Salangai Oli - சலங்கை ஒலி - 25- 28.02.2026

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இன்றைய Serial Review & Analysis ஆனது 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.

இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;

  • பூமிக்கு அதிகரிக்கும் எதிரிகளாக, அபூர்வாவுடன் சேர்ந்து கொண்ட சாதனா.
  • ஷரத்சந்திராவோ அபூர்வாவுடன் சேர்ந்து, தனது மகள் பூமியினது கல்யாணத்தினைக் குளப்புவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்.
  • தாலி என்றால் என்ன? அதன் மகத்துவத்தினைப் பற்றி எப்படி விளங்கும் அபூர்வாவிற்கு. ஷரத்சந்திராவின் வாழ்க்கையிலே குறுக்கே வந்து ஷோபச்சந்திராவின் வாழ்க்கையினையே கொடூரமாகத் தட்டிப் பறித்தவளாச்சே!
  • நாட்டிய அரங்கத்தினையே தனது காதலிக்காகக் கட்டி முடித்த மருமகனை வரவேற்பதனை விட்டு விட்டு இப்படி அநியாயம் செய்ய எத்தனிக்கும் அப்பா போன்றவர்கள் ஷரத்சந்திரா மாதிரி இல்லை என்றா நினைக்கத் தோன்றுகின்றது?
  • கிறிஷ்ணபிரஷாத் தனது மூத்த மகனாம் ககனை அடித்ததனால், குலைந்திருந்த நிலைமையானது சீராக வருமா?

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.

Salangai Oli - சலங்கை ஒலி - 25 - 28.02.2026

சரத்சந்திரா தனது மகள் பூமியின் கல்யாணத்தினை நிறுத்துவதற்காக தனது இரண்டாவது மனைவி அபூர்வாவுடன் சேர்ந்து பலவிதமான முயற்சிகளையும், கட்டுப்பாடுகளையும் செய்கின்றார். கேவலம் ஒருவிதமான சிந்தையும் இல்லாமல் சரத்சந்திரா அபூர்வாவை நம்புகின்றார். இதற்குக் காரணம் அபூர்வாவால் ஷாரதாவின் குடும்பத்தின் மேலே ஊதிப் பெருப்பிக்கப்பட்ட தேவையற்ற வன்மம்தான். இதனால், ககனும், சரத்சந்திராவும் காலத்திற்கே விரோதிகளாகி விட்டனர்.

மறுபக்கத்தில், கிறிஷ்ணபிரஷாத்தினை ககன் தன்னையும், தனது குடும்பத்தினையும் நடுறோட்டிலே விட்டு வி்ட்டுச் சென்ற தனது தகப்பன் கிறிஷ்ணபிரஷாத்தாவின் மேலே உள்ள கோபமானது ஆறாத வடுவாக அவனது மனதில் வலி்த்துக் கொண்டிருக்கின்றது. ககனால் அவன் கடந்து வந்த பாதையினை, வலியினை ஒரு அணுவளவிலாவது மறக்கவோ, மன்னி்க்கவோ முடியாமல் தவிக்கின்றான்.

இதன் வலியினை உணர்ந்தும் உணராத பூமி இடைக்கிடை தனது மாமாவாக உள்ள கிறிஷ்ணபிரஷாத்தின் கதையினை, ஒரே கதையாக்க முயல்வதால், ககனுக்கும், தனக்குமான உறவினைப் பெலவீனப் படுத்தித் கொண்டு இருக்கிறாவோ என்றும் நினைக்கவும் தோன்றுகின்றது. கிறிஷ்ணபிரஷாத்தினைச் சொன்னாலே ககனுக்கு ஆகாது என்று தெரிந்தும், பூமி ஏன் அவதிப் படுக்கின்றா என்றதான் விளங்கவில்லை.

