posted 28th December 2025
இன்றைய Serial Review & Analysis ஆனது 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த நாட்களை ஒன்றாகச் சேர்ப்பதற்குக் காரணம் கிறீஸ்மஸ் பண்டிகை Season னிலுள்ள விடுமுறை நாட்களாகும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
சலங்கை ஒலி - Salangai Oli - 20 - 27.12.2025
தான் கல்யாணம் பண்ணுவதாக இருந்தால் அது பூமியாகத்தான் இருக்கும் என்று ககன் (Gagan) Cheryயிடம் உக்கிரமாகச் சொன்னான். திடுக்கிட்டப் போன Chery. ஆனால், ககன் ஒருதலைப்பட்சமாக பூமியைக் காதலிக்கவில்லையே! பூமியும் தனது காதலை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்று பலவிதத்திலும் பரீட்சித்து பார்த்துத்தான் முடிவெடுத்தான் ககன்.
கோவிலிலே தனது காதலினை, பூமிக்கு பக்தர்கள் முன்னாலே பிரகடனப்படுத்திய போது, பதிலுக்கு ஒன்றுமே சொல்லாமல் பூமி மறுபக்கம் திரும்பி அதனை இரசித்துக் கொண்டிருந்ததனையும் அவதானிக்காமலா இருந்திருப்பான் ககன். ஆனால், தன்னை விரும்புவதனை பூமி தன் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று ஒரு நப்ப ஆசையினை தனது மனதினில் கொண்டிருந்தான்.
பூமியோ தனது காதலினை ககனிடம் சொல்லவுமில்லை. ஆனால், அபூர்பாவால் உசுப்பேற்றி விடப்பட்ட ஷரச்சந்திரவோ கோவிலுக்கு வந்து ககனை அடித்ததுமல்லாமல், பூமியை இழுத்துக் கொண்டு போன போது இரக்கத்தினால் ககனைப் பார்த்ததுமல்லாமல் அழுது கொண்டு போனதும் ககனில் அவளுக்கான காதலினைச் சொல்லாமல் பூமி சொன்னது விளங்காத அளவிற்கா ககன் இருந்தான்?
ஆனால், ஒன்றுமே தனது வாழ்க்கையில் நடக்காத மாதிரி மனதினுள்ளே தாங்கொணாத் துயருடன் இருக்கும் மகனைப் பார்த்து வேதனையில் தவிக்கும் தாய் சாரதாவின் உள்ளம். விக்கி, விக்கி அழுதா சாரதா. அத்துடன், பூர்ணாவும் தாயுடன் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஏன்தான் அண்ணன் ககன் காதலித்தான் என்ற கேள்வியுடன் அழுது கொண்டிருந்தாள் பூர்ணா.
நட்சத்திரா ககனின் வேலைத்தளத்திற்கு வந்து தனது காதலினைப் பேரம் பேசி, தனது கட்டுப்பாட்டினுள் ககனை அடக்கி வைக்க நினைத்தாள். திமிருக்கும், பணத்திற்கும், காதலுக்கும் ஒத்துவராது என் வாழ்க்கை என்று விளங்கப்படுத்தினான் ககன். ஆனால், நட்சத்திராவிற்கு ககன் சொன்னது விளங்கவில்லை. மாமா ககனை மரியாதையீனப் படுத்திய தன் தகப்பனின் முன்னால் ககனை இராஜாவாக வாழ வைப்பேன் என்று சபதம் பூண்டாள் நட்சத்திரா. இதுதான் காதல் என்று விளங்கிக் கொண்டாள் நட்சத்திரா.
எப்படியும் ககன் (Gagan)ஐ பணிய வைத்துவிடலாம் என்றும், நட்சத்திரா பணத்தினை வைத்துக் காதலினை விலைக்கு வாங்கிடலாம் என்று பேரம் பேசினாள். காதலின் சக்தியினைப் புரியாதவளாய், பணத்தினால் தாங்கள் கோடீஸ்வரரென்று தாய் அபூர்வா, ஷோப்ச்சந்திராவைக் கொலை செய்து கொள்ளையடித்த சொத்தினை வைத்துக் கொண்டு ககனை வாங்கிடலாம், அடக்கி ஆளலாம் என்று தவறாகப் புரிந்து கொண்டவளாய், காதல் என்றால் என்ன என்று கூட விளங்காமல், கற்பனையிலும் தன்னிச்சையாக ககனை blackmail பண்ணிப் பார்த்த நட்சத்திரா.
