posted 17th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- தமிழ் காப்பாற்றப்பட்டாள், றௌடிகளிடமிருந்து. என்ர தமழின் மேலே கை வைப்பியா? இந்தக் கைதானே தமிழைக் கொல்ல வந்தது என்று சொல்லிச் சொல்லி றௌடியின் கையினை அடிக்கு மேல் அடித்த சிபீ.
- ஜனாம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் மறைத்தாலும், ஜனாம்மா பிரச்சினை என்று கண்டுபிடித்து விட்டா. தாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்றதினால் விட்டுச் சென்ற ஜனாம்மா.
- மீண்டும், மீண்டும் உன்னில லவ் இருக்கிறதென்று தப்பாக நினைக்காதே என்று சொல்லும் சிபீ. சிபீயின் உள்ளத்திலிருந்துதான் இந்த வார்த்தைகளெல்லாம் வந்தது love வால்தான் என்று உறுதியாகவுள்ள தமிழ்.
- செல்வரத்தினம், தமிழின் தகப்பன், பிரசாதம் கோவிலிலே பக்தர்களுக்குக் கொடுப்பதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். தான் யாரென்று தெரியாத நிலையிலும், தன் குடும்பம் யாரென்று மறந்த நிலையிலும் அம்மனிடம் தனது பாரத்தினை இறக்கி வைக்க வந்தவராய்.
- வெண்பாவின் கதையினை சேது கேட்காவிடிலும், அவளது முகபாவனையானது சந்தேகத்தினைக் கொடுக்கையிலே, வெண்பா குறிப்பிடும் கறுப்பாடு, இவளாகத்தான் இருக்கலாம் என்று ஒரு சந்தேகத்தில் சேது.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 16.12.2025
ஏற்கனவே குறிப்பிட்ட பிரகாரம் வெண்பா தனது access card ஏற்கனவே காணாமல் போய் விட்டது என்று சொல்லுவாள் என்பது இங்கு வெண்பா சேதுவிடம் சொன்னதில் இருந்து நிருபணமாகின்றது.
அதற்காக வெண்பா ஏற்கனவே தமிழின் access cardடினை எடுத்து வைத்துள்ளாள். இது தமிழுக்குத் தெரியாமல்தான் நடந்திருக்கும். ஏனென்றால், இந்த access cardடானது தமிழ் கொம்பனியினை விட்டு வெளியில் போகவும் தேவையானது என்றும், தமிழை கொம்பனியினுள்ளே வைத்த அடைப்பதற்கும், தமிழை உள்ளேயே வைத்து முடித்து விடவும் முடிவெடுத்தவளாய் வெண்பா.
தேனீரைத் தமிழுக்குக் கொடுத்து நல்லவளாக நடித்துவிட்டு, அடியாட்களை தமிழின் உயிரெடுக்க அனுப்பிவிட்டு போய் விட்டாள் வெண்பா. வெண்பாவின் கஷ்ட காலம், இசையில் தெய்வம் இருக்கின்றது என்று தெரியாதவளாய் உயிரெடுக்கத் துணிந்தாள் வெண்பா. இசையினால் உந்தப்பட்ட சிபீ நல்ல நேரத்திற்கு, இசையுடன் கொம்பனிக்கு வந்தான். தமிழின் பின்னால் தமிழைக் கொல்ல வந்தவர்களைக் கண்டு வியந்த சிபீ. தமிழ், தன் மீதான சிபீயின் அன்பின் உச்சத்தினை இரசித்துக் கொண்டு நின்றாள். இவ்வளவு பிரச்சனைகளுக்குள்ளும் தனது கோட்டினைத் தமிழிடம் சிபீ பத்திரமாக வைத்துக் கொள்ளக் கொடுத்தானே ஒழிய, இசையிடம் அல்ல.
ஏதோ நடந்திருக்கின்றது என்று சிபீயும், தமிழும் மறைத்தாலும், அவர்களின் நிலையினை வைத்து கண்டு பிடித்த ஜனாம்மா. வெகுவாகக் கொதித் தெழுந்த ஜனாம்மாவைத் தமிழும், சிபீயும் ஆற வைத்தார்கள். தமிழ் எதுவிதமான பயமும் இன்றி கவனமாக இருந்தது அவளின் துணிவினைக் காட்டுகின்றது.
தமிழ் இப்போது தனி ஆள் இல்லை என்பதனையும், அவளுக்குப் பாரிய பொறுப்புகளும், குடும்பமும் இருக்கின்றது என்று நினைவு படுத்தினா ஜனாம்மா. எல்லாம் உணர்ந்தவளாய் தமிழ்.
சந்தேகம் தமிழுக்கு சம்யூத்தாவின் மேலேதான். என்றாலும், சம்யூத்தாவை தமிழ் ஜனாம்மாவிடம் விரல் காட்டினால், சம்யூத்தாவை வேலைக்கு அமர்த்தியிருக்கும் சிபீயின் மேலேதான் குற்றம் வரும் என்பதனால், தமிழ் அமைதியாக இருந்தது, தமிழ் எப்படியெல்லாம் சிந்திக்கின்றாள் குடும்பத்தினை கொண்டு நடத்துவதற்கு என்பது புலனாகின்றது.
தான் யாரென்றும், தனக்கு குடும்பம் இருக்கின்றதா, இல்லையா, என்று ஒன்றுமே தெரியாமல், தனது எல்லாப் பாரத்தினையும் அந்த அம்மனின் மேல் வைத்தார், தமிழின் அப்பா, செல்வரத்தினம். இவரோ கோவிலுக்கு பிரசாரம் எடுத்து வந்து பக்கதர்களுக்குக் கொடுப்பதற்காக அம்மனின் பாதத்தில் வைத்து எடுத்துக் கொண்டார்.
வருந்திக் கேட்பதனை தெய்வத்திற்கு பக்தனைப் பிடித்திருந்தால் தெய்வம் தனது பக்தர்களை வருந்த விடாது. தன்னுடன் அணைத்து ஆறுதல் தரும். அதைத்தான் இப்போது அந்த அம்மனே தேங்காயினில் பூ வர வைத்து ஒரு அறிகுறி காட்டியது.
அம்முவையும் கோவிலுக்கு வரவைத்தது அந்த அம்மன். ஒருமுறை உணவு காட்சியப் படுத்துகையிலே தகப்பனை இசையின் கண்ணில் காட்டியது. இன்று, இசையுடன்தான் கோவிலுக்கு அம்முவும் வந்துள்ளா. இசையின் ஆசையினை பூரணமாக நிறைவேற்ற முடியாத அம்மு. ஐயாவின் அழைப்பிற்கு செல்வரத்தினம் அங்கு செல்ல, இங்கு இசை பிரசாதம் வாங்கிச் சென்றாள்.
மீண்டும் சொல்வது இதுதான், தெய்வம் தனது விடையினைக் கொடுப்பதற்கு ஒரு காலம் வைத்திருக்கின்றது. அதற்காகப் பொறுத்திருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
தமிழோ சிபீயினை அடக்கி வைத்து அவனின் நோவிற்கு சுடுநீர் ஒத்தடமும் பிடித்து விட்டா. இதனால் ஆறுதலடைந்தாலும் ஒன்றும் நடக்காத மாதிரி பாசாங்கு காட்டுவதிலே நிதானமாக இருந்தான் சிபீ.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!