posted 9th March 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழோ ஒதுக்கப்பட்டாள். வாடி விட்டாள். காய்ந்த பூ வெனது தூக்கி எறியப்பட்டாள்.
- ஒருவரும் ஜனாம்மாவையும் சேர்த்து தமிழைக் காணாமல் விட்டு விட்டனர். தமிழ் செய்ததன் நோக்கத்தினைக் கூட விளங்காத அளவிற்கா ஜனாம்மா வீட்டார்கள்?
- சிபீயின் துக்கத்தினை, மன அழுத்தத்தினை யார் போக்கினார்கள். தமிழ்தானே. தாய் அணைத்தாளா? ஜனாம்மா தாங்கினாவா? யாரால் அப்பா பிரகாஷை, நேருக்கு நேராக முகம் கொடுத்து துணிவுடன் சிபீயைக் கதைக்க வைத்தது?
- குடும்பத்தினை உயர்த்தி விட்டவள் தமிழ். அனைவராலும் உதாசினப் படுத்தப்பட்டாள் தமிழ். இது தேவைதானா தமிழுக்கு? ஜனாம்மாவின் ஆசையினை இறுக்கமாக, எது வந்தாலும் எல்லாவற்றினையும் தாங்கிக் கொண்டு தன் காரியத்தினில் கண்ணாய் இருப்பவளுக்கு இந்த நிலைமையா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 02 - 04.02.2026
கோவிலில் ஜனாம்மாவின் கணவருக்குத் திதியானது பிள்ளைகளாக ஜெயபிரகாஷையும், ஜெயறாணியையும் வைத்துக் கொடுப்பதற்கு தமிழ் ஒழுங்குபடுத்தி, திதியினைக் கொடுக்குகையில், எதிர்பாராமல், திதி முடியும் தருவாயில், மீனாவால் திருப்பப்பட்ட காரானது மீண்டும் கோவிலுக்கு வந்தது. இதனால், தமிழ் குற்றவாளி ஆனாள். எல்லோரும் தமிழைத் திட்டுத் தள்ளி விட்டார்கள். ஆனால், எப்பவோ தமிழின் முயற்சியினால் மீண்டும் உயிர் பெற்ற பிரகாஷ், தமிழையும், அம்முவையும் அந்த இடத்தினில் நிற்க வேண்டாம் என்று அமுதா தள்ளி விடுகையில், தமிழ், பிரகாஷின் மேலே போய் விழுந்தாள்.
ஜனாம்மாவின் குடும்பத்தில் உள்ளவர்களில் அனைவரும், தமிழ் மீது, சுமத்தப்பட்டுக் கொண்டிருந்த குற்றச் சாட்டுகளால் கோபத்தினை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருந்த பிரகாஷ், உணர்ச்சி வசப்பட்டவராய், இப்படி தமிழைத் திட்டுவதை இப்படியே விட்டால் சரிவராது என்று புரிந்து கொண்ட பிரகாஷ், தமிழைத் தாங்கிய வண்ணம் எழுந்து நின்றார்.
20 வருடங்கள் கோமாவில் இருந்தவர் தமிழின் பரிசம்பட்டதும் என்னென்று முழு அறிவுடன் எழுந்தார் பிரகாஷ் என்பது ஒருவருக்கும் புரியவில்லை. விழி பிதுங்கி நின்றனர் அனைவரும். இதனை அதிசயமாகப் பார்த்தவர்களில், பிரகாஷ் மீண்டும் சுயநினைவோடு எழுந்ததினை விரும்பாதவர்களாக கணேஷனின் குடும்பத்தவர்தான் முன்னிலையில் உள்ளார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியினை ஒருவரும், ஏன் தமிழ் கூட எதிர் பார்க்கவில்லை. அதாவது, எப்படியான நிலைமை வந்தாலும், இப்படியும் செய்யக் கூடாதென்று தமிழும், பிரகாஷும் கதைத்துக் கொள்ளவில்லை. இந் நிகழ்வானது தமிழோ அல்லது பிரகாஷோ எதிர் பார்க்காததொன்றாகும்.
