posted 29th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ACP தனது விசாரணையினை Chery டம் இருந்து ஆரம்பித்தா. அதனைத் தொடர்ந்த விசாரணை கிறிஷ்ணபிரஷாத்திடமும், பின்பு ஷாரதாவின் வீட்டில் ககனிடமும் தொடரப்பட்டது. இதனில் யார் குற்றவாளி?
- அபூர்வா தனது நடிப்பினை ஆரம்பித்தா. இதனை கிறிஷ்ணபிரஷாத் கண்டு பிடித்து விட்டார். அதாவது, பூமியை எப்படியாவது இங்கு தனது வீட்டிற்குக் கூட்டி வரவும், அவளை இங்கு வைத்தே முடித்துக் கட்டுவதற்குமான நடிப்பின் உச்சமாக நினைக்கும் கிறிஷ்ணபிரஷாத்.
- DNA Test உயர் அதிகாரியினைச் சந்தித்த பூமி, இதற்குக்காரணம் ககன் என்று அறிந்தவளாய், ஷாரதாவின் வீட்டிற்கு நன்றி சொல்லுவதற்காக ஓடோடிச் சென்றாள்.
- சந்தோஷத்தின் மிகுதியால் ககனைக் கட்டியணைத்தாள். அந்த அணைப்பு ஒரு சில வினாடிகளில் அஸ்தமனமாகிவிட்டது. கோபத்தில் ககன் பூமியை, அம்மா, தங்கை தடுக்கவும் வீட்டை விட்டு துரத்தி விட்டான். இது நான் காதலித்த பூமி இல்லை என்றான்.
- அபூர்வாவின் நடிப்பானது வீட்டில் எல்லோரையும் ஏமாற்றியது. மீராவைத் தேர்ந்தெடுத்தாள், பூமியை அழைத்து வரும்படி. எல்லோரும் அபூர்வாவை நம்பினார்கள். அவளின் நயவஞ்சகம் தெரியாததினால்.
Salangai Oli - சலங்கை ஒலி - 24 .01 . 2026
- மீராவும் கிறிஷ்ணபிரஷாத்தின் சொல்லினை மதிக்காமல், அவரின் உண்மையான சொற்கள் அவை என்று விளங்காத பச்சைத் தண்ணி மனம் கொண்டவள் அவள். மீராவோ, ஷாரதா வீட்டிற்குப் புறப்பட்டா, பூமியைக் கூட்டி வருவதற்கு.
- பூமி மீண்டும் வீட்டை விட்டு வெளியே தனிமையில் விடப்பட்டாள். பூமியோ தனது தகப்பனை நாடினாள். அப்பாவின் உறவு இப்போது வந்தது. ஆனால், ககனின் உறவோ பூமி பிறக்கையிலே உதித்தது.
- பூமி பிறந்திருக்கையிலேயே ககனின் விரலைக் கெட்டியாகப் பிடித்தவள் பூமி. இது நான் கொடுத்த உறவு உனக்கு என்று பூமிக்கு ககனைத் தெய்வம் காட்டிய உறவு அது. அந்தக் கைகள்தான் பூமிக்கு பாலூட்டியவையும் கூட.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சந்தோஷம் மிகுதியால் பூமியோ ஷாரதாவின் வீட்டிற்கு வந்து ககனிடம் நன்றி கூறித் தனது காதலினை ககனிடம் சொல்வதற்காக ஓடோடி வந்தாள். ஷாரதாவிடம் உண்மையினைச் சொல்லி மாடிக்கு ககனைச் சந்திக்க சிந்திக்காமல் ஓடினாள். கட்டியணைத்தாள் ககனை. ஆனால், அந்தக் கணம் பூமியின் அணைப்போ அணைந்ததினை உணர்ந்தாள் பூமி. வாழ்க்கையின் அஸ்தமனம் உதயமானதினை உணர்ந்தாள்.