அதேபோலத்தான், வம்சி சொல்லி விட்டான் என்பதற்காக கிறிஷ்ணபிரஷாத் தன் மேலே உண்மையான அன்பினை தன் மூத்த மகன் ககன் மனதினுள்ளே வைத்திருக்கின்றான் என்று கூறியதை நம்பி, ஓடோடிச் சென்று ககனுடன் கதைக்க முயலுவதும், கிறிஷ்ணபிரஷாத் மிகவும் அவசரமாக இருப்பதாகவும் தெரிகின்றது. தான் செய்தது ஷாரதாவிற்குப் பச்சைத் துரோகம் என்று கிறிஷ்ணபிரஷாத்திற்குத் தெரிந்தும், என்னென்று கிறிஷ்ணபிரஷாத் நினைக்கலாம் ககன் உடனே மன்னித்து, மறந்து தன்னை ஏற்றுக் கொள்வான் என்று.

இது இப்படி நடைபெறுகையிலே, அபூர்வாவும், ஷரத்சந்திராவும், ஷாரதாவை அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்களே! அதாவது, விவாகரத்து, ஷாரதாவுக்கும், கிறிஷ்ணபிரஷாத்திற்கும் நடைபெறாவிட்டால் கல்யாணம், மேடை மட்டும் போனாலும், இந்தக் கல்யாணம் குளம்பியே தீரும் என்று ஷாரதாவைப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஷாரதாவால் ஒருவரிடமும் சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் இயலவில்லை. ஏனென்றால் ஒருவரிடமும் தாங்கள் சொன்ன விவாகரத்து நிபந்தினையினை சொல்லக் கூடாது என்பதனால்தான். இதென்ன கொடுமையடா இது.

சாதனா, அதுதான், ஷோபச்சந்திராவின் மாணவி ஒருத்தி, தான் அவவின் மாணவி என்று செய்தியினைப் பரப்பி புகழினை பரப்பிக் கொடிகட்டிப் பறக்கின்றாள். அதுமட்டுமல்லாமல், இவளோ, அபூர்வாவின் கையாளாக இருந்தவள், இப்போது அபூர்வாவைச் சந்தித்து, அபூர்வா தனக்குக் கொடுத்த பணத்தினையும், அதற்கு மேலாகவும் கொடுத்து பூமியை நாட்டிய மன்றம் தொடங்க விடக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டுள்ளாள். இதனை அபூர்வாவும் அவள் கொடுத்த பணத்தினை வாங்கிக் கொண்டு, சாதனாவின் வேண்டுகோளிற்கு ஒத்துக் கொள்கின்றாள். இப்போது, இரண்டு கூட்டுக் களவாணிகள் ஒன்றாகச் சேர்ந்தன. பூமிக்கோ எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன.

கோவிலில் தனது அறிமுகத்தினை மேற்கொண்ட சாதனா தனது உண்மையான முகத்தினை அங்கிருந்த பக்தர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நிலைமையானது அவளை அறியாமலே வெளிவந்து விட்டது. அதாவது, தனது பெயரின் பெருமையையும், அதற்கு நிகராக அதிக தொகைப் பணத்தினையும் வரதட்சணையாகவும் கேட்டாள்.

இதனையிட்டு அங்கு வந்த பக்தர்கள் அதாவது இவளின் வாடிக்கையாளர்களாக வரப் போகவுள்ளவர்கள் எல்லாரும் சாதனாவின் தந்திரத்தினையும், கலையினை வியாபாரமாக்குவதனையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இதற்கிடையில், பூமி அங்கு கோவிலுக்கு வந்திருக்கையிலே, தனது அம்மாவின் பெயரை வியாபாரமாக்கிக் கொண்டு, ஏலம் போடுபவர்களைப் போல இவள் முலாம் பூசுவதனை, அங்குள்ள பக்த மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுய கட்டாயத்திற்கு பூமி தள்ளப்பட்டாள்.

இந்த நிலையினில், பூமி தான் நாடக மன்றம் ஒன்றினை ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கு உங்கள் பிள்ளைகள் அல்லது யாராவது நாட்டியத்தினைப் பழக விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்றும், அதற்கு ஒரு நய பைசா தரத் தேவையில்லை என்றபதனையும் கூற வேண்டியதாயிற்று. இதனால், பூமி தனது முதல் மாணவியைக் கோவிலிலே வைத்து ஏற்றுக் கொண்டாள்.