சிறு வயதினிலே கஷ்டத்தைக் கண்டவன் வளர்ந்தவன் ககன். உணவிற்கே ஒரு ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்தவன் அவன். தாயையும், தங்கையையும் ஒருவரின் உதவியின்றி தன் சிறு கையினால் உழைத்து உணவூட்டியவன் ககன். அழுது குளறிக் கொண்டிருக்கும் சாரதாவையும், பிள்ளைகைளையும் அடித்து விரட்டியவர்களிடமிருந்தும், கொடியவர்களிடமும், கொலைஞர்களிடமிருந்தும் தப்பி ஓடியவர்கள்தான் ககனின் குடும்பம். இப்போ அந்த கொடுமைக் காரனின் மகள், ககனிடம், தன்னை கல்யாணம் பண்ணு என்று blackmail பண்ணுவது என்பது கேவலமாக இருக்கின்றது.
ஷரச்சந்திரா அனுபவித்துக் கொண்டிருக்கும் சொத்தானது யாருடையது? உண்மையாக ஷரச்சந்திரா உழைத்ததா? அல்லது அபூர்வாவினதா? இல்லையே! அது ஷோபச்சந்திராவினுடையது. இதனை ஆண்டு அனுபவிப்பவர்கள்தான் அபூர்வாவும், நட்சத்திராவும், மற்றவர்களும். ஆனால், இதன் உண்மையான வாரிசு பூமியேதான். பூமியின் இந்த அமிழ்ந்து போயுள்ள வாழ்க்கையின் உண்மையானது எப்போதுதான் வெளிச்சத்திற்கு வரும்?
ககனின் முடிவினைக் கேட்டு கலங்கிப்போன Chery, கவலையுடன் வீட்டில் பூமியினைச் சந்திக்கையில், அண்ணன் ககன் கல்யாணம் பண்ணினால் உன்னைத்தான் பண்ணுவானாம் என்ற பிடிவாதத்தினை மாற்ற ஒரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்பதனைச் சொன்னான். ஏனென்றால், உன்னில் உள்ள கோபமானது ககனின் மனதில் இருந்து மறைய வேண்டுமென்றால் கல்யாணம்தான் நிரந்தரமான முடிவாக இருக்கும் என்பதனால்தான்.
Chery சொன்னதினைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள், நொந்து நொருங்கிப் போனாள் பூமி. என்னதான் நடக்கின்றது என்று பூமிக்கோ விளங்கவில்லை. என்னதான் Chery கதைக்கின்றான் என்றும் புரியவுமில்லை. பூமி என்ன கதைக்கின்றாள் என்று Cheryக்கும் தெரியவில்லை. ஆனால், Chery தன்னைத்தான் பூமி காதலிக்கின்றாள் என்று மனக் கோட்டை ஒன்றினைக் கட்டிக் கொண்டிருக்கின்றான் என்பது பிந்து (Binthu) வைத்தவிர உறுதியாக மற்றவர்களுக்குத் தெரியாது. இந்த ஒருதலைக் காதலுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது? இதற்கான விடைக்கு full stop வைக்க வேண்டுமென்றால், ககனினதும், பூமியினதும் கல்யாணம் நடந்தே தீர வேண்டும்.
தகப்பன் சரச்சந்திரா, தனக்கு சட்டத்தினால் தகப்பனாகப் போகப் போவதனை நினைத்து சந்தோஷத்தில் மிதக்கும் பூமி, ஆனால், வெதுப்பில் வெந்து கொண்டிருந்த அபூர்வா. எனவே, ஷரத்சந்திராவை நம்ப வைப்பதற்கு அபூர்வா ஷோபச்சந்திராவாக மாறினாள். ஷோபச் சந்திரா தனது உடம்பில் இறங்கி வந்ததாக நடுநிசியினிலே நாட்டியத்தினை ஆடியவளாய் அனைவரையும் ஏமாற்றின அபூர்வா. பூமியினை அடித்து வீழ்த்தினாள். சரச்சந்திராவிடம், பூமியினைத் தத்தெடுக்க வேண்டாம் என்றும் கூறினாள் அபூர்வா. தத்தெடுத்தலிலிருந்து பின்வாங்கிய ஷரச்சந்திரா. எல்லார் முன்னிலையிலும் தனது சபதத்தினை நிறைவேற்றினாள், தத்தெடுக்கும் நிகழ்வானதினைக் cancel பண்ண வைத்தாள் அபூர்வா.
தனது உண்மையான தகப்பனுக்கு தானே உணவினை ஊட்டி விட்டதே தனக்கான ஆன்ம திருப்தியாக அமைதியானாள் பூமி. தானும் பசியுடன் இருப்பதனை அறிந்து கொண்ட ஷரச்சந்திரா, உடனே உணவினை உண்டதுமல்லாமல், ஷோபச் சந்திராவையும் நினைவு கூர்ந்தார். இதுதான் தசை தானாக ஆடிகின்றது என்பது. அதுமட்டுமல்லாமல், இதொரு இன்பமான மனத்தினுள் இருக்கும் உணர்வாகும்.
