posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- கடவுளின் திட்டத்தினைக் கலைத்திட படைப்புகளால் முடிந்திடுமா?
- எமக்கு நடப்பதெல்லாம் அவரவர் செய்த வினைகளின் பாடங்களே!
- ஒருவராலும் தப்பவும் முடியாது, தடுத்து நிறுத்தவும் இயலாது.
- சொத்து தமிழுக்குப் போகக் கூடாது என்பது ஒரு புறம், தமிழிடம் கையேந்தக் கூடாதென்ற திடசங்கர்ப்பம் மறுபுறம்.
- தமிழின் பார்வையில் மிரண்ட சிபீ. விழுந்திருவோமா என்ற ஒரு இனம் தெரியாத பயம் சீபிக்கு.
- இக்கணம், Officeஇல் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாத சிபீ. விளக்கமில்லாதவளைக் கூட்டுச் சேர்த்தால் விளங்கிடும் வாழ்க்கை. உழைக்கத் தெரியாதவள், உழைப்பே தெரியாதவள், சேர்ந்திருந்தால் வாழ்க்கை உருப்பட்ட மாதிரித்தான்.
- முதன் முதலாக ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை முதலமைச்சர் அறிவித்ததனை பெருமையுடன் கூறிய தமிழும், குளாமும். எதையுமே கணக்கெடுக்காத சிபீ, கூட இழுத்துக் கொண்டுதிரியும் சமூயூத்தாவுடன்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 06.12.2025
‘வாழ்நாள் சாதனையாளர்’ என்ற விருதினைத் தட்டிக் கொண்ட ஜனாம்மா. வாழ்த்துக்கள் சொன்ன தமிழும், அலுவலக உத்தியோகத்தர்களும். ஆனால், அதுவும் ஜனாம்மா தூக்கி வளர்த்த பேரன் ஜனாம்மாவிற்கு ஒரு வாழ்த்தும் சொல்லவேயில்லை. காரணம், தன்னை, தனது சுதந்திரந்திற்குக் குறுக்கே ஜனாம்மா நின்றதனால், அவவைப் பழி வாங்கும் ஒரு பகுதியாக அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றான். இது கூடாது என்று சொல்லும் அளவிற்கு அறிவி்ல்லாத அவனது Secretary.
தமிழ் தனது உடைகளை எல்லாம் சிபீயின் அறையினுள் உள்ள cupboardடினில் share பண்ணத் தொடங்கி விட்டா. அத்துடன் சிபீயின் அறையினையும் share பண்ணுகின்றா. இதனால் குளம்பினான் சிபீ. வெளியே துரத்தினான் தமிழை. ஆனால், தமிழின் பார்வையில் அடங்கினான். தமிழின் பார்வையானது சிபீயை அடக்கியது.
கோயிலில் சாமியின் முன்னால் தகராறு பண்ணினான் சிபீ. உடுப்பு மாற்ற மாட்டேன் என்ற சிபீயை, கேடீயும், சேதுவும் இழுத்துச் சென்று உடுப்பினை மாற்றி விட்டனர். கோபத்தில் நின்றான் சிபீ. துலாபாரத்தில் தோத்துப் போனது சிபீக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. தாலி பிரித்துக் கோக்கும் நிகழ்வினில் அவரவர் தத்தமது வேலைகளை அந்த நிகழ்விற்காகச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து சிபீ வெறுப்படைந்தான். கோபமும் அடைந்தான்.
ஒன்றுமே சிபீயினது கட்டுப்பாட்டினுள் இல்லாமல் இருந்தது. எல்லாமே கட்டுப்பாட்டினை மீறிவிட்டது. அர்ச்சதை எடுத்துக் கொண்டு மீனா ஆசீருக்காக ஒவ்வொருவராக நீட்டிக் கொண்டு போனா. இது மகனின் வாழ்கையாச்சே!
