posted 10th November 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- சிபீயின் Reception நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சிபீ அந்த இடத்தினை விட்டு விட்டு நழுவப் போனாலும் சம்யூத்தா விடுவதாக இல்லை. மேடை ஏறி விட்டு இந்த Formalities க்கு நடக்கும் கல்யாணத்திற்கு தான் தேவையில்லை என்று சொன்னால் சம்யூத்தா ஒரு மூளை இல்லாதவளா? விடுவாளா சந்தர்ப்பத்தினை.
- சிபீ மாட்டிக் கொண்டான். சம்யூத்தாவிடம். என்னென்று இதிலிருந்து வெளியே வரப் போகின்றானோ தெரியவில்லை.
- சம்யூத்தாவோ ஒவ்வொருவராகப் போட்டோவிற்குக் கூப்பிட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றா. அதாவது, evidence களைத் சேகரிக்கின்றா.
- கூப்பிடாமல் உள் நுளைந்த குறிஞ்சிநாதனை விரட்டி அனுப்பினாள் தமிழ். அவளின் துணிவு வேறு, ஆனால், அதனையிட்டு பயந்த ஜனாம்மா. இதனை முறையிட்டா வெற்றியிடம்.
- குறிஞ்சிநாதனையே வெருட்டி அனுப்பும் தமி்ழ், தன்னை ஒரு தூசியாகத் தட்டித் துடைச்சுவிட்டுப் போய்க் கொண்டு விடுவாளோ என்று பயத்தில் நடுங்கிய கணேஷன்.
- வெற்றியின் நுளைவு ஜனாம்மாவிற்கு மிகவும் பலப்பாக இருந்தது. ஏனென்றால், அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் குடும்பமாச்சே!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 08.11.2025
சிபீயின் Reception நடைபெற்றது. சிபீயோ இது ஒரு Formalitiesஇல நடக்கும் கல்யாணமாதலால், தான் இங்கு நிற்கவில்லை என்று சம்யூத்தாவிடம் சிபீ சொன்னால், அவனை விட்டுவிட சம்யூத்தா என்ன அவ்வளவுக்கு மூளை இல்லாதவளா? எவ்வளவு காலங்களாக சிபீயைச் sketch போட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பாள், நீ சொன்ன உடனே உன்னை அம்போ என்று விட்டு விட்டுப் போக விட்டு விடுவாளா? சிபீ, சம்யூத்தாவின் அழுங்குப் பிடியினுளிருந்து தப்பவே முடியாது.
சம்யூத்தா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு போட்டோக்களினை எடுக்கின்றாள், அனைத்தையும் Evidenceகளாக்குவதற்கு. இது தெரியிமல், ஒன்றுமே புரியாமல் சிபீ தானாகாவே மாட்டிக் கொண்டான். இதிலே சம்யூத்தா நய பைசா கூட செலவு செய்யவில்லை. இலண்டனில் இருக்கையிலும் சரி, இங்கு இருக்கையிலும் சரி எல்லாமே சிபீயின் காசுதான். எல்லாவற்றினையும் அவள் இனாமாகவே அனுபவிக்கின்றாள். அத்துடன், ஜனாம்மாவின் சொத்துக்கே கண் வைத்துள்ளாள். இது குடும்பமாகச் சேர்ந்து போட்டுள்ள ஒரு பெரிய master plan ஆகும்.
சிபீயின் குடும்பத்தில் உள்ள ஒருவருமே தப்ப முடியாது. ஜனாம்மாவின் குடும்பத்தினை அனைவருக்கும் முன்னாலே அருவருப்பாகப் பேசி மடக்குவதற்கு சம்யூத்தாவின் அம்மா மட்டும் காணும். அவ ஏற்கனவே படம் காட்டி விட்டாதானே தமிழின் விஷயத்தில். ஆனால், இப்போது தமிழின் ஆட்டத்தினையும் கண்டிருப்பார்கள். அதுமட்டுமில்லை, இப்போ வெற்றி உள்ளே நுளைந்துள்ளான். இவன் மிகவும் இறுக்கமானவன்.
ஜனாம்மாவின் கவலையினைப் பார்த்த வெற்றி, நீங்கள் சிரி்த்துக் கொண்டிருங்கள் என்று அறையினை விட்டு அவசரமாக வெளியே போனான். எனது ஊகம், சம்யூத்தாவின் குடும்பத்தின் சரித்திரத்தையே ஆராய்வதற்காக என்று நினைக்கக் கூடியதாக உள்ளது. இதிலிருந்து பல விஷயங்கள் வெளியே வர வாய்ப்புகள் உண்டு.
