Varisu - வாரிசு - 13.06.2026 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

: ,
: ,
: and

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;

  • துரோகம் என்பது கானல் நீராகத் தோன்றியதா? இல்லை காதலின் எதியாகத் துளிர்த்ததா?
  • எவ்வளவுதான் கணேஷனைத் தமிழ் காப்பாற்றினாலும், மன்னித்து விட்டாலும், தேளின் குணம் கொட்டத்தானே செய்யும்.
  • காதலினால் ஏற்படுத்தப்பட்ட துரோகத்தினை மறக்க முடியாமல், அதனால் ஏற்படுத்தப்பட்ட காயத்தின் றணத்தின் வேதனையினை அனுபவித்துக் கொண்டிருக்கும் வர்ஷனிக்கு, அவளின் கவலையினை மறக்க வைப்பதற்காக அடுத்த கல்யாண கெடுபிடி. இது சரியாக அமையுமா, தலைகீழாகுமா?
  • அமைதியாகவும், அவமானத்தோடும்தான் வெளியேறுகின்றான் பிரபு, ஆனால், குற்ற உணர்வானது தென்படாத நிலையினில்.

Varisu - வாரிசு - 13.06.2026

வாரிசு தமிழ் சீரியலானது நேற்றைய பகுதியில் கல்யாண மண்டபத்தினிலே மேடையிலே மங்கலகரமாகத் தொடங்கி, இன்றைய பகுதிக்கு இரு ஜோடிகளுக்குமான நிட்சயதார்த்தமானது மோதிர மாற்றுதலில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. தமிழரசியைக் காணவில்லை என்பது முக்கியமற்றதான நிலையில், கணேஷனினால் ஒழுங்கு படுத்தப்பட்ட பெண்ணை முந்தியடித்துக் கொண்டு செல்லும் சிபீயும், சேதுவும். பிரபுவின் அடிப்படைத் தரவுகளைத் தெரிந்ததும், குளப்பத்திலும், கோபத்திலும், ஏமாற்றத்திலும், கவலையிலும் தோய்ந்து எழுந்து நின்றவர்களால் மீண்டும் இருக்க முடியவில்லை. நாங்கள் ஏமாறினோமா? அல்லது ஏமாற்றப்பட்டு விட்டோமா என்பது ஜனாம்மாவின் வீட்டினரின் விடை தெரியா கேள்விகளாக இருந்தது. குடும்பமோ கவலையில், கோள் கதைப்பவர்கள் மத்தியில்.

விநோத், ஜனாம்மாவின் கொம்பனியிலே மனேஜராக இருப்பவர். அவர் தனது மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம், தாங்கள் ஜனாம்மாவின் சம்பந்தியாக வருவதற்கு விநோத்தின் தம்பி அரவிந்துக்கும், தமிழரிசியின் தங்கை தேனுவுக்கம் நடைபெறவுள்ள இந்த கல்யாணத்தின் முன்பான நிட்சயதார்த்தம் நிகழ்வு மூலமாக என்பதனை நினைத்து மிகவும் பூரிப்போடேயும், புன்னகை பூத்த வண்ணமாகவும் பங்கேற்றுக் கொண்டிருக்கையிலே, அடுத்த பக்கமாக, நல்ல விதமாக இந்த உலகம் சூரிய உதயத்துடன் பிரகாசிக்காமல், சூரிய அஸ்தமனத்திலே இவர்களுக்கு விடிந்ததா என்ற நினைக்கத் தோன்றும் வகையிலே, கணேஷனும், அமுதாவும் அபசகுனத்துடன் காட்சி அளிப்பத்தானது அரங்கை அலங்கோலமாக்குகின்றது.

தமிழரசியால் கணேஷனின் பிடியிலிருந்து வெளியேற முடியாத நிலையில் storeறினுள் அடைபட்டுக் கிடக்கின்றாள். சேதுவிடமும், சீபியிடமும் detectiveவால் சொல்லப்பட்ட உண்மையானது வில்லங்கமாக இருக்குமோ, நிட்சயதார்த்தத்தின் நீதித் தீர்ப்பாக இருக்குமோ என்று சிபீயினதும், சேதுவினதும் நடையின் வேகத்திலும், அவர்களது முகபாவனையிலும் ஏதோ மிகவும் பிரச்சினை ஒன்றினை விளக்குவதாகத் தெரிந்தாலும், கணேஷனின் ஏற்பாட்டுடன் இந்த பகுதியானது மிகவும் வேறுபட்டதானதும், கணேஷனின் திட்டத்திலிருந்து மாறுபட்டதாக இருப்பதனைக் கண்டு விறைத்துப் போய் நின்றான் கணேஷன்.

பிரபுவை நோக்கி சிபீயும், சேதுவும், கணேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்ணின் வேகமும் எதைத்தான் சொல்லகின்றது என்பதனை சிபீ கல்யாண மேடையிலே ஏறு மட்டிற்கும் ஒருவருக்கும் தெரியவில்லை. பிரபு எதையெல்லாம் வர்ஷியிடம் சொல்லி இருந்தானோ அவை எல்லாம், தமிழைப் பொறுத்த மட்டில் எதிர்மாறாகத்தான் இருந்தன. அவற்றினை நிட்சயதார்த்தத்திற்கு முன்பு வெளிக் கொணரலாம் என்று தமிழ் முயற்சிக்கையிலே, சேதுவின் முயற்சியானது சிபீ மூலமாக நிறைவேற்றப்பட்டது.

