posted 20th January 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- அபூர்வாவின் அறாஜகத்தினை அடக்கினான் ககன். பொலிஸ் நிலையத்தில் பூமியைத் தாக்கி தன் பகையினை இதுதான் சாட்டென்று ஆரம்பித்தாள் அபூர்வா.
- பூமி இருந்த பொலிஸ் நிலையத்திற்கு விரைந்தனர், ககனும், ஷாரதாவும். அங்கு, பூமிக்கு எதிராக பொலிஸின் முன்னால் நடந்தேறும் கொடூரத்தினைத் தடுத்தான். உடந்தையான பொலிஸையும் எச்சரித்தான் ககன்.
- ஷரச்சந்திரா மாமாவின் கொலை முயற்சியினையும், வைத்தியசாலையில் அவர் கோமா நிலையில் இருப்பதனையும் சொல்லியும் Cheryயும், கிறிஷ்ணபிரஷாத்தும் அமைதியாக இருந்தார்கள். வியப்பில் ஆழ்ந்த Binthu.
- கோட்டிற்குக் கொணரப்பட்ட பூமி. ஜாமினில் எடுக்க வந்த ககனும், ஷாரதாவும்.
- பலவிதமான வாதங்கள் பூமிக்கு எதிராக இருந்தன. ஆனால், அபூர்வாவின் சட்டத்தரணி, பூமி சொல்வதற்கெதிராக தனது விவாதத்தினை வைத்ததை உணர்ந்த நீதிபதி, அவர், பூமியின் உண்மையான நிலையினை உணர்ந்தவராய் ஜாமீன் கொடுத்தார். DNA சோதனைக்கும் உத்தரவிட்டார்.
- சாட்சிக்காக பூமி ஒருவரையும் அழைக்கவுமில்லை, அவதிப்படுத்தவுமில்லை. ஆனால், தான் ஷரத்சந்திராவின் உண்மையான மகள் என்று நீதிபதிக்குச் சொன்னாள்.
Salangai Oli - சலங்கை ஒலி - 19 .01 . 2026
- உண்மையினை உணர்ந்து விளங்கிக் கொண்டார் நீதிபதி.
- கொலை முயற்சியில் சந்தேகத்திற்கிடமானவர்கள், வம்சி, கிறிஷ்ணபிரஷாத் அல்லது Chery. கையில் காயத்துடன் இருக்கும் கிறிஷ்ணபிரஷாத்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ஷரத்சந்திராவை கோமா நிலையினில் வைத்தியசாலையில் வைத்திருக்கையிலே, பூமியைக் கோட்டிற்குத் கொண்டு சென்றனர். ககனும், ஷாரதாவும் பூமியை ஜமீனில் எடுப்பதற்காக கோட்டிற்குச் சென்றார்கள்.
அபூர்வாவின் சட்டத்தரணி, பூமி பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டும், பொலிஸினால் தேடப்பட்டு வருபவள் மாதிரி வர்ணிக்கப்பட்டாள். இதனை எதிர்த்து நின்றார் ககனின் சட்டத்தரணி. அவரி்ன் வாதத்தில் ஜெயித்தார். ஆனால், அபூர்வாவின் சட்டத்தரணியோ ஷரத்சந்திராவின் சொத்தில் கண்வைத்துள்ளாள் என்றும், இதற்காக ககனை கைக்குள் போட்டுக் கொண்டுதான் இவள் இந்த கொலை முயற்சியினை மேற்கொண்டுள்ளாள் என்பதனை அடித்துச் சொன்னார்.
ஆனால், ககனின் சட்டத்தரணியோ, மிகவும் பதுமையாக உண்மையினைச் சொன்னார்.
ஆனால், அங்கு சமூகமளித்துள்ள கிறிஷ்ணபிரஷாத்தோ ஒன்றுமே சொல்ல முடியாத நிலையினிலும், பூமிக்கு ஆதரவு தெரிவிக்க முடியாமலும் ஒரு பார்வையாளராக மட்டும் இருக்க வேண்டயதாயிற்று.
ஆனால், இப்போ, ஷரச்சந்திராவிற்கு எதிரியாக உள்ளவர்கள், வம்சி, கிறிஷ்ணபிரஷாத் அல்லது Chery ஆக இருக்கலாம். இதற்கு ஆதாரமாக, Binthu ஷரச்சந்திராவின் கொலை முயற்சியினைப் பற்றி சொல்லும் போது கிறிஷ்ணபிரஷாத்தும்,Cheryயும் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லாமல் இருந்ததுதான் சந்தேகத்தினை உருவாக்குகின்றது.
ஆனால், இதற்கு கூடுதலான ஆதாரமாக, கிறிஷ்ணபிரஷாத்தின் கையில் உள்ள வெட்டுக் காயம். அடுத்ததாக, வம்சி. ஆனால், பூமியைத் தள்ளி விட்டு ஓடியது வம்சியாகத்தான் தோற்றம் அளி்த்தது. ஆனால், அது Cheryயாகவும் இருக்கலாம்.
எல்லாவிதமான சாட்சிகளும், முக்கியமாக, ஷரச்சந்திராவின் Guest Houseஇல் வேலை பார்க்கும் காவலாளி. இவனை இப்படிச் சொல்லு என்று அபூர்வா சொல்லச் சொன்னாளோ என்பதில் சந்தேகமும் இருக்கின்றது. ஏனென்றால், பூமியை அடியோடு அழித்து, தனது மகள் நட்சத்திராவை ககனுக்கு மணமுடித்துக் கொடுப்பதுதான் அபூர்வாவின் குறிக்கோளே! எனவே, இந்தச் சந்தர்ப்பத்தினை தனதாக்கிக் கொண்டாள் ஆபூர்வா.
