posted 3rd October 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ஜனாம்மாவின் உயில் யாரையும் ஆட்டாமல் விட்டாலும், மற்ற ஆனைவரையும் ஆட்டம் காண வைத்ததற்குக் காரணம் சொத்து. பணத்தைக் கண்டால் ஏதோதெல்லாம் வாய் திறக்குமாம் அதுமாதிரி.
- என்னுடைய குடும்பத்தினை அசிங்கப் படுத்துவதற்கு ஷியாம் யாரு? உறவில்லாதவள் உள்ளுக்கு வந்ததே தப்பு. காலுக்குமேல் கால் போட்டிருந்தது அதைவிடத் தப்பு. அதுவுமில்லாமல் வேலைக் காரர்கள் என்றது அதைவிட, அதைவிடத் தப்பிலும் தப்பு. அடியோட விட்டான் சிபீ. ஆனால், ஜனாம்மாவுக்குத் தெரிந்தால்?
- உயில் என்றதும் உசாராண எல்லாரும் சொத்தினை விழுங்குவதற்கு தீட்டிக் கொண்டிருக்கும் வேறு வேறான திட்டங்கள்.
- வர்ஷினி தமிழுடன் ஒட்டுகின்றாள். ஏன்? அன்பிலா? ஏதாவது உள்குத்து இருக்கின்றதா? அவளை அறியாத உள்ளுணர்வின் ஈர்ப்பா?
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 03.10.2025
என்ர குடும்பத்தினை அசிங்கப்படுத்திய ஷியாமுக்கு கன்னத்தி்ல் அறைந்து சொன்ன சிபீ. சிபீயுடன் பணத்திற்காக நாக்கினைத் தொங்கப் போட்டுக் கொண்டலையும் ஷியாமின் பரம்பரையின் குள்ள மூளையானது வேலை செய்யத் தொடங்கி விட்டது. இதனை நான் எனது பதிவினில் எப்பவோ சொல்லி விட்டேன், ஷியாம் ஏன் சிபீயுடன் பழகுகின்றாள் என்று. தான் வந்த நேரம் சரிதான் என்று தன்னை அறியாமல் சொன்னதிலிருந்தும் தெரிகின்றதுதானே! ஷியாம் போகையிலே கனடாவிற்குப் போகின்றேன் என்றுதான் சொன்னாள். ஆனால், வர்ஷிக்குப் பரிசு இலண்டனிலிருந்து வாங்கி வாறேன் என்று சொல்வதிலிருந்து ஷியாம் பொய் சொல்லுகின்றாள் என்று தெரியவில்லையா?
சொத்திற்காக அலைந்து திரியும் குடும்பம்தானே ஷியாமின் குடும்பம். ஷியாமின் ஆண்ணன்தானே, தமிழின் தகப்பன் செல்வரத்தினத்தின் சொத்து இல்லாமல் போய்விட்டதென்றவுடன் தமிழின் கையினை உதறிவிட்டுச் சென்றவனாச்சே!
இங்கு ஷியாம், தமிழைக் கல்யாணம் முடிக்க வந்தவனின் தங்கை, திட்டம் போட்டு சிபீயைக் குறிவைத்து உள்ளே சிபீயின் நண்பியாக எப்பவோ உள் நுழைந்தவள், இப்போ temporary ஆகக் கல்யாணம் பண்ணுவோம், சொத்துகள் எல்லாம் உனக்கு வந்த பிறகு ஒத்து விவாகரத்து பண்ணிடலாம் என்று சாதாரணமாகவும், குள்ளத்தனமாகவும், ஒரு கேவலம் கெட்ட மனத்துடன் சொல்லுவாளாக இருந்தால் இவள் எல்லாம் ஒரு பெண்ணென்றா சொல்லத் தோன்றும்.
ஒவ்வொரு optionகளையும் சிபீக்குச் சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்து 50%மான சொத்தினை ஆட்டையைப் போடுவதற்கு என்ன மாதிரியான திட்டங்களுடன் இருக்கின்றாள் ஷியாம்.
கணேஷன் என்றால் என்ன குறைச்சலா? இவன், சிபீ சிறுவனாக இருக்கும் போதே ஜனாம்மாவின் சொத்திற்காக பிரகாஷை இயக்கமில்லாமல் படுக்க வைத்து சொத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவனும் திட்டம் போட்டுத்தான் தனது தங்கையை முதலில் பிரகாஷுக்குக் கல்யாணம் பண்ணி விட்டு, பின்பு அமுதாவுக்கு வலை போட்டானோ தெரியவில்லை. ஆனால், சிபீயின் அம்மா றொம்ப வெலாந்தியானவள். இது ஜனாம்மாவிற்கும் தெரியும். மற்றவர்கள் துட்டர்கள் என்பதுவும் அவவுக்குத் தெரியும்.
இப்போது சோதனைக் காலம் சிபீக்கு. யாரை தான் கல்யாணம் பண்ணத் தெரிவு செய்ய வேண்டும் என்பதுதான்? வர்ஷினிக்கு உயிலைப் பற்றியோ, சொத்தினைப் பற்றியோ கவலை இல்லை. அவள் தனது நண்பியின் கொண்டாட்டத்திற்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றாள். அதற்கு தமிழின் உதவியைக் கேட்கின்றாள். வர்ஷினிக்குக் கவலை தேவையில்லை. அண்ணன், சிபீ, கல்யாணம் பண்ணினால் இவளும் இருக்கலாம்தானே என்பதுதான்.
கல்யாணக் கதையினை முதல் தொடங்கியது ஷியாம்தான். அத்துடன், தமிழின் வீட்டினைக் குறிவைத்தாள். அவர்களைக் கலைத்துவிடத் திட்டம் போட்டு அங்கு போய் தமிழின் குடும்பத்தினைக் கேவலப்படுத்தத் தொடங்கினாள். இதெல்லாம் யாரும் சொல்லிக் கொடுத்ததா? இல்லையே! இந்த ideaக்களெல்லாம் தானகவே வருகிறதென்றால் இவள் ஒரு criminal mind உள்ளவளாச்சே!
வெண்பாவிலை சிபீக்கு ஒரு அன்பும் இல்லை, கல்யாணத்தைப் பொறுத்தவரை. அவளோ தனக்கு அத்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதிலே ஒரு அர்த்தமும் இல்லை. இது சும்மா வாயின் வார்த்தைகளே தவிர, அவளின் உள்மனசில் இருந்து வருவதாகத் தெரியவில்லை.
ஆனால், தமிழின் விஷயம் அப்படியில்லை. சிபீ தன்னை ஏமாற்றுகின்றான் என்று தெரியாமல் அவனை நம்பினாள். வைர நெக்லஸினைப் பரிசாகக் கொடுத்தும் தமிழ் அதனை உதாசீனம் செய்து விட்டுப் போனாள். அன்பிற்காக ஏங்கினாள். தனது உண்மையான அன்பினை வெளிப்படுத்தும் போது, சிபீ தனது உள்ளக் கிடைக்கையினைச் சொல்லிவிட்டான். அதனால், கவலையுற்றாள், மனமுடைந்து போனாள் தமிழ். அவனைவிட்டு விலகிவிட்டாள். தனியே நிற்கின்றாள். இப்போ சிபீ தனது குற்ற உணர்வினால் துடிக்கின்றான். அவனுக்கு மனச்சாட்சி கொன்று கொண்டிருக்கின்றது. என்ன செய்வான் சிபீ?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!