இதற்கு எதிர்ப்புக் கூடத் தெரிவிக்காமல் எல்லாவற்றுடனும் ஒத்துப் போன மீனாவை கணேஷன் திட்டினான். அதனைப் பொருட்படுத்தாமல் மீனா தனது கடமையினை சரிவரச் செய்து கொண்டிருந்தது கணேஷனுக்கோ பிடிக்கவில்லை.
பலவிதமான தடைகளை உண்டு பண்ணியதுமல்லாமல், தடங்கல்களையும் அப்பப்போ சொல்லி எப்படியாவது இந்த தாலி பிரித்துக் கோக்கும் நிகழ்வினை நிறுத்துவதற்கு முயன்றாலும் ஒன்றுமே நடைபெறக் கூடிய சாத்தியக்கூறாக அமையவில்லை. இதனால், கோபம் கொண்ட ஜனாம்மா, முத்தம்மா மூலம் அட்வகேற்றினை வரச் சொன்னா தன்னுடைய முழுச் சொத்தினையும் தமிழின் பெயரில் எழுதுவதற்காக.
எல்லாம் ஒழுங்காக்கப் பட்டது. அதுவும் கெதியில் நடந்தேறும் என்பது ஊகம். கணேஷனும் மனம் மாறினான், சொத்துக்கள் முக்கியமல்லவா கணேஷனுக்கு. மாப்பிள்ளையைக் கட்டாயப் படுத்தினான் தமிழின் கழுத்தினில் தாலியினைக் கட்டச் சொல்லி. சிபீயோ மறுத்து விட்டான். தாய் மீனா தாலித் தட்டினைக் கொண்டு வந்து தாலியினை தமிழின் கழுத்தினில் போடச் சொன்னா. கோபமும் அடைந்தான் சிபீ. தாலியினை எடுத்து வீசி எறிந்தான். தாலியோ தமிழின் கழுத்தினில் போய் ஒய்யாரமாக விழுந்தது. அனைவரும் தமிழை வாழ்த்தினார்கள்.
இப்படியா தமிழுக்குக் கல்யாணம் நடக்க வேண்டும்? தனக்கு நடந்தது கல்யாணமா என்று அவள் நினைக்கத் தோன்றாதா? இப்படியாக தமிழை ஒரு பெண்ணாக மதிக்காதவனை என்னென்று புருஷன் என்று தமிழால் ஏற்றுக் கொள்ள முடியும்? அவனுடன் வாழ்ந்திடத்தான் முடியுமா அவளால்? தமிழின் மனமும் இடம் கொடுக்குமா அதற்கு? தமிழின் குடும்பம், இப்படி தமிழைக் கேவலப்படுத்திய பின்பு சிபீயை எவ்வளவுதான் மன்னிப்பினை பின்பு கேட்டாலும் அவர்களால், அவர்களின் உள் மனத்தினால் சேர்த்துக் கொள்ளத்தான் முடியுமா?
ஜனாம்மாவின் சாதனையாளர் விருது கிடைத்தமைக்குப் பாராட்டுக் கூறாத சிபீ, தனது கடமைகளிலிருந்து தவறான பாதையில் போவதாகவும் கருதக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் சம்யூத்தாவைத் தன் கூட வைத்திருப்பதற்கு அவவிற்குரிய வேதனம் கொடுக்கையில் தமிழ் ஒரு கட்டுப் பாட்டினைக் கொண்டு வரலாம். அத்துடன், இதைத் தவிர வேறு ஏதாவது செலவுகளை சம்யூத்தா செய்கையில் தமிழின் தலையீடு உக்கிரமடைய வாய்ப்புகளும் உண்டு.
நான் முன்னைய பதிவினில் குறிப்பிட்டது போல, எல்லாவற்றினையும் கட்டுப்படுத்துவதற்கு இந்த பொறுப்பானது முக்கியமானதொன்றாகும். அதாவது, finance பகுதி தமிழின் கைக்கு வர வேண்டும்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!