இது பெரிய சிக்கலான கேஸாக இருக்கின்றது. என்னென்று பூமி இந்த கேஸிலிருந்து வெளிவரப்போகின்றாள் என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கின்றது. இதில் ககனின் பங்கு முக்கியமாக இருக்கின்றது. ஆனால், அதுவும் இப்போ எவ்வளவிற்கு சாத்தியமாகும் என்பது ஷாரதாவின் கையில்தான் இருக்கின்றது.
அபூர்வாவின் சட்டத்தரணி பூமியைப் பற்றி இல்லாதது பொல்லாதவற்றை எல்லாம் பூமிக்கு எதிராக, அதுவும் பொய்யானவற்றினை கோட்டினில் ஆதாரமாகச் சொல்கையிலே பூமியின் சார்பாக இருப்பவர்கள் எழுந்து நின்று கோஷமிட்டார்கள். இவ்வாறாக நடைபெறுகையில் இதனை நீதிபதி அவதானித்திருக்க மாட்டாரா?
பூமிக்காக ஒருவரும் சாட்சியாக முன்வராத காரணத்தினால், நீதிபதி இறுதியில் பூமியிடம், உனது பக்க நியாயத்தினைச் சொல்லும் படி கேட்டார். அதற்குப் பூமிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், முக்கியமானதொன்றினைச் சொன்னாள் பூமி.
நான் ஷரத்சந்திரா வைத்திருக்கும் பணத்திற்காகத்தான் அவரை கொல்ல முயற்சித்தேன் என்ற பழி என் மேலே சுமத்தப்பட்டுள்ளது. அப்படி என்றால் நான் இவ்வளவு நாட்களாக சொல்லாமல் வைத்திருந்த உண்மையினைச் சொல்லியே ஆக வேண்டும் என்று தொடங்கினாள். அதற்கு முன்பாக ககனைப் பார்த்தாள். ஏனென்றால், ககனும் வேண்டும், தனது தகப்பன் ஷரத்சந்திராவும் பூமிக்கு வேண்டும் என்பதற்காகத்தான்.
பூமி சொன்னது இதுதான். இந்த உண்மைதான். ஒருவரும் எதிர்பார்க்காததுதான். ஆனால், அபூர்வாவுக்கும், கிறிஷ்ணபிரஷாத்திற்கும் தெரிந்ததுதான். அதாவது, தான்தான் ஷரத்சந்திராவின் உண்மையான மூத்த மகள். அதாவது, ஷரத்சந்திராவிற்கும், ஷோபச் சந்திராவுக்கும் பிறந்தவள் நான்தான் என்பதனை ககனைப் பார்க்காமல், நீதிபதியினைப் பார்த்த வண்ணமாகச் சொன்னாள்.
இப்படி இருக்கையில், நான் ஏன் எனது அப்பாவைக் கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்வியினை நீதிபதியிடம் சமர்பித்தாள்.
பூமியின் இந்தக் கதையினைக் கேட்டதும் கலங்கி நின்றார் நீதிபதி. அப்படி பூமிதான் உண்மையான மூத்த மகள் என்றால், எல்லாச் சொத்திற்கும் உரிமையானவள் பூமிதானே என்றாகுகையில், ஏன் பூமி தன் தகப்பனை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? என்பதனை நீதிபதி எல்லார் முன்னிலையிலும் அறி்க்கையிட்டார்.
நீதிபதிக்கும் பிள்ளையாக பெண் பிள்ளை இருக்கின்றாள். அதனால் அவளின் உணர்வுகளை உணர்ந்தவராய் இருக்கையிலே, உடனே பூமிக்கு DNA சோதனைக்கு வேண்டும் என்று ககனின் சட்டத்தரணியின் கோரிக்கையினை முன் வைத்தார் . அதற்கு உடனே நீதிபதி அனுமதியும் வழங்கினார்.
ஷரத்சந்திராதான் பூமியின் தகப்பன் என்பதனால், அதனை பூமியே சொல்லி விட்டாள் என்பதனைத் தாங்க முடியாமல் நொந்து போனான் ககன். ஆனால், ஷாரதா, ஏற்கனவே, வீட்டினில் வைத்து ககன் பூமியைத் தேடி அலைந்தும் காணாததினால், மனம் சோர்ந்த நிலையினில் தனது கவலையினை தாயுடன் பகிர்கையிலே ஷாரதா சொன்னது,
ஒரு பெண்ணிற்கு உள்ள பிரச்சினைகளையும், காதலையும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அவளுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்று ககன் நீதான் கண்டு பிடிக்க வேண்டும். அப்படி என்றால்தான் ஏன் பூமி காரினை விட்டு ஓடினாள் என்று விளங்கும். இதனை ககன் யோசிப்பானா?
கோட்டினை விட்டு வெளியே வரும்போது பூமி தனியத்தான் நின்றாள். ஷரத்சந்திராவின் வீட்டார் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லித் திட்டயதுமல்லாமல், அபூர்வா தனது கோபத்தினை அப்பப்போதும் காட்டினாள். ஆனால், ககனோ பூமியை விட்டு விலகி நின்றான். அவனின் முகத்தில் கோபம் தெரிந்தது, ஏமாற்றம் இருந்தது, வெறுப்புத் தெரிந்தது. ஆனால், ஷாரதாவின் முகத்திலோ கனிவு தெரிந்தது. யாரும் பூமிக்கு அப்பாவாக இருக்கட்டும். ஆனால், எனக்கு பூமி மருமகளாக வந்தால் போதும் என்பது மட்டும்தான் அவவின் மனதில் இருந்தது போலத் தெரிகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!