அதிர்ச்சியில் பூமி நிற்பாள் என்று பார்த்தால், அவளோ ககனிடம் தனக்கும், ககனுக்கும் உள்ள, முன்னமே உருவாகியிருந்த உறவினை உருக்கமாக விளக்கினாள். ஆனால், ககனோ அதனைக் கணக்கெடுக்கவில்லை. காரணம், பூமி இப்போது ஷரத்சந்திராவின் இரத்தம் என்பதனால் மட்டுமே. முக்கியமாக, அவனால், ஷரத்சந்திராவின் அடாவடித்தனமான தன் குடும்பத்தின் மேலே இருந்து அந்த காழ்ப்புணரச்சியினை மறக்க முடியாமல் தவித்தான். அவனால், மன்னிக்க முடியவும் இயலவில்லை. அவனும் ஒரு மனிதன்தானே. அவனுக்கும் நோகும்தானே! எத்தனையோ வேதனைகளைத் தாண்டி ஓடி, வாழ்ந்திட வேண்டும் என்று தாயையும், தங்கையையும் கொண்டோடியவன் அவன்.
ஆனால், ஏற்கனவே, பூமியை, ககன் கல்யாணம் பண்ணியிருந்தால், இப்போ அவளுக்கு கர்ப்பம் தரித்திருந்தால், அச்சமயம் பூமிதான் ஷரத்சந்திராவின் மகள் என்று இப்போது தெரிந்தால், ககன் பூமியை வெளியிலே துரத்தி விடுவானா?
ஷாரதா கூறியபடி, ககனும் பூமியைக் காதலிப்பதனால், அவள் ஏற்கனவே உனது மனைவியாகி விட்டாள் என்பதுதானே. அதனாலேதானே ககன் பூமியைக் காப்பாற்றி கூட்டி வந்தான் வீட்டிற்கு. ஆனால், இப்போது என்ன கொஞ்சம் முன்பே இந்த விஷயம் தெரிய வந்து விட்டது, அதாவது, பூமி ஷரத்சந்திராவின் மகள் என்பது. உண்மையான அன்பிருந்தால் இந்தப் பிரவினை ஏற்றுக் கொள்ள முடியாது. ககன் பூமிக்குக் கொடுக்கும் தண்டனையோ மிகவும் பெரிது. அத்துடன் விட்டானா ககன், தன்னையும் அல்லவா தண்டித்துக் கொள்கின்றான். எல்லாவற்றிற்கும் காரணம், ககனுக்கோ அவனது சிறிய வயதினில் ஏற்பட்ட காயமானது இலகுவில் ஆறிவிடாமல் இன்னமும் வேதனயைக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான். இந்த நிலைக்கு, அதாவது ககனுக்கோ ஷரத்சந்திரா மேலே உள்ள பகை உணர்ச்சியானது ஷரத்சந்திராவால் வந்ததா. இல்லேயே! இதெல்லாவற்றிற்றகும் சூத்திரதாரி அபூர்வா என்பதனை பூமி நிரூபிக்க வேண்டும். அப்போதான் ககனின் காயம் ஆறுவதற்கு வழி பிறக்கும்.
பூமி ககனினால் எப்பவும் காப்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றாள் என்பதினால் தனது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டால், தனது கட்டுப்பாட்டினுள் வைத்து பூமியின் அம்மா ஷோபச் சந்திராவைத் தான் எப்படிக் கொலை செய்தது போல இவளையும் முடித்து விடலாம் என்று முன்கூட்டியே திட்டத்தினை தீட்டினாள் அபூர்வா.
அதன் அரங்கேற்றமாகத்தான், எல்லார் முன்னிலையிலும் ஷோபச் சந்திராவின் போட்டோவின் முன்னால் அழுது குறளி அபூர்வா ஆர்ப்பாட்டம் செய்கின்றாள். தான் நல்லவள் என்பதனை நடிப்பதன் மூலம் வீ்ட்டிலுள்ள அனைவரையும் நம்ப வைத்தாள். இதில் முலாம் பூசுவது, அபூர்வாவின் அத்தை மருதாணி. ஆனால், வெகுளி மீராவைக் குறி வைத்தாள். ஏனென்றால், மீராதான் மிகவும் பெலவீனமானவ என்பது அவளின் கணிப்பு. மீராவும் அண்ணி அபூர்வாவை பூரணமாக நம்புகின்றாள். விரைகின்றாள் ஷாரதாவின் வீட்டிற்கு பூமியைக் கூட்டி வருவதற்காக. கிறிஷ்ணபிரஷாத் தடுத்தும், கணவனின் சொல்லினைக் கேட்காமல் மீரா புறப்பட்டு விட்டா.