ஜனாம்மாவின் வாழ்நாள் முழுவதுமான துரோகியும், எதிரியாகவும் உள்ள குறிஞ்சிநாதனின் மகன்தான் பிரபு என்று அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்ட அந்த நொடியே, ஜனாம்மாவின் கோரப் பார்வையானது அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது. ஜனாம்மாவின் பிரபுவிடமான கேள்விக்குரிய பதில் ஆமா என்ற பிரபுவின் தலை அசைப்பினிலே அடங்கியது.

இந்த உண்மையினை பிரபு சொல்லவில்லைதான். அது மிகவும் தவறுதான். ஆனால், பிரபு சொன்னது உண்மையாகலாமா? அதாவது, குறிஞ்சிநாதன், ஜனாம்மாவை அழிக்கத் துடிக்கும் வாழ்நாள் எதிரி என்பது பிரபுவிற்குத் தெரியவில்லை. ஆனால், அதனை அந்த சபையில் நம்புவதற்கு ஒருவரும் தயாராகவும் இல்லைதான். எப்போது இந்த உண்மையானது அந்தச் சபையினில் தெரிவிக்கப்பட்டதோ அந்த நொடியே பிரபு வர்ஷியால் அணிவிக்கப்பட்ட மாத்து மோதிரத்தினைக் கழற்றி வர்ஷனியிடம் கொடுத்து விட்டு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு, அவனது தாயுடன் மண்டபத்தினை விட்டு வெளியேறியதானது உண்மையாக ஒரு நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

காரணம், பிரபுவினது பார்வையானது, அவனது முக பாவனையானது, குறிஞ்சியின் பெயர் சொல்லப்பட்ட பின்பு, சபையினரின் முன்னால் அவனுக்கும், அவனது அம்மாவிற்கும் ஏற்பட்ட தலைக் குனிவானது அவனது உடல் முழுவதும் கூசிற்று. அவனுக்கு மிகவும் கேவலமாகத் தெரிந்ததனை அவன் உணருவது போல பார்வையாளர் அனைவரும் அந்த உணர்வினை அனுபவித்தார்கள் என்பதுதான் உண்மை.

இந்தவாறான, பிரபுவின் வார்த்தைகளானது உண்மையாக இருக்குமென்று அவனது நடவடிக்கையிலே தெரிகின்றது. அதாவது, அவன் வர்ஷியின் மேலே வைத்த காதலானது உண்மையானதும், களங்கமில்லாததுமாகும். ஏனென்றால், பிரபுவின் வார்த்தையானது உறுதியானதும், தடுமாற்றமில்லாததும், குறிஞ்சிநாதன் தனது தகப்பன் என்று கூறுவதிலே தாங்கள் வெட்கப்படுவதாகவும் கூறி மேடையினை விட்டிறங்கிப் போனதில், பிரபு நிட்சயமாக உண்மையானவன் என்பதனையும் உணரக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால், ஒருநாள், ஜனாம்மாவும், தமிழும், பிரபுவின் வீட்டிற்கு கல்யாணம் கேட்டுப் போகையிலே, பிரபுவின் அம்மா சொன்ன வார்த்தைகளை தனது வாழ்க்கையுடன் ஒத்துப் போனதினையிட்டு ஜனாம்மாவும், தமிழும் நம்பினார்கள். தகப்பனுடன் சிறு வயதிலிருந்தே தொடர்பில்லை என்று சொன்னதினை ஜனாம்மா ஒருவிதமான கேள்வியும் இல்லாமல் பிரபுவின் தாயின் வார்த்தைகளை நம்பி சம்பந்தத்தினை ஏற்றுக் கொண்டு வெளியேறினாவே!

அதன் பின்பு, பிரபுவும், அவனது அம்மாவும், இந்த சம்பந்தம் தாங்கள் நினைத்தபடி வெற்றியாகி விட்டது என்று மிகவும் சந்தோஷப்பட்டதும், இது அவர்களின் உண்மையான வார்த்தைகளின் பரிசாகக் கூட நினைத்துக் கொள்ளலாம்தானே!

பிரபுவைப்பற்றி அயலவரிடமெல்லாம் விசாரிக்கையிலே அனைவரும் ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பதிலாகச் சொன்னார்கள். இந்த வார்த்தையானது யாரோ, அது பிரபுவாகவும் இருக்கலாம், சொல்லி வைத்து சொன்னது போல இருந்ததினால், இதனில் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளதாகவும் இருக்கின்றது.

இன்றைய சீரியலானது, அனைவரினதும் உணர்வுகளை ஒருபக்கம் அசைத்துப் பார்த்துவிட்டது. ஆனால், தமிழின் பார்வையிலோ, புகைத்தல், அமெரிக்கன் உச்சரிப்பு, ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பதில் தெரியாத கேள்விகள், பிரபுவின் தயாள குணத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் எல்லாம், பார்வையில் ஏற்பட்ட சந்தேகங்கள்தான் என்று நிரூபணமாக்கப்பட்டால், இந்த கல்யாண சம்பந்தம் இனிதே நடைபெறவும் வாய்ப்புகள் உண்டெனலாம்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)