு. அம்முவைத் தூக்கி வளர்த்தவள்தான் முத்தம்மா. அவளுக்கு ஒரு சிறு அசைவையும் உணராதவளா, அல்லது அதன் அர்த்தம்தான் என்ன என்று புரியாதவளா முத்தம்மா. எல்லாம் நல்லாவாகத்தான் நடக்கும் என்பது முத்தம்மாவின் எதிர்வு கூறல் தமிழுக்கு.
- ஜனாம்மாவின் மனம் கசியுமா? அல்லது மேலும் இறக்கமாகுமா?
- தமிழுக்குத் திமிராக ஆட்டம் காட்டிய கணேஷன், இப்போ சரளாவின் பொலிஸ் கெடுபிடியில் வாலைச் சுறுட்டுவாரா?
- தமிழிடம் காணியைக் கொடுக்கச் சொன்ன சிபீ, இப்போவாவது, தனது அத்தையை விளங்கிக் கொள்வானா?
- ஒன்றையும் யோசிக்காமல் சரளாவை இறுக்கினாள் தமிழ்.
- பிரபுவின் குள்ளத்தனத்தினைக் கண்டறிந்தால், தமிழ் சும்மா விட்டு விடுவாளா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!