தன்னால் கலங்கிப்போயுள்ளதும், வேதனையினையினையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சாரதாவின் குடும்பத்தின் கவலையைத் துடைக்க நினைத்தாள் பூமி. தனது காதலை, ககன் சொன்ன, தன்னிடம் எதிர்பார்த்த அந்த வார்த்தையினை, அதுதான், I love you, என்பதனைச் சொன்னாள் பூமி. ஆனால், அவளாக இல்லை, வேறு ஒருத்தி போன்றுதான் அதனைச் சொன்னாள். இதெல்லாம், கண்ணாம் பூச்சி விளையாட்டு என்பதால், இது உண்மையான காதலுக்கு set ஆகாது என்று உணரக் கூடியதாக இருக்கின்றது.
பூமியும், மாமா கிறிஷ்ணபிரஷாத்தும் சேர்ந்து அபூர்வாவின் சதித்திட்டத்தின் அமூலாக்கலை அடியோடழிக்கத் தீட்டிய திட்டத்தினால் முடிவு கட்ட விடலாம் என்று கங்கணம் கட்டினார்கள். அதனையும் செயல் படுத்தினார்கள். அபூர்வாவின் வாயினால் தான் தான் செய்தனவெல்லாம் நடிப்பென நிரூபிக்க முடிவெடுத்தார்கள்.
இதன் முதல் entryதான் பூமியின் ஆட்டம். காலை வந்தனத்துடனும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று தொடங்கியது. காப்பியில் முடிந்தது.
சந்தோஷமாக பூமியின் வாழ்த்துதலையும், பணிவையும் முழுமனதாகவும், மடத்தனமாகவும் ஏற்றுக் கொண்ட அபூர்வா.
சொத்தோ, பொருளோ ஒன்றுமே வேண்டாம் என்று பூமி சொல்லுகையிலே கொஞ்சமும் சுதாகரிக்காமல் விட்ட அபூர்வா. மடைத்தனம் என்று மட்டுமே அபூர்வா நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டாள்.
ருசியான கோப்பியினை இரசித்துப் குடித்து விட்டு மொக்கையாகின அபூர்வா. கோப்பியானது அபூர்வாவின் குரலை பலியெடுத்தது.
பூமியும், கிறிஷ்ணபிரஷாத்தும் ஆடிய ஆட்டமும் அதன் முடிவும் அனைவரையும் திகில வைத்தது. அபூர்வாவின் தில்லுமுல்லானது அம்பலமாகியது. பூமியின் தத்தெடுத்தலை மீண்டிம் முடிவாக்கிய ஷரத்சந்திரா.
தத்தெடுத்தலானது ஆரம்பமானது. ஆனால், வைத்தியசாலையில் அவசர சிகிச்சையில் ஆபத்தான் நிலையினில் நட்சத்திரா அனுமதிக்கப்பட்டாள். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டடத்திலிருந்து கால் தவறி விழுந்தாள் என்பது கண்விழித்த நட்சத்திரா தனது தாய்க்கும், மருதாணி சித்திக்கும், ஷெரிக்கும் சொன்னாள். ஆனால், ககனைத் தனக்குக் கல்யாணம் பண்ணித்தரும் படி சொல்லி சத்தியமும் பண்ண வைத்தாள் நட்சத்திரா.
சுமாக கண் விளித்துக் கொண்டாள் என்ற செய்தியினை வீ்ட்டிற்கு வந்து சொன்ன பூமி, தனது மாமனார் கிறிஷ்ணபிரஷாத்திடமும் சொன்னாள். வீட்டிற்கு வந்த நட்சத்திராவை இறுதியாக பூமியிடம் கையளித்தார் ஷரச்சந்திரா.
கிறிஷ்ணபிரஷாத்தும், சாரதாவும் தங்கள் பிள்ளையான ககனின் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தமான பூமியை கல்யாணம் எப்படித்தான் பண்ணி வைக்கலாம் என்று கலந்தாலோசித்தார்கள். ககனின் தாயும், தகப்பனுமாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தினை நடத்தி முடிக்கச் சிந்தம் கொண்டார்கள்.
ஆனால், நட்சத்திராவோ எப்படியும் ககனைத் தொந்தரவு செய்யாமல் இருக்க மாட்டாள். ககனின் பின்னாலேயே திரிவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டென்று ஊகித்தார் கிறிஷ்ணபிரஷாத். அதுமட்டுமல்லாமல், பூமியும் அதைத்தான் யோசித்தாள். களத்தில் இறங்கினாள். ககனின் கொம்பனியில் வேலை செய்வதற்காக, அதுவும், ககனுக்கு செயலாளராக வருவதற்கு எத்தனையோ முறை முயற்சி செய்து இறுதியில் வெற்றியும் கண்டாள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!