Varisu - வாரிசு - 15 - 16.09.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • பதின்மரின் கல்யாணமானது அனைவரின் சந்தோஷத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் இருக்கும் அந்த கடைசி வினாடியில் ஒரு குரல் அனைவரின் சந்தோஷத்தினைக் கெடுத்தது.
  • எதிரியினால் வயது குறைந்த ஒரு ஜோடி உள் நுழைக்கப் பட்டது. காசுக்காக, தங்களின் சுயநலத்திற்காக அனைவருடைய சந்தோஷத்தினை அழித்து வாழுவதனைத் தொழிலாகக் கொண்ட வர்க்கத்தினைக் கொண்டவர்கள் இந்த ஜோடிகள்.
  • இதனில் வசதி குறைந்தவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பணம் அவர்களின் பலவீனமாக எடுக்கப்பட்டது. ஆனால், அரசிடம் கூலி வாங்கும் பொலிஸ் அதிகாரியின் இலஞ்சத்திற்குத் துணைபோன செய்கையானது எந்தப் பகுதியில் சேர்க்கப்படும்?
  • சிபீயும், தமிழும் ஒன்றிணைந்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ஜோடியினைக் கண்டு பிடித்து கல்யாண வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதன் பின்னணியில் எப்பவும் இருக்கும் குறிஞ்சிநாதனின், வாலாக ஆடுகின்றான் கணேஷன். தொடர்ந்து மன்னிப்பு வழங்கும் தமிழ்.
  • சிபீயின் தொடரும் ஏமாற்றும் படலம். outingக்கு வற்புறுத்தும் சிபீ. தனது வலையினில் சிக்க வைக்க தொடர்ந்து முயற்சியில் சிபீ.
  • கணேஷனிடம் உண்மையினைக் கூறும் சிபீ. அதில் பெருமிதம் கொள்ளும் கணேஷன்.
  • சிபீயினை நம்பிப் போகும் தமிழ். அதுமட்டுமல்லாமல் தமிழுக்கும் சிபீயின் மேலே ஒருவித உணர்வுகள் உதயமாகின்றன – இது சிபீயின் மேலுள்ள காதலா? இருக்கலாம். ஆனால், Outing படிப்பிக்கப் போகும் பாடத்தினை மறக்க முடியாமல் தவிக்கப் போகும் சிபீ.
  • இந்த outing நல்லவிதமாக உண்மையான காதலின் கனவுகளின் ஆரம்பமாக இருந்தால் சிபீயுக்கு நல்லது. இல்லாவிட்டால், தமிழினை ஏமாற்றும் trip ஆக இருந்தால், அது சிபீயுக்கு நரகத்தின் வாசலைக் காட்டுவாள் தமிழ்.
  • ஆனால், சிபீயின் இந்த outingஆனது ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும். அதனால், சிபீயின் மனமாற்றம் அங்கு தெரியும்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

வாரிசு - Varisu - 15 - 16.09.2025

வசதி படைத்தவர்கள், வசதியில் குறைந்தவர்களைக் குறிவைப்பது இயற்கையாகவே உள்ள விஷயம். இந்த இயற்கைத் தத்துவத்தினை அனைவரும் எல்லாவற்றிலும் பாரக்கக் கூடியதாக இருக்கும். அப்படியான ஒன்றினைத்தான், குறிஞ்சிநாதன் கையில் எடுத்தான். அவன் தெரிவு செய்த ஜோடியில், இரண்டு pointsகள் உள்ளன. ஒன்று, வயதில் குறைந்த பெண், இரண்டாவது, பண வசதியில் குறைந்த நிலைமை அவளுக்கு. இந்தத் தெரிவில் அடுத்தது, ஒரு அரச பதவியில் இருக்கும் பணத்தினை வாங்குவது மட்டுமல்லாமல் கெத்தாகவும், ஒரு சூடு சொறணை இல்லாத ஒரு பொலிஸ் அதிகாரி.