கோபமடைந்த சாதனா, அபூர்வாவைச் சந்தித்து உடனடியாக ஏதாவது செய்து பூமி நாட்டிய மன்றத்தினை ஆரம்பிக்க விடவேண்டாம் என்று காரசாரமாச் சொன்னாள். இதனால், கோபமடைந்த அபூர்வா, தன்னால் பூமியைத் தடுக்க முடியாவிட்டால், அவளைத் தான் கொல்லவும் தயங்க மாட்டேன் என்று சாதனாவுக்குச் சத்தியம் பண்ணுகின்றாள்.

அபூர்வாவிற்கோ எந்தத் தவறினையும் தான் நேரடியாகச் செய்யாமல், மற்றவர்களை வைத்துத்தான் செய்வாள். ஆனால், ஷோபச்சந்திராவின் கொலையினைத் தெரிந்தவனை வைத்து பூமியை கொலை செய்ய முயற்சிக்கையிலே, அவனுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, பூமி அவனின் மேல் இரக்கப்பட்டு, அவனைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை செய்கின்றாள். இதனை அறிந்த அபூர்வா தானே சென்று அவனை வைத்தியசாலையிலே வைத்துக் கொலை செய்கின்றாள்.

இந்த வகையான கைவத்தைக் காரி அபூர்வா, பூமியினது நாட்டிய மன்றத் தொடக்கத்தினை நிறுத்துவதற்காக வீட்டிலுள்ளவர்களைத் தூண்டுகின்றாள். அதுவும், உணவினில் இருந்து தொடங்கி வீட்டாரை பூமிக்கு எதிராகத் தூண்டுகின்றாள்.

ஆனால், பூமிக்கு நாட்டிய அரங்கத்தினைக் கட்டியெழுப்பி விட்டான் ககன் என்பது இன்னமும் அபூர்வாவின் காதிற்கு எட்டவில்லை போலும். ஆனால், ஷரத்சந்திராவிற்குத் தெரியும். இந்த விஷயத்தில் ஷரத்சந்திராவிற்கு விருப்பமில்லை என்பதனை ககன் உணர்ந்தவனாய், ஆனால், அதனை பூமிக்குக் காட்டிக் கொள்ளாதவனாய் ககன் நடந்து கொள்கின்றான்.

கிறிஷ்ணபிரஷாத், மாப்பிள்ளை வம்சியின் அபிப்பராயத்தினை நம்பி ஓடோடி வருகின்றார், ககனைக் கட்டியணைத்து தனது அன்பினைப் பகிர்ந்து கொள்வதற்காக. அப்போது ககன் இந்த நடிப்பினை தன் தகப்பன் கிறிஷ்ணபிரஷாத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

ஆனால், தனது மகனினனதும், பூமியினதும் திருமணம் நடைபெற வேண்டுமென்றால், கிறிஷ்ணபிரஷாத்திடம் இருந்து ஷாரதா விவாகரத்துப் பெறவேண்டும் என்ற கட்டாயமான நிபந்தினையினை நிறைவு செய்வதற்காக, ஷாரதா அந்த விடுதலைப் பத்திரத்தினை தனது பிள்ளைகளின் முன்னால் நீட்டுகின்றாள், தனது முன்னைய கணவனை கையெழுத்துப் போட்டுத் தரும்படி. ஆனால், இதில் எதுவுமே விளங்காத ககன் அதற்கு கிறிஷ்ணபிரஷாத்தினை வற்புறுத்துகின்றான். ஆனால், கிறிஷ்ணபிரஷாத்திற்கும் ஏன் ஷாரதா இதனைக் கேட்கின்றாள் என்று விளங்கவில்லை.

கிறிஷ்ணபிரஷாத்திற்கும், ககனுக்கும் விளங்காமலே கையெழுத்துப் போட முயற்சி செய்கையிலே, தோளுக்கு மேலே வளர்ந்த தனது மூத்த மகன் ககனை, கிறிஷ்ணபிரஷாத் அவனது கன்னத்தில் அறைகின்றார். இதனை ஒருவரும் எதிர் பார்க்கவும் இல்லை. ககனும் கூடத்தான். நிலைகுலைந்து போனார்கள் அனைவரும்.

