posted 5th March 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 23ஆம் திகதி தொடக்கம் 24ஆம் வரை உள்ளடக்கிய Serial Review & Analysisகளைக் கொண்டது.
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்கப்போவது;
- மகள் பூமியின் ககனுடனான வாழ்க்கையினை விரும்பாத ஷரத்சந்திரா. இதனை ஊதிப் பெருப்பிக்கும் அபூர்வா. அபூர்வாவிம் குள்ளத்தனத்தினை எந்த விதத்திலும் நம்பாத உண்மையான கணவன் ஷரத்சந்திரா.
- கஷ்டப்பட்ட நிலையிலும் குங்குமத்துடனும், தாலியுடனும் மங்கலகரமாக வாழ்ந்து கொண்டிருந்த ஷாரதாவிற்கு வந்த சோதனை. அபூர்வாவுக்கும் தாலியின் மகத்துவம் விளங்காது. ஷரத்சந்திராவுக்கும் விளங்காது. இதனால்தானே ககனின் வீட்டிற்கே போய் ஷாரதாவின் தாலியினை இழுத்தறுக்க முனைந்தார் ஷரத்சந்திரா. இதனைத் தடுத்ததில் தாக்கப்பட்டாள் பூமி.
- எப்படியெல்லாம் ககனினதும், பூமியினதும் கல்யாணத்தினைக் குளப்பலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றாள் அபூர்வா.
- தனது கணவனை வலுக்கட்டாயமாக பறித்தெடுக்கும் முயற்சியில் அபூர்வா.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Salangai Oli - சலங்கை ஒலி - 23 - 24.02.2026
ககன் தனது வருங்கால மனைவியும், காதலியுமான பூமியுடன் outing போயுள்ளான். ஆனால், இவர்களை தொடர்ந்து கொண்டு அவர்களைக் குளப்புவதற்கு அபூர்வாவின் மகள் அபூர்வாவைப் போல வளர்ந்து இப்போது ககனுக்கும், பூமிக்கும் எதிரியாக திளைத்துப் போய் உள்ளாளே, அவளும் பின் தொடர்ந்து அதே இடத்திற்கு அவளது நண்பிகளுடன் சென்றுள்ளாள். இப்படியாகப் போவது அவளுக்கு சந்தோஷம் என்றில்லை, மாறாக, மிகவும் பொறாமையினைக் கொட்டித் தீர்ப்பதற்கும், அவர்களுக்கு அநியாயம் செய்வதற்குமே!
அங்கு நட்சத்திரா, ககனைத் துரத்துகையிலே, இங்கு, அபூர்வா, ஷாரதாவைத் துரத்துகின்றாள். ஏன் துரத்துகின்றாள் என்றால், மீராவுக்கு ஒரு விடிவினைக் கொடுப்பதற்காகவே! ஆனால், இது உண்மையில்லை, ஏனென்றால், இந்த கட்டாயப்படுத்தப்பட்ட விவாகரத்திற்கு, மகன் ககனுக்காக ஷாரதா ஒத்துப் போனாலும், கிறிஷிணபிரஷாத் ஒத்து வரமாட்டார் என்று அபூர்வாவிற்கு நன்கு தெரியும். இதனால், தாங்களே ஒன்றுமே செய்யாமல் பூமிக்கும், ககனுக்குமான இந்தக் கல்யாணம் குளம்பிவிடும், நின்றுவிடும் என்பதுவே அபூர்வாவின் குள்ளத்தனமான திட்டமே.
இதனை, பூமி கேள்விப்பட்டால், அல்லது ஏதாவது ஒரு பக்கத்தின் துப்பாவது கிடைத்தால் காணும் பூமி ஷரத்சந்திராவைப் பிரிவதற்கு ஒரு செக்கனும் பொறுக்க மாட்டாள். அபூர்வால், ஷோபச்சந்திராவை ஷரத்சந்திரா இழக்க நேரிட்டதினை விட அதிகமான கவலையினை பூமி பிரிவதில் அனுபவிப்பார் ஷரத்சந்திரா. இது தேவைதானா இவருக்கு?
ககனுக்கும், பூமிக்கும் இடைஞ்சலினை ஏற்படுத்தினாள் நட்சத்திரா. இதற்கு முன்பாக Binthu வின் மூலம் Chery அறிந்து கொண்டு அதே இடத்திற்கு நட்சத்திராவைக் கவனிப்பதற்காகச் சென்றான். பூமிக்கு நடந்ததினை வைத்துக் கோபம் கொண்ட Chery நட்சத்திராவிற்குப் பாடத்தினைப் படிப்பித்தான். அதுமட்டுமல்லாமல் நட்சத்திராவை அடக்கியும் வைத்தான். ஒன்றுமே சொல்ல முடியாமல் அடங்கிப் போனாள் நட்சத்திரா.
வெளியேயிருந்து வந்த பூமியை, வீட்டினில் விடுவதற்காகச் சென்ற ககனை முறைத்துப் பார்த்தார்கள் அபூர்வாவும், ஷரத்சந்திராவும். காரணம் இவர்கள்தான் பூமியினதும், ககனினதும் கல்யாணத்தினைக் குளப்புவதற்காகத்தானே இருக்கின்றார்களே. அதாவது, இது இவர்களுக்கப் பிடிக்காத கல்யாணமாச்சே! வாசல்படி ஏறிவந்த பூமியை ஷரத்சந்திராவும், அபூர்வாவும் எதிர் நோக்கி, பூமியைக் கண்டித்தார்கள். இதற்கு முக்கிய சூத்திரதாரி அபூர்வாவே. இதனை ககனுக்கு பூமி மறுநாள் காலையிலே சொல்லும் போது இதனை எப்படி அணுகலாம் என்று ககனோ திட்டத்தினை தீட்டியதுமல்லாமல், அதனை நடத்தவும் செய்தான். அதற்கு இசைந்து போனாள் பூமி.