ஏனென்றால், போட்ட திட்டம் சொதப்பினால், ஒருவிதமான குற்ற உணர்வும் இல்லாமல், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அடுத்த கணமே இடத்தினை விட்டு வெளிவரக் கூடியவனானகவும், உயர் அதிகாரியின் திட்டுகளை சக்கைரையாக மெண்டு விழுங்கக் கூடியவனாகவுள்ள ஒருவன்.
இவன்தான், முதல் போட்டவர்களை நம்பி, கெத்தாக கல்யாண மண்டபத்தினுள் வந்து கல்யாணத்தினை நிற்பாட்டினான். அத்தனை புது மண ஜோடிகளின் கனவுகளும் கலைக்கப்பட்டன.
ஆனால், ஒரு மணி நேரத்தில் உங்கள் சந்தோஷம் உங்களுக்கு வரும், கொஞ்சம் பொறுங்கள் என்று சிபீயினைக் கூட்டிக் கொண்டு வெளியேறினாள் தமிழ்.

இந்த முறை ஒழுங்குபடுத்தப்பட்ட கல்யாண நிகழ்வில் கொடுக்கும் நகையினில் தில்லுமுல்லு செய்யப்பட்டது. அதனைத் துல்லியமாக முறியடித்தாள் தமிழ். எதிரியாகவும், துரோகியாகவும் வீட்டினுள்ளேயுள்ள கணேஷனின் அழுக்குப் படிந்த குணங்களும், நடவடிக்கைகளும் இருக்கையிலே என்னென்று நல்ல விஷயங்களை சந்தோஷமாகச் செய்ய முடியும்.

கண்ணும் கருத்துமாய் இருந்தாள் தமிழ் – காவல் தெய்வமாய் இருந்து காத்து நின்றாள், ஜனாம்மாவையும், குடும்பத்தினையும்.

ஜனாம்மாவின் அன்பினிலேயும், நேர்மையிலேயும் அடிமைப்பட்ட தமிழ், இப்போது, ஜனாம்மா தனது பாட்டி என்றதும், வாழ்க்கையிலே அவவைத் தடக்கிப் போக வைப்பாளா?

ஜனாம்மாவிற்கு எதிராக எழுந்துவரும் சவால்களை தகடு பொடிகளாக்க மாட்டாளா? இப்படி ஜனாம்மாவின் எதிரிகளைப் பந்தாடும் தமிழிடம், அந்த எதிரிகள் போல சிபீயும் அகப்பட்டுவிடாது தெய்வம்தான் சிபீயைக் காப்பாற்ற வேண்டும்.

சிபீயின் தொடரும் ஆட்டம், தமிழைப் பழிவாங்கத் துடிக்கும், துள்ளிக் கொண்டிருக்கும் அவன் மனம். கணேஷனின் அழைப்பை ஏற்று அருகில் சென்றான் சிபீ. எதையும் நேராகவும், சுருக்கமாகவும், சுறுக்காகவும் கதைப்பதும், கேட்பதும் சிபீயின் வழக்கம். ஆனால், தமிழிடம் வழிந்து வழிந்து கதைக்கின்றானே என்று தமிழ் இன்னமும் கருத்தில் எடுக்கவில்லை.

Outing போவதெல்லாம் விரும்பாத தமிழினை, கஸ்டப்படுத்தி, தமிழை இஸ்டப்பட வைத்தான் சிபீ. எதெல்லாம் தமிழுக்குப் பிடிக்காதோ அதனை எல்லாம் ஒவ்வொன்றாக தமிழிடம் திணிப்பான் சிபீ.
சிபீயின் நோக்கம் தமிழைச் சந்தோஷமாகவும், தன் வாழ்க்கையின் துணைவியாகவும் ஏற்று வாழுவதல்ல. மாறாக, அவளை தனது காதல் வலையினில் சிக்க வைத்து அவளின் வாழ்க்கையினைச் சின்னாபின்னமாக்குவதுதான். இதனைத் தாங்க முடியாத தமிழ் தன்னை விட்டும், இந்த வீட்டை விட்டும் ஓடோடி விடுவாள் என்பதுதான், அவனின் master plan.