அம்முவைக் கோவிலுக்கு அழைத்து திதி கொடுப்தற்காக கூட்டி வந்த தமிழை அந்தக் கோவிலிலே வைத்து தலைமுழுகினா மீனா. அதற்கு தமிழ் ஜனாம்மாவிற்கு விளக்கம் சொல்லியும், ஜனாம்மாவும் அதனை ஏற்றுக் கொண்டதாக இல்லை. ஆனால், ஜனாம்மாவும் மீனாவின் சொல்லைத்தான் நம்பினா, செய்தா. ஒருவரும் தமிழின் பக்கமாக உள்ள நியாயத்தினை ஏற்றுக் கொள்ளவதாக இல்லை. அதுமட்டுமல்லாமல், கணேஷன் குடும்பத்தினைப் பற்றி சொல்லத் தேவையேயில்லை.
அனைவரும் வீ்ட்டிற்கு வந்த பின்பும் ஒருவரும் தமிழை ஏறெடுத்துப் பார்ப்பதாக இல்லை. இதனைக் கண்டதும் கணேஷனும், அமுதாவும் மிக்கவே மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், ஜனாம்மா தமிழை ஒதுக்குவதனைத் தமிழால் தாங்க முடியவில்லை. கவலையில் தமிழின் முகம் வாடிவிட்டது. சிபீயும் தமிழின் பக்கமாக ஒன்றும் கதைக்கவில்லை. தமிழுக்குத் தாலி கட்டிய புருஷன் அவன். என்னவாக இருந்தாலும், சிபீ தமிழின் பக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். நின்றிருக்க வேண்டும். ஆனால், என்னவாக இருந்தாலும், சிபீ தமிழிடம் ஏன் தமிழ் இப்படிச் செய்தாய் என்று ஒரு கேள்வியைத்தன்னும் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், தமிழின் பக்கமாக உள்ள நியாயத்தினை விளங்கிக் கொண்டிருக்கலாமல்லவா?
தமிழும் ஒதுக்கப்பட்டாள். தனிமை என்பது ஒருவருக்குக் கொடுக்கப்படும் ஒரு கொடூரமான தண்டனையாகும். இதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அதைத்தான் இப்போது தமிழ் அனுபவிக்கின்றாள்.
வீட்டிலுள்ள இத்தனை பேரும் தமிழுக்கு எதிராக இருக்கையிலே ஒரு வார்த்தை தமிழ் கதைத்தாளா? இல்லையே! அப்படி இருக்கையிலே தமிழ் இப்படி இருக்கிறவள் இல்லையே என்றுதன்னும் சிபீக்கு விளங்கவில்லையா?
ஏனென்றால், தமிழின் அமைதிக்குக் காரணம், அவரவர் தங்களுக்கு விரும்பிய மாதிரி எல்லாம் திட்டித் தள்ளியதல்ல. மாறாக, அவளுடன் கதைக்காமல், ஜனாம்மாவும் இருப்பதுதான்.
இவ்வளவும் செய்தாளே தமிழ் என்று அவள் செய்த நன்மைகளை ஒருகணம் யாரும் சிந்திக்கவில்லையே! இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது, தமிழின் குடும்பத்தின் பின்னணியின் உண்மையானது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், அதனை ஜனாம்மா, ஒரு காலம் தமிழின் outdoorsஉக்குள்ளேயே போய் தமிழைத் திமிராக வெளியே சம்யூத்தா தள்ளிவிட்ட போது தாங்கிப் பிடுத்துக் கொண்ட ஜனாம்மா, தமிழின் குடும்பத்தினைப்பற்றியும், அவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்றும் எல்லாருக்கும் உறைக்கும்படிச் சொல்லி இருக்கின்றாதானே.