பூமியை ககன் வீட்டினை விட்டுத் துரத்தியதும் நல்லதாகப் போய் விட்டது. இல்லாவிடில், மீரா கையுடன் பூமியைக் கூட்டிக் கொண்டு அவளது வீடான் தாங்கள் வசிக்கும் வீட்டிற்கு கூட்டி வருவதற்கும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
ACP நயனியின் விசாரணையானது Cheryயிடமிருந்து ஆரம்பமாகியது. நயனியைப் பொறுத்த மட்டில், ஷரத்சந்திராவின் guest houseற்கு Cheryயும், கிறிஷ்ணபிரஷாத்தும், ககனும் போனதாகத் தெரிகின்றது, CCTV footageஜினில். ஆனால், ஏன் போனார்கள் என்பதுதான் தெரியவில்லை? பூமி அங்கு ஷரத்சந்திரா கோள் பண்ணி ஏதோ சொன்ன படியினால்தான், பூமி ககனின் காரினை விட்டு அவசர அவசரமாக இறங்கி ஓடிச் சென்றாள். அப்போது அவளின் தகப்பன் குத்துக் காயத்துடன் தரையில் விழுந்து கிடந்ததினைக் கண்டாள்.
அப்பாவைக் குத்தியிருந்த போத்தலினை இழுத்தெடுத்தாள் பூமி. அவ்வாறு பூமி அந்த போத்தலினை இழுக்கும் அந்தச் சமயம் பார்த்து பொலீஸ் என்னென்று அங்கு வந்தார்கள். ஒருவிதமான கேள்விகளும், விசாரணையும் இல்லாமல் பொலீஸ் ஏன் பூமியைக் கைது செய்ய வேண்டும்? பொலீஸுக்கு அறிவித்தது யாரு? இதில் பூமியைச் சிக்க வைக்க வேண்டுமென்று அபூர்வா போட்ட sketchஇல் பூமி சிக்கினாளா? இதனை முன்கூட்டியே உணர்ந்த ககன் அங்கு guest houseற்கு வந்தானா? இதைத்தான் ககன் personal என்று நயனிக்குச் சொன்னானா?
அதாவது, ககன், ஷரத்சந்திராவின் guest houseற்குப் போனதற்குக் காரணம், பூமி ககனின் காரினை விட்டு ஓடிப் போனதுதான் அவனது மனத்தின் வழிகாட்டலோ. அங்கு போன சமயம் ஷரத்சந்திராவை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள். இதெல்லாம் ககனுக்கு அப்போது தெரியாது. ஆனால், பூமியை ஏற்கனவே கைது செய்து விட்டார்கள். இதற்கு அபூர்வா, பொலிஸைக் கைக்குள் போட்டு இந்த அலுவலைக் கச்சிதமாக முடித்தாளோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது.
அத்துடன், Cheryயும், கிறிஷ்ணபிரஷாத்தும் போய் இருக்கின்றனர், ஷரத்சந்திராவின் guest houseற்கு. ஆனால், அவர்களின் நேரங்களோ வேறு வேறாக இருப்பதாகவும் இருக்கலாம். ஆனால், பூமி ஷரத்சந்திராவின் guest houseற்குப் போகையிலே பூமியைத் தள்ளி விட்டு போனது வம்சி போலத்தான் தெரிகின்றது. அத்துடன் அந்தச் சமயம் ஒரு சங்கிலியானது தென்படுகின்றது. அது என்ன என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது. அந்தச் சங்கிலி அங்கு எங்கேயும் இருக்கின்றதா? எதிலேயும் தொங்கி இருக்கின்றதா?
மேலும், ஷரத்சந்திராவைக் குத்திய போத்தலில் உள்ள கை ரேகையினைச் சோதித்துப் பார்க்கலாம்தானே! அதில், ஒன்று பூமியினுடையது. மற்றது, யார் யாருடைய கை ரேகைகள் இருக்கின்றதென என்று பார்க்கலாம்தானே! அது அபூர்வாவினதாகவும் இருக்கலாம். ஏனென்றால், அபூர்வாவும் ஷரத்சந்திராவின் guest houseற்கு அவருடன் கதைத்த பின்பு போய் இருக்கின்றாள் என்றும் தெரிகின்றது.
இதில் உண்மையான குற்றவாளி யார் என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கின்றது. அபூர்வா அல்லது வம்சி என்று தோன்றுகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!