வெளிநாட்டில் படித்தாலும் சிபீ, தன் நல்ல குணங்களை இப்போ பெட்டியினுள் போட்டு அடைத்து விட்டான், தமிழினைப் பொறுத்தவரை.

ஆனால், தமிழோ ஒரு பாவப்பட்ட ஜென்மம் என்று ஜனாம்மா சொன்னதினை மனதில் கொண்டாள். அத்துடன், அவள் ஒரு வஞ்சகமில்லாத உள்ளம் கொண்டவள், மாற்றானையும் மன்னிக்கும் மனம் படைத்தவள், எதிரிக்கும் எதிரியாய் நின்று பழி வாங்காமல் மன்னித்துவிடும் குணம் உள்ளவள், ஆனால், தன்னையே அழிக்க வரும் அசூர சக்தியானால், என்னை அழித்துவிட்டுப் போ என்று தலை குனிந்து நிற்பாள் என்ற நினைக்கின்றீர்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. கெட்டவர்களை அழித்தொழிக்கும், அடையாளமே தெரியாது போக வைக்கும் அதி சக்தியின் அருள் பெற்றவள்.
அனைவருக்கும் தெரிந்தது தமிழ்தான் திரிகின்றாள் என்று. ஆனால், அவளை அணைத்துக் கொண்டு அந்த பராசக்தியும் அவளைக் காத்துக் கொண்டு திரிகின்றதென்று தெரியாதல்லவா. இதெல்லாம், கெதியில் தெரியவரும்.

அதாவது, outing போவோம் என்று தமிழுக்கு ஆபத்தினை ஏற்படுத்த நினைக்கும் சிபீக்கு பாடம் அங்கு படிப்பிக்கப்படும். இதனைத்தான், சிபீ கணேஷனுக்குச் சொல்லி விட்டுப் போவான். இப்போது தமிழுக்கு இரண்டு எதிரிகள். சிபீ தன் திட்டத்தினை அமூல் படுத்த, கணேஷன் தான் ஒரு திட்டத்தினை தமிழுக்குச் செய்வான். அந்தப் பழியினை சிபீயின் மேலே போடுவான். அப்போது சிக்குவான் சிபீ.
இது இவ்வாறிருக்க, சிபீயின் திட்டத்தில் தமிழைக் கூட்டிக் கொண்டு போவதனைக் கண்ட கேடீ, சிபீயின் நோக்கத்தினை உடனே ஜனாம்மாவிற்குச் சொல்லுவான். இதனால், ஜனாம்மா கோபப்படுவதுமல்லாமல், தனது ஆட்களை சிபீயையும், தமிழையும் தொடரும்படியாகவும், தமிழுக்கு எந்தவிதமான பிரச்சனைகள் வராமலும் அவதானித்து காப்பாற்ற வேண்டும் என்றும் பணித்துரைப்பா ஜனாம்மா.

சிபீ, தமிழுடன் சென்று இருக்கும் இடத்தில் தமிழின் நல்ல குணங்களைக் கண்டு வியந்து, அவன் மனம் மாறி நல்லவிதமாகத் தமிழினை மனதார ஏற்றுக் கொள்ளும் சமயம், தனது அடியாட்களுடன் போன கணேஷன் இதனை அவதானித்து விட்டு, சிபீ என்னவோ சொன்னான், தனக்கே பொய் சொல்லி விட்டு தமிழுடன் உல்லாசமாகவும், சந்தோஷமாகவுமாவும் இருக்கின்றாயா என்று தனது அடியாட்களை வைத்து இருவரையும் தாக்குவான்.

அப்போது, இந்தத் திட்டம் தனதில்லை என்றுணர்வான் சிபீ. ஆனால், அவனுக்கு தமிழை இப்படி துன்புறுத்துவது சிபீயின் நோக்கமல்லவே. எனவே, இப்போது சிபீ தமிழின் பக்கம்தான் நிற்பான். இதனால், சிபீக்கு தமிழ் மேலே இன்னமும் அன்பும், காதலும் உருவாகும்.

இவை எனது எதிர்வு கூறல். உங்கள் மனங்கள் என்ன சொல்லுகின்றது?

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00