என்றாலும், தமிழை இன்னமும் ஜனாம்மாவின் வீட்டார்கள் அனைவரும், ஒன்றுமே இல்லாதவள் என்றும், தங்களது கொம்பனியில் கூலிக்காக வேலைக்கு வந்தவள் என்றுதான் கணக்குப் போட்டு வைத்துள்ளார்களே ஒழிய, தமிழை ஒருவரும் இன்னமும் அவள் இந்த வீட்டின் மருமகள் என்று கணெக்கெடுப்பதாக இல்லையே. இதனால்தான் தமிழை ஜனாம்மாவின் வீட்டார்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இப்படியான அவமதிப்பானது அடிக்கடி தமிழுக்கு நடந்து கொண்டே இருக்கின்றது.
ஊழியர்களுக்காக அவர்களின் பக்கமுள்ள நியாயத்தினையும், அவர்களது உரிமைகளையும் தட்டிக் கேட்பதற்காகத்தானோ பிரபு இப்போது கொம்பனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளானோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது. பிரபுவின் நுளைவானது ஒவ்வொரு பிரச்சினைகளுக்குள்ளும் தலையிடுவதனை எங்கேயோ இட்டுச் செல்லும் என்று ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பிரகாஷ் மீண்டும் உயிர் பெற்று வந்தமைக்காக இன்னொரு பூஜையானது நடைபெறுகின்றது. அதற்கு முதன்மையாக இருந்தது மீனாதான். அவவிடம்தான் ஜனாம்மா பொறுப்புக் கொடுத்ததுமல்லாமல், தமிழை ஒதுக்கியும் விட்டா. பூஜையும் நடந்தது, தீபாரம் காட்டிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் போகையிலே, மீனா தமிழைத் திமிருடன் விலக்கிச் சென்றது மீனாவின் அகங்காரத்தினை இங்கு பிரதிபலிக்கின்றது.
சிபீயின் அப்பா மீண்டும் எழுந்தது, உயிருடனும், உணர்வுகளுடனும் எல்லார் முன்னாலும் நிற்பதற்கு தமிழின் தியாகம்தான் காரணம் என்று ஒருவருக்கும் தெரியாதல்லவா. தெரிந்தாலும் இவர்கள் இவர்கள்தான். மாறவும் மாட்டார்கள். மாற்றப்படவும் முடியாதவர்கள் இவர்கள். அப்பாவிற்கு நடந்த கொடுமையான விபத்திற்குத் தான்தான் காரணம் என்று சிபீயின் இளம் வயதிலிருந்து அவனது உள்மனதினிலே ஊண்றிப் போன ஒரு குற்ற உணர்ச்சியினால் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றான், சிபீ.
அப்பா, சிபீயைப் பார்க்க விரும்பியும் சிபீயால் அப்பாவை நேருக்கு நேர் முகம் கொடுத்து பேச முடியாமல் துடிக்கின்றான். தமிழுக்கு சிபீயின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. விக்கி விக்கி அழுது கொண்டிருந்த சிபீயைக் கட்டியணைத்தாள் தமிழ். மனைவியின் இந்த அணைப்பானது விலை மதிப்பற்றது. எந்த வைத்தியத்தினாலுமோ அல்லது எந்த விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்பினாலோ கொடுக்க முடியாததொன்றானது. தமிழின் வார்த்தைகள் அவனது மனதினையும் அவன் காயத்தினையும் ஆற்றிக் கொண்டிருக்கையிலே, அந்த அணைப்பானது மிகவும் அவசியமாகத் தெரிந்தது.
சிபீ என்ற அப்பா அழைத்த வார்த்தைகள் சிபீயின் காதிற்கு வந்தடைந்தன. அந்த வார்த்தைக்குரியவரே தன் மகனை, தோளுக்கு மேல் வளருமட்டும் காணாமலிருந்த அந்த மகனைத் தேடி வந்தவரைக் கண்ணாரக் கண்டான் சிபீ.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!