posted 7th December 2025
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- வர மாட்டீங்கள்தானே! போங்கோ என்று இருவரையும் வழியனுப்பி வைத்த தமிழ்.
- சொத்து ஒன்றும் வேண்டாம் என்றும், தான் சம்பாதிச்சுக் கொள்ளுவேன் என்று ஜனாம்மாவிற்கு சவால் விட்ட சிபீ. இதனால், ஒன்றும் கிடைக்கமாட்டாதே என்று வியர்த்துப் போன சம்யூத்தா.
- மீ்ண்டும் மீண்டும் எதிராகவே கதைத்த கணேஷன். அவனின் நோக்கமோ இந்த தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வினை நிற்பாட்டுவதுதான்.
- ஜனாம்மா சிபீயால் மிகவும் உடைந்து போனா. சிபீயின் அடங்காத் தன்மையானது வர வர கூடிக் கொண்டு போகின்றது. என்னென்று கட்டுப்படுத்துவது என்பது தான் பிரச்சினையே!
- இப்படியான மனநிலையில் இருக்கும் சிபீ, வெண்பாவைக் கல்யாணம் பண்ணியிருந்தால், சிபீயினை வெண்பாவால் கட்டுப்படுத்த முடியுமா? இது கூட விளங்கும் அளவிற்கு ஞானம் இல்லாத கணேஷனும், அமுதாவும்.
- Check – in ற்குப் போகையிலே தமிழ் வைத்த ஆப்பு சிபீக்கும், சம்யூத்தாவிற்கும் விளங்கியிருக்கும் என்று நினைக்கலாம்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
வாரிசு - Varisu - 01.12.2025
Sun glassஉடன் மாசா இருக்கும் தமிழ். கருத்துக் கூற முடியாமல் அல்லாடும் சம்யூத்தாவும், சிபீயும். இந்தியாவைத் தாண்டி எங்கும் போக முடியாமல் வைத்த ஆப்புத்தான் இப்போ ஆரம்பம். இனி என்னென்னவெல்லாம் நடக்கும் என்று தெரியாது. சம்யூத்தாவை பொலிஸிடம் சொல்லுவாள் தமிழ் அவளை சிறையினில் அடைக்கும்படி, சிபீயைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்குப் போவாள் தமிழ்.
ஆட்டம் காட்டும் அனைவருக்கும் ஆட்டம் காண வைக்கும் தமிழ். இப்படியெல்லாம் ஜனாம்மாவால் செய்ய முடியாதென்றில்லை, இப்படி சடக்கு சடக்கென்று செய்யமாட்டா ஜனாம்மா என்பதுதான் உண்மை. குறிஞ்சிநாதனையே அடித்து விரட்டிய தமிழ், சிபீ, சம்யூத்தா எல்லாம் அவளின் காலின் கீழ்கிடக்கும் குப்பைகள். மிதித்துத் தள்ளிப் போட்டு விட்டுப் போய்க் கொண்டே இருப்பாள் தமிழ்.
திரும்பித் திரும்பி கணேஷன், ஜனாம்மாவிடம் சிபீக்கு விருப்பமில்லாமல் உங்களால் செய்யப்பட்ட கல்யாணத்திலிருந்து தப்பி ஓடுகின்றான் என்றும், அப்படி விருப்பமில்லாதவளால் சிபீயைக் கூட்டிக் கொண்டு வர முடியாதென்று அறுத்துறுத்துச் சொன்னான். ஜனாம்மாவால் இறுக்கிக் கதைக்க முடியாத நிலையில், உறவுகளால் ஏற்படுத்தப்படும் வலியினால், அனைவருக்கும் முன்னால் அவமானத்துடன் நின்று கொண்டிருந்த ஜனாம்மா.
இப்படியாக வாழ்க்கையில், குடும்பங்களிலுள்ள களைகளை தள்ளி வைக்கத்தான் முடியுமே ஒழிய, அவர்களைக் கிள்ளி எறி்ந்து விடத்தான் முடியுமா? உறவுகள் என்று பொறுத்துப் போனது காணும் என்று ஜனாம்மா சொல்லி விட்டாலும், இது தொடரும் சரித்திரமாகி விடும். அதற்குத்தான் தட்டித் தூக்குவதற்கு, நெளிவினை நிமித்துவதற்கு தமிழை நியமித்தா ஜனாம்மா. அப்படி இருந்தும் அட்டகாசம் குறைவதாகத் தெரியவில்லை.
அடங்காத சிபீ, அடாவடித்தனத்தில் கணேஷன், அமுதா, அத்துடன் வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட சம்யூத்தாவின் கூட்டம். அதற்கு, கூடுதலான உரிமையுள்ள பதவி உயர்வை சிபீயின் மூலமாக தமிழுக்குக் கொடுக்க வேண்டுமென்று கல்யாணம் பண்ணியும் வைத்தா, ஜனாம்மா. சிபீயும் தனது ஆட்டத்தினைக் காட்டுகின்றான். வால் ஒன்று மட்டும்தான் இவர்களால் ஆட்ட முடியும். அதையும் நறுக்குவாள் தமிழ், அவர்களுக்கு நொந்தால் என்ன, நோகாவிட்டால்தான் என்ன என்றிருப்பாள் தமிழ்.
ஆச்சரியத்தில் சிபீயும், சம்யூத்தாவும். எங்கள் மேல் FIR என்று வாயைப் பிளந்தபடியில். விமான நிலையத்திற்கு பொலிஸையும் வரவளைத்துக் கொண்டு வந்தாள் தமிழ். கடவுச் சீட்டோ தடை செய்யப்பட்டது. அதுவும் அடுத்த அதிர்ச்சியாக இவர் இருவருக்கும் இருந்தது.
இப்படி வருமென்று எதிர் பார்க்காத Twist.
எதிர்பார்க்காமல் வருவதுதான் Twist என்பது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channelலினில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!