ஆனால், வருத்தப்பட்ட கிறிஷ்ணபிரஷாத், ககனைத் தன்னை அடிக்கும்படி ககனின் கையினைப் பிடித்து தனக்கு அடிக்கும்படி செய்கின்றார். ஆனால், ககனின் பிறப்பும், வளர்ப்பும் என்ன கேவலமானதா? விலத்திப் போய் அதிர்ச்சியில் நின்றான் ககன்.

கோபத்தில் விவாகரத்துப் படிவத்தினைக் கிழித்தெறிந்த கிறிஷ்ணபிரஷாத், கவலை தோய்ந்த முகத்துடனும், நொறுங்கிப் போன உள்ளத்துடனும் வீட்டிற்குச் சென்றவராய், சாமிக்கு எரிந்து கொண்டிருந்த விளக்கினிலே ககனுக்கு அடித்த தன் கையினை எரித்துக் கொண்டிருந்தார். ஆனால், இதனைக் கண்ட பூமி அதனைத் தடுத்து நிறுத்தினாள்.

இதற்கான காரணம், அதாவது, விவாகரத்திற்கான காரணத்தினை அறிய முனைந்தாள் பூமி. கோவிலில் ஷாரதாவைச் சந்தித்தாள். காரணத்தினைக் கேட்டாள். சரியான காரணத்தினைச் சொல்லாமல் விலத்திச் சென்ற ஷாரதாவிடமிருந்து உண்மையினைக் கறந்தெடுத்தார் கிறிஷ்ணபிரஷாத்.
இப்போது உண்மை தெரி்ந்து விட்டது. விவாகரத்துக்கு முக்கிய கர்த்தாக்களாக உள்ளவர்கள், ஷரத்சந்திராவும், அபூர்வாவும் என்பது.

இதனை கிறிஷ்ணபிரஷாத், பூமியுடன் பகிருவார். பூமி இந்த விஷயத்தினை ககனுடன் பகிருவாள்.
இனி, வார்த்தைகள் பலக்க வேண்டும். ஆனால், அப்படியொன்றும் நடக்காது. பூமி, ககனை அடக்குவாள். அமைதியாகத்தான் காயினை நகர்த்த வேண்டும் என்று புத்திமதி கூறுவாள். இதைத்தான் கிறிஷ்ணபிரஷாத்தும் பூமியிடம் கூறுவார். முள்ளை வைத்துத்தான் முள்ளினை எடுக்க வேண்டுமல்லவா?

எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.

மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

Testimonials

எனது அண்ணாவின் 10ஆவது ஆண்டு அஞ்சலியினை நன்றாகப் பிரசுரித்தமைக்கு தேனாரம் இணையத்தளத்திற்கு நன்றி கூறுகின்றேன். உங்கள் இந்தச் சேவை தொடரட்டும்.

Loving Brother (France)

I am very happy to express my sincere gratitude to Thaenaaram for publishing my father’s Anniversary Notice on your website. I truly appreciate your excellent service and the polite, professional manner in which you handled our request. I would gladly give your service a 5-star rating. Keep up the good…

Mrs. Josephine K (London)

எனது கணவர், Dr Jerome Ethirmarnasingam, உடைய மரண அறிவித்தலும், அத்துடன் நினைவஞ்சலியும் உங்கள் தேனாரம் இணையத்தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி. அதுமட்டுமல்லாமல் மிகவும் துரிதமாக உங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்தமையே மிகவும் பாராட்டத்தக்கது. நன்றிகள்.

Mrs Jerome (Chennai)

I’m deeply grateful to Thaenaaram for publishing my loving brother’s obituary notice promptly and extending the display period free of charge. Your kindness and compassion mean a lot to our family during this difficult time.

Kamalashini (Canada)

எனது கணவரின் நினைவஞ்சலியினை நேரத்திற்கு தேனாரம் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு எனது நன்றிகள்.

Gowry Murugamoorthy (France)