கல்யாணத்தினை இது ஒரு formalities க்குத்தான் நடைபெற்றது என்று சிபீ சொன்னதும், சம்யூத்தாவும், அவளின் குடும்பமும் ஜனாம்மாவின் கௌரவத்தினில் கை வைப்பார்கள். சிபீ நடந்து கொண்டது ஒரு senseம் இல்லாமல் செய்த காரியமாகும். ஆனால், இது மிகவும் ஒரு serious ஆன விஷயமும் கூட. இவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஜனாம்மாவின் கௌரவத்தினில் கை வைப்பதால் இதற்கு ஜனாம்மா மிகவும் பயப்படுவா. ஆனால், இறங்கி அடிப்பாள் தமிழ். மாறனும், வீராவும் அத்துடன் வெற்றியும் சேர்ந்து சம்யூத்தாவின் குடும்பத்தின் முழுச் சரித்திரத்துடனும் உள்ளே இறங்குவார்கள். எந்த சபையினை ஆதாரமாக வைத்து இதனை கல்யாணம் என்ற நிரூபித்து உள்ள சொத்துக்களை சமூயூத்தாவிம் குடும்பம் ஆட்டையைப் போட நினைத்தார்களோ, அதே சபையினை வைத்து இவர்களை அடித்து விரட்டுவார்கள். பொலிஸும் இவர்களைக் கைது செய்யும்.
இவ்வளவு காலமாக சாதாரணமாகத் திரிந்து கொண்டிருந்த தமிழ், இப்போ வேறமாதிரி அதுவும், குறிஞ்சிநாதன் ஜனாகாம்பாளின் நிழலைக் காணவில்லை என்றதும் குறிஞ்சியின் கிட்டே போய் நின்றாள். குறிஞ்சியை மேடையினை விட்டு கீழே இறக்கி, வெருட்டி வெளியே அனுப்பினாள், தமிழ். இதனைப் பார்க்கும் போது, ஜனாம்மாவின் ஈவிரக்கத்துக்கு என்னிடம் இடம் இல்லை என்று மிரட்டனாள். அத்துடன் நின்றாளா தமிழ் குளிஞ்சியை விரட்டி அடித்தாள்.
மாறனையும், வீராவையும் இன்று காணவில்லை. எனது ஊகம் அவர்களிருவரும் சம்யூத்தாவின் குடும்பத்தின் சரித்திரத்தினை சேர்த்து வரப் புறப்பட்டு விட்டனர் என்று தோன்றுகின்றது. ஏனென்றால், விடிந்தால் கல்யாணம். இதில், Formalities, temporary கல்யாணம் என்று ஒன்றும் சொல்ல முடியாது. சட்டமும் ஏற்றுக் கொள்ளாது. சம்யூத்தா திட்டமிட்டபடி இலாவகமாகப் போய்க் கொண்டிருக்கின்றாள்.
எனவே, சம்யூத்தாவினதும், அவளின் குடும்பத்தினதுமான விளையாட்டுக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த சம்யூத்தாவினதும், அவளின் குடும்பத்தினரதும் திட்டங்களை உடைத்தெறியலாம். இது நடக்கும்.
தமிழைச் சந்தித்து உன்னை முன்பே கண்டிருந்தால் நான் உன்னேயே காதலித்திருப்பேன் என்று தலையில் அடித்து அழுதாலோ, தலை கீழாக நின்றாலோ ஒன்றும் இப்போது வேலைக்கு ஆகாது. மாறனும், வீராவும், வெற்றியும் களத்தில் இறங்கி அடித்து முடித்தால்தான், அதன் பின்பு தமிழைக் கட்டாயமாக கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தால்தான் இவர்கள் அனைவரும் தப்பலாமே ஒழிய, வேறொன்றும் வேலைக்கு ஆகாது.
ஆனால், இதில் தமிழின் தகப்பனைப் பற்றியும், தாய் ஹசீனா இல்லை என்று சொன்னால் தமிழின் கல்யாணத்தில் சிக்கல் வருமோ தெரியாது. ஆனால், இந்த விஷயத்தினை அடக்குவதற்குத்தான் மாறன், வீரா, வெற்றி, முத்தம்மா இருக்கின்றார்களே. அத்துடன், இது ஜனாம்மாவின் குடும்பக் கதை, இதனுள் வாலை நுளைக்க மற்றவர்களுக்கு இடமில்லை. எனவே, இறுதியாக ஜனாம்மா நினைத்தது நடந்தே தீரும்.
இதில் உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயத்தினைச் சொல்லுங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!