கிறிஷ்ணபிரஷாத் தான் இந்தக் கல்யாணத்தினை யார் தடுத்தாலும் முன்நின்று செய்வதற்கு தைரியத்தினை வரவளைக்காமலே மீராவிடம் சொன்னார். ஆனால், இதனை அபூர்வாவின் முன்னாலோ அல்லது ஷரத்சந்திரா முன்னிலையிலோ சொல்வாரா? அவ்வளவிற்கு கிறிஷ்ணபிரஷாத்திற்குத் தைரியம் வருமா? வரவே வராது. அப்போது மீராவின் முன்னால் கதைத்தவை என்னென்று நனவாகும். நனவாக்கத்தான் முடியுமா? முடிந்திடுமா?
கிறிஷ்ணபிரஷாத் தனது மனைவி மீராவிடம் சொன்னதினை மீரா அபூர்வாவிடம் சொன்னதினால் ஏற்படப்போகும் விபரீதத்தின் கனாகனத்தினை கிறிஷ்ணபிரஷாத் அறியவேயி்ல்லை. தனது ஆரம்பத்தில் கைகொடுத்த வாழ்கைத் துணையானது கிறிஷ்ணபிரஷாத்தினை விட்டு விலகப் போகின்றது தெரியாமல் இருக்கின்றாரே என்பதுதான்.
அபூர்வாவைப் பொறுத்தவரை ஒரு குடும்பத்திற்குத் துரோகம் செய்கின்றதென்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. அது அபூர்வாவிற்குப் பழக்கப்பட்ட வாழ்க்கைதானே! ஆனால், ஷாரதாவோ தினமும், இல்லையில்லை, கணத்திற்குக் கணம் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றா. அத்துடன் நரக வேதனையினை அனுபவித்துக் கொண்டிருப்பது ஒருவருக்கும் சொல்லவும் முடியாமல் தனது மனதினுள்ளே முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நிலையினுக்கும் தள்ளப்பட்டுள்ளா, ஷாரதா.
ஷோபச்சந்திராவை ஒழித்துக் கட்டுவதற்கும், அவவுடைய புகழை அழிப்பதற்குமான திட்டத்தினை, ஷோபச்சந்திராவின் மாணவி, சாதனாவைத் தெரிவு செய்தா அபூர்வா. அன்றைய நிகழ்வினிலே சாதனாவுக்கு பெருந்தொகையான பணத்தினைக் கொடுத்து, அவளை இந்த நாட்டிய நிகழ்ச்சியிலே ஷோபச்சந்திராவை மரியாதையீனப்படுத்தும்படி அபூர்வா சொன்னதற்கிணங்க, சாதனா, சலங்கையினைக் கழற்றி ஷோபச்சந்திராவை நோக்கி எறிந்து அந்த அரங்கையே கேவலப்படுத்திய சாதனா, இப்போது உலகலாகிய ரீதியில் அவள் ஒரு பிரபலயமாகியவளாகி விட்டாளாம்.
ஒரே மேடையில் பூமியைத் தனக்குப் போட்டியாக அழைத்து மண்கவ்விய சாதனா, இப்போது என்ன செய்வதென்று விளங்காமல் திண்டாடிக் கொண்டிருக்கையிலே, பூமி அங்கு சமூகமளித்தவர்களுக்கு தனது அம்மா ஷோபச்சந்திராவின் நினைவாக ஒரு நாட்டிய கலாலயம் ஒன்று திறந்து அனைவருக்கும் இனாமாக பரதத்தினைத் தான் பழக்குவதாக வாக்குக் கொடுத்தாள்.
கல்யாண சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மஞ்சள் இடிக்கும் நிகழ்வானது மிகவும் தடலபுடலாக நடைபெற வேண்டிய சமயம், ஷாரதா மிகவும் கவலையுடன் இருந்ததினை ஷாரதாவின் சிறியதாய் உட்பட அனைவரும் அவதானித்தார்கள். இதனால், தன்னையே சமாளித்துக் கொண்டிருக்கும் ஷாரதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவி்ல்லை.
ககனும், பூமியும் ஒருவருக்கொருவர் பழகுவதனைப் பார்த்து எரிந்து கொண்டிருக்கும் ஷரத்சந்திராவும், அபூர்வாவும், எப்படித்தான் இவர்களின் கல்யாணத்தினை நிறுத்துவது என்று திட்டத்தின் மேல் திட்டத்தினைப் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெளியே போய் வந்த பூமியைப் இப்போது கல்யாணமாகும் மட்டும் ககனுடன் வெளியே போகக் கூடாதென்று கட்டுப்பாடு விதித்தனர், ஷரத்சந்திராவும், அபூர்வாவும். இதுவும் ஒரு இடஞ்சலாக இவர்களுக்குச் செய்கையிலே ககனோ, பூமியின் வீட்டிற்கே வந்து விட்டான், இங்கு அந்த நேரத்தினை செலவழிப்பதற்காக.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!